செவ்வாய், 26 ஏப்ரல், 2011

கலர்ஃபுல் கடலுலகம்!


எங்கோ தூரத்தில் இருக்கும் நிலவைப்பற்றிய நம் அறிவைவிட, நம் கூடவே இருக்கும் ஆழ்க்கடலைப்பற்றிய அறிவு மிகவும் குறைவே! ஆம். நம்ம கடலுலகம் மேலே பூமியில் இருக்கும் அற்புதங்களையும், விசித்திரங்களையும் விட அதிகமானவைகளை அடக்கிக்கொண்டு சில இடங்களில் ஆர்ப்பரிப்புடனும், சில இடங்களில் ஆழ்ந்த அமைதியுடனும் காட்சியளிக்கிறது. இதை ஒரு 'ஏலியன் உலகம்'(Alien World) என்றும் அழைக்கலாம்! அப்படிப்பட்ட அற்புத உலகத்துக்கு நம்மையெல்லாம் அழைத்துச் செல்கிறார்கள், பிரபல ஆழக்கடல் கேமராமேன்கள் பியோடெர் பிட்கரின் (Feodor Pitcarin) மற்றும் பாப் க்ரேன்ஸ்டன் (Bob Cranston). அமெரிக்காவின் அறிவுக்களஞ்சியங்களில் ஒன்றாகத் திகழும் ஸ்மித்சோனியன் நிறுவனம் (Smithsonian Institution), இந்த இரு ஆழ்க்கடல் 'அஞ்சாநெஞ்சர்களை' அழைத்து அழிந்து வரும், கடல்வாழ் சுற்றுச் சூழல்களை (ஒருவேளை கடைசியாக...) படம் பிடித்து வருமாறு கேட்டுக்கொண்டது. அதனால் விளைந்ததுத்தான் இந்த 'Ocean Odyssey' என்ற வண்ணக்கோலம்! மிகவும் பிரத்தியேக HD கேமராக்களால் படம்பிடிக்கப்பட்டுள்ள இந்த காவியம், நம் எல்லோர் மனதையும் கொள்ளைக்கொள்ளும்.
 கிரேக்க மொழியில் Odyssey என்றால், நீண்ட சாகசப்பயணம் என்று அர்த்தமாகும். ஆம் இது ஒரு 'சமுத்திர சாகசப்பயணம்!' நம் வாழ்நாளில் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத, Galapagos, Raja Ampat, the Maldives, the Azores, Hawaii, the Caribbean, the Bahamas, the Channel Islands, British Columbia, the Gulf of Mexico, French Polynesia, and Belize போன்ற, உலகின் மிக முக்கிய ஆழ்க்கடல் சூழல்களுக்கு நம்மையெல்லாம் மூச்சுத்திணற அழைத்துச் செல்கின்றனர். வாங்க நாமும் குதிக்கலாம்....  4 கருத்துகள்:

கக்கு - மாணிக்கம் சொன்னது…

Pl. attach with Indli and TamilManam.

M.S.E.R.K. சொன்னது…

அன்பு நண்பர் கக்கு, வருகைக்கு நன்றி. என் பதிவுகள் ஏற்கனவே இன்லியிலும் தமிழ்மணத்திலும் இணைக்கப்பட்டுள்ளது. தமிழ்மணம் ஒட்டுப்பட்டை எப்படி இணைப்பது என்று தெரியவில்லை. எப்படியென்று சொல்லுவீர்களா?

இராஜராஜேஸ்வரி சொன்னது…

very useful and interesting post.Thank you for sharing.

M.S.E.R.K. சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க இராஜராஜேஸ்வரி