புதன், 24 மார்ச், 2010

விண்வெளியில் ஒரு விழி.


ஹப்பிளுக்கு 25வது பிறந்த நாள் வாழ்த்துக் கூற மற்றும் விவரம் அறிய .... இங்கே மனிதனுக்கு பிரபஞ்சத்தின் அற்புதங்களை காட்டி அசரவைத்த ஹப்பிள்  தொலைநோக்கிக்கு இன்று 25 வயது...! இந்த உலகம் எத்தனையோ தொலைநோக்கிகளை கண்டுள்ளது. ஆனால் ஹப்பிளைப்  போல பிரபஞ்சத்தின் ரகசியங்களையும் ,கனவிலும் காணமுடியாத அழகையும் மனிதனுக்கு அளித்த காலத்தின் கண்கள், அறிவியலின் அற்புதம் இந்த ஹப்பிள்.
பிரபஞ்சம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக விரிவடைந்துக் கொண்டு இருக்கின்றது என்று அறுதியிட்டு  உறுதி செய்த ' எட்வின் ஹப்பிள் ' (1889-1953)  எனும் அமெரிக்க வானவியலாலரின் பெயர்க்கொண்டதுத்தான் இந்த  அற்புதப் படைப்பு. 
எட்வின் ஹப்பிள் 
ஆனால் இந்த விண்வெளி தொலைநோக்கி என்ற ஐடியாவை முன்வைத்தவர் இருபதாம் நூற்றாண்டு வானவியல் இயற்பியலாலர்களுள் ஒருவரான   லிமன் ஸ்பிட்சர் Jr. (1914 - 1997) என்பவர்தான். அவர் பெயரில் 'ஸ்பிட்சர் விண்வெளித் தொலைநோக்கி' என்று வேறொரு தொலைநோக்கியை 2003 ஆம் வருடம் நாசா விண்ணில் ஏவியுள்ளது.
லிமன் ஸ்பிட்சர் Jr.
அது விண்ணில் ஏவப்பட்ட நாள் 24/25  ஏப்ரல் 1990. அப்போதே அதன் ஆயுள் 20 வருடங்கள் என்று நிர்ணயிக்கப்பட்டுவிட்டது. அதை இன்னும் கொஞ்சம் நீடிக்கலாம் என்ற தற்போதைய  விண்ணப்பங்கள் 'நாசா'வினால் நிராகரிக்கப்பட்டுவிட்டதாக கூறப்பட்டது. 
ஹப்பிள் 43.5 அடி நீளத்துக்கு, அரு ஸ்கூல் பஸ் சைசுக்கு இருக்கும் என்பார்கள். எடை 11,110 கிலோ ! இருந்தாலும் விண்வெளியில் அது  ஒரு  சிறகுப்போல! 
வான்வெளியில் ஹப்பிள் ஒரு நொடிக்கு 5 மைல்கள் வேகத்தில் நகரும். 17,500 mph ! நம்ம பூமியை ஒருமுறை சுற்றிவர 97 நிமிஷங்கள் எடுத்துக்கொள்ளும். சுற்றுப்பாதை இருக்கும்  உயரம் 569 km.

அது பார்க்காமல்  தவிர்க்கும் இரண்டு விஷயங்கள், புதன் & சூரியன்.
ரொம்ப நிறையப் படங்கள் எடுத்துத் தள்ளியது நம்ம பூமியைத்தான்!
அது தன்னைத்தான்  பராமரித்துக்கொள்ள உபயோகிக்கும் சக்தி, இலவச சூரிய சக்தி. ஒரு பூமிச் சுற்றுக்கு செலவாகும்  மின்சார சக்தியினால் வெறும் 28 நூறு வாட்ஸ்  பல்புகளைத்தான் எரிய வைக்க முடியும் என்று  படித்ததாக ஞாபகம்.
உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியை பற்றியே இன்னும் ஒரு தெளிவான முடிவை ஒத்துக்கொள்ள மறுக்கும் நமக்கு, கற்பனைக்கும் எட்டாத பிரபஞ்சத்தின் பரிணாமத்தைப் பற்றிய சில 'சாம்பிள்களை' முதன் முதலில்  நமக்கு காண்பித்த பெருமை ஹப்பிளையே சாரும். இதன் கதை முடிந்தால், இதற்கும் மேலான சக்திவாய்ந்த  ஒரு கருவியை விண்ணில் செலுத்த நாசாவினர் தயாராக உள்ளனர். James Webb Space Telescope , (JWST ) என்று பெயரிடப்பட்ட சூப்பர் தொலைநோக்கி அக்டோபர் 2018 இல் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. என்னத்தான் இருந்தாலும் நம் முதல் காதலுக்கு உள்ள மவுசே தனித்தானே !

ஹப்பிள் பற்றிய  சில காணொளிகள்...
James Webb Space Telescope...
திங்கள், 22 மார்ச், 2010

கண்ணில் தெரியாக் கதைகள் [1] (வீடியோ)நம்ம கண்கள் ஒரு ஆச்சரியப் படத்தக்க ஒரு விஷயம் என்றாலும். நாம் நினைப்பதுப்போல் ரொம்ப மெச்சிக்கொள்ளும் அளவுக்கு இல்லை என்பதை  இந்த வீடியோவைப் பார்த்தப் பின்பு எண்ணத்தோன்றுகிறது. நாம் பார்க்கக் கூடிய விஷயங்கள் என்னவென்றால், 400 முதல் 750 நேனோ மீட்டர்கள் அலைவரிசை ஒளியை உமிழும் அல்லது பிரதிபலிக்கச் செய்யும் விஷயங்களை மட்டுமே. மீதி 99.99999999999 % நிறமாலை எனப்படும் ஸ்பேக்ரம் ஒளிப்பகுதிகள் நம் கண்களுக்குத் தெரியாது. ஆகவே சொல்லப்போனால் ...  கண் பார்வை இல்லாதவர்களை குருடர் என்று கூற நம்மில் யாருக்கும் தகுதி இல்லை.

 சென்ற வாரம் பி பி சி தொலைக்காட்சியில் காண நேர்ந்த ஒரு ஆவணப்படத்தை உங்களுடன் பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன்..இந்த காணொளியின் தலைப்பு ' Richard Hammond's Invisible World:Speed Limits. நம் கண் இமைக்க 50 மில்லி செக்கன்ட் ஆகிட்டது. அந்த காட்சி நம் மூளைக்கு சென்று ஆராய்ந்து தெளிவாக 100 மில்லி செகண்ட் ஆகிறது. இந்த காலக்கட்டத்தில் என்னனவோ நடந்தது விட்கிறது. மிக வேகமாக நடக்கும் செயல்களை நம்மால் காணமுடிவதில்லை. ஆனால் இந்த ஆவணப்படத்தில், மிக நவீன அல்ட்ரா ஹை ஸ்பீட் கேமராக்களைக் கொண்டு, நாம் இதுவரைக் கற்பனையிலும் காணமுடியாத காட்சிகளை நம் கண்முன்னே திறம்பட நிறுத்தியுள்ளனர். அதாவது, நாம் இமைக்கும் நேரத்தில், நாம் காணாமல் விடுபட்ட அற்புதங்களை அழகாக காட்டியுள்ளனர். 

வாங்க. நீங்களும் பார்த்தால், இந்த ஆவணப்படம் உங்களையும் கவரும் என்பதில் சந்தேகமில்லை. கருத்துக்கள் இருந்தால் கூறவும். 


வெள்ளி, 19 மார்ச், 2010

டார்வின் எனும் ஜீனியஸ்.(வீடியோ)

PART Iமீண்டும் அறிவியல் ஆர்வலர்களுக்கு விருந்து!
[ சென்றப் பதிவான 'கிங் கோப்ரா' பற்றிய பதிவிற்கு, ஒரே நாளில் 800 ஹிட்டுகளை தந்த நண்பர்களுக்கு நன்றி.
பிரபல பதிவர்களுக்கு வேண்டுமென்றால் இது சாதாரணமாக இருந்திருக்கலாம். ஆனால் எனக்கு இது ஆச்சரியம்! அதிலும் ஒருவர்தான் 'நல்லா இருந்ததா? இல்லையா ?'
என்று ஒரே வார்த்தையில்(!) கூற முன்வந்தார். அது இன்னும் ஆச்சரியம் !! ]  

1859 ஆம் வருடம், சார்லஸ் டார்வினின் 'உயிரினங்களின் தோற்றம்' என்று தமிழில் அழைக்கப்படும் 'Origin of Species' என்ற 'மாஸ்டர் பீஸ்'  புரட்சி நூல் வெளியிடப்பட்டு, நூற்று   ஐம்பது ஆண்டுகள் கடந்து விட்டது. ஆமா. அதுக்கு இப்ப  என்ன என்று கேட்கிறீர்களா?
சமீபத்தில் வால் பையன் பதித்த ஒரு பதிவை படிக்க நேர்ந்தது. எனக்கும்  பிடித்த சப்ஜக்ட் என்பதால் நாமும் ஏதாவது செய்யலாம் என்று நினைதப்போது, சென்ற வருடம், இங்கிலாந்தின்  'சேனல் 4 ' அளித்த 'The Genius of  Charles Darwin.'  தொலைக்காட்சித் தொடர் நினைவுக்கு வந்தது.
இதை அளித்தவர், தற்காலத்தின் தலைசிறந்த இயற்கையியல் அறிஞரும், இறை மறுப்புக் கொள்கையாளருமான பேராசிரியர்.ரிச்சர்ட் டாகின்ஸ் ஆவார். (நம்ம  ஊரில் உள்ள பேராசிரியர் போல இல்லை இவர்.. ரொம்ப தெளிவானவர்!)  இவரைப்பற்றி ஏற்கனவே ஒரு பதிவு  போட்டாகிவிட்டது. பார்க்காதவர்கள் நம்ம வேற அட்ரஸில்  போய்ப்பார்த்துக்கொள்ளலாம்.

மூன்று பகுதிகளைக் கொண்ட  இந்தக் காணொளியில் டார்வினின் யார் என்பதைப்   பற்றியும், பரிணாமக் கொளகையின் உருவாக்கப் பற்றியும், அது ஏன் அவ்வளவு முக்கியம், மற்றும் இந்த புரட்சிக்  கொள்கை மனித இனத்தைப் பற்றிய  கற்பனைகளையும் , மத மற்றும் அறிவியல் நம்பிக்கைகளையும்  எப்படி புரட்டிப் போட்டது என்று டாக்கின்ஸ் அருமையாக விளக்குகிறார்.

இந்த முதலாம் பகுதியில், டார்வினின் அறிவியல் நோக்கிப் பயணம் விளக்கப்படுகிறது. கலபாகஸ் தீவுகளில் டார்வினின்   இயற்க்கை பரிசோதனைகளையும் ,அமெரிக்காவில் அவர் கண்ட காலச் சுவடுகளையும், டாகின்ஸ் தன் பிறந்த நாடான கென்யா நாட்டின் உயிரினகளின் 'தக்கன பிழைக்கும்' (Fittest of the Survival) என்ற தர்க்கத்தை விளக்க, அங்குள்ள உயிரினங்களின் வாழ்கைப் போராட்டத்தையும் திறம்பட விளக்குகிறார்.

இது ஒரு மத சார்பற்ற, அறிவியல் சார்ந்த பதிவாகும். எல்லோரும் அறிந்துக்கொள்ளவேண்டிய விஷயமாகும். மறுப்பதும் ஆதரிப்பதும் வேறு விஷயம். இதுத்தவிர மேலும் இரண்டுப் பகுதி  காணொளிகள் காத்திருக்கின்றன.

 ஆகவே நண்பர்களே ..... வருகைக்கு நன்றி.  

சனி, 13 மார்ச், 2010

கிங் கோப்ரா = ராஜ நாகம் = டெரர் ! (வீடியோ)


என்ன மாதிரி பெயர் வைத்துள்ளார்கள், 'கிங் கோப்ரா/ராஜ நாகம்' என்று. உண்மையிலே ஒரு 'royal name.! பாம்பையே தின்னும் பாம்புக்கு இதைவிட வேறு என்ன பெயர் பொருத்தமாக இருக்கும்?
பாம்புகளைப் பற்றிய பயம் நம் ஜீன்களிலேயே கலந்துள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆம். அது ஏனோ அந்த கால்களற்ற, வழவழப்பாக ஊர்ந்து செல்லும் அந்தப் பிராணிகளைக் கண்டால் நம் உடல் சிலிர்துக்கொள்ளுகிறது. நான் கூறுவது பெரும்பாலான மனிதர்களுக்கு. இதற்கு  விதிவிலக்குகளும் உண்டு! பாம்புகளுக்கான பயத்தை 'ஒபிடியோப்போபியா' (Ophidiophobia) என்கின்றனர். பாம்பையே பார்த்திராத  சிலப்பேருக்கு அவைகளை பற்றி  நினைத்தாலே சிலிர்த்துக்கொள்ளும் என்பது கண்கூடு!
சும்மாவா சொன்னான் பாப்பென்றால் படையும் நடுங்கும் என்று....
இங்கே நாம் பார்க்கப்போவது பாம்புகளிலேயே பயங்கரப் படைப்பான 'கிங் கோப்ரா' எனப்படும் ராஜ நாகத்தைத்தான்.  நாம் ஒரு பாம்பை எதிர்நோக்க நேர்ந்து, அந்தப் பாம்பு, ஆறு அடி உயரத்திற்கு எழுந்து நின்று, நம் இரண்டுக்கைகளையும் சேர்த்த அளவிற்கு படம் விரித்து  நம் கண்களை நேருக்கு நேர் பார்த்து, தன் கோரப்பற்க்களை காட்டி 'புஸ்ஸ் ' என்று ஆக்ரோஷமாக சத்தம் எழுப்பினால் ... எப்படி இருக்கும்??! ஆமாம். இவைகள் செய்யும்!

பிற பாம்புகளையே உண்டு வாழும் இவைகள் சில சமயம் மற்ற விலங்குகளையும் உணவாகக்கொள்ளும். ஆனால் ஒரு ' நான் வெஜ் ' விரும்பி!, தன் இனத்தையே தின்று ஏப்பம் விடும் 'Cannibal' லிசத்தையும் விட்டு வைக்கவில்லை.
இவைகளின் ஆயுட்காலம் இருபது வருடங்களுக்கும் மேல்.

இவை முட்டையிட்டு, அடைகாக்கும் போதும், தோல் உரிக்கும் போதும் ரொம்ப டெரர் ஆக இருக்கும்.  ஒரே நேரத்தில் 20-40 முட்டைகல்க்கை இடும். அப்போது கைக்கால்கள் இல்லாத இந்த ஜந்துக்கள், இலைகளைக்கொண்டு, தன் முட்டைகளை அடைக்காக தரையிலேயே  கூடு கட்டும். இப்படி கூடு கட்டும் ஒரே பாம்பினம் இவைகள்தான். இவைகளின் அடைக்காலம் 60 - 90 நாட்கள் வரை. அதுவரை ஆண் பாம்பு , தாயுடன் கூடவே இருந்து பாதுகாப்பாக இருக்கும். தாய் மூன்று மாதங்கள் வரை எதுவும் சாபிடாமல் விரதம் இருக்கும்., குட்டிகள் வெளியே வரும் காலம் நெருங்கியவுடன், வேகவேகமாக வெளியேறி, தன் உணவை தேடத் துவங்கும். ஏன் தெரியுமா? தப்பித்தவறிக்கூட, தன் கொடும்பசியில், தன் குட்டிகளையே தின்றுவிடாமல் இருப்பதற்குத்தான்! 
விஷப்பாம்புகளிலேயே மிக நீளமாக, 18 முதல் 20 அடி வரை வளரக்கூடியவை, இவைகள்தான். சாகும்வரை இவை வளர்ந்துக்கொண்டேதான் இருக்கும்! 

சாதாவகை நாகங்களை விட, இவைகளின் விஷம் கொஞ்சம் வீரியம் குறைந்தவைத்தான், ஆனாலும் ஒரேக் கடியில், ஒரு யானை அல்லது 20 மனிதர்களை மண்டையைப் போடவைக்கும் அளவிற்கு அதிகமானது!
பொதுவாக  பாம்புகள் ரொம்ப வெட்கப்படும் என்று கூறுவார்கள். ஆனால் நம்ம ராஜ நாகம் அப்படியில்லை. எதையும் ஒருக்கைப் பார்க்கும் தைரியம்  உள்ளவை. 
மேற்க்கூரியாவை இந்த அற்ப்புத பிராணிகளைப் பற்றிய  ஒரு  சில தகவல்கள்.


இந்த நேரத்தில் திரு.ரெமுலஸ் விட்டேக்கர் என்னும் மாமனிதரப்பற்றி குறிப்பிட்டே ஆகவேண்டும். 67 வயதான இவர், அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து, தற்போது  இந்தியாவில் வாழும், உலகில் தலைசிறந்த ஊர்வனவியல் ஆய்வாளராக திகழ்கிறார். இவர்  நம்ம சென்னை பாம்பு மற்றும் முதலைப் பண்ணையின் நிறுவனர் என்பது நிறையப்பேருக்கு தெரிந்திருக்கும். தன் வாழ்நாளை ஊரும் பிராணிகளுக்காக அர்ப்பணித்து, சுற்றுச்சூழல் நலனுக்காக உழைத்து வரும் ஒரு சிறந்த மனிதர். 1997 ஆம் வருடம் அவர் தயாரித்து, நேஷனல் ஜியாகரபி சேனலில் ஒளிப்பரப்பப்பட்ட , எம்மி விருது பெற்ற 'கிங் கோப்ரா' என்ற காணொளியை கண்டு ஸ்தம்பித்து விட்டேன். அன்றிலிருந்து இந்த ராஜ நாகங்களின் மீது ஒரு இனம்புரியாத ஈர்ப்பு ஏற்பட்டுவிட்டது. தற்போது இன்னொரு புதிய காணொளியை அளித்துள்ளார் ரெமுலஸ். அதன் பெயர் 'Secrets of King Cobra'. அதை உங்களுடன் பகிர்ந்துக்கொள்ளத்தான் இந்தப்பதிவு. நீங்கள் இதைப் பார்க்கும் முன் உங்களிடம் ஒன்று சொல்லவேண்டும். இளகிய மனம் கொண்டவர்கள் இதைப் பார்க்கவேண்டாம். ஏன் என்பது இதைப் பார்த்தால்தான் தெரியும். சொல்வதை சொல்லிவிட்டேன். இனி உங்களின் இஷ்டம். பார்க்கும் போது எந்த பாதிப்பும் கொஞ்சம்கூட  உங்களிடம் இல்லையென்றால், உண்மையிலேயே நீங்கள் உறுதியான உள்ளம் கொண்டவர் என்பது நிச்சயம்! என்ன ரொம்ப பில்டப் கொடுக்கிறேன்  என்று நினைக்கிறீர்களா? பாருங்கள் தெரியும். கொஞ்சமாவது உங்களை துணுக்குறச் செய்யும்.


ரெமுலஸ் விட்டேக்கர்.
மற்றுமொரு பாம்பு மனிதர் திரு. ஆஸ்டின் ஸ்டீவன்ஸ்..தென் ஆப்ரிக்காவில் பிறந்து வளர்ந்து  நமிபிய நாட்டில் வசிக்கும், இவர் மற்றுமோர் அதிசயம். நீங்களும் பாருங்கள். மிகச்சிறந்த போடோக்ராபர்!

மற்றும் சில காணொளிகள்........