ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

அறிவியலின் கதை[5] : உயிரின் ரகசியம்...முந்தையப் பதிவுகள்....

அறிவியலின் கதை [1] -  'அங்கே என்ன உள்ளது?'

அறிவியலின் கதை [2] -  'இந்த உலகம் எதனால் உருவானது?'

அறிவியலின் கதை [3] - 'நாம் எப்படி இங்கு வந்தோம்?'

அறிவியலின் கதை[4]: 'அளவில்லா ஆற்றல் பெற முடியுமா?'


Dr.மோஸ்லே அறிவியலின் கதையைக் கூறும்போது மிகவும் சிக்கலான உடற்க்கூறைக்கொண்ட மனித உடலை கொண்டு உயிரின் ரகசியத்தை ஆராய முற்படுகிறார். இந்தக் கதை பண்டைய ரோமாபுரியில் கிளேடியேட்டர்கள் என்று அழைக்கப்பட்ட வீரர்களின் உயிரைக் காப்பாற்றுவதிலிருந்து தொடங்கி, டாவின்சியின் கொடூர ஆனால் ஏறக்குறைய சரியான உடற்க்கூறுப் படங்களில் வலம்வந்து, மின்சாரத்தின் 'உயிர் ஆற்றல்' என்ற கருத்தையும், உடலின் அடிப்படைக் கூறான 'செல்'லில் நுண்னுலகில் புகுந்து, எப்படி அணுகுண்டுகள், மிகவும் சிக்கலான 'டிஏன்ஏ' என்ற மரபணுவின் புதிரை விடுவிக்க ஒரு காரணக்கர்த்தாவாக விளங்கியது என்பதுவரை விவரிக்கிறது. மிகவும் சுவாரசியமானக் காணொளி, வாங்க பார்க்கலாம்.... 


செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

சுனாமியில் சிக்கிப் பிழைத்தவர்கள்...![காணொளி]

'Surviving Tsunami' என்ற இந்த ஆவணப்படம், பிரபல ஜப்பானிய செய்திநிறுவனமான NHK தயாரித்து அளித்த ஒரு நிஜத் த்ரில்லர்! தங்களிடமிருந்த வீடியோக்களையும், மற்றும் பல அமெச்சூர் வீடியோக்களையும் திறம்பட இணைத்து, 11 மார்ச், 2011 அன்று உலகையே அதிரவைத்த ஜப்பானிய சுனாமியின் நிஜ கோரத்தையும் அதனால் ஏற்ப்பட்ட பேரழிவையும் கண்ணெதிரே நமக்குக் காண்பிக்கிறது. 9.0 ரிக்டர் அளவில் ஏற்ப்பட்ட நிலநடுக்கம், 39 அடி (128 மீ ) உயர பேரலையையும், அது ஏறக்குறைய ஐந்துக் கிலோமீட்டர் வரை நிலத்தில் முன்னேறி, ஜப்பானிய கடற்கரைப் பிரதேசங்களை துவம்சம் செய்ததை பலக் காணொளிகள்  மூலமாக நிறையப் பார்த்தாகிவிட்டது. ஆனால் இந்தப்படம் ஏற்கனவே ஒத்திகை செய்து எடுக்கப்பட்டதைப்போல, சுனாமியில் சிக்கி மரண விளிம்பைத்தொட்டு, மீண்டும் உயிரோடு மீண்டு கேமராவி முன்னே நமக்கு அந்தக் கதையை சொல்லும்போது நமக்கு சிலிர்க்கிறது! இதில் என்ன விசேஷமென்றால், அவர்கள் சுனாமியில் சிக்கி,அதிலிருந்துத் தப்பிக்கும் காட்சிகளும் காணொளியில் இடம்பெற்றிருப்பதுத்தான்! 

வயதான நோயாளித்தாயுடன் வீட்டின் கூரையில் தொங்கும் பெண்ணும்.... புரண்டோடும் நீரில் மிதக்கும் காரினுள் சிக்கிய ஒரு மனிதனும்.... தன் வாகனத்தோடு சுனாமியில் சிக்கிய ஒரு போலீஸ்காரரும் ... தங்கள் அனுபவத்தை விவரிப்பது நம்மை அந்த நிகழ்வுக்கே அழைத்துச் சென்றுவிடுகிறது! நீங்கள்தான் பார்க்கப்போகிறீர்களே... மேலும் என்ன விளக்கம்...? வாங்கப் பார்க்கலாம்.....
You Tube இல் காண இங்கே ...

அறிவியலின் கதை[4]: 'அளவில்லா ஆற்றல் பெற முடியுமா?'


மறுபடியும் Dr. மோஸ்லி நம்மை அறிவியலின் முக்கியமான தளத்தின் வரலாற்றுக்கு அழைத்துச் செல்கிறார். Power / Energy எனப்படும் சக்தி / ஆற்றல் எப்படி நம்மால் காற்று, நீர், மற்றும் அணுவில்லிருந்துக்கூட அறுவடைச் செய்யப்படுகிறது என்பதன் வரலாற்றைக் கூறும் காணொளி இது. முதலில் தனிப்பட்ட மனிதர்களால், பணம் பண்ணுவதற்காக தொடங்கப்பட்ட ஆற்றல் தேடல், அறிவியலின் மிக முக்கியமான பகுதியாக மாறி, இயற்கையின் அடிப்படை விதிகளையே தேடுவதற்கான பாதையாக மாறிப்போனது. இந்தத் தேடல்தான், தற்கால அறிவியலின் மகா சமன்பாடான  e=mc2 ஐ நமக்கு அளித்தது. இதுப்போன்ற பல சுவாரசியமான தகவல்களை கொண்டுள்ள இந்தக் காணொளியைக் காணலாம் வாங்க....

புதன், 3 ஆகஸ்ட், 2011

அறிவியலின் கதை [3] - 'நாம் எப்படி இங்கு வந்தோம்?'
சென்றப் பதிவுகள் ....

பொதுவாகவே மனித இனம் எப்படித் தோன்றியது என்றக் கேள்வி வரும்போது, கூடவே பிரச்சனைகளும் வந்துவிடும். அவரவர்க்கு தனிப்பட்டக் கருத்துக்கள் இருக்கவேச் செய்யும். அது முக்கியமாகவும், பெரும்பாலாகவும்  மதம் சார்ந்தவையாகவே இருக்கும் எனபது நிச்சயம். அவற்றில் தலைடுவதல்ல இந்தகாணொளியைப்  பகிர்வதன் நோக்கம்.

அறிவியலின் கதையைக் கூறும்போது, இந்தக் கேள்வியும் அதற்கான பதிலைத் தேடும் பிபிசி, இப்படி ஒரு வித்தியாசமானக் கோணத்தில், அருமையான காணொளியைப் படைத்துள்ளது! வாங்க... பார்க்கலாம்...  

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

அறிவியலின் கதை [2] - 'இந்த உலகம் எதனால் உருவானது?'


பிபிசி யும் Dr.மைகேல் மோஸ்லேயும் இணைந்து வழங்கும் ' The Story of Science ' என்றத் தொடரின் இரண்டாம் பாகம் ' What is the world made up of?'. இந்தக் கதை இரசவாதிகளின் ரகசிய பரிசொதனைக்கூடங்களில் தொடங்கி, சிறுநீரிலிருந்து தங்கம் எடுக்கும் தமாஷிலிருந்து, உலகின் முதல் செயற்கை சாயம் கண்டுப்பிடிப்பு போன்ற சுவாரசியமான விஷயங்களைச் சுற்றி வருகிறது!
இந்தக் கேள்விக்கு விடைக் கண்ண்டுப்பிடிக்கும் முயற்சியில், தனிமம் மற்றும் அணு முதலானவற்றிற்கு விதிகளையும், விந்தையான க்வாண்டம் தத்துவம் வரை விஞ்ஞானிகள் வந்துள்ளதை நமக்கு காண்பிக்கிறது இந்தப் பகுதி! 


திங்கள், 1 ஆகஸ்ட், 2011

அறிவியலின் கதை [1] - 'அங்கே என்ன உள்ளது?' (வீடியோ )


ஆறுத் தலைப்புகள்! ஒவ்வொன்றும் ஒரு மணி நேரம்! அறிவியலின் கதையை இப்படி எளிமையாக எல்லோரும் புரிந்துக்கொள்ளும் வகையில் கூற பிபிசி நிறுவனமும் Dr.மைக்கேல் ஜே. மோஸ்லேயும் கைக்கொர்த்துள்ளார்கள்.

நாம் யார்? இந்த உலகம் எதனால் ஆனது? அங்கே என்ன உள்ளது? நாம் எப்படி இங்கு வந்தோம்?.... போன்ற கேள்விகளோடு பல ஆயரம் ஆண்டுகளாக மனிதன் போராடிக்கொண்டு இருக்கிறான். இந்த போராட்டத்துக்கான பதிலே அறிவியலின் கதை!

இந்தக்கதை, பயத்தையும் தைரியத்தையும் பற்றியக் கதை.... நம்பிக்கையையும் பேரழிவையும்  பற்றியக்கதை.... தோல்வியையும் வெற்றியையும் பற்றியக்கதை....! 

இந்தக்கதை, வரலாறு எவ்வாறு அறிவியலை படைத்தது என்பதைப்பற்றியும், அறிவியல் எவ்வாறு வரலாறு படைத்தது என்பதுப்பற்றியது! ஆறுத் தொடர்ப்பதிவுகளாக வரப்போகும் இதை மாணவர்களுக்கு சிபாரிசு செய்ய அன்போடு கேட்டுக்கொள்ளுகிறேன்.

DR. Michael J Mosley நமக்கு ஏற்கனவே அறிமுகமானவர்தான்! 'பிபிசி யின் மனித உடலுக்குள்ளே... என்றப் பதிவின் மூலம்!

முதலில் 'அங்கே என்ன உள்ளது ?' வாங்கப் பார்க்கலாம்....