வியாழன், 27 மே, 2010

சார்ல்ஸ் டார்வினும் உயிரின மரமும் (வீடியோ )



'Charles Darwin and the Tree of Life' - என்ன ஒரு பொருத்தமான தலைப்பு! பரிணாமம் என்றவுடன் 'மனிதன் குரங்கிலிருந்து வந்தவன்' என்ற ஒரு வரிச் செய்தித்தான் பலரின் மனதில் வந்து நிற்கிறது. அது எவ்வளவுப் பெரிய அறிவியல் பிரிவு என்பது மறக்கவோ, மறைக்கவோப் படுகிறது.இன்னும் பலர் நினைத்துக்கொண்டிருப்பதுப்போல், பழைய விட்டலாச்சாரியா படங்களில் உருமாருவதுப்போல குரங்கு திடீரென மனிதனாக மாறிவிடவில்லை.

உயிரின வளர்ச்சியை ஒரு மரமாக சித்தரிதுக்கொண்டால், மரம் என்பது வேர்களையும், கிளைகளையும், இலைகளையும் கொண்டதுப்போல,  உயிரினம் பரிணாம வளர்ச்சியின் மூலம், அமினோ ஆசிட்கள் சேர்ந்து, ஒரு செல் உயிரினமாக உருவாகி, பின் அதே ஒரு செல் பல செல் உயிரினமாகி, அவைகள் பன்மடங்குப்  பெருகி, இனப்பெருக்கம் செய்து, தற்போதுள்ள நிலைக்கு வந்துள்ளன. வேர்கள் என்பவை ஓரணு உயிர்களையும், மரத்தின் தண்டுப்பகுதி பல செல் உயிரினங்களையும், கிளைகள் பறவைகள், நீர்வாழ் உயிர்கள், நிலவாழ் உயிர்கள், போன்றவற்றையும், இலைகள் மற்றும் பூக்கள், கனிகள், போன்றவை, இவைகளிலேயே சிறந்த உயிரினத்தையும் குறிக்கும். இங்கேத்தான் மனிதன் இந்த உயிரின மரத்தின் உச்சாணிக்கொம்பில் மமதையுடன் கூடிய பெருமையோடு அமர்ந்திருக்கிறான். ஏறக்குறைய அவனுக்கும் கொஞ்ச கீழே, வேறொரு கிளையில் சிம்பான்சி, உறங்குட்டான், கொரில்லா போன்ற குரங்குவகைகளும், மற்றும் பல்வேறு கிளைகளில் ஏனைய மிருகங்களும் உள்ளன. மனிதனும், குரங்கினமும் ஒரே கிளையிலிருந்து கிளம்பிய, இரு வேறு பழங்கள்.( அல்லது பூக்கள்/ இலைகள்).

இதை இன்னொரு மாதிரியும் கூறலாம்.  ஒரே பேஸ்மேண்டில் கட்டப்பட்ட இரு வீடுகள். ஒன்றில் வசதி அதிகம், ஒன்றில் அதுக் குறைவு. இந்த பேஸ்மென்ட் போடப்பட்டதிலிருந்து, வீடு தற்போதுள்ள நிலைவரையில் கட்டி  முடிக்க ஆன  காலம்தான் கொஞ்ச நீளம். ஒவ்வொரு ஸ்டேஜுக்கும் பலக்கோடி ஆண்டுகள்! இன்னும் முடியவில்லை. இப்போதும்  அது கட்டப்பட்டுக்கொண்டே இருக்கிறது. கால சூழ்நிலைகளுக்கேற்ப தேவையுள்ளவை வைத்துக்கொள்ளப்[பட்டு, தேவை இல்லாதவை நிராகரிக்கப்படும். ஒருக்காலத்தில் வீட்டிற்கு புகைப்போக்க பெரிய சிம்னி இருந்தது. பிற்காலத்தில் யாரும் அதை வைத்துக்கொள்ளுவது இல்லை. அதுப்போலத்தான் மனிதனுக்கு வால்! [ என்னங்க வால்... சரிதானே...?  என்ன தருமிசார்... உங்களின் அடுத்த பதிவுக்கு வெய்ட்டிங்!]
இப்படியே இன்னும் ஏதாவது எழுதிக்கொண்டேப் போகலாம். ஆனால் நான் அதற்காக இங்கே வரவில்லை. ஆனால் நான் பார்த்த, பிபிசி வழங்கிய  ' Charles Darwin and the Tree of Life' என்ற  அற்புதக் காணொளியை உங்களுடன் பகிர்ந்துக்கொள்ள ஆசைப்படுகிறேன். அதுவே எல்லா விளக்கக்களையும் தந்துவிடும். அதிலும் இந்த மரத்தைப் பற்றி, இங்கே  நமக்கு விளக்கப்போவது சர்.டேவிட் அட்டன்பரோ என்றால் சொல்லவும் வேண்டுமோ !


இந்தக் காணொளியில் அட்டன்பரோ மூன்று கேள்விகளை முன் வைக்கிறார். டார்வின் ஏன் இந்தக் பரிணாமக் கொள்கையை உருவாக்கினார்?...., அவர் கூறுவது சரி என்று நீங்கள் நினைக்கிறீர்களா?...., சமீபக் காலமாக  இந்தக் கொள்கை ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது?
டேவிட் தன் பயணத்தை டார்வின் தன் சிறு வயதில், உயிரினத் துவக்கம் பற்றி உன்னிப்பாக கவனிக்கத்தொடங்கிய, இங்கிலாந்தின், கென்ட் நகரில் இருந்த அவரின் பண்ணை  வீட்டில் துவக்குகிறார். பின் டார்வின் சிறுவனாக இருந்தபோது, பழங்கால படிமங்களை தேடித்திரிந்த லேசிச்டர்ஷயர் பகுதிக்குச் சென்று திருபி, டார்வின் கல்வி பயின்ற, பின்னர் தானும் மேற்படிப்பு பயின்ற, ஜெனிடிக்ஸ் என்ற புதிய அறிவியலின் கண்களைத் திறந்த, 'DNA Double Helix' என்ற புதிய பாதையை கண்டுப்பிடிக்கப்பட்ட கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தையும் விஜயம் செய்கிறார்.  கடைசியாக தன் பயணத்தை பெருமைவாய்ந்த, லண்டனின் இயற்கை அருக்காட்சியகத்தில் முடிக்கிறார். டார்வினின் புரட்சிகரமான இந்தத்  தொலைநோக்கு கொள்கை, நாம் இப்போது காணும் உலகின் காட்சியை, நாம் ஒத்துக்கொண்டாலும், மறுத்தாலும், எப்படி நிரந்தரமாக மாற்றிவிட்டது என்பதை விவரிக்கிறார்.

எல்லாவற்றிற்கும் மேலாக, டார்வின், ' நாம் ஒன்றும் இயற்கையின் விதிகளுக்கு அப்பாற்ப்பட்டவர்கள் இல்லை.... அதன்மேல் நமக்கு எந்தவிதமான உரிமையும் கிடையாது, நாமும், நாம் ஆட்சி செலுத்தும் மற்ற மிருகங்களும் ஒருவகையில் உறவுமுறைதான்!' என அடித்துச் சொல்லுவதும் விளங்குகிறது. ( 'சக மனுசனையே நேசிக்க முடியாத இவர்கள் எல்லாம் எங்கேபோய்.....' என்று யாரோ புலம்புவது கேட்கிறது!]
காணொளியை பார்த்துவிட்டு, கண்டுக்காம போவதற்கு முன்... ஓட்டு போட்டுவிடுங்களேன் நண்பர்களே. இது எல்லோரையும் சேர்ந்தால் உங்களுக்கும் புண்ணியம். பின்னூட்டம்.... ஓகே ....  நன்றி.

மெய்ன் படத்துக்கு முன்னே ஒரு சின்ன சைடு  ரீல் by Dr. Richard Dawkins !



[ Megavideo - 72 நிமிடங்களுக்குப் பிறகு வீடியோ நின்றுவிடும். அப்போது உங்கள் ரூட்டர் / மோடெம்- மின் இணைப்பைத் துண்டித்துவிட்டு, ஒரு நிமிடம் கழித்து இணைத்து, மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடருங்கள்.]

Charles Darwin and the Tree of Life.....

9 கருத்துகள்:

வால்பையன் சொன்னது…

வேகம் குறைந்த இணையத்தால் தொடர்ச்சியாக பார்க்கமுடியவில்லை நண்பரே!

தரவிறக்க வேறு எதாவது வழியுள்ளதா!?

தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை சொன்னது…

Hello,

fins the below link to download (source)
http://www428.megavideo.com/files/d575bec476686a07b28e71307f9d4a38/

நண்பன் சொன்னது…

மிகப்பெரும் நல்ல விசயத்தை மிக அமையாக தந்துஇருக்கிறீர்கள்

parakaalan சொன்னது…

வணக்கம்
நூறு புத்தகங்களைப் படிப்பதினும் தங்கள் பதிவு அதிகப் பலன் தருகிறது. நன்றி என்ற மூன்று எழுத்துக்கள் போதாது என் உள்ளெத்தெழும் உணர்ச்சிகளை வடிக்க
அன்புடன்
நந்திதா

Nathanjagk சொன்னது…

இயல்பும் துள்ளலும் கலந்திருக்கு எழுத்தில்.
இதைத்தானே யாசித்தேன்?
இது ஒரு பயணத்துவக்கம்தான் என்ற அளவில் தொடரப்போகும் உங்களுக்கு ஒரு பூங்கொத்து!
வாழ்த்துக்கள் நண்பா!

Thangamani Arun சொன்னது…

Can you please use proper UNICODE complaint fonts in order to render your webpages on Ubuntu-Linux or any Linux browsers.

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் சொன்னது…

UNICODE விஷயத்தில் யாராவது உதவுங்களேன் நண்பர்களே.....

பொன் மாலை பொழுது சொன்னது…

தமிழ் ப்ளாகர் ஒருவர் இப்படி பட்ட படைப்புக்களையும் வெளியிடுகிறார் என்ற பெருமையுடன் உங்கள் தளத்தை புதிதாய் வரும் பதிவர்களுக்கு அறிமுகம் செய்ததில் பெருமைபடுகிறேன்.
UNICODE பற்றி கவலை படவேண்டாம்.நம் மாப்பிள்ளை வேலன் உதவுவார்.
மெயில் ID கீழே:
"velan meera"

அவரிடம் உங்கள் தேவையை சொன்னால் உதவுவார் எளிதில்
தொடரட்டும் உங்கள் பணி.
http://ponmaalaipozhuthu.blogspot.com//

வருகைதாருங்கள்.

பொன் மாலை பொழுது சொன்னது…

http://www.azhagi.com/feats.html

http://software.nhm.in/products/writer

இவைகளை தரவிறக்கம் செய்து பயன்படுத்தி பாருங்கள்.