புதன், 7 ஜூலை, 2010

தொலைந்துப்போன தொடர்புகள்....

ஐடா!
அவள் பெயர் 'ஐடா'!  47 மில்லியன் ஆண்டுகளுக்கு முன், தற்போதைய ஜெர்மெனி நாட்டின் ஒருப் பகுதியில் இருந்த எரிமலைக் குழம்பு ஏரியில் விழுந்தபோது, தற்போது ஐடா என்று பெயரிடப்பட்ட  அந்த சிறிய ஜந்து... தனது போட்டோ உலகம் முழுதும் பாட புத்தகங்களின் பக்கங்களில் அச்சடிக்கப்படும் என்றோ, பிபிசி தொலைக்காட்சி, ஒரு மணி நேரத்திற்கும் மேலான ஒரு சிறந்த ஆவணப்படத்தை, சர். டேவிட் அட்டன்பரோவின் வர்ணனையோடு ஒளிபரப்பும் என்றோ.... அதையே இந்த பிரபஞ்சப்ரியன் தன் வலைப்பூவில் தன் நண்பர்களிடம் பகிர்ந்துக் கொள்ளுவான் என்றோ, நிச்சயம்  நினைத்திருக்காது! 






இந்த ஐடா, 1983 ஆம் வருடம், ஜெர்மெனியின் மெசெல் கிராமத்தின் அருகே இருந்த குவாரியில் கண்டெடுக்கப்பட்டது. சார்ல்ஸ் டார்வினையும், அது கண்டெடுக்கப்பட்ட மெசெல் கிராமத்தையும் கவுரவிக்கும் பொருட்டு அதற்கு 'டார்வினியஸ் மாசில்லே' [ Darwinius  masillae ]என்ற உயிரியல் பெயர் வைக்கப்பட்டது. செல்லப்பெயர் ஐடா! மொத்தமே 58 செமி (23 in) நீளமுள்ள ஐடா, ஒரு இளம்  பெண்! (young female ஐ வேறு எப்படி எழுதுவது?!) அதன் பெரிய  பாதமும், விரல்களும், நகங்களும் அது ஒரு 'ப்ரைமேட்' [primate] எனப்படும் குரங்கு இனத்தை சார்ந்த உயிரினம் என உறுதிப் படுத்துகின்றனர் அறிவியல் வல்லுனர்கள். இந்தப் படிமம், எலும்புகள் மாத்திரமல்லாமல், அதன் குடல் மற்றும் முழு உடலையும் அறிந்துக்கொள்ளும் விதமாக கிடைத்துள்ளது. அதன் படிப் பார்த்தால்... ஐடா ஒரு சைவம்! சாவதற்கு முன்னே பழங்களையும், கொட்டைகளையும், இலைகளையும்  சாப்பிட்டிருக்கிறாள். அப்போது அவளின் வயது சுமார் ஒன்பது மாதங்கள். ஏறக்குறைய இப்போது மடகஸ்கார் தீவுகளில் வாழும் 'லெமூர்' [Lemur] வகைக் குரங்குகளை ஒத்த உருவம் கொண்டிருக்கும் என்று நம்பப்படுகிறது.

 " இந்த சிறிய பிராணியின் படிமம், நமக்கும் ஏனைய பாலூட்டி உயிரினங்களுக்கும் உள்ள தொடர்பை தெளிவாக காண்பிக்கபபோகிறது!" என்று கூறுகிறார் இந்தக் காணொளியின் வர்ணனையாளர் அட்டன்பரோ. ஐடாவை கண்டுபிடித்து ஆராய்ச்சி செய்த ஒஸ்லோ பல்கலைக்கழகத்தின், இயற்கை அருங்காட்சியகத்தின் ஆராய்ச்சியாளரான ஜோர்ன் ஹரால்ட் ஹுரும், கூறுகிறார், "  இந்தப் படிமம் நமக்கு இதுவரை மறைந்திருந்த பரிணாம சங்கிலியின் ஒருப் பகுதியை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. இதுவரை நமக்கு கிடைத்துள்ள படிமங்களிலேயே, ஐடாவைப் போல முழுமையான, விவரம் நிறைந்த சாட்சி இதுவரை கிடைத்ததில்லை ! " 

இதைப்பற்றிய விவரங்கள் 'அறிவியல் போது நூலகம் ' எனப்படும் ' PLoS ONE [Public Library of Science] '   இணையத்தளத்தில் 19, மே, 2009 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதுமட்டுமல்லாமல் காலின் டுட்ஜ் [Colin Tudg] தன் புத்தகமான 'The Link: Uncovering Our Earliest Ancestor' இல் விளக்கமாக எழுதியுள்ளார். 
ஆனால் இப்போது நாம் காணப்போவது பிபிசி நிறுவனமும், அட்லாண்டிக் ப்ரொடக்ஷன் நிறுவனமும் இணைந்துத் தயாரித்து, பல்வேறு விருதுகள் பெற்ற இயக்குனரான அந்தோணி கிப்பன் [Anthony Giffen] இயக்கத்தில் கடந்த மே மாதம் 26 ஆம் தேதி ஒளிப்பரப்பப்பட்ட 'Uncovering Our Earliest Ancestor: The Link' எனும் சிறப்பான அறிவியல் காணொளியைத்தான். 

இன்னும் விவரம் வேண்டுவோர் இங்கே செல்லவும்.

சரி நண்பர்களே... காணொளியைக் காணுங்கள்....சொல்வதற்கு நியாயமான கருத்துக்கள் இருந்தால் கூறுங்கள். நன்றி. 


இது Flash Video....


உங்களிடம் DivX Web Player இருந்தால் நலம்.
இல்லாவிட்டால் இங்கே செல்லவும். Upgrade  செய்யவேண்டாம். Old Version னே இருக்கட்டும்.


The Link - Uncovering Our Earliest Ancestor (2009) from anon on Veehd.

அல்லது .....

8 கருத்துகள்:

தருமி சொன்னது…

படம் பார்த்து (அதுக்குத்தான் காலங்காலமா காத்திருக்க வேண்டியதிருக்கு!) கதை கேட்கிறேன்.

நன்றி

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்!

தருமி சொன்னது…

ஒழுங்கா buffer ஆகிப் பார்க்க முடியலையே. இப்போகூட
'ஆண்' செய்துவிட்டு அரை மணி கழித்துப் பார்த்தால் இரண்டு சீன் மட்டும்தான் தெரியுது.

:(((

தருமி சொன்னது…

மன்னிக்கணும். பார்க்க முடியவில்லை. தொடராக பார்க்கணும்னா என்ன வழி?

தருமி சொன்னது…

அடடே ... சுத்தமான தென் தமிழ்நாட்டில் - மதுரையில் - 'குந்த்திக்கிணு' இருக்கேன்.

Sukumar சொன்னது…

லவ்லி.. தகவலுக்கு நன்றி..

DR சொன்னது…

புதுசு புதுசா என்னென்னமோ சொல்றீங்க... மொத்தத்தையும் பாத்திட்டு வந்து பின்னூட்டுறேன்...

வால்பையன் சொன்னது…

டிஸ்கவரியில் பார்த்தேன் தல!

எனகென்னமோ படைப்புவாத கொள்கையில் நம்பிக்கையுடய மதவாதிகள், இம்மாதிரி கண்டுபிடிப்புகளை வெளிகொணர தடையாக இருப்பது போல் தெரிகிறது!

இந்த ஆராய்ச்சியாவது முழுமையடய வேண்டும்!