புதன், 14 ஜூலை, 2010

வாழும் வரலாறு: ஃபிடல் காஸ்ட்ரோ.



சேவும் காஸ்ட்ரோ ...



[நமது வலைப்பூவை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தி, நம்மை ஊக்கப்படுத்திய நண்பர் நாஞ்சில் பிரதாப் அவர்களுக்கும் வலைச்சர பொறுப்பாளர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளும்,வாழ்த்துக்களும் !
மனதில் பட்டதை சொல்லும் நண்பர் அபுதாபி கண்ணன் அவர்களுக்கும் நன்றிகள் பல!]



ஃபிடல் காஸ்ட்ரோ ! வாழும் வரலாறு ! அவரை க்யூபா நாட்டின் முன்னாள் சர்வதிகாரி என்று வர்ணிக்கிறது விக்கிப்பீடியா. 1926 இல் பிறந்த ஃபிடல் அலேஜன்ரோ கேஸ்ட்ரோ ருஸ், தொழிலால் வழக்கறிஞரான இவர், ஒருப் புரட்சியாளராக உருவெடுத்து, தன் நண்பனான 'சே' என்று உலகமக்களால் இன்றும் அன்போடு அழைக்கப்படும், உலகின் ஹீரோக்களுக்கெல்லாம் ஹீரோவான, எனெஸ்டோ சே குவேரா மற்றும் தற்போதைய ஜனாதிபதி, சகோதரன் ரவுல் கேஸ்ட்ரோ போன்ற பல ' உண்மையான, நம்பிக்கையான, உணர்வுள்ள, மானமிகு ' தோழர்களின் துணையோடு, பேடிஸ்டா தலைமையில் இயங்கிய முதலாளித்துவ சர்வதிகார அரசிடமிருந்து, சூதாட்டம், கேளிக்கை, விபசாரம், மற்றும் மாபியாக்கள் மயங்கிகிடந்த க்யூபாவை மீட்டு, கம்யுனிச ஆட்சியை நிறுவி, இன்றும் முதலாளித்துவத்திற்கு எதிராக குரல் கொடுத்துக்கொண்டிருக்கும்  ஒரு கிழட்டுச் சிங்கம்! என்னதான் வயதானாலும் சிங்கம் சிங்கம்தானே! 
13.07.2010 அன்று எடுக்கப்பட்டப் படம்....

அவர் என்றுமே உலகிற்கு ஒரு சர்ச்சைக்குரிய மனிதராகவே தென்பட்டார். அவருடைய நாட்டு மக்களின் ஒருப்பிரிவினர் அவரை ஒரு க்யூபாவை சீரழிக்கவந்த ராட்சசன் என்றும் மற்றொரு பிரிவினர் அவரி முதலாளித்துவ அராஜகங்களிளிருந்து தங்கள் நாட்டை மீட்கவந்த தீர்கதரிசி என்றும் போடுகின்றனர். நம் ஒவ்வொருவருக்கும் அவரைப்பற்றி பல்வேறுக் கருத்துக்கள் இருக்கலாம். ஆனாலும் நம்ம கண்முன்னாடி சுற்றிக்கொண்டு இருக்கும் பல நம்மநாட்டு தலைவர்களை அவருடன் ஒப்பிட்டுப் பார்த்தால், ஒத்துக்கொண்டாலும், ஒதுக்கொள்ளவில்லைஎன்றாலும், அவர் வானாளாவி நிற்பது என்னவோ நிஜமான உண்மை!அதை வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில்  இங்கே அவரைப் பற்றிய இரண்டு நீண்டக்  காணொளிகளைக் காணப்போகிறோம். ஒவ்வொன்றும்  காணக்கிடைக்காத காட்சிகள் நிறைந்த வரலாற்றுப் பெட்டகங்கள்!  அவைகளை காணும் முன்னே அவரைப் பற்றி சில சுவாரசியமான சிலத் தகவல்கள்.....


மரடோனாவின் காலில் மாமனிதனின் உருவம்..


  • இங்கிலாந்து ராணிக்கும், தாய்லாந்து அரசருக்கும் அடுத்தபடியாக, ஒரு நாட்டின் நீண்டகால தலைவராக திகழ்ந்தவர் காஸ்ட்ரோ .
  • இரண்டு கின்னஸ் ரேக்காடுகளை தன் வசம் வைத்துள்ளார். அனல் தெறிக்கும் பேச்சாற்றல் கொண்ட இவர், 29.09.1960 அன்று, ஐநா மாமன்றத்தில் மிக நீண்ட உரையான 4 மணி 29 நிமிட சொற்பொழிவை  நிகழ்த்தினார்! அதற்கும் மேலாக, 1986 ஆம் வருடம், ஹவானாவில் நடந்த கம்யுனிஸ்ட் கட்சிக் கூட்டத்தில் அவர் பேசிய நேரம், 7 மணி நேரம், 10 நிமிடங்கள்!
  • இதுவரையில் அவரை  634 முறை கொல்ல முயற்சி செய்யப்பட்டுள்ளது! விஷ மாத்திரைகள், விஷ சுருட்டு, உணவுப்பொருட்கள், போல பல வகையில்...! அட... அவரின் பிரசித்திப் பெற்ற தாடியின் ரோமத்தை கொட்டவைக்க ஏதோ பவுடர் கூடக் கொடுக்கப்பட்டதாம்! ஆனால் அதில் ஒன்றுக்கூட உதிரவில்லை! 'என்னா சின்னப்பிள்ளத்தனம் பாருங்க?'  
  • அவரை க்யூபாவின் தலைமைப் பொறுப்பிலிருந்தும், ஏன் உலகத்திலிருந்தேயும் கிளப்பிவிட முயற்சி நடந்த காலத்தினுடே அவர் ஒன்பது அமெரிக்க ஜனாதிபதிகளக் கடந்து வந்துள்ளார்!
  • சுருட்டின் புகைப்பதில் மிகவும் பிரியமாக இருந்த காஸ்ட்ரோ, 1985 வருடம் முதல் சுத்தமாக புகைப்பதை நிறுத்திவிட்டார்! இப்போது அந்த சுருட்டுக்கு ஒரு சிறந்த உபயோகமாக அவர் எல்லோரிடமும் சொல்லுவது..... எதிரிக்கு பரிசாகக் கொடுப்பது!
  • காஸ்ட்ரோ  வளர்த்துவந்த உப்ரே பலன்கா( அர்த்தம்: வெள்ளைப் பால்மடி!) எனும் பசு, தினமும் 110 லிட்டர் பால் கறக்குமாம்!
  • காஸ்ட்ரோவிற்கு  எட்டுப் பிள்ளைகள். இரண்டு மனைவிகள். முதல் மைவிக்குப் பிறந்த மகளான அலினா பெர்னாண்டிஸ், 1993 ஆம் வருடம், அரு சுற்றுலாப் பயணிப் போல் மாறுவேடத்தில் க்யூபாவை விட்டுத் தப்பி அமெரிக்காவில் தஞ்சம் புகுந்து, மயாமி நகரின் வானொலியில், தன் தந்தையின் ஆட்சியை விமரிசித்து நிகழ்சிகள் நடத்தி வருகிறார்!
  • இரண்டாவது மனைவி டாலியாவை சந்தித்து வாழ ஆரம்பித்தது 1961 இல். சத்தமில்லாமல் திருமணம் செய்துக்கொண்டது 1980 இல்!
  • ஜனவரி 31, 2007 இல் அவர் மிகவும் நோய்வாய்ப்பட்டு கவலைக்கிடமாக இருந்தப் போது, அமெரிக்காவின் மயாமி நகரில், அவர் இறந்தால் அதை விமரிசையாகக்  கொண்டாட திட்டம் தீட்டி இருந்தனர். அதிலும் அவர் மண்ணைப் போட்டுவிட்டார்!
  • காஸ்ட்ரோ  சிறு வயதில் ஒரு தீவிர கத்தோலிக்கர். ஆனால் பிறகு அவர் ஒரு நாத்திகராக மாறிவிட்டார். 1962 ஜனவரியில் அப்போது போப்பாக இருந்த ஜான் XXIII அவரை கத்தோலிக்க பிரிவை விட்டு நீக்கிவிட்டார். அதற்காக அவர் கவலைப்படவில்லை. இருந்தும் போப் ஜான் பால் II, 1998 இல் க்யூபா வந்தபோது, அவரை தனியே நெடுநேரம் சந்தித்துப் பேசினார். அது மட்டுமல்லாமல், ஏப்ரல் 2005 இல் அவர் இறந்தப் போது அவரின் நினைவு பிராத்தனையிலும் கலந்துக்கொண்டார். 

  • மேலும் தெரிந்துக்கொள்ள வேண்டுமா.... இங்கே....

செவ்வாய், 13 ஜூலை, 2010

டார்வின் எனும் குடும்பஸ்தன் ![Updated]



சார்லஸ் டார்வின் ... ! இந்தப் பேரைக்கேட்டாலே அல்லது படித்தாலே,உலகம் இருவேறுக் கூறுகளாகப் பிரிந்துவிடும். பரிணாமக் கொள்கையை நம்புகிறவர்கள், அதை நம்மபாதவர்கள், கடவுள் உலகையும் உயிரினங்களையும் படைத்தான் என்றும், கடவுள் என்று ஒன்று இல்லை என்றும் இருவேறுப் பிரிவுகளாக பிரிந்துவிடுவதைப் பார்க்கலாம். நாம் இதில் ஏதாவது ஒருப் பிரிவைச் சார்ந்தவர்களாகவோ, அல்லது மதில் மேல் பூனையாகவோ கண்டிப்பாக இருப்போம்.அது அவரவர்களின் பின்னணியையோ, புரிதலையோப் பொறுத்தது. டார்வினின் பரிணாமக்கொள்கை, அது வெளியிடப்பட்ட நாள் முதலே ஒரு விவாதத்துக்குரிய கருத்தாகவே இருந்து வந்திருக்கிறது, இன்றும் காரசாரமாக விவாதிக்கப்படுகிறது. எல்லா விவாதங்களும் கடைசியாக கடவுள் என்று ஒன்று உண்டா இல்லையா என்ற வாதத்தில் வந்து முடிகிறது. 

ஆனால், பாவம் டார்வின் தன் ஆராய்ச்சிகளை தொடங்கியது, கடவுள் என்ற கருத்தை ஒழிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் அல்ல!. அவர் பாட்டுக்கு அவர் தன் வேலையை அதன் வழியிலே  செய்துக்கொண்டேப் போனார். கடைசியாக கடவுள் என்ற கருத்து தானாகவே இதில் வந்து சிக்கிக் கொள்ளுகிறது! அதனால் டார்வினையும், அவரின் கொள்கையான பரிணாமக்கொள்கையை ஆதரித்துப் பேசுபவர்களையும், பலர் ஒரு எதிரியாகவேப் பாவிக்கின்றனர். இப்போது நாம் காணப்போவது மேற்கூறிய எதைப்பற்றியும் அல்ல! டார்வின் எனும் அன்பான குடும்பத்தலைவனைப் பற்றியது! 'தகுதியானவைப் பிழைக்கும் ' எனும் தத்துவத்தை உலகுக்குக் காட்டிய ஒரு தனிமனிதனின் வாழ்வில் அனுபவித்த,சுக, துக்கப் போராட்டங்களைப் பார்ப்போமா?
இப்போது அவர் வாழ்விலிருந்து சில துளிகள்.....
  • டார்வினுக்கும், ஆப்ரகாம் லிங்கனுக்கும் பிறந்ததினம் ஒன்றே! 12.02.1809.
  • சார்லஸ் டார்வினின் தாத்தா, எராமஸ் டார்வின், ஒரு பிரபல பதிவர்,சாரி ... மருத்துவர். எராமஸ்இன் மனைவியான, சார்லசின் பாட்டி மேரி, பெரிய 'சரக்குக்கை'. பெருக்குடியினால் ஈரல் பாதிக்கப்பட்ட அவருக்கு சொந்தக் கணவனால் அளவுக்கதிகமான ஒப்பியம் கொடுக்கப்பட்டு, தம் முப்பதாவது வயதிலேயே இறந்துப்போனார். சார்லசின் தாவழி மாமன் தாமஸ், அதிக அளவு போதைப் பழக்கத்தால் உயிரிழந்தார். இந்த துர்மரணங்களால் மனமொடிந்த எராமசின் தலைப்பிள்ளையான எராமஸ் II, தற்கொலை செய்துக்கொண்டு இறந்துப்போனார்! இப்படி சார்லஸ் பிரக்கும்முன்னரே அவரின் செல்வந்தக்குடும்பம், பல்வேறு துயரங்களால் அலைக்கழிக்கப்பட்டது. 
  • சார்லசின் தந்தையான ராபர்ட் டாவினும் ஒரு மருத்துவர். அதுமட்டுமல்லாமல் அவர் ஒரு 'கருணையில்லா' பைனான்ஸ் பார்ட்டி என்றும் கூறப்படுகிறது. அவரின் உயரம் ஆறடி இரண்டங்குலம். அவரின் எடை முன்னூற்று முப்பத்தாறு பவுண்டுகள். அதாவது 152.41 கிலோ! அவர் ஏதாவது நோயாளியை பார்க்கச்சென்றால், அவரின் வண்டிக்காரர், அவருக்கு முன்னே அந்த வீட்டற்கு சென்று, அவரின் பளுவைத் தாங்குமா என்று பார்த்து உறுதி செய்தப் பிறகே செல்வாராம்!
  • இளம்பெண்கள் விஷயத்தில் சபலக்காரரான ராபர்ட், அவரின் மனைவியும் சார்லசின் தாயுமான சூசன்னா டார்வினை முரட்டுத்தனமாக கொடுமைப்படுத்துவாராம். சார்லசின் பாட்டியைப்போலவே, சூசன்னவும் மர்மமான முறையிலேயே மரணமடைந்தார். அப்பது சார்லசுக்கு வயது எட்டு!
  • என்னதான் ராபர்ட் ஒரு கொடூர குணம் படைத்தவராக தோன்றினாலும், தன் பிள்ளைகளை நன்றாக படிக்க ஊக்குவித்தார்.
  •  சார்லஸ் தன் பள்ளிநாட்களில், யாரிடமும் சண்டைப்போட விரும்பாத, சோம்பேறித்தனமான, சுற்றியுள்ள இயற்கையை விரும்பும் ஒரு 'அழகு குண்டுப்பையன்!'
  • இங்கிலாந்தின் ஷ்ரெவ்பரி நகரின் பள்ளியில் அவர்  அப்படியொன்றும் பிரமாதமான மாணவராக திகழவில்லை. ஆனால் தன் வீட்டை சுற்றி இருக்கும் பூச்சிகள், பறவைகள், விலங்குகள் போன்றவற்றில் மிகவும் விருப்பமாக  கவனம் செலுத்தினார்.
  •  அவருக்கு பள்ளியில் மொழிப் பாடமும், கணிதத்தில் அல்ஜீப்ராவும் அலர்ஜியாக இருந்தது.
  • அவரை மருத்துவம் படிக்க எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் சேர்த்தனர். அதுவும் அவருக்குப் பயன்தரவில்லை. ரத்தத்தைப் பார்த்தாலே மயக்கம் கொள்ளும் மனிதர் எங்கே மருத்துவம் படிப்பது?!  துப்பாக்கியும் கையுமாக அலைந்து, மிருகங்களையும், பறவைகளையும் இரத்தக்களரியில்பார்க்கும், வேட்டையாடுதலில் விருப்பமுள்ள ஒரு மனிதருக்கு நேர்ந்த நிலைமையைப் பார்த்தீர்களா?
  • மருத்துவப்படிப்பு வேலைக்காகவில்லை என்பதால் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தனக்கு விருப்பமான கிறித்துவ சமயம் சார்ந்த படிப்பை மேற்கொண்டு பட்டமும் பெற்றுவிட்டார். அப்போது அங்கே அவருக்கு ஆசிரியராய் இருந்த ஜான் ஸ்டீவன்ஸ் எனும் தாவரவியலாளரின் நட்பினால் அவருக்கு பீகில் எனும் கப்பலில், தம் வாழ்வையே திசைத்ருப்பிய கடற்பயணத்தில், ஒரு இயற்கை அறிவியலாளராக செல்ல நேர்ந்தது.
  • இதில் என்ன சுவாரசியம் என்றால், அந்தக் கப்பலில் ஏறும் முன் அவருக்கும் விஞ்ஞானத்திற்கும் வெகுதூரம். அவர் ஒரு முழுக்க முழுக்க வேதம் படித்த இறை விரும்பியாகத்தான் கிளம்பினார். அவரின் அந்தப் பயணம், கடவுளுக்கே கேள்விக்குறி வைக்கும் பயணமாக  அமையப்போகிறது என்று கனவிலும் கண்டிருக்கமாட்டார்! அப்படித் தெரிந்திருந்தால் நிச்சயமாக அந்தப்பயணத்தை  மேற்கொண்டிருக்க மாட்டார் என்றே நான் நினைக்கிறேன். நீங்க....?
  • இன்னொரு சமாச்சாரம் என்னவென்றால் முதலில் அவருக்கு கடற்பயணம்  ஒத்துக்கொள்ளவில்லையாம்!
  • அவர் தென் அமெரிக்காவின் கடைக்கோடியில் இருக்கும் அர்ஜண்டீனா நாட்டில் இறங்கியப்போது,(1833) அங்கு குடியேறிய ஸ்பானியர்கள், ஜெனரல். ஜவான் மேனுவேல் டெ ரோஸ்என்பவரின் தலைமையில், அந்த நாட்டின் பூர்வாங்க குடிமக்களான இந்தியர்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்துக்கொண்டிருந்தனர். அப்பது அந்த ஜெனரலின் விருந்தினராக டார்வின் அங்கு தங்கி  இருந்து அந்தக் கொடுமைகளை நேரேடியாகக்கண்டார். அதைப்பற்றி எழுதும்போது 'எல்லாம் நன்மைக்கே' என்ற தொனியில் எழுதிருந்தது வருந்தத்தக்கது. "Less Indians => more cattle => healthier Spaniards: Survival of the fittest!"
  •  ஊர்த்திரும்பியதும் எம்மா வெட்ஜ்வுட் என்ற பெண்ணை தன் சொந்தத்திலேய மணந்தார். இங்குதான் நாம் காணப்போகும் டாவினின் குடும்பவாழ்க்கையைப் பற்றிய கண்ணோட்டம் துவங்குகிறது. இவர்கள் இருவருக்கும் பத்துப் பிள்ளைகள் பிறந்தனர். அதில் இரண்டுப் பிள்ளைகள் சிறு வயதிலேயே இறந்துப் போயினர்.
  • அதில் முக்கியமானது அவரின் பத்து வயது செல்ல மகள் ஆன்னின் மரணம். அது அவரின் வாழ்கையை அசைத்துப் போட்டுவிட்டது. அதையும் அதன் பின்னணியையும் நாம் காணப்போகிறோம்
டார்வினின் குடும்பத்தில் வழிவந்த அவரின் கொள்ளுப்பேரனான ரெண்டல் கேன்ஸ் என்பவர் எழுதிய ' Annie's Box: Charles Darwin, His Daughter and Human Evolution' என்ற புத்தகத்தை தழுவி படமாக்கப்பட்ட 'Creationஎன்ற காணொளியைக் காணப்போகிறோம். மிகவும் அருமையாக மனதைத்தொடும் விதமாகப் படைக்கப்பட்டுள்ளது. ஆன்ஸ் பாக்ஸ் என்பது, டார்வினின் மனைவி எம்மா தன் மகளின் நினைவாக வைத்திருந்த டைரிக்குறிப்புகள் அடங்கிய பேட்டி. அது நீண்ட காலத்திற்குப் பின்னர் ரெண்டல் கையில் சிக்கி, அதை அவர் அரு அழகான புத்தகமாக வடித்துள்ளார்.


DivX காணொளிதான் கிடைத்துள்ளது... DivX Player இல்லாதவர்கள் இங்கே சென்று டவுன்லோட் செய்துக்கொள்ளவும். பிளேயர் ஐ அப்டேட் செய்ய வேண்டாம். [The new version of the DIVX player, which you are prompted to install, will not work with most of the videos. 
If you are repeatedly prompted to update to a newer version, right click on the divx player screen, go to preferences, and change the auto-update option to "once a month".]



இன்னொரு காணொளியும் உங்களின் பார்வைக்கு. பிபிசி வழங்கிய ' Darwin's Struggle: The Evolution of the origin of Species'  எனும் அருமையான விவரணப்படம்! 





அவரின் அரியப் புகைப்படங்களுக்கு ...

டார்வின் - ஆல் இன் ஆல் .....

புதன், 7 ஜூலை, 2010

தொலைந்துப்போன தொடர்புகள்....

ஐடா!
அவள் பெயர் 'ஐடா'!  47 மில்லியன் ஆண்டுகளுக்கு முன், தற்போதைய ஜெர்மெனி நாட்டின் ஒருப் பகுதியில் இருந்த எரிமலைக் குழம்பு ஏரியில் விழுந்தபோது, தற்போது ஐடா என்று பெயரிடப்பட்ட  அந்த சிறிய ஜந்து... தனது போட்டோ உலகம் முழுதும் பாட புத்தகங்களின் பக்கங்களில் அச்சடிக்கப்படும் என்றோ, பிபிசி தொலைக்காட்சி, ஒரு மணி நேரத்திற்கும் மேலான ஒரு சிறந்த ஆவணப்படத்தை, சர். டேவிட் அட்டன்பரோவின் வர்ணனையோடு ஒளிபரப்பும் என்றோ.... அதையே இந்த பிரபஞ்சப்ரியன் தன் வலைப்பூவில் தன் நண்பர்களிடம் பகிர்ந்துக் கொள்ளுவான் என்றோ, நிச்சயம்  நினைத்திருக்காது! 






இந்த ஐடா, 1983 ஆம் வருடம், ஜெர்மெனியின் மெசெல் கிராமத்தின் அருகே இருந்த குவாரியில் கண்டெடுக்கப்பட்டது. சார்ல்ஸ் டார்வினையும், அது கண்டெடுக்கப்பட்ட மெசெல் கிராமத்தையும் கவுரவிக்கும் பொருட்டு அதற்கு 'டார்வினியஸ் மாசில்லே' [ Darwinius  masillae ]என்ற உயிரியல் பெயர் வைக்கப்பட்டது. செல்லப்பெயர் ஐடா! மொத்தமே 58 செமி (23 in) நீளமுள்ள ஐடா, ஒரு இளம்  பெண்! (young female ஐ வேறு எப்படி எழுதுவது?!) அதன் பெரிய  பாதமும், விரல்களும், நகங்களும் அது ஒரு 'ப்ரைமேட்' [primate] எனப்படும் குரங்கு இனத்தை சார்ந்த உயிரினம் என உறுதிப் படுத்துகின்றனர் அறிவியல் வல்லுனர்கள். இந்தப் படிமம், எலும்புகள் மாத்திரமல்லாமல், அதன் குடல் மற்றும் முழு உடலையும் அறிந்துக்கொள்ளும் விதமாக கிடைத்துள்ளது. அதன் படிப் பார்த்தால்... ஐடா ஒரு சைவம்! சாவதற்கு முன்னே பழங்களையும், கொட்டைகளையும், இலைகளையும்  சாப்பிட்டிருக்கிறாள். அப்போது அவளின் வயது சுமார் ஒன்பது மாதங்கள். ஏறக்குறைய இப்போது மடகஸ்கார் தீவுகளில் வாழும் 'லெமூர்' [Lemur] வகைக் குரங்குகளை ஒத்த உருவம் கொண்டிருக்கும் என்று நம்பப்படுகிறது.

 " இந்த சிறிய பிராணியின் படிமம், நமக்கும் ஏனைய பாலூட்டி உயிரினங்களுக்கும் உள்ள தொடர்பை தெளிவாக காண்பிக்கபபோகிறது!" என்று கூறுகிறார் இந்தக் காணொளியின் வர்ணனையாளர் அட்டன்பரோ. ஐடாவை கண்டுபிடித்து ஆராய்ச்சி செய்த ஒஸ்லோ பல்கலைக்கழகத்தின், இயற்கை அருங்காட்சியகத்தின் ஆராய்ச்சியாளரான ஜோர்ன் ஹரால்ட் ஹுரும், கூறுகிறார், "  இந்தப் படிமம் நமக்கு இதுவரை மறைந்திருந்த பரிணாம சங்கிலியின் ஒருப் பகுதியை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. இதுவரை நமக்கு கிடைத்துள்ள படிமங்களிலேயே, ஐடாவைப் போல முழுமையான, விவரம் நிறைந்த சாட்சி இதுவரை கிடைத்ததில்லை ! " 

இதைப்பற்றிய விவரங்கள் 'அறிவியல் போது நூலகம் ' எனப்படும் ' PLoS ONE [Public Library of Science] '   இணையத்தளத்தில் 19, மே, 2009 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதுமட்டுமல்லாமல் காலின் டுட்ஜ் [Colin Tudg] தன் புத்தகமான 'The Link: Uncovering Our Earliest Ancestor' இல் விளக்கமாக எழுதியுள்ளார். 
ஆனால் இப்போது நாம் காணப்போவது பிபிசி நிறுவனமும், அட்லாண்டிக் ப்ரொடக்ஷன் நிறுவனமும் இணைந்துத் தயாரித்து, பல்வேறு விருதுகள் பெற்ற இயக்குனரான அந்தோணி கிப்பன் [Anthony Giffen] இயக்கத்தில் கடந்த மே மாதம் 26 ஆம் தேதி ஒளிப்பரப்பப்பட்ட 'Uncovering Our Earliest Ancestor: The Link' எனும் சிறப்பான அறிவியல் காணொளியைத்தான். 

இன்னும் விவரம் வேண்டுவோர் இங்கே செல்லவும்.

சரி நண்பர்களே... காணொளியைக் காணுங்கள்....சொல்வதற்கு நியாயமான கருத்துக்கள் இருந்தால் கூறுங்கள். நன்றி. 


இது Flash Video....


உங்களிடம் DivX Web Player இருந்தால் நலம்.
இல்லாவிட்டால் இங்கே செல்லவும். Upgrade  செய்யவேண்டாம். Old Version னே இருக்கட்டும்.


The Link - Uncovering Our Earliest Ancestor (2009) from anon on Veehd.

அல்லது .....

திங்கள், 5 ஜூலை, 2010

மண்ணோடு மண்ணானாலும் ... மரடோனா மரடோனாதான் !

[இது ஒரு மீள் பதிவு.... அர்ஜண்டீனாவின் தோல்விக்கு முன்பே ஒரு முறை வெளியிடப் பட்டது என்றாலும், மீண்டும் சில புதிய விடியோக்களுடன் உங்களின் முன்னே...]

உலகக்கோப்பை காபந்து திருவிழா நடந்துக் கொண்டு இருக்கிறது..... உலகமே ஒரு வித மயக்கத்தில் உள்ளது. இந்த நேரத்தில், அர்ஜண்டீன அணி தோல்வி அடைந்தாலும், அதன் பெருமை உலகறிந்த விஷயம்.  தான் நேரடியாக களத்தில் இறங்கி விளையாடாவிட்டாலும், வெளியே இருந்துக்கொண்டே தன்  உயிரான அர்ஜண்டீனா கால்பந்து அணியை ஆட்டுவித்துக்கொண்டு இருந்த  மரடோனாவை கொஞ்ச நேரம் அலசி ஆராய்ந்துப் பார்த்தேன். அப்போது கிடைத்தவைகளை உங்களிடமும் பகிர்ந்துக் கொள்ள ஆசைப் பட்டதாலேயே இந்தப் பதிவு.  இதை முழுவதுமாக பார்க்க நிறைய நேரம் தேவைப்படும். ஆகவே நேரம் ஒதுக்கிக்கொண்டு பார்க்க முற்படவும்.  ஆரம்பிக்கட்டும் மரடோனா மேஜிக் !




































மண்ணோடு மண்ணானாலும் ... மரடோனா மரடோனாதான் !  .புதுசு கண்ணா...புதுசு...!
Diego Maradona



Diego Maradona.jpg
Personal information
Full name
Diego Armando Maradona
Date of birth
30 October 1960 (age 49)
Place of birth
Lanús, Argentina
Height
1.65 m (5 ft 5 in)
Playing position
Attacking Midfielder/Second Striker
Senior career*
Years
Team
Apps
(Gls)
1976–1981
Argentinos Juniors
167
(115)
1981–1982
Boca Juniors
40
(28)
1982–1984
Barcelona
36
(22)
1984–1991
Napoli
188
(81)
1992–1993
Sevilla
26
(5)
1993–1994
Newell's Old Boys
7
(0)
1995–1997
Boca Juniors
30
(7)
Total
490
(311)
National team
1977–1994
Argentina
91
(34)
Teams managed
1994
Mandiyú de Corrientes
1995
Racing Club
2008–
Argentina
* Senior club appearances and goals counted for the domestic league only.
† Appearances (Goals).
##################################################################################



http://www.life.com/image/first/in-gallery/30882/maradona-the-highs-the-lows
##################################################################################



##################################################################################

Maradona by Kusturica (2008






##################################################################################

Maradona's life (part one)

Maradona's life (part two)
##################################################################################
MARADONA 10 THE FOOTBALL LEGEND ##################################################################################

மரடோனாவின் இந்திய வருகையின் போது உருவானப் பாடல்......




######################################################################

ரோட்ரிகோ பியுநோவின்  (Rodrigo Alejandro Bueno) "La mano de Dios" ( The Hand of God) என்ற புகழ்ப் பெற்ற மரடோனாவைப்பற்றிய பாடலை, மரடோனாவே தன் சொந்தக்குரலில் பாடினால்.....




அதன் ஒரிஜினல்.....

##################################################################################
##################################################################################
தற்போது சண்டையை விலக்கும் மரடோனா, அந்தக்காலத்தில் ஒரு டெரர் .... !


Maradona Fight - Watch more funny videos here

##############################################################################################

அர்ஜண்டீனா கால்பந்து அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டவுடன் அளித்த சூடான பேட்டி.....


Diego Maradona V The Press | Sucking | Argentina World Cup Press Conference from WhatEverTrevor.co.uk on Vimeo.

##############################################################################################


##############################################################################################
Maradona - Legends of Football **********************************************************************************************
Maradona by Kusturica ************************************************************************************************ Diego Maradona