திங்கள், 20 ஜூலை, 2009

ஏற்கனவே நிலவில் வேற்று கிரகவாசிகளா ?



' புதுசு புதுசா யோசிக்கிராய்ங்களே' என்று வடிவேல் புலம்புவதுத்தான் ஞாபகம் வருகிறது. நிலவில் ஏற்கனேவே வேறு ஒரு நாகரீகம் இருக்கலாம் என்று புதிய சந்தேகத்தை கிளப்பிவிட்டிருக்கிறார்கள் 'Moon raising' என்ற இந்த விவரணப் படத்தை எடுத்தவர்கள். எல்லா நாடுகளும், முக்கியமாக அமெரிக்க நாடும் பொதுமக்களை இந்த விஷயத்தில் மோசடிச் செய்கின்றன என்று குற்றம் சாட்டுகின்றார்கள். அவர்கள் கூறும் காரணங்களும் யோசிக்கவேண்டிய விஷயங்களாகத்தான் இருக்கின்றன.

Part I

MOON RISING from John Baselmans on Vimeo.

Part II

UFO: THE GREATEST STORY EVER DENIED II: MOON RISING from Awaken Consciousness on Vimeo.

ஞாயிறு, 19 ஜூலை, 2009

BLACK HOLES - பிரபஞ்சத்தின் பயங்கரங்கள். (வீடியோ)


உங்க ஊரிலேயே மிகவும் மோசமான ரௌடி யார் என்றால் யாரவது ஒருவரின் பெயரை சொல்லுவோம்! உலகிலேயே அதி பயங்கரமான அழிவாயுதம் எதுவென்றால் அணுவாயுதம் போன்ற ஏதோவொன்றை சொல்லக்கூடும்! ஆனால் மனிதன் அறிவுக்கெட்டாத, ஏன் கற்பனைக்கும் எட்டாத, இந்த உலகத்தில் மட்டும் அல்லாமல், இந்தப் பரந்து விரிந்த பிரபஞ்சத்திலேயே மிகவும் பயங்கரமான அழிவுச் சக்தி எதுவென்றுக் கேட்டால், நடுக்கத்துடன் சொல்லவேண்டிய பதில் ' Black Holes ' என்று அழைக்கப்படும் ' கருந்துளைகள் ' அல்லது ' கருங்குழிகள் ' என்பதே. என்னப்பா இப்படி பயப்படுகிறாய்? அப்படி என்ன விபரீதம் உள்ளது? என்று சிலர் கேட்பது தெரிகிறது. ஐயா... திமிங்கலத்தின் வாயிலே சிக்கியவர்கள் கூடத் திரும்பலாம். ஆனால் இந்தக் கருந்துளைக்கு அருகில் சென்றவர்கள் சென்றவர்கள்தான். அட்ரெஸ் இல்லாமல் போவது எனபது இதைத்தான்! நாம் என்ன?... ஜுஜுபி! இந்த ஊர்... ! இந்த நாடு...! இந்த பூமி...! இந்த சூரியன்..! இதுப்போல எது வழியில் வந்தாலும் விழுங்கி ஸ்வாகா செய்துவிடும்! பந்தாப் பண்ணிக்கொண்டுத் திரியும் தனி மனிதனோ,...ஜாதியோ...மதமோ... கட்சியோ...அரசாங்கமோ... எல்லாம் கணக்கிலேயே வராது! உள்ளே என்ன நடந்தது என்று சொல்லவும் முடியாது. ஏனென்றால் போனவர்கள் வந்தால்தானே! இதற்க்கு மேல் யாரயாவது திட்ட வேண்டுமென்றால் ' Go to Hell..' என்பதற்கு பதிலாக ' Go to black Hole ' என்றோ, நம்மவூர் தாய்குலங்களின் வழக்கப்படி ' உன்ன Black Hole வந்து விழுங்க !' என்றுத் திட்டலாம். Really worth it!

சரி, இந்தக் கருந்துளைகள் எப்படி உருவாகின்றன என்று சிம்பிள்ஆகப் பார்ப்போமா? சூரியனைவிட மிகப்பெரிய நட்சத்திரங்கள், 'சூப்பர்ஜயன்ட்' ( supergiant) என்று கூறுவார்கள். அவைகள் எரியப் பயன்படும் ஹைட்ரஜன் வாயு காலியாகும்போது , அதன் வெப்பத்தை இழந்து கூலாகச் சாகத்தொடங்கும். இதை 'சூப்பர்நோவா ' (supernova) என்றழைப்பர். அதன் சக்தியை இழந்தப்பின் அதன் சுயக்கவர்ச்சி விசையால் (garvitational pull) தன்னில் தானே புதைந்துப் போகிறது. எப்படி என்றால், 13,92,000 km diameter அளவுடைய ஒரு லட்டை( நாம் சாப்பிடும் இனிப்பான லட்டு) , அதை 3 km diameter அளவுடைய லட்டாக அம்முக்கவேண்டி இருந்தால், எப்படிப் பட்ட சக்தி தேவைப்பட்டு இருக்கும்? அதுதான் அந்த கருந்துளையின் ஈர்ப்பு விசை! கற்பனை செய்யமுடியாத garvitational force! அப்படியே ஒரு புள்ளியாக மறைந்துப்போகும். அது மற்றவைகள் மீது ஏற்படுத்தும் தாகத்தை வைத்தே அதன் இருப்பை அறிந்துக் கொள்ள இயலும்.

மனிதனுக்கு தெரிந்து ஒளித்தான் மிக வேகமாகச் செல்லக்கூடியது. ஆனால் அதுவும் கருந்துளையில் இருந்துத் தப்பமுடியாது! நம் பூமியில் இருந்து வான்வெளிக்கு, நம் புவியீர்ப்பு விசையை தாண்டிச் செல்ல வினாடிக்கு 11 km வேகத்தில் சென்றால் போதும் மேலே சென்று விடலாம். சூரியனில் இருந்து விடுப்பட வினாடிக்கு 600 km வேகத்தில் செல்லவேண்டும். ஒளியின் வேகம் வினாடிக்கு 3,00,000 km. ( மூணு லட்சம் கிலோ மீட்டர் ஐயா!) ஆனால் இந்த ஒளியே கருந்துளையில் இருந்து தப்பிக்கப் போதாது! என்னக் கொடுமை சார் இது!
இந்த கருந்துளைகளுக்கு ஒரு எல்லை ஒன்று உண்டு. அதை 'ஈவன்ட் ஹாரிசான்' (event horizon). இதை ' point of no return ' என்றும் அழைப்பர். 'திரும்ப முடியாத ஒரு வழிப் பாதை!'

இந்தகருந்துளைக்குள் நாம் விழுந்தால் என்னவாகும்??????
முதலில் நுழைந்தவுடன் மரணம் நிச்சயம்!. முதலில் நம் கால்கள் உள்ளே நுழைகிறது என்று வைத்துக் கொண்டால், நம் தலைமேல் ஏற்படும் ஈர்ப்பு விசையைவிட நம் கால்களில் பல ஆயிர மடங்கு ஈர்ப்பு விசை இருக்கும்! நம் கால்கள் இழுக்கப் பட்டு ஜாவ்வு மிட்டாய் போல பல கிலோ மீட்டர் நீளத்துக்கு இழுக்கப் படுவோம்! பற்பசை ஒரு டியூபில் இருந்து பிழியப்படுவதைப்போல் பிழியப் படுவோம்! மற்றும் ஒரு உடல் இரண்டாகப் பிய்க்கப் பட்டு, அந்த இரண்டு நான்காக, நான்கு எட்டாக, எட்டு பதினாறாக .... இப்படி பலுகிப் பெருகுவோம்! உலகத்தில் ஜனத்தொகை பெருக்குவோரை இதில் தூக்கிப் போடவேண்டும்! இன்னொரு விஷயம் கூட உண்டு! நம் கரும்துலையை நெருங்கும் போது நம் தலையின் பின்பக்கத்தை நாமே நம் கண்களால் பார்க்க முடியும்! என்னக் கண்றாவி இது? இதை 'ஐயின்ஸ்டின் வலயம்' என்றுக் கூறுகிறார்கள். எப்படி என்றால் கருந்துளையின் ஈர்ப்பு விசை நம் பிணக்கம் உள்ள ஒளியையும் ஈர்த்து நம் கண் முன்னே காணச் செய்துவிடும் என்று சொல்லுகிறார்கள்! எல்லாம் அறிவியல் புனை கதைப் போல உள்ளது அல்லவா? நிஜமாகவே இன்னும் நிறைய உள்ளது!
இத்தோடு நிறுத்திக்கொண்டு ' Super massive Black Holes ' என்ற வீடியோவைப் பார்ப்போமா?





எனக்குப் பிடித்த இந்தக் காட்சி எந்த திரைப் படத்தில் என்று யாரவது கூற முடியுமா?

வெள்ளி, 17 ஜூலை, 2009

பிரபஞ்ச எல்லைவரை ஒருப் பயணம் (வீடியோ)




Space/Universe என்று அழைக்கப்படும் பிரபஞ்சம் அல்லது அண்டம்ரப எப்படி இருக்கும், எத்தனைப் பெரியது என்று முழுவதுமாக இதுவரை யாரும் கற்பனைக் கூடப் செய்துப் பார்த்திருக்க முடியாது. ஏனென்றால் அதன் பரிமாணங்கள் மனிதனின் தற்போதைய அறிவிற்கு அப்பாற்பட்டவைகள். ஆனால் விஞ்ஞானம் பிரபஞ்சத்தைப் பற்றிய ஒரு துளியளவு விளக்கம் கூற முயன்றிருக்கிறது. இந்த வீடியோவில் அதைப்பற்றிப்  பார்க்கலாம். அதற்க்கு முன் நாம் ஒளி, ஒளிவருடம் போன்றவைகளைப் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டும். (ஒளி, வேகம்,நேரம்  இவைகளைப்பற்றி வேறொரு பதிவில் தனியாகப் பார்க்கலாம்.)
மனிதனின் தற்போதைய அறிவிற்குத் தெரிந்த வரையில் ஒளிதான் (light) மிக வேகமாக பயணிக்கக் கூடியது. அதன் வேகம் ஒரு வினாடிக்கு 299,792,458 கிலோ மீட்டர்கள். அதாவது ஒரு வினாடியில் ஏழு முறை இந்த உலகத்தை சுற்றிவந்துவிடும். கற்பனை செய்துப் பார்க்க முடிகிறதா? இதைப்போல் இதே ஒளி ஒரு வருடம் இதே வேகத்தோட பயணித்தால், எவ்வளவு  payaniththaalpayaniththaal தூரம் செல்லுமோ, அந்த தூரம் தான் 'ஒரு ஒளி வருடம்'. (1 light year). அதாவது மிகச் சரியாக 9,460,730,472,580.8 கிலோமீட்டர்கள்! கண்ணைக் கட்டுகிறது அல்லவா? இந்த ஒளியின் வேகத்தில் சென்றால் 8.32 நிமிடத்தில் சூரியனைச் சென்றடையலாம். 3,76,300 km தூரமுள்ள நிலவை 1.25 வினாடிகளில் சென்றடையலாம். நம்முடைய சூரியக் குடும்பம் இருக்கும் ' பால் வெளி வீதி  மண்டலம்' (சரியா?) Milkeyway galaxy யைக் ஒரு முனையில் இருந்து அடுத்த முனைக்குச் செல்ல ' ஒரு லட்சம் ஒளி வருடங்கள்' ஆகும்! இதுப் போன்ற லட்சக்கணக்கான மண்டலங்கள் உண்டு இந்த பிரபஞ்சத்தில்! அப்படி என்றால் அதன் பிரமாண்டத்தை கற்பனையும் செய்து பார்க்க இயலாது.
சரி இப்போது நாம் நம் பூமியில் இருந்து பிரபஞ்சத்தின் எல்லை வரை ஒரு பயணம் மேற்கொள்ளப் போகிறோம். வழியில் நிறைய ஆச்சர்யங்களையும், அற்புதங்களையும் அதி பயங்கரங்களையும் காண இருக்கிறோம். நான் ரெடி. நீங்க ரெடியா?













இந்த வீடியோவை பார்த்தப் பின், இந்த சிறிய உலகில், மனிதன் பணம்,பதவி,ஜாதி,மத ,இன வெறிக் கொண்டு எப்படியெல்லாம் ஆட்டம் போடுகிறான் என்பதாய் எண்ணிப் பார்க்கும் போது சிரிப்பதா, அழுவதா? என்றுப் புரியவில்லை. இந்த அகண்ட பிரபஞ்சத்தின் முன் அவன் ஒரு தூசுக்குக் கூடச் சமமில்லை என்று எப்போது புரிந்துக் கொள்வான்? பிரபஞ்சத்தின் கால அளவோடு, மனிதனின் வாழ்நாளை ஒப்பிடும்போது கண் இமைக்கும் நேரத்தை விடச் மிகவும் சிறியது என்று என்றைக்குத் தெரிந்துக் கொண்டு அனைவரோடும் அன்போடு இருப்பான்? அந்தக் காலம் வருமா நண்பர்களே?

வியாழன், 16 ஜூலை, 2009

நிலவில்லா பூமி (வீடியோ)

16/07/69



இன்று 16/07/09, மனிதன் நிலவில் காலடி வைத்து 40 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இந்த நாளைப் பற்றித் தெரியாமல் நேற்றே 'நிலவு...பூமியின் தோழி' என்ற வீடியோப்பதிவைப் போட்டுவிட்டேன். What a coincidence?(இதற்க்கு தமிழில் என்ன?). இன்று மீண்டும் அதே நிலவைப் பற்றிய இன்னொரு வீடியோப்பதிவு. என்ன ரொம்ப போர் அடிக்கிறேனா? கொஞ்சம் பொறுத்துக்கொள்ளவும்.எல்லாம் நன்மைக்கே.
இன்று நாம் பார்க்கவிருக்கும் வீடியோ ' If we had no Moon' எனப் பெயர்க் கொண்டது. காண மிக அறிவுப்பூர்வமாகவும் அற்புதமாகவும் படமாக்கப்பட்டுள்ளது. உங்களையும் அந்த அன்பவம் பெற அழைக்கிறேன். இதைப் பார்க்குமுன் இதற்க்கு முந்தைய வீடியோப்பதிவையும் பார்த்துவிட்டால் நலம். இன்னும் நன்றாக விளங்கிக் கொள்ளலாம்.







புதன், 15 ஜூலை, 2009

நிலவு.... பூமியின் தோழி.(வீடியோ)




" நிலவுக்கு என் மேல் என்னடிக் கோபம்..."
" நிலேவே என்னிடம் மயங்காதே..."
" நிலாவே வா..."
"வான் நிலா, நிலா அல்ல..."
" வெள்ளி நிலா முற்றத்த்திலே..."
" இளைய நிலா பொழிகிறது..."
இன்னும் எத்தனை எத்தனைப் பாடல்கள் !
நிலவு ....! நினைத்தாலே குளிர்ச்சியாக் உள்ளது இல்லையா? பல்லாயிரம் ஆண்டுகளாகவே மனிதனுக்கு நல்ல துணையாக இருந்து வந்திருக்கிறது. இரவில் ஒளி கொடுக்கும் விளக்காகவும், கடல் பயணத்தில் திசைக் காட்டியாகவும் காதலர்களுக்கு பல விஷயங்களில் கற்பனையாக ஆறுதலாகவும் இன்றும் இருக்கிறது. உலகின் பல இன மக்களுக்கு அது ஒரு கடவுளாகவும் உள்ளது.இதுவரையில் மனிதன் பூமியைத் தவிர காலடிப் பதித்த ஒரே இடம் இதுதான். மேலும் நாசா விஞ்ஞானிகள் நிலவில் காலனி அமைக்கத் திட்டமிட்டுள்ளனர் என்கிற விஷியம் எல்லோருக்கும் தெரியும்.  அதுவும்  டிசம்பர் 24,2029இல் பூமியை ஒரு விண்வெளிப் பாறைத் தாக்கும் அபாயம் உள்ளதால்,இன்னும் வேகமாகவே வேலைகள் நடக்கிரதாகக் கேள்வி! அந்த ரேசில் நம்ம நாட்டவரும் உள்ளார்கள் எனபது இன்னும் விசேஷம்.அதைப்பற்றி இன்னொருமுறைப் பார்க்கலாம்.

நிலவு, எப்படி அங்கு வந்தது?, ஏன் அங்கு வந்தது?,அதனால் என பயன்? போன்ற பலதரப்பட்ட கேள்விகளுக்கு இந்த வீடியோவில் விடைக் காணலாம் வாருங்கள்.

பூமி என்ற விண்வெளிக்கப்பல்.[Updated]

100 மைல்களுக்கு மேலே இருந்து எடுக்கப்பட்ட பூமியின் முதல் புகைப்படம்.



அது என்ன இப்படி ஒரு தலைப்பு? ஆம். ஹிஸ்டரி சேனல் இந்த வீடியோக்கு இந்தப் பெயர் தான் வைத்துள்ளது. இதில் பூமி பற்றிய எல்லா விஷயங்களையும் அலசி ஆராய்ந்திருக்கிறார்கள். அப்படி என்ன நமக்குத் தெரியாதை சொல்லிவிடப் போகிறார்கள் என்று நானும் முதலில் நினைத்தேன். ஆனால் பார்த்தப் பிறகுத் தான் தெரிந்தது 'கற்றது கை மண்' கூட இல்லை என்று. சரி பேசிப் பேசி நேரத்தை வீணாக்க வேண்டாம். கண்டு களியுங்கள். கருத்துக் கூறுங்கள். நன்றி.



செவ்வாய், 14 ஜூலை, 2009

சூரியனின் ரகசியங்கள்.[Updated]

அது ஏனோத் தெரியவில்லை, இதுப் போன்ற பதிவுகளைப் போடத்தான் மனம் விரும்புகிறது. கேலியும், கிண்டலும்,வாழ்த்துக்களும்,வசவுகளும்,( அதுவும் ஒரு ஜாலித்தான்.அதுப்போன்றவைகளுக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களில் சிலரின் பரம ரசிகன் அடியேன் நான்.) நிறைந்த இந்த வலையுலகில், இதுப்போன்ற பதிவுகளுக்கு வரவேற்ப்பு இல்லை என்பது நிதர்சனம். இருந்தாலும் யாரோ ஒருவர் இருவராவது படிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

நாம் எல்லோரும் நியூட்டனோ, ஆல்பர்ட் ஐன்ஸ்டைனோ, அல்லது தற்போது வாழும் அறிவுஜீவி ஸ்டீபன் ஹாகிங்க்சோ போல ஆக முடியாது.(முடியுமா?) ஆனால் அவர்களின் அறிவில் ஒரு சிறுத் துளியாவது நாம் பெற முயற்சிக்க வேண்டும். அது போன்ற முயற்சித்தான் இது. பெரியவர்கள் பார்த்தல் மட்டும் போதாது. நம் வீட்டுப் பிள்ளைகளையும் இதுப் போன்றவற்றை பார்க்க ஊக்குவிக்கவேண்டும். என்ன ஒன்று, இதுப்போன்ற அறிவியல் சார்ந்த காணொளிகள் தமிழில் தயாரிக்க இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ? அதுவரையில் காத்திருக்க வேண்டாம். ஆங்கில மொழியில் பார்ப்பதால் அந்த மொழியறிவையும் வளர்த்துக்கொள்ளலாம்.
வலையுலகில் நல்லது கேட்டது எல்லாம் கொட்டிக்கிடக்கிறது. சில அதில் நல்லவைகள் இருக்கும் இடம் எனக்கு கொஞ்சம் தெரியும். அவைகளை பார்த்து நானும் தெரிந்துக்கொண்டு, உங்களுக்கும் காண்பித்துத் தரும் சிறிய முயற்சி இது. அது உங்களை வந்தடைந்ததா என்று உங்களின் கருத்துக்கள் மூலமாக தெரிந்துக்கொள்வேன். ஆகவே சிரமம் பாராமல் ஏதாவது சொல்லுங்கள்.

சூரியன், நம் சூரியக்குடும்பத்தின் தலைவன். அவனுக்குள் எதனை ஆயிரம் ரகசியங்கள். நம் குடும்பத்தின் தலைவரான நம் தந்தையைப் பற்றி நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டாமா?

சரி நீங்கள் பார்க்க ஆரம்பியுங்கள். மீண்டும் அடுத்த முறை நம் பிரபஞ்சத்தின் மேலும் பல ரகசியங்களை ஆராய்வோம்.