புதன், 15 ஜூலை, 2009

நிலவு.... பூமியின் தோழி.(வீடியோ)




" நிலவுக்கு என் மேல் என்னடிக் கோபம்..."
" நிலேவே என்னிடம் மயங்காதே..."
" நிலாவே வா..."
"வான் நிலா, நிலா அல்ல..."
" வெள்ளி நிலா முற்றத்த்திலே..."
" இளைய நிலா பொழிகிறது..."
இன்னும் எத்தனை எத்தனைப் பாடல்கள் !
நிலவு ....! நினைத்தாலே குளிர்ச்சியாக் உள்ளது இல்லையா? பல்லாயிரம் ஆண்டுகளாகவே மனிதனுக்கு நல்ல துணையாக இருந்து வந்திருக்கிறது. இரவில் ஒளி கொடுக்கும் விளக்காகவும், கடல் பயணத்தில் திசைக் காட்டியாகவும் காதலர்களுக்கு பல விஷயங்களில் கற்பனையாக ஆறுதலாகவும் இன்றும் இருக்கிறது. உலகின் பல இன மக்களுக்கு அது ஒரு கடவுளாகவும் உள்ளது.இதுவரையில் மனிதன் பூமியைத் தவிர காலடிப் பதித்த ஒரே இடம் இதுதான். மேலும் நாசா விஞ்ஞானிகள் நிலவில் காலனி அமைக்கத் திட்டமிட்டுள்ளனர் என்கிற விஷியம் எல்லோருக்கும் தெரியும்.  அதுவும்  டிசம்பர் 24,2029இல் பூமியை ஒரு விண்வெளிப் பாறைத் தாக்கும் அபாயம் உள்ளதால்,இன்னும் வேகமாகவே வேலைகள் நடக்கிரதாகக் கேள்வி! அந்த ரேசில் நம்ம நாட்டவரும் உள்ளார்கள் எனபது இன்னும் விசேஷம்.அதைப்பற்றி இன்னொருமுறைப் பார்க்கலாம்.

நிலவு, எப்படி அங்கு வந்தது?, ஏன் அங்கு வந்தது?,அதனால் என பயன்? போன்ற பலதரப்பட்ட கேள்விகளுக்கு இந்த வீடியோவில் விடைக் காணலாம் வாருங்கள்.

4 கருத்துகள்:

Nathanjagk சொன்னது…

அன்பு பிரபஞ்சபிரியன், உங்கள் கட்டுரையும் படஇணைப்புகளும் ​வெகு அருமை! ​தொடரந்து இது ​போல அறிவியல் கட்டுரைகளை ​வெளியிடுங்கள். தமிழில் கதை, கவிதை மற்ற இலக்கியங்கள் காண முடிகிற அளவிற்கு அறிவியல் இருப்பதில்லை. ​மொழிபெயர்ப்பு படைப்புகளிலும் இலக்கியம்தான் கணிசமான பங்கு வகிக்கிறது. இது​போன்ற அறிவியல் பதிவுகள் தமிழில் காணக் கிடைப்பது அறிவியலிலும் நம் முன்னேற்றத்தை ஊக்குவிப்பதாக அமையும். வாழ்த்துக்கள்!

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் சொன்னது…

தாராபுரம் ஜே கே அவேர்களே./
முதலில் உங்களின் வருகைக்கும், அதற்க்கும் மேல் உங்களின் கருத்துரை என்ற பெயரில் எனக்கு நீங்கள் கொடுத்த வூக்கதுக்கும் என் நன்றிகள்.

வால்பையன் சொன்னது…

தமிழுக்கு மிக முக்கிய பணியை செய்து வருகிறீர்கள்!

ஆனால் என்னை போன்ற குறைந்த படிப்பறிவு உள்ளவர்கள் புரிந்து கொள்ல கடினமாக இருக்கிறது, தயவுசெய்து முக்கிய விசயங்களை மொழி பெயர்ந்து தமிழில் போடமுடியுமா?

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் சொன்னது…

அன்பு வாலு! அப்ப நாங்க என்ன பெரிய படிப்பாளிகளா? ' சேம் ப்ளட் ! ' தமிழில் இதுப்போன்ற காணொளிகள் இல்லாததுக்கண்டு, பொங்கிப் பொருமி, ஒன்றுக்கு இரண்டுமுறையாக பார்த்து தெரிந்துக்கொண்டதுத்தான். முடிந்தவரை முக்கியமான விஷயங்களை தமிழ்ப்படுத்த முயற்சிக்கிறேன். அடுத்து 'நிலா... நிலா... ஓடிப்போ..!' ரெடியாக உள்ளது. மறக்காமல் பார்க்கவும். 'சந்திரனும் சோதிடமும்' பதிவின் வாரிசு அது!