செவ்வாய், 13 ஜூலை, 2010

டார்வின் எனும் குடும்பஸ்தன் ![Updated]



சார்லஸ் டார்வின் ... ! இந்தப் பேரைக்கேட்டாலே அல்லது படித்தாலே,உலகம் இருவேறுக் கூறுகளாகப் பிரிந்துவிடும். பரிணாமக் கொள்கையை நம்புகிறவர்கள், அதை நம்மபாதவர்கள், கடவுள் உலகையும் உயிரினங்களையும் படைத்தான் என்றும், கடவுள் என்று ஒன்று இல்லை என்றும் இருவேறுப் பிரிவுகளாக பிரிந்துவிடுவதைப் பார்க்கலாம். நாம் இதில் ஏதாவது ஒருப் பிரிவைச் சார்ந்தவர்களாகவோ, அல்லது மதில் மேல் பூனையாகவோ கண்டிப்பாக இருப்போம்.அது அவரவர்களின் பின்னணியையோ, புரிதலையோப் பொறுத்தது. டார்வினின் பரிணாமக்கொள்கை, அது வெளியிடப்பட்ட நாள் முதலே ஒரு விவாதத்துக்குரிய கருத்தாகவே இருந்து வந்திருக்கிறது, இன்றும் காரசாரமாக விவாதிக்கப்படுகிறது. எல்லா விவாதங்களும் கடைசியாக கடவுள் என்று ஒன்று உண்டா இல்லையா என்ற வாதத்தில் வந்து முடிகிறது. 

ஆனால், பாவம் டார்வின் தன் ஆராய்ச்சிகளை தொடங்கியது, கடவுள் என்ற கருத்தை ஒழிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் அல்ல!. அவர் பாட்டுக்கு அவர் தன் வேலையை அதன் வழியிலே  செய்துக்கொண்டேப் போனார். கடைசியாக கடவுள் என்ற கருத்து தானாகவே இதில் வந்து சிக்கிக் கொள்ளுகிறது! அதனால் டார்வினையும், அவரின் கொள்கையான பரிணாமக்கொள்கையை ஆதரித்துப் பேசுபவர்களையும், பலர் ஒரு எதிரியாகவேப் பாவிக்கின்றனர். இப்போது நாம் காணப்போவது மேற்கூறிய எதைப்பற்றியும் அல்ல! டார்வின் எனும் அன்பான குடும்பத்தலைவனைப் பற்றியது! 'தகுதியானவைப் பிழைக்கும் ' எனும் தத்துவத்தை உலகுக்குக் காட்டிய ஒரு தனிமனிதனின் வாழ்வில் அனுபவித்த,சுக, துக்கப் போராட்டங்களைப் பார்ப்போமா?
இப்போது அவர் வாழ்விலிருந்து சில துளிகள்.....
  • டார்வினுக்கும், ஆப்ரகாம் லிங்கனுக்கும் பிறந்ததினம் ஒன்றே! 12.02.1809.
  • சார்லஸ் டார்வினின் தாத்தா, எராமஸ் டார்வின், ஒரு பிரபல பதிவர்,சாரி ... மருத்துவர். எராமஸ்இன் மனைவியான, சார்லசின் பாட்டி மேரி, பெரிய 'சரக்குக்கை'. பெருக்குடியினால் ஈரல் பாதிக்கப்பட்ட அவருக்கு சொந்தக் கணவனால் அளவுக்கதிகமான ஒப்பியம் கொடுக்கப்பட்டு, தம் முப்பதாவது வயதிலேயே இறந்துப்போனார். சார்லசின் தாவழி மாமன் தாமஸ், அதிக அளவு போதைப் பழக்கத்தால் உயிரிழந்தார். இந்த துர்மரணங்களால் மனமொடிந்த எராமசின் தலைப்பிள்ளையான எராமஸ் II, தற்கொலை செய்துக்கொண்டு இறந்துப்போனார்! இப்படி சார்லஸ் பிரக்கும்முன்னரே அவரின் செல்வந்தக்குடும்பம், பல்வேறு துயரங்களால் அலைக்கழிக்கப்பட்டது. 
  • சார்லசின் தந்தையான ராபர்ட் டாவினும் ஒரு மருத்துவர். அதுமட்டுமல்லாமல் அவர் ஒரு 'கருணையில்லா' பைனான்ஸ் பார்ட்டி என்றும் கூறப்படுகிறது. அவரின் உயரம் ஆறடி இரண்டங்குலம். அவரின் எடை முன்னூற்று முப்பத்தாறு பவுண்டுகள். அதாவது 152.41 கிலோ! அவர் ஏதாவது நோயாளியை பார்க்கச்சென்றால், அவரின் வண்டிக்காரர், அவருக்கு முன்னே அந்த வீட்டற்கு சென்று, அவரின் பளுவைத் தாங்குமா என்று பார்த்து உறுதி செய்தப் பிறகே செல்வாராம்!
  • இளம்பெண்கள் விஷயத்தில் சபலக்காரரான ராபர்ட், அவரின் மனைவியும் சார்லசின் தாயுமான சூசன்னா டார்வினை முரட்டுத்தனமாக கொடுமைப்படுத்துவாராம். சார்லசின் பாட்டியைப்போலவே, சூசன்னவும் மர்மமான முறையிலேயே மரணமடைந்தார். அப்பது சார்லசுக்கு வயது எட்டு!
  • என்னதான் ராபர்ட் ஒரு கொடூர குணம் படைத்தவராக தோன்றினாலும், தன் பிள்ளைகளை நன்றாக படிக்க ஊக்குவித்தார்.
  •  சார்லஸ் தன் பள்ளிநாட்களில், யாரிடமும் சண்டைப்போட விரும்பாத, சோம்பேறித்தனமான, சுற்றியுள்ள இயற்கையை விரும்பும் ஒரு 'அழகு குண்டுப்பையன்!'
  • இங்கிலாந்தின் ஷ்ரெவ்பரி நகரின் பள்ளியில் அவர்  அப்படியொன்றும் பிரமாதமான மாணவராக திகழவில்லை. ஆனால் தன் வீட்டை சுற்றி இருக்கும் பூச்சிகள், பறவைகள், விலங்குகள் போன்றவற்றில் மிகவும் விருப்பமாக  கவனம் செலுத்தினார்.
  •  அவருக்கு பள்ளியில் மொழிப் பாடமும், கணிதத்தில் அல்ஜீப்ராவும் அலர்ஜியாக இருந்தது.
  • அவரை மருத்துவம் படிக்க எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் சேர்த்தனர். அதுவும் அவருக்குப் பயன்தரவில்லை. ரத்தத்தைப் பார்த்தாலே மயக்கம் கொள்ளும் மனிதர் எங்கே மருத்துவம் படிப்பது?!  துப்பாக்கியும் கையுமாக அலைந்து, மிருகங்களையும், பறவைகளையும் இரத்தக்களரியில்பார்க்கும், வேட்டையாடுதலில் விருப்பமுள்ள ஒரு மனிதருக்கு நேர்ந்த நிலைமையைப் பார்த்தீர்களா?
  • மருத்துவப்படிப்பு வேலைக்காகவில்லை என்பதால் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தனக்கு விருப்பமான கிறித்துவ சமயம் சார்ந்த படிப்பை மேற்கொண்டு பட்டமும் பெற்றுவிட்டார். அப்போது அங்கே அவருக்கு ஆசிரியராய் இருந்த ஜான் ஸ்டீவன்ஸ் எனும் தாவரவியலாளரின் நட்பினால் அவருக்கு பீகில் எனும் கப்பலில், தம் வாழ்வையே திசைத்ருப்பிய கடற்பயணத்தில், ஒரு இயற்கை அறிவியலாளராக செல்ல நேர்ந்தது.
  • இதில் என்ன சுவாரசியம் என்றால், அந்தக் கப்பலில் ஏறும் முன் அவருக்கும் விஞ்ஞானத்திற்கும் வெகுதூரம். அவர் ஒரு முழுக்க முழுக்க வேதம் படித்த இறை விரும்பியாகத்தான் கிளம்பினார். அவரின் அந்தப் பயணம், கடவுளுக்கே கேள்விக்குறி வைக்கும் பயணமாக  அமையப்போகிறது என்று கனவிலும் கண்டிருக்கமாட்டார்! அப்படித் தெரிந்திருந்தால் நிச்சயமாக அந்தப்பயணத்தை  மேற்கொண்டிருக்க மாட்டார் என்றே நான் நினைக்கிறேன். நீங்க....?
  • இன்னொரு சமாச்சாரம் என்னவென்றால் முதலில் அவருக்கு கடற்பயணம்  ஒத்துக்கொள்ளவில்லையாம்!
  • அவர் தென் அமெரிக்காவின் கடைக்கோடியில் இருக்கும் அர்ஜண்டீனா நாட்டில் இறங்கியப்போது,(1833) அங்கு குடியேறிய ஸ்பானியர்கள், ஜெனரல். ஜவான் மேனுவேல் டெ ரோஸ்என்பவரின் தலைமையில், அந்த நாட்டின் பூர்வாங்க குடிமக்களான இந்தியர்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்துக்கொண்டிருந்தனர். அப்பது அந்த ஜெனரலின் விருந்தினராக டார்வின் அங்கு தங்கி  இருந்து அந்தக் கொடுமைகளை நேரேடியாகக்கண்டார். அதைப்பற்றி எழுதும்போது 'எல்லாம் நன்மைக்கே' என்ற தொனியில் எழுதிருந்தது வருந்தத்தக்கது. "Less Indians => more cattle => healthier Spaniards: Survival of the fittest!"
  •  ஊர்த்திரும்பியதும் எம்மா வெட்ஜ்வுட் என்ற பெண்ணை தன் சொந்தத்திலேய மணந்தார். இங்குதான் நாம் காணப்போகும் டாவினின் குடும்பவாழ்க்கையைப் பற்றிய கண்ணோட்டம் துவங்குகிறது. இவர்கள் இருவருக்கும் பத்துப் பிள்ளைகள் பிறந்தனர். அதில் இரண்டுப் பிள்ளைகள் சிறு வயதிலேயே இறந்துப் போயினர்.
  • அதில் முக்கியமானது அவரின் பத்து வயது செல்ல மகள் ஆன்னின் மரணம். அது அவரின் வாழ்கையை அசைத்துப் போட்டுவிட்டது. அதையும் அதன் பின்னணியையும் நாம் காணப்போகிறோம்
டார்வினின் குடும்பத்தில் வழிவந்த அவரின் கொள்ளுப்பேரனான ரெண்டல் கேன்ஸ் என்பவர் எழுதிய ' Annie's Box: Charles Darwin, His Daughter and Human Evolution' என்ற புத்தகத்தை தழுவி படமாக்கப்பட்ட 'Creationஎன்ற காணொளியைக் காணப்போகிறோம். மிகவும் அருமையாக மனதைத்தொடும் விதமாகப் படைக்கப்பட்டுள்ளது. ஆன்ஸ் பாக்ஸ் என்பது, டார்வினின் மனைவி எம்மா தன் மகளின் நினைவாக வைத்திருந்த டைரிக்குறிப்புகள் அடங்கிய பேட்டி. அது நீண்ட காலத்திற்குப் பின்னர் ரெண்டல் கையில் சிக்கி, அதை அவர் அரு அழகான புத்தகமாக வடித்துள்ளார்.


DivX காணொளிதான் கிடைத்துள்ளது... DivX Player இல்லாதவர்கள் இங்கே சென்று டவுன்லோட் செய்துக்கொள்ளவும். பிளேயர் ஐ அப்டேட் செய்ய வேண்டாம். [The new version of the DIVX player, which you are prompted to install, will not work with most of the videos. 
If you are repeatedly prompted to update to a newer version, right click on the divx player screen, go to preferences, and change the auto-update option to "once a month".]



இன்னொரு காணொளியும் உங்களின் பார்வைக்கு. பிபிசி வழங்கிய ' Darwin's Struggle: The Evolution of the origin of Species'  எனும் அருமையான விவரணப்படம்! 





அவரின் அரியப் புகைப்படங்களுக்கு ...

டார்வின் - ஆல் இன் ஆல் .....

7 கருத்துகள்:

வால்பையன் சொன்னது…

பகிர்விற்கு நன்றி தல!

Prasanna சொன்னது…

எழுதி இருக்கும் விதம் அருமை.. :)

Jey சொன்னது…

தொகுப்புகள் அருமை. நன்றி.

Jey சொன்னது…

தொகுப்புகள் அருமை. நன்றி.

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் சொன்னது…

வால், பிரசன்னா, & ஜெய், மற்றும் இந்த பதிவைப் படித்து, பார்த்து, வோட்டும் போட்ட அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்!

cheena (சீனா) சொன்னது…

அன்பின் எமெஸீயார்கே

பகிர்வினிற்கு நன்றி - பல கானோளிகள் - தேடிக் கண்டு பிடித்துப் பகிர்ந்தமை நன்று

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

வினோ சொன்னது…

பகிர்விற்கு நன்றி அண்ணே..