திங்கள், 28 ஜூன், 2010

மண்ணோடு மண்ணானாலும் ... மரடோனா மரடோனாதான் !

[இது ஒரு மீள் பதிவு.... அர்ஜண்டீனாவின் தோல்விக்கு முன்பே வெளியிடப் பட்டது என்றாலும், மீண்டும் சில புதிய விடியோக்களுடன் உங்களின் முன்னே...]
உலகக்கோப்பை காபந்து திருவிழா நடந்துக் கொண்டு இருக்கிறது..... உலகமே ஒரு வித மயக்கத்தில் உள்ளது. இந்த நேரத்தில், அர்ஜண்டீன அணி தோல்வி அடைந்தாலும், அதன் பெருமை உலகறிந்த விஷயம்.  தான் நேரடியாக களத்தில் இறங்கி விளையாடாவிட்டாலும், வெளியே இருந்துக்கொண்டே தன்  உயிரான அர்ஜண்டீனா கால்பந்து அணியை ஆட்டுவித்துக்கொண்டு இருந்த  மரடோனாவை கொஞ்ச நேரம் அலசி ஆராய்ந்துப் பார்த்தேன். அப்போது கிடைத்தவைகளை உங்களிடமும் பகிர்ந்துக் கொள்ள ஆசைப் பட்டதாலேயே இந்தப் பதிவு.  இதை முழுவதுமாக பார்க்க நிறைய நேரம் தேவைப்படும். ஆகவே நேரம் ஒதுக்கிக்கொண்டு பார்க்க முற்படவும்.  ஆரம்பிக்கட்டும் மரடோனா மேஜிக் !





































மண்ணோடு மண்ணானாலும் ... மரடோனா மரடோனாதான் !  .புதுசு கண்ணா...புதுசு...!
Diego Maradona



Diego Maradona.jpg
Personal information
Full name
Diego Armando Maradona
Date of birth
30 October 1960 (age 49)
Place of birth
Lanús, Argentina
Height
1.65 m (5 ft 5 in)
Playing position
Attacking Midfielder/Second Striker
Senior career*
Years
Team
Apps
(Gls)
1976–1981
Argentinos Juniors
167
(115)
1981–1982
Boca Juniors
40
(28)
1982–1984
Barcelona
36
(22)
1984–1991
Napoli
188
(81)
1992–1993
Sevilla
26
(5)
1993–1994
Newell's Old Boys
7
(0)
1995–1997
Boca Juniors
30
(7)
Total
490
(311)
National team
1977–1994
Argentina
91
(34)
Teams managed
1994
Mandiyú de Corrientes
1995
Racing Club
2008–
Argentina
* Senior club appearances and goals counted for the domestic league only.
† Appearances (Goals).
##################################################################################



http://www.life.com/image/first/in-gallery/30882/maradona-the-highs-the-lows
##################################################################################



##################################################################################

Maradona by Kusturica (2008






##################################################################################

Maradona's life (part one)

Maradona's life (part two)
##################################################################################

MARADONA 10 THE FOOTBALL LEGEND (PART 1)







MARADONA 10 THE FOOTBALL LEGEND (PART 2)







MARADONA 10 THE FOOTBALL LEGEND (PART 3)







MARADONA 10 THE FOOTBALL LEGEND (PART 4)







MARADONA 10 THE FOOTBALL LEGEND (PART 5)







MARADONA 10 THE FOOTBALL LEGEND (PART 6)







MARADONA 10 THE FOOTBALL LEGEND (PART 7)







##################################################################################

மரடோனாவின் இந்திய வருகையின் போது உருவானப் பாடல்......




######################################################################

ரோட்ரிகோ பியுநோவின்  (Rodrigo Alejandro Bueno) "La mano de Dios" ( The Hand of God) என்ற புகழ்ப் பெற்ற மரடோனாவைப்பற்றிய பாடலை, மரடோனாவே தன் சொந்தக்குரலில் பாடினால்.....




அதன் ஒரிஜினல்.....

##################################################################################

பிரெஞ்சு மொழியில் ஒரு ஆவணப்படம்.... புரியவில்லை என்றாலும் பாருங்கள், பல அரிதான காட்சிகள் உள்ளது!








[Maradona, a Golden Boy "El Pibe de Oro", his life and his work. A jubilant portrait of the absolute star of Argentina, holy young king of the ball at its twelfth year, and a declaration of love for football. On November 10, 2001, Diego Armando Maradona, rejoicing and weeping, bade farewell to football tens of thousands of worshipers gathered in the delirium of the Bombonera stadium. This is where the "Golden Boy" started twenty-five years earlier, at the age of 16 years with the club mascot, the Boca Juniors, the emblem of the poor of Buenos Aires in Argentina muzzled by junta of General Videla. Here it is in black and white, pure face under the brown curls, spotted at 12 by the official television already has a unique instinct football and image, which gives her two dreams: "Play Cup the world and win. "(France, 2006, 93mn)]

##################################################################################
தற்போது சண்டையை விலக்கும் மரடோனா, அந்தக்காலத்தில் ஒரு டெரர் .... !


Maradona Fight - Watch more funny videos here

##############################################################################################

அர்ஜண்டீனா கால்பந்து அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டவுடன் அளித்த சூடான பேட்டி.....


Diego Maradona V The Press | Sucking | Argentina World Cup Press Conference from WhatEverTrevor.co.uk on Vimeo.

##############################################################################################


##############################################################################################

இங்கிலாந்தும் அர்ஜண்டீனாவும் மோதிய மறக்கமுடியாத போட்டி.... இங்கே !

**********************************************************************************************

வியாழன், 17 ஜூன், 2010

E=mc² இன் கதை...



நமது இந்தப்பதிவு இந்நேரம்.காமில் ......


தமிழ்மண விருதுகளில் அறிவியல் பிரிவில் முதல் சுற்றுவரை வர முடிந்தது. வாக்களித்தவர்களுக்கு நன்றிகள் பல!    


நம்மில் பலரை, இந்த உலகிலேயே மிகப் பிரபலமான அறிவியல் சமன்பாடு எதுவென்றுக் கேட்டால், எல்லோரும் தயக்கமில்லாமல் சொல்லக்கூடிய பதில் " E = mc2 " என்பதாகத்தான் இருக்கும்!


அதைக் கண்டுப்பிடித்தவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் எனும் மாமேதை என்பதும் எல்லோருக்கும் தெரியும். இந்த மூன்றே எழுத்துக்களைக் கொண்ட சமன்பாடு, சூரியன் பிரகாசிப்பதையும், நட்சத்திரங்கள் ஜோலிப்பதையும், இந்த மகா பிரபஞ்சத்தின் ரகசியங்களை விளக்கும் திறன் கொண்டது என்பது ஆச்சரியத்திலும் ஆச்சர்யம்! இந்த சேவையை மீதும் செய்யவில்லை இந்த சமன்பாடு....விரும்பியோ, விரும்பாமலோ, ஒரே அணுகுண்டால் லட்சக்கணக்கான மனிதஉயிர்கள் நாசமாவதற்க்கும் பாதை வகுத்தது.  
இந்த அறிவியல் விந்தைக்குப் பின்னால் ஐன்ஸ்டைன் ஒருவரது உழைப்பு மாத்திரம் இல்லை. அதன் பின்னே பல மேதைகளின் வியர்வையும், ரத்தமும், காதலும் கலவையாகக் கலந்த ஒரு நூற்றாண்டு வரலாறு மறைந்துள்ளது. அதைத்தான் இப்போது நாம் கொஞ்சம் அலசப் போகிறோம்.

E = Energy 
Michael Faraday, British scientist, 1791-1867

லண்டனின் சேரிப்பகுதியில், ஏழைக் கொல்லனின் மகனாகப் பிறந்த மைகேல் ஃ பாரடே எனும் இளைஞனுக்கு. அடிப்படை கல்வி அறிவு ரொம்பவும் கிடையாது. புத்தகம் பைண்ட் செய்யும் ஒருக்  கடையில் வேலைப்பார்க்கும் போது, அங்கு வரும் புத்தகங்களைப் படித்தே தன் அறிவை வளர்த்துக்கொண்டார். இப்படி  வளர்ந்து பின்னோருக் காலத்தில் பெருமைமிக்க  இங்கிலாந்தின் ராயல் சொசைட்டியில் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்து புகழ்ப் பெற்றார்.
 1800 களின் துவக்கத்தில் ஆற்றல் (energy) என்பது பிரபஞ்சமளாவிய ஒரே ஆக்கப் பொருள் என்ற கருத்து இல்லாமலிருந்தக் காலமது. நெருப்பிலிருந்து வரும் வெப்பமோ, சூரியனிலிருந்து வரும் கதிரோ, வெவ்வேறானவை என்று எண்ணிக்கொண்டிருந்தனர். அப்படிப்பட்ட காலத்தில்தான் நம்ம ஃ பரடே காட்சியில் வருகிறார். தன் அளப்பரிய உந்துதலாலும் கூர்ந்து நோக்கும் திறனாலும் சில விஷயங்களை ஆராய முற்பட்டார். மிசாரம் பாயும் ஒரு கம்பியின் அருகே கொண்டுசெல்லப்படும் ஒரு காந்தமுள் கண்ணா பின்னவென்று ஆடி ஏதோ ஒரு திசையில் நிற்பதைக்  கண்டு வியந்தார்! இப்படி பல கால ஆராய்ச்சிக்குப் பிறகு மின் கம்பியை சுற்றி, மின்சார  ஓட்டத்துக்கு நேர்க்கோணத்தில் காந்த வயல் (magnetic field) உருவாகிறது என்பதயும் கண்டுபிடித்தார். அதைப் போலவே ஒரு காந்தத்தைக் கொண்டு மிரார ஓட்ட திசையையும் மாற்றிக் காட்டினார். இதுதான் உலகின் முதல் மிசார மோட்டார்! இப்படியாக மின் சக்தியும், காந்த சக்தியும் ஒன்றோடு ஒன்று தொடர்புள்ளவை என்றும் நிலைநாட்டினார். இப்படியாக மின்காந்தவியல் புதிய அறிவியல் பிரிவு பிறந்தது! இங்கிருந்துதான் ஐன்ஸ்டைன், ஆற்றல் என்பது ஆக்கவோ அழிக்கவோ முடியாத ஒன்று, ஆனால் ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு மாறக்கூடியது என்பதை பயன்படுத்திக்கொண்டார்.    

m = mass
Antoine-Laurent Lavoisier, French nobleman, tax collector, lawyer and amateur chemist, 1743-1794.

அன்டோனி லாரென்ட் லவோயிசியர்(?) எனும் அமெச்சூர் வேதியல் விஞ்ஞானி, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, வரி வசூலிக்கும் நிறுவனம் ஒன்றை நடத்திவந்த ஒரு செல்வச் சீமான். இவரின் வேதியல் பங்களிப்பு அமெச்சூர் தனமானது என்றுக் கூறப்பட்டாலும், இவரை நவீன வேதியலின் தந்தை என்றும் கூறுவர். இவரே ஆக்சிஜனுக்கும் ஹைட்ரஜனுக்கும் நாமகர்ணம் நிகழ்த்தியவர். இவை இரண்டும் சேர்ந்தால்தான் தண்ணீர் என்பதைக் கூறி, மனிதன் நிலவு வரை செல்ல சிவப்புக்கம்பளம் விரித்தவர். இவரது அயராத உழைப்பால் இவர் உலகுக்கும் குறிப்பாக  ஐன்ஸ்டைனுக்கும் உணர்த்திய உண்மை....  ஆற்றலைப்போலவே, வேந்தவித மாற்றம் ஏற்பட்டாலும், ஒருப் பொருளின் நிறை கூடவோ குறையவோ செய்யாது! அவரின் காலத்தில் ஒரு நம்பிக்கை இருந்தது. அது, ஒருக் கட்டை (மர) எரியுட்டப்பட்டால், அதிலுள்ள ப்லோகிஸ்டன் (phlogiston) எனும் பொருளின் மூலமாக, அப்பொருளின் நிறை, நிரந்தரமாக வெளியேறிவிடுகிறது. ஆகவேத்தான் உபரியாகக் கிடைக்கும் சாம்பலின் எடை, ஒரிஜினல் மரக்கட்டையின் எடையைவிட குறைந்துக் காணப்படுகிறது என்று எல்லா அறிவியலாளரும் நம்பினர். அப்போதுத்தான் நம்ம லவோயிசியர், தன் அயராத உழைப்பினாலும், அறிவார்ந்த, அன்பும் அழகும் நிறைந்த தன் மனைவியின் உதவியோடு, எப்படிப்பட்ட மாற்றம் நிகழ்ந்தாலும், ஒருப் பொருளின் நிறை கூடவோ குறையவோ செய்யாது... ஒரு வேதியல் சமன்பாட்டின் இருப்பக்கங்களும் எப்போதும் சமமாக இருக்கும் என்பதையும் நிரூபித்தார். அவரின் இந்தக் கண்டுப்பிடிப்பே ஐன்ஸ்டைனின் சார்புக்கொள்கையில் முக்கியப் பங்காற்றியது. ஆனால் இதுவே இவரின் கடைசி கண்டுப்பிடிப்பாக போய்விட்டது. பிரெஞ்சு மக்களுக்கு விடிவெள்ளியாக வந்த புரட்சி, இவருக்கு முற்றுப் புள்ளியாக மாறிப்போனது. இவர் பணக்கார வர்கத்தின் பிரதிநிதி என்பதால், பல்வேறு குற்றங்கள் சாட்டப்பட்டு, தலை துண்டிக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டார். இது நடந்து ஒன்றரை வருடங்கள் கழித்து, பிரெஞ்சு அரசாங்கம் இவரை குறமற்றவர்  என்று பிரகடனப்படுத்தியது. அதன்பின்னே அவரின் சில உடைமைகளை அவரின் மனைவியிடம் அளிக்கப்பட்டபோது, அதன் மீது ஒரு துண்டுச்  சீட்டில் 'தவறாக குற்றம் சாட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட   லவோயிசியரின் விதவைக்கு....' என்று எழுதிருந்தது! பாவம். என்ன  ஒரு சோகம்? 
 "It took them only an instant to cut off his head, but France may not produce another like it in a century."Joseph-Louis Lagrange, an Italian-born mathematician and astronomer.

c = Celeritas or Speed of light
James Clerk Maxwell, British mathematical physicist, 1831-1879. and Michael Faraday

எல்லாம் சரி. ஆற்றலும், நிறையும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கின்றன. அதனால் அவை சமன்பாட்டில் இடம் பிடித்துள்ளன. ஆனால் இந்த ஒளி எப்படி உள்ளே வந்தது? மிக மிக வேகமாக செல்லுவதற்கு லத்தீன் மொழியில் செலிரிட்டஸ் (celeritas) என்று அழைக்கப்படுகிறது. மனிதன் அறிவுக்கு எட்டியவரை மிக வேகம்மாக செல்லக்கூடியது ஒளி மட்டுமே. வினாடிக்கு 3,00,000 கிலோமீட்டர்கள்! இங்கே மீண்டும் மைகேல் ஃபாரடே உள்ளே வருகிறார். ரொம்பக் காலமாகவே அவர் ஒளியும், மிசாரத்தைப் போலவும், காந்தப்புலத்தைப் போலவும், மின்காந்தவியளைச் சார்ந்ததுத்தான் என்று உறுதியாக நம்பினார்.  ஆனால் அதைக் கணிதத்தனமாக நிரூபிக்க தேவையான எண்கணித அறிவு அவரிடம் போதியதாக இல்லை. என்ன இருந்தாலும் அவர் ஒரு ரொம்பவும் படிக்காதமேதைத்தானே! அங்கத்தான் நன்கு படித்த கணிதத்தில் புலியான ஜேம்ஸ் கிளார்க் மேக்ஸ்வெல் எண்ணு இளைஞர் வருகிறார். அவர்கள் இருவரும் சேர்ந்து, மின்சாரத்திலிருந்து, காந்தப்புலமும், காந்தப்புலத்திளிருந்து மின்சாரமும்... ஒரு குறிப்பிட்ட வேகத்திலிருக்கும்போது உண்டாகும். அந்த வேகம்தான் ஒளியின் வேகம்!,அது எப்போதும் மாறாது  என்று எண்கணிதம் மூலமாக உலகுக்கு நிரூபித்தனர். இதையும் ஐன்ஸ்டைன் தன் சமன்பாட்டில் சேர்த்துக்கொண்டார். ஒளியின் வேகம் மாறது என்றால், வேறு ஏதோ ஒன்று மாறித்தான் ஆகவேண்டும். அது நிறை. ஒருப் பொருளின் வேகம் ஒளியின் வேகத்தை நெருங்கும் போது அதன் நிறை அதிகரிக்கும் என்றும் அது அது அதன் ஆற்றலை சார்ந்திருக்கும் என்பதையும் குறித்துக்கொண்டார்.  

2 - Squared
Emilie du Chatelet, French aristocrat, mathematician and physicist, 1706-1749.

இந்த மகா சமன்பாட்டில் உள்ள ஒரே எண் '2'. அதுவும் நேர் அர்த்தத்தில் இலை. 'அடுக்கு' என்ற முறையில் உள்ளது. ஒளியின் வேகம் என்ற ஒரு எண் அதே எண்ணால் பெருக்கப்படவேண்டும். 670 மில்லியன் X 670 மில்லியன் ( மணிக்கு 670 மில்லியன் மைல்கள் ). அந்த தொகை எவ்வளவு என்றுத் தெரியுமா? 448,900,000,000,000,000. சரி இருக்கட்டும். ஏன் அந்த 2 அடுக்கு?(Square?).

இதற்க்கான விடை எமிலி டு ஷாட்டலே எனும் இளம் பிரெஞ்சு சீமாட்டியிடம் இருந்து வந்தது. இந்த எமிலி தான் வாழ்ந்த 18 ஆம் நூற்றாண்டுப் பெண்களில் மிகவும் வித்தியாசமான புதுமைப் பெண்ணாகத் திகழ்ந்தார். அவருக்கு புலமை இல்லாத கலையே இல்லை எனலாம். சர் ஐசக் நியூட்டனின் Principia Mathametica அறிவியலின் வேதத்தை பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கும் அளவிற்கு அறிவியல் மற்றும் மொழி ஞானம் கொண்டவர். தன் 23 வது வயது முதலே கணிதத்தில் கரைக்கண்டு, ஐசக் நியூட்டன் முதலான மேதைகளுக்கே சவாலாகத் இருந்தார்.
ஒரு நகரும் பொருளுக்கு ஆற்றல் உண்டு. ஒருப் பந்து, அதேப்போன்ற பந்தைவிட இரு மடங்கு வேகத்தில் சென்றால், அதன் ஆற்றலும் இரு மடங்கு இருக்கும் என்பது நியூட்டனின் கூற்று. ஆனால் நம்ம எமிலி மேடம் கூறுகிறார், அதன் ஆற்றல் நான்கு மடங்கு இருக்குமென்று! சொல்லுவதோடு நிற்கவில்லை... அதை ஒரு சாதாரண சிறு பரிசோதனை மூலம் நிரூபிக்கவும் செய்தார். சிறு ஈய குண்டுகளை குறிப்பட்ட உயரத்தில்லிருந்து, மிருதுவான களிமண் மீது போட்டு, அது எவ்வளவு தூரம் உள்ளே பதிகிறது என்று அளந்து கணக்கிட்டார். அப்போதுதான் அந்த களிமண்ணின் மீது போடப்பட்ட குண்டுகளின் ஆற்றல் அவைகளின் வேகத்தின் இரண்டு மடங்காக இல்லை, இரண்டு அடுக்காக (SQUARE) இருக்கும் என்று நிரூபிக்கப்பட்டு, ஆனானப்பட்ட நியூட்டன் சொன்ன ஒரு விதி போயாகப்[ போனது இந்தப் பெண்ணால்! இதைத்தான் ஐன்ஸ்டைன்தன்சமன்பாட்டில் உபயோகப்படுத்திக்கொண்டார்.
>மேடம் எமிலியைப்பற்றி இன்னும்
சில கூடுதல் தகவல்கள். இவருக்கு ஏகப்பட்ட ஆண்களின் தொடர்பு இருந்ததாம்! அதுவும் அவரின் கணவருக்குத் தெரிந்தே!! அதில் ஒருவர் புகழ்ப்பெற்ற 'வைர நெஞ்ச வால்டேர்'ரும் ஒருவர். இருவரும் சேர்ந்து ஒரு புத்தகமும் எழுதியுள்ளனர்.(Elements of Newton's Philosophy). இவ்வளவு இருந்தும் பரிதாபகரமாக, தன் 43 ஆம் வயதில், ஒரு இளம்கவிஞனால்கர்ப்பமாகி, ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்துவிட்டு, ஆறு நாட்கள் கழித்து  இறந்துப்போனார்! &




'c' என்ற ஒளியின் வேகம் ஒரு மாறா எண் என்பதை முதலில் புரிந்துக் கொண்டவர்களில் ஐன்ஸ்டைன் முதலாமவர். மிக நுட்பமாக கவனியுங்கள்.... நாம் என்னதான் வேகமாக சென்றாலும், நம்மிலிருந்து புறப்படும் ஒளி, மணிக்கு 670 மில்லியன் மைல் வேகத்தில் நம்மை விட்டுப் போய்விடும்! (ஆகவே ஒளியின் வேகத்தில் யாரும் பிரயாணிக்கவே முடியாது!) இங்கேதான் மேக்ஸ்வேல்லின் ஐடியாவை பிடித்துக்கொண்டார் ஐன்ஸ்டைன். 'c' என்பது மாற எண் என்றால், ஒளியின் வேகத்தை அடையும் ஒருப் பொருளின் நிறை என்னவாகும்? அது கண்டிப்பாக அதிகரிக்கும்! இதிலிருந்து அவர் கூறுவது நிறையும், ஆற்றலும் ஒன்றோடு ஒன்று தொடர்புள்ளவை. ஏன்...? அவை இரண்டும் ஒன்றே..! ஆற்றல்தான் நிறை, நிறைதான் ஆற்றல்! c² இன் மதிப்பு மிக மிக மிக அதிகமாக இருப்பதால், ஒரு சின்ன கடுகளவு நிறைக்கொண்ட பொருளுக்கு அளவில்லாத ஆற்றல் இருப்பது நிச்சயம்! இந்த சமன்பாட்டின் சரியான புரிதல் நட்சத்திரங்களின் இதயத்தில் என்ன நடக்கிறது என்பதையும், நாமெல்லாம் அந்த நட்சத்திர துகள்களால் உருவானவர்கள் என்பதையும், சூரியனிலிருந்து  நமக்குக் கிடைக்கும் எல்லா ஆற்றலும் E=mc² என்பது புரிம்துவிடும்! நட்சதிரங்கள் தங்களின் அளவிடமிடியாத நிறையை ஆற்றலாக மாற்றியபடியே உள்ளன என்பதும் விளங்கிவிடும்.

மேற்கூறிய அனைத்து விவரங்களும் David Bodanis  எழுதிய 
E=mc2 : A Biography of the World's Most Famous Equation என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது.. 

இதையே ஒரு முழு நீளக் காணொளியாக பார்க்க நேர்ந்தால்..... இதோ அந்த படம் உங்களின் முன்னால்....  




மற்றுமொரு விளக்கம்......


வியாழன், 10 ஜூன், 2010

ஹெயிட்டி பூகம்பம்: ஏன்... எதற்கு...எப்படி?

[நண்பர் திரு.மாணிக்கம் சட்டநாதன் அவர்கள், தன் வலைத்தளமான 'பொன்மாலைப் பொழுதில்' நம் வலைத்தளத்தைப் பற்றி பாராட்டி எழுதியுள்ளார். அவரின் இந்த பிறர் நலம் கருதும் ஊக்கத்தால் நம்முடைய பிரபஞ்சப் பயணம் மேலும் உத்வேகமடையும் என்பதை நன்றியுடன் சொல்லிக்கொள்ளுவதில் மகிழ்ச்சி  அடைகிறேன். மேலும் முதல் பதிவு  முதற்கொண்டு தமிளிஷில் நமக்கு ஓட்டுப்போட்டு, உற்சாகப்படுத்திவரும் அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். நண்பர்  'காலடி' ஜெகநாதனுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்].



இன்னும் பல வருடங்களாகும் ஹெயிட்டி எழுந்துக்கொள்ள. கடந்த சனவரி மாதம், 12 ஆம் தேதி, உள்ளூர் நேரம், மாலை 4.53 க்கு அந்த பயங்கரம் நிகழ்ந்தது! ஆம்,7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இந்த பாவப்பட்ட நாட்டை உலுக்கி உருத்தெரியாமல் செய்துவிட்டது. இந்த பேரும் அழிவில் சிக்கி ஏறக்குறைய மூன்று  லட்சம் மனித உயிர்கள் பலியாயின.




இவையெல்லாம் யாவரும் அறிந்த ஒன்றே.  நேற்று பிபிசி தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்ட ஒரு காணொளி, இந்த பெரழியை மீண்டும் ஒருமுறை திரும்பிப் பார்க்க செய்தது.
முதலில் அந்த காணொளியை காண்போமா?

http://news.bbc.co.uk/1/hi/world/latin_america/10271409.stm
==================================================================================

ஒரு பல்பொருள் அங்காடியில் CCTV கேமராவில் சிக்கிய காட்சி....



========================================================================

நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கை அளித்த அழிவுக்கு முன்பும், பின்பும் செயற்கைக்கோள் புகைப்படங்கள்...

===========================================================================

Wired Science என்ற தளத்தில் கிடைத்த செயற்கைக்கோள் படங்கள்.....
http://www.wired.com/wiredscience/2010/01/satellite-photos-of-haiti-before-and-after-the-earthquake/2/#ixzz0qNesIkBh


===============================================================================================


பிரபல டைம் பத்திரிகையில் வெளிவந்த புகைப்படங்கள்....
( எச்சரிக்கை: இளகிய மனமுள்ளவர்களுக்கானது அல்ல !)
http://www.time.com/time/photogallery/0,29307,1954087_2043663,00.html

============================================================================
பிபிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 15 நாட்களுக்கு பிறகு உயிருடன் காப்பாற்றப்பட்ட சிறுமியின் காணொளி.....!

=========================================================================
பிபிசி தொலைக்காட்சியில்  வெளிவந்த  ஒரு வீடு இடிந்து தரை மட்டமாகும் காட்சி....
http://news.bbc.co.uk/1/hi/world/americas/8459909.stm

=========================================================================
பிபிசி நிறுவனத்தின் புகைப்படத் தொகுப்பு....


=========================================================================
Frontline வெளியிட்ட 52 நிமிட முழுநீளக்  காணொளி. அந்த பூகம்பத்தின் விளைவுகளை கண்கூடாகக்  காட்டுகிறது. பரிதாபம்.... இந்த நிலைமை எந்த மனித உயிர்களுக்கும் வரக்கூடாது.....



=========================================================================
சேனல் 4 தொலைகாட்சி நிறுவனம் வழங்கிய ' ஹெயிட்டி கொலைக்கார  பூகம்பம்: ஏன்
நடந்தது ?'[ Haiti's Killer quake : Why it Happened? ] என்ற வீடியோ இங்கே.....
இது ஒரு DivX வீடியோ,... இதைக்காண DivX Player தேவை. [ Install This Version & DO NOT UPDATE ]




அப்படியும் காண முடியாதவர்கள்  இங்கே செல்லவும்....
=========================================================================
கடைசியாக அமெரிக்க கடற்படை விமானம் மூலம் எடுத்தக் காணொளி.....