புதன், 2 டிசம்பர், 2009

உயிருள்ள உடலுக்குள்ளே...! [Updated]பெரிய படிப்பு படித்த டாக்டரெல்லாம் இங்கு வராதிங்க. இது  சாதாரண மனிதருக்கு. ஆமாங்க. நம்ப உடம்புக்குள்ள ஒவ்வொரு வினாடியும் என்னென்ன நடக்கிறது என்றுப் பார்ப்போமா?  பிறந்து, நாம அழும் முதல் அழுகையிலிருந்து, வளர்ந்து வயசாகி, கடைசி மூச்சு விடும் வரை நம்ம உடலில் அப்படி என்னத்தான் நடக்குது?

நம் வாழ்நாளில் சுமார் 700 மில்லியன் முறை சுவாசிக்கிறோம்!
நாம தினமும் சாப்பிடும் சாப்பாடு சுமார் 30 மீட்டர் நம் உடலில் பயணப்படுகிறது தெரியுமா?
ஒவ்வொரு நிமிடமும் நம் உடலில் இருந்து சுமார் 30,000 இறந்த சரும செல்கள் உதிர்கிறது! ஒரு வருஷத்துக்கு இரண்டு கிலோ!
நம் உடலில் உள்ள ரத்த நாளங்களின் நீளம் சுமார் 37,000 மைல்கள்!
சாதாரணமாக ஒரு பெண்ணின் உடலில் 17 சதுர அடி தோல் இருக்கும். ஒன்பது மாத கர்ப்பிணிக்கு 18.5 வரை அதிகரிக்கும்.
மெதுவாக வளரும் விரல் நகம், பெருவிரல். வேகமாக வளருவது நடுவிரல் நகம்.
நம் வாழ்நாளில் நாம் சுமார் 10,000 கேலன்கள் உமிழ்நீர் (ஜோ..) சுரக்கிறோம்!
நாம் புன்னகைக்க 5 முதல் 53 முகத்தசைகள் வேலை செய்ய வேண்டும். ஆனால் கோபப்பட்டு சிடுமூஞ்சியாக இன்னும் அதிகமாக தேவைப்படுமாம்! ஆகவே எது சுலபமோ அதைமட்டும் செய்வோம்.
சரி . போதும்  வாங்க படம் பார்க்கலாம்.


7 கருத்துகள்:

ஜெகநாதன் சொன்னது…

புள்ளியில் ஆரம்பித்து பூஜ்யத்தில் முடியும் மனுஷ வாழ்க்கையை புள்ளி விபரமா பிட்டு பிட்டு வச்சிட்டீங்க!
கருவாகி, வளர்ந்து, பிரவசம் வரைக்கும் காணும் காட்சித்​தொகுப்பு ஒரு பிரமிப்பு!
//10,000 கேலன்கள் உமிழ்நீர் (ஜோ..) சுரக்கிறோம்!//
நமீதாவைப் பார்க்கும் போதும் இதே அளவுதானா நமக்கு?

அருமையான பகிர்வுக்கு நன்றி!!

M.S.E.R.K. சொன்னது…

//புள்ளியில் ஆரம்பித்து பூஜ்யத்தில் முடியும் //
நல்லா சொன்னீங்க ஜெகன்.
எங்கோ படித்தது ஞாபகம் வருகிறது.
கேள்வி: ஒரு ஆண் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தது எப்போது?
பதில் : விந்துவாக இருந்தபோதுத்தான்!
ஒரே நேரத்தில், மிக அதிக எண்ணிக்கையில் போட்டியாளர்கள் கலந்துக்கொள்ளும் ரெக்கார்ட் ப்ரேக் போட்டியும் அதுத்தான்!
நன்றி ஜெகன்.

Muhammad Ismail .H, PHD, சொன்னது…

@ அன்பின் M.S.E.R.K.,

ஒரு திருத்தம். விந்துவில் இருப்பது 23 க்ரோமேஸேம்கள் தான். அதில் 23 வது x ஆக இருந்தால் பெண். y ஆக இருந்தால் ஆண். அதிலும் பாதி ஆண், அல்லது பாதி பெண்தான். காரணம் ஆணின் விந்து தான் வாரிசின் பாலினத்தை தீர்மானிக்கிறது. சரியாக சொன்னால் நிறைய பாதி அண்ணன், அக்கா மற்றும் தம்பி, தங்கைகளை தள்ளிவிட்டு தான் நாம் பிறந்துள்ளோம். சரி இத்தனை ஆயிரம் அணுக்களில் நம் அணுவை மட்டும் எந்த சக்தி தேர்ந்தெடுத்தது ?


with care & love,

Muhammad Ismail .H, PHD,

M.S.E.R.K. சொன்னது…

அன்பு இஸ்மாயில் சார்,
மிகச்சரியாகச் சொன்னீர்கள். ஆனால் பின்னூட்டம் இட்டது ஒரு ஜோக். ஒரு விந்துவையே ஆணாகப் பாவித்து இட்டுக்கட்டப்பட்ட தமாஷ். சீரியசாக எடுத்துக்கொள்ளவேண்டாம்.
இதனை ஆயிரம் விந்தணுக்களில், வெற்றி இலக்காகிய சினை முட்டையை நெருங்குவது என்னவோ சுமார் நூற்றுக்கணக்கில்தான்! அதிலும் சிறந்த வெற்றி வீரனைத் தேர்ந்தெடுப்பதாக நான் நினைத்து வியப்பது, நான் என்றென்றும் மதிப்பு வைத்திருக்கும் 'இயற்கை அன்னை!' நீங்கள் வேறுப்பெயர் வைத்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Muhammad Ismail .H, PHD, சொன்னது…

@ அன்பின் M.S.E.R.K.,

நான் அதை தப்பாக எடுத்துக்கொள்ளவில்லை. தகவலை செம்மைப்படுத்த முயற்சி செய்தேன். அவ்வளவு தான்.


// அதிலும் சிறந்த வெற்றி வீரனைத் தேர்ந்தெடுப்பதாக நான் நினைத்து வியப்பது, நான் என்றென்றும் மதிப்பு வைத்திருக்கும் 'இயற்கை அன்னை!' நீங்கள் வேறுப்பெயர் வைத்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.//

எத்தனை பெயரில் அதை அழைத்தாலும் அது ஒன்றே ஒன்று தான். அதாவது அது பற்றி நிறைய Subject இருந்தாலும் Object என்னவே ஒன்று தான். அது ஒன்றுக்கு மேல் இருந்தால் நம்மை தேடி வந்திருக்கும். ஒன்றே ஒன்று இருப்பதால் தான் நாம் அதை தேடி அலைகிறோம். நன் சொன்னது சரியா, தவறா?

M.S.E.R.K. சொன்னது…

அருமை! அருமை! மனிதக்குலம் பிரிந்துகிடக்க, இந்த விஷயத்தை புரிந்துகொள்ளாததும் ஒருக்காரணம் இல்லையா இஸ்மாயில் சார்?

Muhammad Ismail .H, PHD, சொன்னது…

@ அன்பின் M.S.E.R.K.,


ஆம். ஆனால் மனிதர்கள் சில சமயம் கொஞ்ச காலத்திறகேனும் ஒற்றுமையாகிறார்கள். எப்பொழுதென்றால் இயற்கை பேரழிவின் போது. இயற்கையானது மனிதர்களுக்கு சாதி, மதம், பேதம் பார்க்காமல் சகட்டு மேனிக்கு ஆப்படிக்கும் போது அனைவரும் ஒன்று சேர்ந்துவிடுகின்றனர். நாகையில் சுனாமியின் போது இதை நான் கண்கூடாக பார்த்தேன்.


ஆனால் பணம் வர ஆரம்பித்தவுடன் பிரிவினைகளும் ஏற்பட ஆரம்பித்து விட்டது. இவர்களுக்கு நான் கூறுவதெல்லாம் ஒன்று தான். வானத்தை பாருங்கள். பரந்துவிரிந்து கிடக்கும் இந்த பிரபஞ்சத்தை பாருங்கள். அதைப்போல மனதும் விரிவடையும். பூமியில் உள்ளவைகளை பாரத்துக்கொண்டிருந்தால் அதைப்போல் மனசும் சின்னதாகவே இருக்க வாய்ப்பு அதிகம். நன்றிகள்.