வியாழன், 10 மார்ச், 2011

மில்கிவே கேலக்ஸி - ஒரு பயணம் ![Updated]


 "நம்ம வலைப்பூவைப் பற்றி தன்னுடைய  'பொன்மாலைப் பொழுதில்' பிரத்தியேகமாக அறிமுகம் செய்து, மாபெரும் ஊக்கம் தந்த கக்கு - மாணிக்கம் அவர்களுக்கும், மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் நம் மனமார்ந்த நன்றிகள் ! "          

நாம் இருக்கும் 'Milky way Galaxy' எனப்படும் 'பால்வழி வளிமண்டலம்' பற்றிய ஒரு அட்டகாசமான காணொளியைக்  காண நேர்ந்தது. அதுதான் இன்றையப் பகிர்வு.அதற்கு முன் அதைப் பற்றிய சில தகவல்கள்....

நம்ம சூரியக் குடும்பம் இருக்கும் இந்த கேலக்ஸி, பிரபஞ்சத்தின் 100 பில்லியன் கேலக்ஸிகளில் ஒன்று. அதனுள் நம்ம சூரியனப் போல சிறியதும், மிகப்பெரியதுமாக 100 - 400 பில்லியன் நட்சத்திரங்கள் உள்ளன!

 தட்டை ஸ்ப்ரிங் போல சுருளாக இருக்கும் நம்ம கேலக்ஸி,இந்தக் கடைசியிலிருந்து, அந்தக் கடைசி வரை பயணிக்க ஒரு லட்சம் ஒளி ஆண்டுகள் ஆகும்! [ஒரு ஒளி ஆண்டு = 9,500,000,000,௦௦௦ கிலோ மீட்டர்கள்!]. 

நிலஒளியோ, செயற்கை ஒளிகளோ இல்லாத மேகமில்லாத  இரவில் நமக்குத் தெரிவது வெறும் 0.000003% பகுதித்தான்! ஒரு சூப்பர் கேமராவில் எடுக்கப்பட்டால் இதுப்போல...
இந்தப் பக்கத்திலும் சென்றுப் பார்க்கலாம்...


நம்ம கேலக்ஸியில் உள்ள நட்சத்திரங்கள், அதன் மையப் பகுதியை வினாடிக்கு  5000 கிமி வேகத்தில் சுற்றி வருகின்றன. இதே வேகத்தில் நம்ம பூமி சூரியனை சுற்றி வந்தால், மூணே நாளில் வளம் வந்து விடும்! அப்ப வருஷத்துக்கு 365 நாட்கள் இல்லை ... மூணே நாள்தான்! அடடா... இப்படி இருந்தால் நாமும் ரொம்ப வருஷம் உயிர் வாழலாம் அல்லவா?!

நம்ம கேலக்ஸியின் பக்கத்து வீடான 'அன்ரோமீடியா' எனப்படும் இன்னொரு 'ஸ்பைரல்' கேலக்ஸி [தூரம்: 2.5 மில்லியன் ஒளி ஆண்டுகள்], நம்ம கேலக்ஸியோடு மோதி விளையாடி கலவை  செய்யும்  மூடில், வினாடிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் நெருங்கிக் கொண்டு வருகிறது! அப்ப நம்ம கதி? இதைக் காண நாம் கண்டிப்பாக இருக்க மாட்டோம். ஏனென்றால் அதற்க்கு இன்னும் சில பில்லியன் ஆண்டுகள் ஆகும். ஏன்... நம்ம சூரிய பகவானே சாகும் தறுவாயில் இருப்பார் என்று கூறப்படுகிறது!
  
நம்ம கேலக்ஸியின் நடு சென்டரில் 'சூப்பர் மேசிவ் ப்ளாக் ஹோல்' (Super massive Black hole) எனப்படும் அதி பயங்கரம் இருப்பதாக கண்டுப்பிடிக்கப்பட்டு உள்ளது! அதன் அளவு 40,00,000 சூரியன்களை ஒத்தது! அவ்வளவு பெரிதாக இருந்துக்கொண்டு, கிடைத்தவைகளை எல்லாம் கபளீகரம் செய்யும் இதனால்  தற்போது நமக்கு ஆபத்து இல்லை. ஏனென்றால் இது இருப்பது 250,000,000,000,000,௦௦௦ கிலோமீட்டர்களுக்கு அப்பால்! மேலும் இந்தக் 'கருங்குழிகளைப்' பற்றி அறிய இங்கே ...   
   
என்னைக் கவர்ந்த ஒரு சிறு விடியோ இதோ.... அனால் விஷயம் ஏராளம் !" நீங்க எங்க வசிக்கிறீங்க?" என்று யாராவதுக் கேட்டால், "நான் மில்கிவே கேலக்சியில் வசிக்கிறேன் !" என்றக் கூறவேண்டிய கட்டாயம் எதிர்க்காலத்தில் ஒருநாளில் வரத்தான் போகிறது!
அறை,வீடு, தெரு,ஊர்,மாவட்டம்,மாநிலம்,நாடு,கண்டம்,உலகம்,சூரியக் குடும்பம், போன்ற அடையாளங்களை துறக்கவேண்டிய நிர்பந்தம் வந்தால்தான், மனித இனத்திற்கு அன்பு, சமாதானம், ஒற்றுமை போன்ற வார்த்தைகளுக்கு நிஜமான பொருள் விளங்கும். அந்த நாள் வரும்... வரவேண்டும்!    

நன்றி நண்பர்களே, அருமையான காணொளி உங்களின் முன்னே....


22 கருத்துகள்:

கக்கு - மாணிக்கம் சொன்னது…

வியப்பூட்டும் விஷயங்கள். வெறும் அரசியல் ,சினிமா கூத்துக்களால் நொந்து போன எங்களுக்கு சற்று திசை மாற்றி சிந்திக்க வைத்த பெருமை நிச்சயம் உங்களுக்கு உண்டு. பிள்ளைகள் இது போன்ற வீடியோக்களை காண மிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.பவிர்வுக்கு நன்றி.

M.S.E.R.K. சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Baskar Perumal சொன்னது…

மிக அருமையான முயற்சி. இதற்கு முந்தைய நண்பர் கூறியுள்ளது போல் ஒர் வித்தியாசமான ஒன்று. இதே போல் என் பதிவில் டாக்டர் செரியனின் ஆங்கில பதிவு ஒன்றினை தமிழாக்கம் செய்துள்ளேன்.

உமா கிருஷ்ணமூர்த்தி சொன்னது…

மிக பிரம்மாண்டமாக இருக்கின்றது.இந்த அண்ட வெளியில் நாம் தூசிற்கு கூட சமானம் இல்லை என்பது புலனாகிறது.இங்கே நான் பெரியவன் என்று சண்டை போடுபவர்கள் அனைவரும் பார்க்கவேண்டிய ஒன்று.அருமையாக இதை எடுத்து இங்கே பதிவு செய்து உள்ளமைக்கு பாராட்டுக்களும் நன்றியும்.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

I would like to give the link of your blog in my page. Please, kindly allow me to do the same. Hope, it may helps to reach more people.

கக்கு - மாணிக்கம் சொன்னது…

The word "boundary" is meaningless.
Yes, the universe is expanding with out no boundaries!

Amazing!!

Chitra சொன்னது…

" நீங்க எங்க வசிக்கிறீங்க?" என்று யாராவதுக் கேட்டால், "நான் மில்கிவே கேலக்சியில் வசிக்கிறேன் !" என்றக் கூறவேண்டிய கட்டாயம் எதிர்க்காலத்தில் ஒருநாளில் வரத்தான் போகிறது!
அறை,வீடு, தெரு,ஊர்,மாவட்டம்,மாநிலம்,நாடு,கண்டம்,உலகம்,சூரியக் குடும்பம், போன்ற அடையாளங்களை துறக்கவேண்டிய நிர்பந்தம் வந்தால்தான், மனித இனத்திற்கு அன்பு, சமாதானம், ஒற்றுமை போன்ற வார்த்தைகளுக்கு நிஜமான பொருள் விளங்கும். அந்த நாள் வரும்... வரவேண்டும்!


....Simply Superb! Globalization..... :-)

M.S.E.R.K. சொன்னது…

கண்டிப்பாக கக்கு, நீங்கள் நினைத்தப்படியே செய்யுங்கள். நன்றி.
வருகைக்கு நன்றி பாஸ்கர் பெருமாள்,உமா கிருஷ்ணமூர்த்தி & சித்ரா

தினேஷ் சொன்னது…

அருமையான படைப்பு... அப்போ அப்போ கொஞ்சம் எழுதுங்கள்....

உங்களோட இரண்டு மூன்று பதிவை படித்தப்போ நீங்கள் இன்னும் நிறைய எழுத வேண்டும் என்று எனக்குத் தோணுது...

asiya omar சொன்னது…

மிக அருமை.பகிர்வுக்கு நன்றி.வெரி குட் போஸ்ட்.

ஆனந்தி.. சொன்னது…

தங்கள் போன பதிவும்...இந்த பதிவும் அமேசிங்.. கக்கு அண்ணா சொன்னது போலே பாதி பதிவுகள் சினிமா அரசியல் கூத்துகளில் தான் ஓடிட்டு இருக்கு...நம் பிள்ளைகளுக்கு புத்தக வரிகளை மனப்பாடம் செய்யும் அளவுக்கு அந்த காட்சிகளை கற்பனை பண்ண வைக்க கூட எந்த அவகாசங்களும் கிடைப்பதில்லை...இந்த காணொளிகள் நிச்சயம் சுருங்க சொல்லி விரிவாய் புரிய வைக்கும்.. நன்றி மிக்க நன்றி..தொடர்ந்து இப்படி விழிப்புணர்வு பதிவுகளை எதிர்பார்கிறோம்...

dheva சொன்னது…

இப்போ கூட மில்க்கி வே ல இருக்க பூமில தான் வசிக்கிறோம்.......பாஸ்! கிரேட் ரிசர்ஸ்ச்.................அறிவியல் பகிரமுடியா செய்திகளை ஆன்மீக பகிரும்.

வாழ்த்துக்கள்!

dheva சொன்னது…

தேங்க்ஸ் ஃபார் மாணிக்கம் டு ஐடெண்டிஃபை யுவர் ஃபிளாக்....!

தனி காட்டு ராஜா சொன்னது…

(Super massive Black hole) =Ruthran :)

மாதேவி சொன்னது…

அருமையான பகிர்வு.

ரஹீம் கஸாலி சொன்னது…

கக்கு அவர்களின் சிபாரிசின் பேரில் இங்கு வந்தேன். இனி அடிக்கடி வருவேன்

யூர்கன் க்ருகியர் சொன்னது…

பிரபஞ்சப்ரியன் --பேரு கரெட்டா தான் இருக்கு .. பிரம்மாண்டமான பதிவு ....Enjoyed. thx.அண்ட் தேங்க்ஸ் 4 கக்கு !!

Kannan சொன்னது…

நல்ல பதிவு. பேஸ் புக்கில் இனணக்க விரும்புகின்றேன். option கிடைக்கவில்லை. தெரியப்படுத்தவும்.

kannan from abu dhabi.
http://samykannan.blogspot.com/

M.S.E.R.K. சொன்னது…

வருகைத்தந்து ஊக்கமளித்த தினேஷ், ஆயிஷா ஓமர், தேவா, தனிக்காட்டு ராஜா,மாதேவி, ரஹீம் கஸாலி,
யூர்கன் க்ருகியர் ஆகிய அனைவருக்கும் வரவேற்ப்பும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.

M.S.E.R.K. சொன்னது…

கண்ணன், இந்த facebook விஷயம் எப்படியென்று தெரியவில்லை. நீங்களே வழிக்காட்டுங்களேன்... ப்ளீஸ்.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

நல்ல முயற்சி, அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!

இராஜராஜேஸ்வரி சொன்னது…

வியப்பூட்டும் விஷயங்கள்மிக அருமை.பகிர்வுக்கு நன்றி