திங்கள், 25 ஜூலை, 2011

இணைப் பிரபஞ்சங்கள்! அதிலேயும் நாம்! (காணொளிகள்)



இப்போது நீங்க இதைப் படித்துக்கொண்டிருக்கும்போதே, வேறொரு, இதேப்போன்ற உலகில், 'நீங்களே' இந்தப் பதிவைப் படித்துமுடித்து, காணொளிகளைக் கண்டு வியந்து, பின்னூட்டமும்(!?) போட்டு முடித்திருப்பீர்கள்!

இலங்கையில், அப்பாவித்தமிழர்கள், அடிமைகளாய் போர் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இதே கணத்தில், எங்கோ வேறொரு உலகில் திரு வேலுப்பிள்ளை பிரபாகரன், இந்தியப் பிரதமர் திரு.ராஜீவ் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருப்பார்!
இரண்டாம் உலகப்போரில், நேசப்படைகள் தோற்று, அமெரிக்காவை ஹிட்லர் ஆண்டுக்கொண்டிருக்கலாம்! ஒசாமா பின்லேடன் இரட்டை கோபுரத்தின் மேல் இருக்கும் தொலைநோக்கியில், நியூயார்க் நகர அழகை ரசித்துக்கொண்டிருக்கலாம்!
மனிதனே இல்லாத பூமியில், டைனோசர்கள் அட்டகாசம் பண்ணிக்கொண்டிருக்கலாம்!



என்ன கேட்க லூசுத்தனமாக உள்ளதா? ஆனால் க்வாண்டம் விதியின்படி இதெல்லாம் சத்தியமான சாத்தியங்கள் என்று தலையில்லடிக்கிரார்கள் விஞ்ஞானிகள்! 1954 ஆம் வருடம் ஹக் எவர்ட் (Dr.Hugh Everett III) எனும் இருபத்தி நான்கு வயது பௌதீக மாணவன் துவக்கிவைத்த (THE THEORY OF THE UNIVERSAL WAVE FUNCTION)அறிவியல் விந்தை, இன்று வேகமெடுத்து சென்றுக்கொண்டே இருக்கிறது

.
ஆம்! நம் பிரபஞ்சத்தைப் போலவே எண்ணிலடங்கா பிரபஞ்சங்கள் உண்டு என்றும், அவைகளில் நம்மைப் போலவே அச்சு அசலாக நாமும் வாழ்ந்துக்கொண்டு இருப்போம் அல்லது பிறக்காமலோ அல்லது இறந்தோ இருப்போம் என்று இந்த கோட்பாடு கூறுகிறது! 
 
இதுப்பற்றி விளக்க விஞ்ஞானிகளேத்  தடுமாறும்போது நான் எங்கே? இதோ நான் பார்த்து வியந்த காணொளிகள், படித்து புரிந்துக்கொள்ள முயன்ற தளங்களை உங்களுடன் பகிந்துக்கொள்ளுகிறேன். நீங்களும் முயன்றுப்பாருங்கள். ஆனால் மிகவும் சுவாரசியமான ஒரு விஞ்ஞானப் பிரிவு இது, நிச்சயம் உங்களை வசீகரிக்கும் என்பது சர்வ நிச்சயம்! 





=============================



===========================













                                     ====================================

மேக்ஸ் டெக்மார்க் மற்றும் மிகியோ ககு தரும் விளக்கங்கள்.....







===============================

'Parallel Worlds, Parallel Lives'  எனும் PBS Nova வின் அருமையான வீடியோவில் Dr.ஹக் 


எவர்ட்டின் மகனான , பிரபல ராக் இசைப் பாடகர் மார்க் எவர்ட், தன் தந்தை வாழ்ந்த 


இடங்களுக்கு சென்று, ஹக்கின் நண்பர்களோடு உரையாடி, கடினமான அறிவியல் 


சித்தாந்தங்களுக்கு எளிமையான விளக்கங்கள் பெறுவது சிறப்பாக உள்ளது. இந்தத் தளத்தில் 


வீடியோவைக் காண முடியாதவர்கள், அதிலுள்ள லிங்க்கை 'க்ளிக்கி', You Tube தளத்தில் 


சென்றுப் பார்க்கவும்.  




=================================


'இணைப் பிரபஞ்சங்கள்' ஒரு கலந்துரையாடல்.... 





  • இணை பிரபஞ்சங்கள் பற்றி, Scientific American பத்திரிக்கையில் Dr.Max Tegmark அவர்களின் அசத்தல் கட்டுரை இங்கே....


செவ்வாய், 19 ஜூலை, 2011

குழந்தைகள்....!



Ponijao lives in Namibia with her family, including her parents and eight older brothers and sisters. Ponijao's family is part of the Himba tribe, and lives in a small village with other families


Mari lives with her mother and father in Shibuya, a busy metropolitan area within Tokyo, at the center of all of the city's noise and excitement. Mari is an only child and lives a contemporary urban lifestyle.

Born in Mongolia, Bayarjargal, usually called "Bayar" for short, lives with his mother, father, and older brother Delgerjargal ("Degi") on their small family farm.


Hattie lives in San Francisco, born to very ecological, "green" parents. Both of Hattie's parents are equally involved in her day-to-day life, fixing her meals, taking here to play groups, and spending time with her around the house.


சமீபத்தில் நான் மிகவும் ரசித்த காணொளிகளில், இன்று நீங்கள்

காணப்போகும் 'Babies' என்ற காணொளியும் ஒன்று. இந்தப் படம் 

உலகின் வெவ்வேறு மூலைகளில் பிறந்த நன்கு குழந்தைகளின் 

ஒருவருட வாழ்கையை, அழகாக காண்பிக்கிறது. நவீன விஞ்ஞான 

வளர்ச்சிப்பெற்ற அமெரிக்கா மற்றும் ஜப்பானில் பிறந்த குழந்தைகள் 

இரண்டு.... கொஞ்சம் சுமாரான வளர்ச்சிப்பெற்ற மங்கோலியாவில் 

ஒன்று... எந்தவித முன்னேற்றமும் காணாத ஆப்ரிக்காவின் 

நமிபியாவில் ஒன்றும் ... என நான்கு குழந்தைகளைச் சுற்றி 

சுழல்கிறது இந்தப் படம். உலகில் எங்குப் பிறந்தாலும் குழந்தைகள் 

குழந்தைகளே! அவைகள் எவ்வளவு சுலபமாக தங்களின் 

சூழ்நிலைக்கேற்றவாறு தங்களைத் உருவாக்கிக்கொள்ளுகின்றன ! 

இப்படித்தானே நாம் செய்யும் தீய செயல்களையும், ஜாதி, மத, இன 

வெறிகளையும், முட்டாள்தனமான மூட நம்பிக்கைகளையும் கண்டு, 

நம்மைவிட ஒருப்படி மேலே செல்லக்கூடும் என்பது ஒரு எச்சரிக்கை! 

பாவம் அவைகள்! பெற்றோரும் சமுதாயமும் செய்யும் தவறுக்கு 

பலியாகும் செல்வங்கள்!


இந்தப் படத்தைப் பாருங்கள், பலக்காட்சிகள் உங்களை அறியாமல் 

புன்னகைக்க வைக்கும்! ஏற்கனவே பிள்ளைப்பெற்றவர்களை பழைய 

நாட்களுக்கு அழைத்துச் செல்லும். இன்னும் பிள்ளைச்செல்வம் 

இல்லாதவர்களை சீக்கிரம் பெற்றுக்கொள்ள ஊக்குவிக்கும்!  என்னைக் 

கவர்ந்த இந்தப்படம் உங்களையும் நிச்சயமாகக் கவரும் என்பது 

நிச்சயம்! 

இந்தப் படத்தின் வலைத்தளம் இங்கே....


முன்னோட்டம்...




முழுப்படம்....




புதன், 6 ஜூலை, 2011

சூரிய சுனாமி !











This image, captured in ultraviolet on 17 February 2011, shows the powerful solar flares that may lead to unusual displays of

 the northern lights. Photograph: Nasa/SDO


சூரியத சுனாமியா ?!  ஆமாங்க... வரும் 2013 ஆம் வருடம், சூரியன் நம்ம பூமியைத் தாக்கலாம் என்ற அபாயம் குறித்து, உலக விஞ்ஞானிகளும், தலைவர்களும் தீவிரமாக சிந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் இது  கொஞ்ச சீரியசான அபாயம். 
 2012 என்ற ஹாலிவூட் திரைப்படத்தை அநேகமாக எல்லோரும் பார்த்திருப்போம் என நினைக்கிறேன். அந்த அளவிற்கு மோசமான விளைவுகள் இல்லையென்றாலும் ... கவலைப்படுமளவிற்கு பாதிப்புகள் இருக்குமென நம்பப்படுகிறது. நூற்றாண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்த விபரீதம் வரும் 2013 இல் எதிர்ப்பார்க்கப்படுகிறது. மின்சார  இணைப்புகள், தொலைத்தொடர்பு சாதனங்கள், செயற்கைக்கோள்கள், விமானப் போக்குவரத்து, உணவுத் தொடர்புப் போன்ற அத்தியாவசிய விஷயங்கள் பாதிக்கப்படும். மிக முக்கியமாக, நம்மில் பலரின் ஜீவாதார பிரச்சனையாகிவிட்ட இன்டர்நெட் என்ற இணையத்தொடர்பு துண்டிக்கப்ப்படுமாம்! நம்ம வீட்டு ப்ரீசர் முதற்கொண்டு, நம்ம கார் நேவிகேட்டர் வரை பாதிக்கப்படும் சிக்கலுள்ளது!

சூரியனின் மேற்பரப்பில் ஏற்படும் மகா வெடிப்புகளால் ஏற்படும் பிழம்பு, பல ஆயிரம் கிலோமீட்டர்கள் வெளியே வீசப்படும். Solar Flare எனப்படும் இவைகள் பல நூறு அணு குண்டுகளை வெடித்தால் ஏற்படும் ஆற்றலுக்கு நிகரானவை! CME எனப்படும் 'Coronal Mass Ejections', பலதரப்பட்ட கதிர்வீச்சுகளோடு, பல மில்லியன் டிகிரிகள் வரை வெப்பமான, மணிக்கு ஆறு மில்லியன் மைல்கள் வேகத்தில் பிரயாணம் செய்யக்கூடிய சூரிய சுனாமி! 
 இந்த சூரியப் பிழம்புகளைப்பற்றியும், அதனால் மனிதக்குலம் எதிர்நோக்கியுள்ள ஆபத்துக்கள் பற்றியும், நான் படித்த பார்த்த விஷயங்களை உங்களோடு பகிர்ந்துக்கொள்ளுகிறேன். இதுப்பற்றி தங்களுக்கு தெரிந்த கருத்துக்களை நீங்களும் பகிர்ந்துக்கொள்ளலாம்.      
   
அருமையான விளக்கம் இங்கே...

2010, செப்டெம்பர் 20 அன்று, லண்டன் நகரில் நடந்த ' The Electric Infrastructure Security Council லின் சர்வதேச மாநாட்டில் நடந்த சொற்ப்பொழிவுகளைக் காண... இங்கே. 

சம்பந்தப்பட்ட காணொளிகள்...



















My view...
By Prof.  BRIAN COX

 "THE Sun has the potential to demolish our infrastructure and cost the world trillions of pounds.
This should be a powerful reminder to those who think we should stop trying to explore and understand our universe.
We know about the Sun's dangers because a curious scientist called Richard Carrington was observing it in 1859 when the last enormous solar storm hit.

And we now have an early warning system because someone thought to explore space - then put spacecraft up there to monitor the Sun's activity.
We don't yet know what to do when a storm like the one in 1859 happens again.
But we do know it must be taken very seriously indeed.
There is a lesson here - our universe is dangerous. We can become safer by understanding it through science and manipulating it through engineering. In other words, we can't get too complacent on our exposed little rock."



இனி மெயின் படம்...           
Watch it in 1080p HD......