புதன், 5 மே, 2010

எல்லாவற்றின் கதை : ஸ்டீபன் ஹாகிங்கோடு பிரபஞ்சத்தில்...(வீடியோ)

இந்தியாவில் ஸ்டீபன் ஹாகிங் மறைந்த ஜனாதிபதி K.R. நாராயணனோடு...

இதற்கு முந்தையப் பதிவுகளான 
காலப் பயணம் - ஸ்டீபன் ஹாகிங்கோடு பிரபஞ்சத்தில்... போன்றவைகளின் தொடர்ப் பதிவு இது. பார்க்காதவர்கள் பார்த்துவிட்டு வரலாம்.

மீண்டும் ஸ்டீபன் ஹாகிங் ஒரு அதிரடி வீடியோவுடன் நம்மை சந்திக்கிறார்! இந்த முறை  பிரபஞ்சத்தின் கடந்த காலம், நிகழ்காலம், மற்றும் எதிர்க்காலம் மற்றும் முடிவு  போன்றவைகளைப்பற்றி நமக்கு தன்னுடைய ஸ்டைலில் விளக்குகிறார்.

எல்லாம் கனவுப்போல், ஒருக் கதைப்போல்  தெரிகிறது. ஒருக்காலத்தில் நிலவில் பாட்டி வடை சுட்டுக்கொண்டிருக்கிறாள் என்றும், ராகு கேது என்ற பாம்புகள் நிலவை விழுங்குகின்றன  என்றும் கூறிக்கொண்டிருந்தான். (இப்போதும் சிலர் விதண்டாவாததுக்காக கூரிக்கொண்டுத்தான் இருக்கிறார்கள்!) ஆனால் இப்போதுள்ள நிதர்சனம் வேறு. 
அதுப்போல ' அடடா !அன்றே சொன்னார் ஹாகிங்...' என்று எதிர்காலத்தில் எதுகை மோனையோடு யாராவது சொல்லுவதைப் பார்க்க நாம் இருக்கப்போவதில்லை.

ஐந்து பில்லியன் வருடங்களுக்கு பிறகு சூரியனின் வெப்பம் அதிகரித்து பூமியே ஒரு நெருப்புக் கோளமாக மாறி, இன்னும் இரண்டு பில்லியன் வருடங்களுக்கு பிறகு, நமக்கு இதுநாள் வரையில் உயிர் வளர்த்த சூரியன், இருநூறு மடங்காக பெரிதாகி, நம்ம அழகு பூமியை, எம் தந்தையும் தாயும் மகிழ்ந்துக்குலாவிய அற்புத பூமித்தாயை  கபளீகரம் செத்துவிடும்  என்று அவர் சொல்லும் போது  நம் நெஞ்சு கனக்கத்தான் செய்கிறது.

 இதிலிருந்து மனித இனம் தப்பிக்க, மனிதன் பிரபஞ்சத்தில் வேறு இடங்களைத் தேடிப்போகவேண்டும் என்றும் கூறுகிறார். அதற்கான வழிமுறைகளையும் அலசி ஆராய்கிறார்.  அவர் கூறும் விஷயங்களில் நான் எடுத்துக் காட்டியது ஒரே ஒரு விஷயம்தான். நீங்கள் தான் பார்க்கப்போகிறீர்களே. ஏதோ ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் படம் பார்பதுப் போல இருந்தாலும், விஞ்ஞானப்பூர்வமாக சாத்தியமானதையே கூறியுள்ளார். 



இதுவரையில் கூறாத கடவுள் பற்றிய கருத்தை இந்த முறை வெளிப்படையாக கூறியுள்ளார். நீங்களே சென்று பாருங்கள். உங்களின் நிலை அவரின் கருத்தை  எதிர்த்தா அல்லது ஆதரித்தா என்று பின்னூட்டமிடுங்கள். 

4 கருத்துகள்:

வால்பையன் சொன்னது…

யூ டியூப்பில் ஏற்றி போடுங்களேன் நண்பா!

Chitra சொன்னது…

Interesting and nice.....:-)

சிவகுமார் சொன்னது…

தொடர்ந்து இந்த பார்க்க முடியவில்லை...தயவு செய்து you tube -இல் போடவும்...

பொன் மாலை பொழுது சொன்னது…

பிழைசெதிகள் வருகிறது.வீடியோ காண இயலவில்லை. you tube வீடியோக்கள் எளிமையானவை