புதன், 12 அக்டோபர், 2011

இந்தியா : புலிகளின் இராட்சியம் !




[வேலைப்பளுவின் காரணமாக நீண்ட நாட்களாக பகிர்வுகளை வெளியிட
முடியாமல் போனதற்காக 'என்ன...எதுவென்று...?! ' ஒருவரும் 
கேட்ட்கவில்லைஎன்றாலும் :-) , நண்பர் ரோம் நகர் செல்வராஜிடம் நான் 
மன்னிப்புக் கேட்டே ஆகவேண்டும்! நண்பரே... நலமா?]

இந்தமுறை பகிரப்போவது 2002 இல் வெளிவந்த, 'இந்தியா : புலிகளின் 
இராட்சியம் !' (India: The Kingdom of Tigers!) என்ற ஆவணப்படம். சும்மா 
கேட்டாலே அதிரும்படியானத் தலைப்பு இல்லே ....! நானாக வைக்கவில்லை,
தானாக அமைந்துள்ளது!





ஜிம் கார்பெட் ! இந்தியப் புலிகளுக்கு வேலியாக மாறிய வேட்டைக்காரன்! 
அவர் எழுதிய ' Man-Eaters of Kumaon' என்ற புத்தகத்தை அடிப்படையாகக் 
கொண்டு படைக்கப்பட்ட ஒரு அருமையான காணொளி. அவர் பிறந்து 
வளர்ந்த இமய மலைச்சாரலில் உள்ள குமாவுன் பளைப் பிரதேசங்களில் 1900 
முதல் 1930 வரை வாழ்ந்த மனிதர்களை கொன்று தின்ற புலிகளையும் 
சிறுத்தைகளையும் வேட்டையாடிக் கொன்ற அவரின் அனுபவங்களைப் 
பற்றிய புத்தகம். இந்தப் புத்தகத்தில் புலிகளைப் பற்றி மட்டுமல்லாமல், 

அந்தக்கால இந்தய வாழிக்கை முறையைப் பற்றியும், இந்திய 
கிராமங்களைப்பற்றியும் அழகாக எடுத்துக் கூறியுள்ளார். நாம் காணப்போகும் 
இந்த காணொளியிலும் இவைகள் எல்லாம் அருமையாகத் 
தெளிக்கப்பட்டுள்ளது.      

அவரைப்பற்றி மேலும் படிக்க சில சுவாரசியமான பக்ககங்கள்... இங்கே 

1936 ஆண்டு ஜிம் கார்பெட் முயற்ச்சியால் தொடங்கப்பட்ட இந்தியாவின் 
முதல் தேசியப்பூங்காவான ஹெய்லி தேசியப்பூங்கா, பின்பு ராம்கங்கா 
தேசியப்பூங்கா என்று பெயர்மாறி, கடைசியாக 1957 இல் ஜிம் கார்பெட் 
தேசியப்பூங்கா என்று அழைக்கப்பட்டு அவருக்கு கவுரவம் செய்யப்பட்டது.

இந்தப் படத்தை இயக்கியவர் Bruce Neibaur. இசை அமைத்தவர் Michael Brook

இந்தப் படத்திற்கான இசையைக் கேட்க அவரின் இசைத்தளத்திற்கு 
செல்லவும்.
IMAX இல் இவர்கள் அளித்துள்ள இந்தப் படைப்பு என்னைக் கவர்ந்ததுப்போல உங்களையும்  கவரும் என்பதில் ஐயமில்லை!


விடியோவை  720p HD செலக்ட் செய்துக்கொண்டு பார்க்கவும்.....
மீண்டும் சந்திப்போம்....


ஞாயிறு, 9 அக்டோபர், 2011

'ஆறு டிகிரி போதும்...!'


கீழ்வரும் முதல் எட்டுப் படங்களின் பின்னணியை மட்டும் கூர்ந்துப்  பார்த்து, இடங்களைக் கண்டுப்பிடிக்கவும்... தயவு செய்து அதில் உள்ள ஆட்களை கண்டுக்கொள்ள வேண்டாம்.





















மேலேயுள்ளப் படங்களும், கீழே நாம் பார்க்கப்போகும் காணொளியும் நிறைய எழுதுவதற்கு வேலையில்லாமல் செய்துவிட்டன!
சென்ற வாரம் நான் பார்த்த, நேஷனல் ஜியாகரப்பியின் "Six Degrees Could Change the World” என்ற உலக வெம்மைப் பற்றிய அருமையான காணொளியை உங்களுடன் பகிந்துக்கொள்ள விரும்புகிறேன். 'ஆறு டிகிரி போதும்...!', இந்த உலகை மாற்ற.... எப்படி...? நன்றாகவா...? அதுதான் இல்லை. நாசமாக்க! உலக வ்வேப்ப நிலையில் ஒரு டிகிரி ஏற்றம் கூட மோசமான விளைவுகளை ஏற்ப்படுத்தும். இதில் ஆறு டிகிரி எனபது, உலகின் வாழ்வியலையே தலைக்கீழாக மாறக்கூடிய விளைவை ஏற்ப்படுத்தும். இன்னும் முப்பது வருடங்களில் மோசமாகவும், நூறு வருடங்களில் 11 டிகிரிகள் உயரக்கூடிய அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் அச்சப்படுகின்றனர்! 

மார்க் லைனாஸ் (Mark Lynas) எழுதிய 'Six Degrees: Our Future on a Hotter Planet ' என்ற புத்தகத்தை அடிப்படையாகக்கொண்டு, ஹாலிவூட் நடிகர் ' அலெக் பால்ட்வின்' (Alec Baldwin) அவர்களின் வர்ணனையோடு, அட்டகாசமான கிராபிக்ஸ் காட்சிகளுடன், உலக வெம்மையின் பாதிப்புகளை, நம் கண்முன்னே கொணருகிறது இந்தப் படம். இந்தப் படம் நமக்கு ஒரு எச்சரிக்கைப் பாடமாக இருக்கும் எனபது நிச்சயம்!

Mark Lynas

 Alec Baldwin


வாங்கப் படம் பார்க்கலாம்......

திங்கள், 3 அக்டோபர், 2011

சாப்பாடு தயார்....



மனம் நெகிழ வைக்கும் அருமையான குறும்படம்.... 

"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது."

திரு மு.வரதராசனார் உரை
இல்வாழ்க்கையின் அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழக்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.

திரு மு.கருணாநிதி உரை
இல்வாழ்க்கை பண்புடையதாகவும் பயனுடையதாகவும் விளங்குவதற்கு அன்பான உள்ளமும் அதையொட்டிய நல்ல செயல்களும் தேவை.

திரு சாலமன் பாப்பையா உரை
மனைவி பிள்ளைகளிடத்தில் அன்பும், தேடிய பொருளை நட்பு சுற்றங்களுடன் பகிர்ந்து கொள்ளும் அறமும் இருந்தால் இல்வாழ்க்கையின் பண்பும் அதுவே; பயனும் அதுவே.


வாழ்த்துக்கள்!, இயக்குனர். திருமதி.நிதுனா நெவில் தினேஷ்.[Mrs.Nithuna Nevil Dinesh]

['இந்தக் காணொளியைப் பார்த்துவிட்டு ஒரு சொட்டுக் கண்ணீர் விடாதவன்


 மனுஷனேயில்லை' என்று எழுதலாம் என்று இருந்தேன்... அடடா 


எழுதிவிட்டேனே...! உண்மைதானா  நண்பர்களே....?! நீங்களே சொல்லுங்கள்.....]  




ஆப்ரிக்கப் பூனைகள்! [video]



நான் இதுவரைப் பார்த்த விலங்குகள் சம்பந்தமான ஆவணப்படங்களிலேயே என்னை மிகவும் கவர்ந்த காணொளி என்று, இந்த 'African Cats' என்ற இந்தப்படத்தைக் கருதுவேன். சாதாரண விவரணப் படம் போலில்லாமல், நம்மையெல்லாம் காட்சிகளோடு ஒன்றிப்போகவைக்கும் மூன்றுக் கதைகளைக் கொண்டுள்ளது! மனதை நெகிழவைக்கும், தாய் விலங்குகளின், குட்டிகளின் மீதான அன்பைக் காணும்போது நம்மையறியாமல் நம் கண்கள் ஈரமாவதை உணர்வோம். அதற்காக வெறும் அழுகாச்சிப்  படம் என்று நினைக்க வேண்டாம்...அட்டகாசமான ஆக்க்ஷன் காட்ச்களும் உண்டு! வால்ட் டிஸ்னி உருவாக்கியுள்ள இந்தப்படம், அவர்களின் முந்தைய பாக்ஸ் ஆபீஸ் ஹிட் கார்டூன்  படமான 'Lion King' கையே, இந்த நிஜ சிங்கப்படம்  தூக்கிச் சாப்பிட்டுவிட்டது என்றேக் கூறலாம்!









ஆப்ரிக்காவில் சவனாக்கள் எனப்படும் புல்வெளிகளின் வசிக்கும் இரண்டு சிங்கக் கூட்டங்கள் மற்றும் ஒரு சிறுத்தைத் தாய், அதன் குட்டிகளை சுற்றிச் சுழலும் இந்தப் படத்தில் உள்ள அனைத்து மிருகங்களும், ஏதோ 'ஆக்க்ஷன் - கட்' சொன்னதுப்போல் படமாக்கப்பட்டிருக்கும் விதம் பிரமிக்கவைக்கிறது. அதிலும் கேமராக் கோணங்கள் ... அடடா...! கண்களில் ஒத்திக்கொள்ளவேண்டும் போல இருக்கிறது! அதிலும் சிறுத்தைதாய் அதன் சில குட்டிகளைப் பறிக்கொடுத்துவிட்டு, அந்த மாலை வேளையிலே ... அந்த மண்மேட்டின் மீது அமர்ந்திருக்கும் காட்சி... சான்சே இல்லை! இந்தப் படத்தில் யானைகள், ஓநாய்கள்,ஒட்டகச்சிவிங்கிகள், காட்டெருமைகள், போன்றவைகள் வந்தாலும் சிங்கங்களும் சிருத்தைகளும்தான் கதாநாயகர்கள்.

போதாக்குறைக்கு வர்ணனை வழங்குவது சாமுவேல் எல் ஜாக்சன்! (Samuel l. Jackson). 








நடிப்பில் தூள் கிளப்பிய இவர், வர்ணனையிலும் கலக்கியுள்ளார்!


என்னைக்  கவர்ந்த இந்தக் காணொளி, உங்களையும் கவரும் எனபது நிச்சயம்!  


படத்தின் ட்ரைலர் ...







ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

பரிணாமம் - [Nova's Evolution]








தொடர்புடைய பழைய பகிர்வுகள்....
சார்ல்ஸ் டார்வினும் உயிரின மரமும்... 


தொலைந்துப்போன தொடர்புகள்....


டார்வின் எனும் குடும்பஸ்தன் !


அறிவியலின் கதை[5] : உயிரின் ரகசியம்...



இந்த உலகில் யார் வாழ்வது, யார் இறப்பது,யார் தங்களின் குணாதிசயங்களை அடுத்தத் தலைமுறைக்கு பரிமாறுவது என்பதை பரிணாமமேத்  தீர்மானிக்கிறது. ஆனாலும் இந்தக் கொள்கையே பலராலும் கவனிக்கப்படாததும், புறந்தள்ளப்படுவதும், சரியாகப் புரிந்துக்கொள்ளப்படாததுமாததாக இருக்கிறது.

இந்த 'நோவா' வின் 'பரிணாமம்'[Nova's Evolution'] என்ற தொடர்க் காணொளி நம்மை உலகம் முழுவதும் அழைத்துச் சென்று பரிணாம அறிவியலை பரிசோதித்து, அதன் ஆழ்ந்த தாக்கம் நம் சமுதாயத்தின் மேலும் பண்பாட்டின் எவ்வாறு உள்ளது என்பதை விளக்கப்போகிறது. சார்லஸ் டார்வினின் மேதமையிலும், வேதனையிலும் தொடக்கி, அந்த அறிவியல் புரட்சி எவ்வாறு உயிரின மரத்தை உருவாக்கியத்து என்றும், பாலுணர்வின் ஆற்றல் எவ்வாறு பரிணாம வளர்ச்சியை உந்தித்தள்ளியது என்றும், எப்படி மொத்த இன அழிவுகள் புதிய உயிரினங்களின் தோற்றத்திற்கு வழிவகுத்தது என்பதையும் அழகாகக் காட்டியுள்ளது.   
அதுமட்டுமல்லாது மனிதனின் தோற்றம், அவனது சவால்களும் வெற்றியும், அற்றும் அறிவியலுக்கும் மதத்துக்கும் நடுவே மூண்ட போராட்டத்தைப் பற்றியும் கூறுகிறது. 

இந்தத் தொடரின் நோக்கமே பரிணாமத்தைப் புரிந்துக்கொள்ளவும் அது எப்படி நடைப்பெறுகிறது மற்றும் அது எவ்வாறு நமது வாழ்க்கைக்கு சம்மந்தப்பட்டுள்ளது என்பதை விளக்குவதுமே. அதில் அவர்கள் வெற்றிப் பெற்றுள்ளார்கள்  என்றேக்கூறவேண்டும். மொத்தத்தில் அறிவை வளைக்கும் அருமையானத் தொடர்க் காணொளிகள்! . வாங்கப் பார்க்கலாம்.....!



1.Darwins Dangerous Idea - டார்வினின் அபாயகரமான ஐடியா!


சார்லஸ் டார்வின், தன் பரிணாமக் கொள்கையை, சில நண்பர்களைத்தவிர இருபத்தியொரு வருடங்களாக ரகசியமாக வைத்திருந்தார். ஒருமுறை அதைப்பற்றிக் கூறும்போது ' ஒரு கொலையை ஒப்புக்கொள்ளுவது போல உள்ளது' என்றார். அவரின் மனவேதனை இன்றும் நம் சமுதாயத்தில் ஒலித்துக்கொண்டு இருக்கிறது! இந்தக் கானொளியில் அவரின் வாழ்வில் நடந்த மிக முக்கியமான நிகழ்வுகளையும், அவரின் வாழ்வுக்காலத்தைவிட தற்காலத்தில், பரிணாமக் கொள்கை ஏன் முக்கியமானதாகப்படுகிறது என்பதையும், இந்த பூமியிலுள்ள உயிரினங்களின் கடந்தக்காலத்தையும், எதிர்க்காலத்தையும் கணிக்க அறிவியலுக்கு ஒரு முக்கியக் கருவியாக உள்ளது என்பதையும் பார்க்கலாம்.  








====================================
Extinction! இனப்பெரழிவு

பூமியில் இதுவரை ஐந்து முறை இனப்பெரழிவு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் பூவுலகின் மீது வாழ்ந்த 99.9 சதவிகித உயிரினங்கள் தற்போது அழிந்து விட்டதாகவும் கருதப்படுகிறது! அடித்த ஆறாவது அழிவுக்கு நாம்தான் ஏற்பாடு செய்துக்கொண்டு இருக்கிறோமா?  


====================================


The Evolutionary Arms Race - Survival of the fittest.  (தகவுடையது தப்பிப் பிழைக்கும்!)


வலியது வாழும் (அ) தகவுடையது வாழும்[நன்றி-கையேடு இரஞ்சித்] (அ) தகவுடையது தப்பிப் பிழைக்கும்! இது ஒரு ஈவிரக்கமில்லாத போட்டியா...? அல்லது தீவிர ஒத்துழைப்பா...? இரண்டுமே சரிஎன்றுச் சொல்லலாம்! இனங்களுக்கு இடையே உள்ள இந்த இடைவினை மற்றும் பரிமாற்றம், பரிணாம அறிவியலில் உள்ள மிகப்பெரிய உந்துதல் சக்தியாகும். இதைப் புரிந்துக்கொள்வதே நம்முடைய வாழ்வாதாரமாகும்!


====================================

Why Sex?- பாலியல் உறவு எதற்காக?

பாலியல் உறவு அல்லாது பாலுணர்வு, பரிணாம அறிவியலில் உயிரைவிட முக்கியமானது! அதுவே மரபணுக்களில் வித்தியாசங்களை ஏற்ப்படுத்தி பரிணாமம் தன மேற்ப்படிகளில் ஏற எரிப்பொருளாக விளங்குகிறது.




The Minds Big Bang - மனதின் பெருவெடிப்பு!

ஐம்பதாயிரம் வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்வு! தற்கால நவநாகரீக மனித மனம் அன்று ஏற்பட்ட ஆக்கப்பூர்வமான தொழில்நுட்பப மற்றும் சமூக  எழுச்சியாலேயாகும்! 




==================================

What About God? - அப்படீன்னா கடவுள்...?

இருக்கிற எல்லா உயிரினங்களிலும் மனிதன் மட்டுமே தன பூர்வீகத்தைப்பற்றி அரைத்துக்கொண்டு இருக்கிறான். இந்தக் கடைசி காணொளி மதத்துக்கும் அறிவியலுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தைப் பற்றிக் காண்பிக்கிறது!


திங்கள், 19 செப்டம்பர், 2011

நதிகள்: நட்பா... பகையா...?



நதிகள் நமக்கு எல்லாம் கொடுக்கின்றன.... சிலசமயங்களில் நம்மிடமிருந்து எல்லாவற்றையும் பறித்துக் கொள்கின்றன...! குடிநீர்,உணவு, போக்குவரத்து போன்றவற்றை அளிக்கும் இவைகள் மனிதனின் நண்பர்களா...பகைவர்களா...? பிபிசி யின் 'Planet Earth' வழங்கிய 'Rivers - Friend or Foe...?' என்றக் காணொளி பதில் தருகிறது.



இந்தக் காணொளி நம்மை உலகெங்கும் அழைத்துச்சென்று, மனிதனுக்கும் நதிகளுக்கும் உள்ள பிரிக்கமுடியாத, சிலசமயங்களில் சவாலான உறவை படம்பிடித்துக் காட்டுகிறது. திபெத்தில் கடுங்குளிரில் உறைந்துப்போன நதியின் மேலே, நூறு கிலோமீடர்களுக்கப்பால் உள்ள பள்ளிக்கூடத்துக்கு, ஆறு நாட்கள் பயணமாக, பல ஆபத்துக்களைக் கடந்து செல்லும் காட்சி நம்மையெல்லாம் நிச்சயமாக சிலிர்க்கவைக்கும்! [நம்ம ஊரில், வீட்டு வாசப்படியில் உள்ள பள்ளிக்குச் செல்லாமல்,'கட்டடித்து',  ஊர் சுற்றித்திரியும் ஒருசில பசங்களுக்கு காண்பிக்கவேண்டும் இந்தக் காட்சிகளை!] இதுமட்டுமல்லாமல் கம்போடியாவில் ஆர்பரித்து ஓடும் நதியின் மேல் அபாயகரமாக நடந்து, உணவுக்காக சில மீன்களை பிடிக்க, உயிரைப் பணயம் வைத்து வாழ்கை நடத்துவதும், ஆப்ரிக்கக் கண்டத்தின் உயர்ந்த விக்டோரியா நீர்வீழ்ச்சியின் விளிம்பில் நின்று மீன்பிடிக்கும் மனிதர்களைக் காணும்போதும் நமக்கே தலைச் சுற்றல் ஏற்படும்! தென் அமெரிக்காவின் அமேசான் நதிதீரத்தில், வெள்ளக் காலங்களுக்குமுன், அதை சமாளிக்க மக்கள் செய்யும் முன்னேற்ப்பாடுகள் நம்மை வியக்கவைக்கும்! கென்யாவில் மழைப் பற்றாக்குறையால் வரண்டுப்போன நதியால், தண்ணீருக்காய் மக்கள் அலையும் மக்களைக் காணும்போது, தண்ணீரை வீணாக்கும் நம்மில் சிலரை குற்ற உணர்சிக்கொள்ளச்செய்யும்! நம்ம(?!) மேகாலயாவின் மக்கள் எப்படி இயற்கையோடு சேர்ந்து,உயிருள்ள பாலத்தை,பலத் தலைமுறைகளுக்கும் உதவுமாறு நிர்மாணிக்கிறார்கள் என்பதைக் காணும்போது மனமுவந்து பாராட்டத் தோன்றும்!


இப்படி இந்த காணொளி நமக்கு ஒரு அருமையான அனுபவமாக இருக்கும் எனபது நிச்சயம். வாங்கப் பார்க்கலாம்.....   

Human Planet (07) Rivers - Friend and Foe by luisroybean

ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

ஸ்டீபன் ஹாக்கிங், கார்ல் சேகன், ஆர்தர் சி. கிளார்க் - ஒரு அறிவியல் சங்கமம்!






பேரா.ஸ்டீபன் ஹாகிங்கைப் பற்றிய முந்தையப் பதிவுகள் ...

ஹாக்கிங்... - A Brief History of Mine

பிரபஞ்சம் ஒரு படைப்பா...? - பேரா.ஸ்டீபன் ஹாகிங்



மூன்று விஞ்ஞானப் பெருந்தலைகளின் சங்கமம்! பேரா.ஸ்டீபன் ஹாக்கிங், வானவியலாளர்.கார்ல் சேகன், விஞ்ஞான புனைக்கதை எழத்தாளர் ஆர்தர் சி க்ளார்க், இந்த மூவரும் நாம் வாழும் காலத்தில் வாழும்...வாழ்ந்த[தற்போது கார்ல் சேகன் மற்றும் ஆர்தர் சி க்ளார்க் ஆகிய இருவரும் இல்லை] அறிவியல் சிந்தனையாளர்கள். இவர்கள் மூவரையும், பிரிட்டிஷ் செய்தியாளரும், தொலைக்காட்சி தொகுப்பாளருமான மெக்னுஸ் மேக்னுசன் ஒன்றுப்படுத்தி 'God, the Universe, and Everything Else' என்ற பெயரில், ஆங்கிலத்தில் 'கலோகுயம்' (colloquium ) என்பார்களே,அதுப்போன்ற  அறிவியல் கலந்துரையாடலை ஏற்பாடு செய்து வரலாறுப் படைத்தார். இது நடந்தது 1988 இல்... மார்ஸ் ரோவரோ, ஹப்பிள்  விண்வெளித் தொலைநோக்கியோ விண்ணில் செலுத்தப்படாதக் காலம். ஆனாலும் இந்த மூன்று மேதைகளை ஒரே மேடையில் காண நமக்குக் 
கிடைத்த ஒரே வாய்ப்பு! ஆகவே இதுவரைப் பார்க்காதவர்கள் இந்த வாய்ப்பைத் 
தவறவிடவேண்டாம்!


வெள்ளி, 16 செப்டம்பர், 2011

பிரபஞ்சம் ஒரு படைப்பா...? - பேரா.ஸ்டீபன் ஹாகிங்





பேரா.ஸ்டீபன் ஹாகிங்கைப் பற்றிய முந்தையப் பதிவுகள் ...

ஹாக்கிங்... - A Brief History of Mine

டிஸ்கவரி சேனலில் 'Curiosity' என்ற வரிசையில் பல அருமையான அறிவியல் ஆவணப்படங்கள் ஒளிப்பரப்பப்பட்டன. அதிலே முதலாவதாக, பேரா.ஸ்டீபன் ஹாக்கிங் வழங்கிய 'Did God create Universe' என்ற அதிரவைக்கும் காணொளிதான் இன்றையப் பகிர்வு. மனித இனம் சிந்திக்க துவங்கியக் காலத்திலிருந்து, கேட்டப்பட்டுவரும் இந்தக் கேள்விக்கு ஹாக்கிங் தரும் விடை நம்மில் பலரை சிந்திக்கவைக்கும்...சங்கடப்படவைக்கும்...கோபப்படவைக்கும் ...!  எது எப்படி இருந்தாலும் பல விஷயங்களை பலரத்துப் பார்வையில் இருந்து தெரிந்துக் கொள்ளுவதில் தவறில்லை. ஆகவே வாங்க வீடியோவைப் பார்க்கலாம்....

[நண்பர் ரோமாபுரி செல்வராஜ்...! நலமா?] 


யு டியூபில் பார்க்க விரும்புவோர்க்கு....

திங்கள், 12 செப்டம்பர், 2011

ஹாக்கிங்... - A Brief History of Mine


பேரா.ஸ்டீபன் ஹாகிங்கைப் பற்றிய முந்தையப் பதிவு...


2004 ஆம் வருடம் BBC தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பப்பட்ட காணொளித்தான் இப்போது நாம் காணப்போகும் 'Hawking - The story of the search for the beginning of time'. 

1963, இளம் ஸ்டீபன் ஹாகிங்கின் 21 ஆம் பிறந்த நாளில் துவங்குகிறது இந்தக் கதை. எதிர்க்காலத்தில் அவரின் முதல் மனைவியாகப்போகும் ஜேன் வைல்ட் எனும் இளம் பெண்ணின் நட்பு, முதல் முதலாக அவருக்கு அந்தக் கொடிய இருப்பது கண்டுப்பிடிக்கப்படுவது, தன டாக்டரேட் படிப்பை கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படிக்கத் துவங்குவது, பெருவெடிப்புக் கொள்கைப் பற்றி தன ஆசிரியரான பிரெட் ஹாயில் அவர்களுடன் கொள்கை மோதலில் ஈடுப்படுவது, ரோஜர் பென்ரோஸின் அறிவுக் கூட்டணி போன்ற நிகழ்வுகளை சுவாரசியமாக, மனதைத்தொடும்விதமாக படமாக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் ராபர்ட் வில்சன் & அர்னோ பென்சியாஸ் என்ற பெருவெடிப்பின் பொது வெளிப்பட்ட நுண் கதிர்களை கண்டுபிடித்த விஞ்ஞானிகளின் பேட்டியின் பின்புலத்தில் பிளாஷ் பேக்காக காட்டப்படுவது மிகவும் சிறப்பு! இளம் ஸ்டீபன் ஹாகிங்காக நடித்துள்ள பெனிடிக்ட் கும்பெர்பெட்ச், அவரி மிகவும் அருமையாக சித்தரித்துள்ளார். அவர் மட்டுமல்ல, ஜேன் வைல்டாக லிசா தில்லான், ரோஜெர் பென்ரோசாக டோம் வார்டு போன்ற அனைவரும் கதாப்பாதிரங்களாகவே வாழ்ந்துள்ளனர். இந்தப் படம் அவரை நேசிக்கும் அனைவரையும் கவரும் என்பதில் சந்தேகமில்லை.



நிஜ ஜேன் வைல்ட்.


நிஜ ரோஜெர் பென்ரோஸ் 


நிஜ ராபர்ட் வில்சன் & அர்னோ பென்சியாஸ்

இனி .... ஹாக்கிங்...

ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

பிரபஞ்சத்தின் தோற்றம் - பேரா. ஸ்டீபன் ஹாக்கிங்





[இத்தாலியின் லாட்சியோ ( Lazio ) நகரிலிருந்து அடிக்கடி நம்ம தளத்திர்ற்கு வந்துப்போகும் நண்பரே, தங்களின் பெயர் என்ன? அறிமுகப்படுத்திக்கொள்ளுங்களேன்... Please...]


பேரா.ஸ்டீபன் ஹாகிங்கைப் பற்றிய முந்தையப் பதிவு...

'Origin of the Universe' என்ற ஹாக்கிங் அவர்களின் விஞ்ஞான சொற்ப்பொழிவு, 2007 ஆம் வருடம், மார்ச் 13 ஆம் தேதி, பெர்க்லி, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில், ஸல்லர்பக் [Zellerbach] அரங்கில் நிகழ்த்தப்பட்டதாகும். நம்மில் நிறையப்பேர் இதை ஏற்கனவே இந்தச் சொற்போழிவினைக் கண்டு ரசித்திருக்கலாம்.... இருந்தாலும் இதை அறியாதவர்களுக்காக இந்தப் பகிர்வு.


பேரா.ஸ்டீபன் ஹாக்கிங்கின் இந்த சொற்பொழிவைப்  படிக்க ...இங்கே ! 

பார்க்க ....

எபிரேய பல்கலைக்கழகத்தில் அதே சொற்பொழிவு...

திங்கள், 5 செப்டம்பர், 2011

அறிவியலின் கவித்துவம்.[காணொளி ]


இவர்கள் சம்பந்தப்பட்ட மற்றப் பதிவுகள்...
உலகின், தலைச்சிறந்த, பிரபல விஞ்ஞானிகளில் ஒருவர், Dr.ரிச்சர்ட்  டாக்கின்ஸ், பரிணாம உயரியல் விஞ்ஞானி, மற்றவர் Dr.நீல் டி க்ராஸ் டிசைன், வானியற்பியல் வல்லுநர்!  இந்த இருவரும் உலகறிதத அறிவியல் ஆசான்கள்! நம்ம வலைத்தளத்திற்கு ஏற்கனவே அறிமுகம் ஆனவர்கள்தான், ஆனால் தனித்தனியாக. ஆனால் இப்போது இருவரும் ஒரே மேடையில் அறிவியலின் அழகை, அவரவர் பாணியில் அலசப்போகிறார்கள்!

இந்தக் காணோளியின் பெயர் 'The poetry of Science'... 'அறிவியலின் கவித்துவம்' ...
பிரபஞ்சத்தின் தோற்றமும் அதன் அற்புதங்களைப் பற்றியும்... அறிவியல் எனபது நம்முன்னே இருக்கும் பல வாய்ப்புகளில் ஒன்றாக இல்லாமல், அது ஒன்றே நமக்கு முன்னே இருக்கும் ஒரே சத்தியமான உண்மை என்பதையும் தங்களின் நகைச்சுவைக் கலந்த உரையாடல் மூலமாக நமக்கு உணர்த்துகின்றனர்! இது நிச்சயம் நம்மையெல்லாம் கவரக்கூடிய பேச்சாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. வாங்க நாமும் கலந்துக்கொள்வோம்....