ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

பூமியின் கருவை நோக்கி ஒருப்பயணம் !


[பாகன் செராய் தமிழ்ப்பள்ளி மாணவ மாணவியர்க்கு இந்தப் பதிவு  சமர்ப்பணம்... நல்லாப் படிங்க... தாய்த்தந்தை ஆசிரியர் மற்றும் மூத்தோர்களை மதித்து வாழுங்கள்! ]

கொஞ்ச நாளுக்கு முன்னாடி நம்ம கேலக்சியில் ஒரு விண்வெளிப்பயணம் மேற்கொண்டோம் ஞாபகம் இருக்கிறதா நண்பர்களே? அவ்வளவு தூரம் பயணம் மேற்கொண்டு பல விஷயங்களைத் தெரிந்துக்கொண்ட  நாம், நாம இருக்கும் பூமியைப் பற்றி எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறோம்? இப்ப நாம் மேற்கொள்ளவிருக்கும் பயணம் பூமிக்கு வெளியே அல்ல ... பூமிக்கு உள்ளே, அதன் கருவை நோக்கி! பலக்கோடி மையில்கள் பூமிக்கு வெளியே பயணித்துள்ள மனிதன், நம்மபூமியினூடே சென்றிருப்பது மிகவும் சிறிய அளவேத்தான்! ஹிஸ்டரி சேனலுக்கு நன்றி. நம்மையெல்லாம் 4000 மையில்கள் கீழே அழைத்துச் செல்வதற்கு. Journey to the Earth's Core என்ற அருமையான வீடியோவைத்தான் நாம் இப்போதுப் பார்க்கப்போகிறோம். 


6371 கிலோமீட்டர் உள்ளே செல்லவேண்டும் பூமியின் கருவைத்தொட. தற்போதைய தொழில்நுட்ப்ப வசதியைப் பொருத்தமட்டில் கிராபிக் கற்பனை மூலமாகத்தான் செல்ல முடியும். வருங்காலத்தில் எப்படி என்றக் கேள்விக்கு விஞ்ஞானம்தான் விடைக்கூரும்.அதற்கு முதல்படி இங்கே! 

ஒருக் காரையே தலைமேல் தூக்கக்கூடிய சக்தியுள்ள மனிதனும், ஒரு எறும்பும் சமம் !
இறந்த மனிதனை ஆறு அடி ஆழமுள்ள குழியில் புதைக்கும் பழக்கம் எப்படி வந்தது?
பாகன் செராய் தமிழ்ப்பள்ளியில் படிக்கும் மாணவமணிகளே, உங்கள் மலேசியாவின் பெட்ரோனாஸ் டவர் கட்டிடம் மணல்மேல் கட்டப்பட்டது எப்படி என்று உங்களுக்குத் தெரியுமா?

'என்ன இது சம்பந்தமில்லாமல்...' என்றுக் கேட்கிறீர்களா? இப்படித்தான் இந்த வீடியோ முழுவதும் நிறைய சுவையான, அறிவுப்பூர்வமான விஷயங்களை அள்ளித்தெளித்துள்ளார்கள்!  

இது சம்பந்தமான சில லிங்குகள்....

KIDS GEO

WIKKI

NASA 

LEARNER

MSN 

எங்கு சென்றாலும் போகும்போது ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போங்க.... நன்றி!




7 கருத்துகள்:

பொன் மாலை பொழுது சொன்னது…

தேர்தல் நேரங்களில் இது போன்ற பதிவுகளை சற்று தள்ளி போடலாமா!
எல்லோருக்கும் தேர்தல் ஜுரம் ஆட்டிப்படைகிறதே!
சரி, வீடியோவை முதலில் பாப்போம்.
பகிர்வுக்கு நன்றி.

பொன் மாலை பொழுது சொன்னது…

வீடியோவை இன்னமும் முழுமையாக பார்க்கவில்லை. ஆனால் உள்ளம் கொள்ளை போகுதே!:))))

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் சொன்னது…

ஓட்டுரிமை இருந்தும் என்னால் ஓட்டுப்பதிவில் பங்கேற்க முடியாத நிலை கக்கு. துடிக்கிறது கைகள்... ஆனால் தடுக்கிறது தள்ளி வந்த தூரம்! தேர்தல் ஓட்டுப்பதிவு நாட்டுக்கு... நம்ம பிரபஞ்சப்ரியன் பதிவு பகுத்தறிவுக்கு(உண்மையான!). மீண்டும் வந்துப்போங்க கக்கு.

பொன் மாலை பொழுது சொன்னது…

நவீன தொழில் நுட்ப வசதிகளை பிற நாட்டவர்கள் எவ்வளவு ஆக்கமான வழிகளில் பயன்படுத்துகிறார்கள் என்பது வியப்புக்குரியது.
ஆனால் நாமோ வெறும் சினிமா படங்கள் எடுக்க மட்டுமே பயன்படுத்திக்கொண்டு "நாமும் வல்லரசாகிவிட்டோம்" என்ற கூவிக்கொண்டு இருக்கிறோம்.காணொளி அருமை. பொறுமையாக இரண்டு முறைகள் பார்த்தேன் என்னைக்கவர்த்த ஒன்று வழக்கம்போல.நிறைய செய்திகள் பூமியைப்பற்றி.தொடருங்கள்.

பெயரில்லா சொன்னது…

வணக்கம்.

தங்களின் இந்தப் பதிவை பாகன் செராய் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கென சமர்ப்பணம் செய்திருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி.

தங்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்புடன்,

பள்ளியின் தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் மற்றும் மாணவர்கள்.
11.04.2011

சிவகுமார் சொன்னது…

காணொளி அருமையிலும் அருமை தொடர்ந்து இது போன்ற பதிவுகள் இடவும் ......

சிவகுமார் சொன்னது…

காணொளி அருமையிலும் அருமை தொடர்ந்து இது போன்ற பதிவுகள் இடவும் ......