செவ்வாய், 14 ஜூலை, 2009

சூரியனின் ரகசியங்கள்.[Updated]

அது ஏனோத் தெரியவில்லை, இதுப் போன்ற பதிவுகளைப் போடத்தான் மனம் விரும்புகிறது. கேலியும், கிண்டலும்,வாழ்த்துக்களும்,வசவுகளும்,( அதுவும் ஒரு ஜாலித்தான்.அதுப்போன்றவைகளுக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களில் சிலரின் பரம ரசிகன் அடியேன் நான்.) நிறைந்த இந்த வலையுலகில், இதுப்போன்ற பதிவுகளுக்கு வரவேற்ப்பு இல்லை என்பது நிதர்சனம். இருந்தாலும் யாரோ ஒருவர் இருவராவது படிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

நாம் எல்லோரும் நியூட்டனோ, ஆல்பர்ட் ஐன்ஸ்டைனோ, அல்லது தற்போது வாழும் அறிவுஜீவி ஸ்டீபன் ஹாகிங்க்சோ போல ஆக முடியாது.(முடியுமா?) ஆனால் அவர்களின் அறிவில் ஒரு சிறுத் துளியாவது நாம் பெற முயற்சிக்க வேண்டும். அது போன்ற முயற்சித்தான் இது. பெரியவர்கள் பார்த்தல் மட்டும் போதாது. நம் வீட்டுப் பிள்ளைகளையும் இதுப் போன்றவற்றை பார்க்க ஊக்குவிக்கவேண்டும். என்ன ஒன்று, இதுப்போன்ற அறிவியல் சார்ந்த காணொளிகள் தமிழில் தயாரிக்க இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ? அதுவரையில் காத்திருக்க வேண்டாம். ஆங்கில மொழியில் பார்ப்பதால் அந்த மொழியறிவையும் வளர்த்துக்கொள்ளலாம்.
வலையுலகில் நல்லது கேட்டது எல்லாம் கொட்டிக்கிடக்கிறது. சில அதில் நல்லவைகள் இருக்கும் இடம் எனக்கு கொஞ்சம் தெரியும். அவைகளை பார்த்து நானும் தெரிந்துக்கொண்டு, உங்களுக்கும் காண்பித்துத் தரும் சிறிய முயற்சி இது. அது உங்களை வந்தடைந்ததா என்று உங்களின் கருத்துக்கள் மூலமாக தெரிந்துக்கொள்வேன். ஆகவே சிரமம் பாராமல் ஏதாவது சொல்லுங்கள்.

சூரியன், நம் சூரியக்குடும்பத்தின் தலைவன். அவனுக்குள் எதனை ஆயிரம் ரகசியங்கள். நம் குடும்பத்தின் தலைவரான நம் தந்தையைப் பற்றி நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டாமா?

சரி நீங்கள் பார்க்க ஆரம்பியுங்கள். மீண்டும் அடுத்த முறை நம் பிரபஞ்சத்தின் மேலும் பல ரகசியங்களை ஆராய்வோம்.


4 கருத்துகள்:

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் சொன்னது…

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி 'நிகழ்காலத்தவரே'. கருத்துப்பெட்டகம் சரிசெய்யப்பட்டது. சுட்டிக்காட்டியமய்க்கு நன்றி. அடிக்கடி வந்து போங்க.( நீங்க திருப்பூரா? நான் தாராபுரம் ரோட்டில், பெரிச்சிப்பாலயம், கரடாங்காடுப் பகுதியில் 1986-89 வரை இருந்தேன். உஷா தியேட்டர் பக்கத்தில் உள்ள உஷா லாட்ஜ் இன்னும் உள்ளதா? அதிலும்ஒரு வருடம் தங்கி இருந்தோம், மாணவர்களாக.)

நிகழ்காலத்தில்... சொன்னது…

வணிக வளாகம் ஆகி விட்டது

பதிவுலகில் அறிவியலை எழுத முனைந்து உள்ளீர்கள். வாழ்த்துகள்
தொடர்ந்து எழுதுங்கள்

Praveen from Australia சொன்னது…

Good, Keep it up