வியாழன், 17 ஜூன், 2010

E=mc² இன் கதை...



நமது இந்தப்பதிவு இந்நேரம்.காமில் ......


தமிழ்மண விருதுகளில் அறிவியல் பிரிவில் முதல் சுற்றுவரை வர முடிந்தது. வாக்களித்தவர்களுக்கு நன்றிகள் பல!    


நம்மில் பலரை, இந்த உலகிலேயே மிகப் பிரபலமான அறிவியல் சமன்பாடு எதுவென்றுக் கேட்டால், எல்லோரும் தயக்கமில்லாமல் சொல்லக்கூடிய பதில் " E = mc2 " என்பதாகத்தான் இருக்கும்!


அதைக் கண்டுப்பிடித்தவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் எனும் மாமேதை என்பதும் எல்லோருக்கும் தெரியும். இந்த மூன்றே எழுத்துக்களைக் கொண்ட சமன்பாடு, சூரியன் பிரகாசிப்பதையும், நட்சத்திரங்கள் ஜோலிப்பதையும், இந்த மகா பிரபஞ்சத்தின் ரகசியங்களை விளக்கும் திறன் கொண்டது என்பது ஆச்சரியத்திலும் ஆச்சர்யம்! இந்த சேவையை மீதும் செய்யவில்லை இந்த சமன்பாடு....விரும்பியோ, விரும்பாமலோ, ஒரே அணுகுண்டால் லட்சக்கணக்கான மனிதஉயிர்கள் நாசமாவதற்க்கும் பாதை வகுத்தது.  
இந்த அறிவியல் விந்தைக்குப் பின்னால் ஐன்ஸ்டைன் ஒருவரது உழைப்பு மாத்திரம் இல்லை. அதன் பின்னே பல மேதைகளின் வியர்வையும், ரத்தமும், காதலும் கலவையாகக் கலந்த ஒரு நூற்றாண்டு வரலாறு மறைந்துள்ளது. அதைத்தான் இப்போது நாம் கொஞ்சம் அலசப் போகிறோம்.

E = Energy 
Michael Faraday, British scientist, 1791-1867

லண்டனின் சேரிப்பகுதியில், ஏழைக் கொல்லனின் மகனாகப் பிறந்த மைகேல் ஃ பாரடே எனும் இளைஞனுக்கு. அடிப்படை கல்வி அறிவு ரொம்பவும் கிடையாது. புத்தகம் பைண்ட் செய்யும் ஒருக்  கடையில் வேலைப்பார்க்கும் போது, அங்கு வரும் புத்தகங்களைப் படித்தே தன் அறிவை வளர்த்துக்கொண்டார். இப்படி  வளர்ந்து பின்னோருக் காலத்தில் பெருமைமிக்க  இங்கிலாந்தின் ராயல் சொசைட்டியில் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்து புகழ்ப் பெற்றார்.
 1800 களின் துவக்கத்தில் ஆற்றல் (energy) என்பது பிரபஞ்சமளாவிய ஒரே ஆக்கப் பொருள் என்ற கருத்து இல்லாமலிருந்தக் காலமது. நெருப்பிலிருந்து வரும் வெப்பமோ, சூரியனிலிருந்து வரும் கதிரோ, வெவ்வேறானவை என்று எண்ணிக்கொண்டிருந்தனர். அப்படிப்பட்ட காலத்தில்தான் நம்ம ஃ பரடே காட்சியில் வருகிறார். தன் அளப்பரிய உந்துதலாலும் கூர்ந்து நோக்கும் திறனாலும் சில விஷயங்களை ஆராய முற்பட்டார். மிசாரம் பாயும் ஒரு கம்பியின் அருகே கொண்டுசெல்லப்படும் ஒரு காந்தமுள் கண்ணா பின்னவென்று ஆடி ஏதோ ஒரு திசையில் நிற்பதைக்  கண்டு வியந்தார்! இப்படி பல கால ஆராய்ச்சிக்குப் பிறகு மின் கம்பியை சுற்றி, மின்சார  ஓட்டத்துக்கு நேர்க்கோணத்தில் காந்த வயல் (magnetic field) உருவாகிறது என்பதயும் கண்டுபிடித்தார். அதைப் போலவே ஒரு காந்தத்தைக் கொண்டு மிரார ஓட்ட திசையையும் மாற்றிக் காட்டினார். இதுதான் உலகின் முதல் மிசார மோட்டார்! இப்படியாக மின் சக்தியும், காந்த சக்தியும் ஒன்றோடு ஒன்று தொடர்புள்ளவை என்றும் நிலைநாட்டினார். இப்படியாக மின்காந்தவியல் புதிய அறிவியல் பிரிவு பிறந்தது! இங்கிருந்துதான் ஐன்ஸ்டைன், ஆற்றல் என்பது ஆக்கவோ அழிக்கவோ முடியாத ஒன்று, ஆனால் ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு மாறக்கூடியது என்பதை பயன்படுத்திக்கொண்டார்.    

m = mass
Antoine-Laurent Lavoisier, French nobleman, tax collector, lawyer and amateur chemist, 1743-1794.

அன்டோனி லாரென்ட் லவோயிசியர்(?) எனும் அமெச்சூர் வேதியல் விஞ்ஞானி, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, வரி வசூலிக்கும் நிறுவனம் ஒன்றை நடத்திவந்த ஒரு செல்வச் சீமான். இவரின் வேதியல் பங்களிப்பு அமெச்சூர் தனமானது என்றுக் கூறப்பட்டாலும், இவரை நவீன வேதியலின் தந்தை என்றும் கூறுவர். இவரே ஆக்சிஜனுக்கும் ஹைட்ரஜனுக்கும் நாமகர்ணம் நிகழ்த்தியவர். இவை இரண்டும் சேர்ந்தால்தான் தண்ணீர் என்பதைக் கூறி, மனிதன் நிலவு வரை செல்ல சிவப்புக்கம்பளம் விரித்தவர். இவரது அயராத உழைப்பால் இவர் உலகுக்கும் குறிப்பாக  ஐன்ஸ்டைனுக்கும் உணர்த்திய உண்மை....  ஆற்றலைப்போலவே, வேந்தவித மாற்றம் ஏற்பட்டாலும், ஒருப் பொருளின் நிறை கூடவோ குறையவோ செய்யாது! அவரின் காலத்தில் ஒரு நம்பிக்கை இருந்தது. அது, ஒருக் கட்டை (மர) எரியுட்டப்பட்டால், அதிலுள்ள ப்லோகிஸ்டன் (phlogiston) எனும் பொருளின் மூலமாக, அப்பொருளின் நிறை, நிரந்தரமாக வெளியேறிவிடுகிறது. ஆகவேத்தான் உபரியாகக் கிடைக்கும் சாம்பலின் எடை, ஒரிஜினல் மரக்கட்டையின் எடையைவிட குறைந்துக் காணப்படுகிறது என்று எல்லா அறிவியலாளரும் நம்பினர். அப்போதுத்தான் நம்ம லவோயிசியர், தன் அயராத உழைப்பினாலும், அறிவார்ந்த, அன்பும் அழகும் நிறைந்த தன் மனைவியின் உதவியோடு, எப்படிப்பட்ட மாற்றம் நிகழ்ந்தாலும், ஒருப் பொருளின் நிறை கூடவோ குறையவோ செய்யாது... ஒரு வேதியல் சமன்பாட்டின் இருப்பக்கங்களும் எப்போதும் சமமாக இருக்கும் என்பதையும் நிரூபித்தார். அவரின் இந்தக் கண்டுப்பிடிப்பே ஐன்ஸ்டைனின் சார்புக்கொள்கையில் முக்கியப் பங்காற்றியது. ஆனால் இதுவே இவரின் கடைசி கண்டுப்பிடிப்பாக போய்விட்டது. பிரெஞ்சு மக்களுக்கு விடிவெள்ளியாக வந்த புரட்சி, இவருக்கு முற்றுப் புள்ளியாக மாறிப்போனது. இவர் பணக்கார வர்கத்தின் பிரதிநிதி என்பதால், பல்வேறு குற்றங்கள் சாட்டப்பட்டு, தலை துண்டிக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டார். இது நடந்து ஒன்றரை வருடங்கள் கழித்து, பிரெஞ்சு அரசாங்கம் இவரை குறமற்றவர்  என்று பிரகடனப்படுத்தியது. அதன்பின்னே அவரின் சில உடைமைகளை அவரின் மனைவியிடம் அளிக்கப்பட்டபோது, அதன் மீது ஒரு துண்டுச்  சீட்டில் 'தவறாக குற்றம் சாட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட   லவோயிசியரின் விதவைக்கு....' என்று எழுதிருந்தது! பாவம். என்ன  ஒரு சோகம்? 
 "It took them only an instant to cut off his head, but France may not produce another like it in a century."Joseph-Louis Lagrange, an Italian-born mathematician and astronomer.

c = Celeritas or Speed of light
James Clerk Maxwell, British mathematical physicist, 1831-1879. and Michael Faraday

எல்லாம் சரி. ஆற்றலும், நிறையும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கின்றன. அதனால் அவை சமன்பாட்டில் இடம் பிடித்துள்ளன. ஆனால் இந்த ஒளி எப்படி உள்ளே வந்தது? மிக மிக வேகமாக செல்லுவதற்கு லத்தீன் மொழியில் செலிரிட்டஸ் (celeritas) என்று அழைக்கப்படுகிறது. மனிதன் அறிவுக்கு எட்டியவரை மிக வேகம்மாக செல்லக்கூடியது ஒளி மட்டுமே. வினாடிக்கு 3,00,000 கிலோமீட்டர்கள்! இங்கே மீண்டும் மைகேல் ஃபாரடே உள்ளே வருகிறார். ரொம்பக் காலமாகவே அவர் ஒளியும், மிசாரத்தைப் போலவும், காந்தப்புலத்தைப் போலவும், மின்காந்தவியளைச் சார்ந்ததுத்தான் என்று உறுதியாக நம்பினார்.  ஆனால் அதைக் கணிதத்தனமாக நிரூபிக்க தேவையான எண்கணித அறிவு அவரிடம் போதியதாக இல்லை. என்ன இருந்தாலும் அவர் ஒரு ரொம்பவும் படிக்காதமேதைத்தானே! அங்கத்தான் நன்கு படித்த கணிதத்தில் புலியான ஜேம்ஸ் கிளார்க் மேக்ஸ்வெல் எண்ணு இளைஞர் வருகிறார். அவர்கள் இருவரும் சேர்ந்து, மின்சாரத்திலிருந்து, காந்தப்புலமும், காந்தப்புலத்திளிருந்து மின்சாரமும்... ஒரு குறிப்பிட்ட வேகத்திலிருக்கும்போது உண்டாகும். அந்த வேகம்தான் ஒளியின் வேகம்!,அது எப்போதும் மாறாது  என்று எண்கணிதம் மூலமாக உலகுக்கு நிரூபித்தனர். இதையும் ஐன்ஸ்டைன் தன் சமன்பாட்டில் சேர்த்துக்கொண்டார். ஒளியின் வேகம் மாறது என்றால், வேறு ஏதோ ஒன்று மாறித்தான் ஆகவேண்டும். அது நிறை. ஒருப் பொருளின் வேகம் ஒளியின் வேகத்தை நெருங்கும் போது அதன் நிறை அதிகரிக்கும் என்றும் அது அது அதன் ஆற்றலை சார்ந்திருக்கும் என்பதையும் குறித்துக்கொண்டார்.  

2 - Squared
Emilie du Chatelet, French aristocrat, mathematician and physicist, 1706-1749.

இந்த மகா சமன்பாட்டில் உள்ள ஒரே எண் '2'. அதுவும் நேர் அர்த்தத்தில் இலை. 'அடுக்கு' என்ற முறையில் உள்ளது. ஒளியின் வேகம் என்ற ஒரு எண் அதே எண்ணால் பெருக்கப்படவேண்டும். 670 மில்லியன் X 670 மில்லியன் ( மணிக்கு 670 மில்லியன் மைல்கள் ). அந்த தொகை எவ்வளவு என்றுத் தெரியுமா? 448,900,000,000,000,000. சரி இருக்கட்டும். ஏன் அந்த 2 அடுக்கு?(Square?).

இதற்க்கான விடை எமிலி டு ஷாட்டலே எனும் இளம் பிரெஞ்சு சீமாட்டியிடம் இருந்து வந்தது. இந்த எமிலி தான் வாழ்ந்த 18 ஆம் நூற்றாண்டுப் பெண்களில் மிகவும் வித்தியாசமான புதுமைப் பெண்ணாகத் திகழ்ந்தார். அவருக்கு புலமை இல்லாத கலையே இல்லை எனலாம். சர் ஐசக் நியூட்டனின் Principia Mathametica அறிவியலின் வேதத்தை பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கும் அளவிற்கு அறிவியல் மற்றும் மொழி ஞானம் கொண்டவர். தன் 23 வது வயது முதலே கணிதத்தில் கரைக்கண்டு, ஐசக் நியூட்டன் முதலான மேதைகளுக்கே சவாலாகத் இருந்தார்.
ஒரு நகரும் பொருளுக்கு ஆற்றல் உண்டு. ஒருப் பந்து, அதேப்போன்ற பந்தைவிட இரு மடங்கு வேகத்தில் சென்றால், அதன் ஆற்றலும் இரு மடங்கு இருக்கும் என்பது நியூட்டனின் கூற்று. ஆனால் நம்ம எமிலி மேடம் கூறுகிறார், அதன் ஆற்றல் நான்கு மடங்கு இருக்குமென்று! சொல்லுவதோடு நிற்கவில்லை... அதை ஒரு சாதாரண சிறு பரிசோதனை மூலம் நிரூபிக்கவும் செய்தார். சிறு ஈய குண்டுகளை குறிப்பட்ட உயரத்தில்லிருந்து, மிருதுவான களிமண் மீது போட்டு, அது எவ்வளவு தூரம் உள்ளே பதிகிறது என்று அளந்து கணக்கிட்டார். அப்போதுதான் அந்த களிமண்ணின் மீது போடப்பட்ட குண்டுகளின் ஆற்றல் அவைகளின் வேகத்தின் இரண்டு மடங்காக இல்லை, இரண்டு அடுக்காக (SQUARE) இருக்கும் என்று நிரூபிக்கப்பட்டு, ஆனானப்பட்ட நியூட்டன் சொன்ன ஒரு விதி போயாகப்[ போனது இந்தப் பெண்ணால்! இதைத்தான் ஐன்ஸ்டைன்தன்சமன்பாட்டில் உபயோகப்படுத்திக்கொண்டார்.
>மேடம் எமிலியைப்பற்றி இன்னும்
சில கூடுதல் தகவல்கள். இவருக்கு ஏகப்பட்ட ஆண்களின் தொடர்பு இருந்ததாம்! அதுவும் அவரின் கணவருக்குத் தெரிந்தே!! அதில் ஒருவர் புகழ்ப்பெற்ற 'வைர நெஞ்ச வால்டேர்'ரும் ஒருவர். இருவரும் சேர்ந்து ஒரு புத்தகமும் எழுதியுள்ளனர்.(Elements of Newton's Philosophy). இவ்வளவு இருந்தும் பரிதாபகரமாக, தன் 43 ஆம் வயதில், ஒரு இளம்கவிஞனால்கர்ப்பமாகி, ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்துவிட்டு, ஆறு நாட்கள் கழித்து  இறந்துப்போனார்! &




'c' என்ற ஒளியின் வேகம் ஒரு மாறா எண் என்பதை முதலில் புரிந்துக் கொண்டவர்களில் ஐன்ஸ்டைன் முதலாமவர். மிக நுட்பமாக கவனியுங்கள்.... நாம் என்னதான் வேகமாக சென்றாலும், நம்மிலிருந்து புறப்படும் ஒளி, மணிக்கு 670 மில்லியன் மைல் வேகத்தில் நம்மை விட்டுப் போய்விடும்! (ஆகவே ஒளியின் வேகத்தில் யாரும் பிரயாணிக்கவே முடியாது!) இங்கேதான் மேக்ஸ்வேல்லின் ஐடியாவை பிடித்துக்கொண்டார் ஐன்ஸ்டைன். 'c' என்பது மாற எண் என்றால், ஒளியின் வேகத்தை அடையும் ஒருப் பொருளின் நிறை என்னவாகும்? அது கண்டிப்பாக அதிகரிக்கும்! இதிலிருந்து அவர் கூறுவது நிறையும், ஆற்றலும் ஒன்றோடு ஒன்று தொடர்புள்ளவை. ஏன்...? அவை இரண்டும் ஒன்றே..! ஆற்றல்தான் நிறை, நிறைதான் ஆற்றல்! c² இன் மதிப்பு மிக மிக மிக அதிகமாக இருப்பதால், ஒரு சின்ன கடுகளவு நிறைக்கொண்ட பொருளுக்கு அளவில்லாத ஆற்றல் இருப்பது நிச்சயம்! இந்த சமன்பாட்டின் சரியான புரிதல் நட்சத்திரங்களின் இதயத்தில் என்ன நடக்கிறது என்பதையும், நாமெல்லாம் அந்த நட்சத்திர துகள்களால் உருவானவர்கள் என்பதையும், சூரியனிலிருந்து  நமக்குக் கிடைக்கும் எல்லா ஆற்றலும் E=mc² என்பது புரிம்துவிடும்! நட்சதிரங்கள் தங்களின் அளவிடமிடியாத நிறையை ஆற்றலாக மாற்றியபடியே உள்ளன என்பதும் விளங்கிவிடும்.

மேற்கூறிய அனைத்து விவரங்களும் David Bodanis  எழுதிய 
E=mc2 : A Biography of the World's Most Famous Equation என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது.. 

இதையே ஒரு முழு நீளக் காணொளியாக பார்க்க நேர்ந்தால்..... இதோ அந்த படம் உங்களின் முன்னால்....  




மற்றுமொரு விளக்கம்......


17 கருத்துகள்:

வவ்வால் சொன்னது…

Good post.

Ungalukku therinthathu than,just nanum konjam solli vaikkiren!

einstein got noble prize for his photo voltic effect theorem not for relativity theory.

He put size of the universe as constant later that is proved as wrong,he regreted for his mistake and told his theorem was a great blunder.

ஷர்புதீன் சொன்னது…

useful. read later

Chitra சொன்னது…

WOW! Very nicely written and explained. :-)

VELU.G சொன்னது…

மிகவும் சிறப்பான கட்டுரை

நிறைய விஷயங்கள் தெரிந்துகொண்டேன்

நன்றி

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் சொன்னது…

வவ்வால், ஷர்புதின், சித்ரா,வேலு.ஜி. அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

natbas சொன்னது…

//இந்த சமன்பாட்டின் சரியான புரிதல் நட்சத்திரங்களின் இதயத்தில் என்ன நடக்கிறது என்பதையும், நாமெல்லாம் அந்த நட்சத்திர துகள்களால் உருவானவர்கள் என்பதையும், சூரியனிலிருந்து நமக்குக் கிடைக்கும் எல்லா ஆற்றலும் E=mc² என்பது புரிம்துவிடும்! நட்சதிரங்கள் தங்களின் அளவிடமிடியாத நிறையை ஆற்றலாக மாற்றியபடியே உள்ளன என்பதும் விளங்கிவிடு//

This is the best part of the post that I liked. No wonder the equation has a mystical look to it.

Thanks for a great post- it is not an easy task to abstract a sizable part of a book into a short post.

Rajakamal சொன்னது…

நானும் ஒரு பிரபஞ்ச ரசிகன் உங்கள் பேரே எனக்கு பிடித்திருந்து அதுவும் உங்கள் பிளாகின் பிரஞ்ச படம் மிகவும் அழகு என் அபிமான விஞ்ஞானி ஐன்ஸ்டீன் பற்றிய விவரம் அருமை thanks very much.

யூர்கன் க்ருகியர் சொன்னது…

nice post friend !

பொன் மாலை பொழுது சொன்னது…

வழக்கம் போல ஒரு சிறந்த அறிவியல் படைப்பு.
பகிர்வுக்கு நன்றி.

பொன் மாலை பொழுது சொன்னது…

வழக்கம் போல ஒரு சிறந்த அறிவியல் படைப்பு.
பகிர்வுக்கு நன்றி.

பொன் மாலை பொழுது சொன்னது…

வழக்கம் போல ஒரு சிறந்த அறிவியல் படைப்பு.
பகிர்வுக்கு நன்றி.

பொன் மாலை பொழுது சொன்னது…

வழக்கம் போல ஒரு சிறந்த அறிவியல் படைப்பு.
சிக்கலாக தோன்றக்கூடியவைகளை மிக எளிதாக சுருக்கி
விளங்க வைப்பது ஒரு சாதாரண காரியமல்ல.
பகிர்வுக்கு நன்றி.

பொன் மாலை பொழுது சொன்னது…

வழக்கம் போல ஒரு சிறந்த அறிவியல் படைப்பு.
சிக்கலாக தோன்றக்கூடியவைகளை மிக எளிதாக சுருக்கி
விளங்க வைப்பது ஒரு சாதாரண காரியமல்ல.
பகிர்வுக்கு நன்றி.

பொன் மாலை பொழுது சொன்னது…

வழக்கம் போல ஒரு சிறந்த அறிவியல் படைப்பு.
சிக்கலாக தோன்றக்கூடியவைகளை மிக எளிதாக சுருக்கி
விளங்க வைப்பது ஒரு சாதாரண காரியமல்ல.
பகிர்வுக்கு நன்றி.

Redmeera சொன்னது…

உங்களுடைய ப்ளாக்கில் அறிவியலைப்பற்றி தமிழில் எழுதுவதை வாழ்த்துகிறேன்.E=mc2 யின் விளக்கங்கள் நன்றாக உள்ளது.தொடர்ந்து இதுபோல நிறைய எழுதுங்கள் வாழ்த்துக்கள்.ஆனால் ஒரு சின்ன முரண்பாடு.நீங்கள் எழுதுவதில் வர்க்கமுரண்பாடுகள் அப்பட்டமாக தெரியுதுங்க.(அதாவது முதலாளித்துவம்,நிலபிரவுத்துவம்,பாட்டாளிவர்கம்)இவற்றில் நீங்கள் எந்த நிலையில் இருந்து இந்த அறிவியலை புரிந்துக்கொண்டு எழுதி இருக்கிறீர்கள் என்பது நன்றாகவே தெரிகிறது.வாழ்த்துக்கள்

Unknown சொன்னது…

Very very useful for me, Thanks and I wish more articles like this....

Unknown சொன்னது…

Very very useful for me, Thanks and I wish more article like this...