திங்கள், 19 செப்டம்பர், 2011

நதிகள்: நட்பா... பகையா...?



நதிகள் நமக்கு எல்லாம் கொடுக்கின்றன.... சிலசமயங்களில் நம்மிடமிருந்து எல்லாவற்றையும் பறித்துக் கொள்கின்றன...! குடிநீர்,உணவு, போக்குவரத்து போன்றவற்றை அளிக்கும் இவைகள் மனிதனின் நண்பர்களா...பகைவர்களா...? பிபிசி யின் 'Planet Earth' வழங்கிய 'Rivers - Friend or Foe...?' என்றக் காணொளி பதில் தருகிறது.



இந்தக் காணொளி நம்மை உலகெங்கும் அழைத்துச்சென்று, மனிதனுக்கும் நதிகளுக்கும் உள்ள பிரிக்கமுடியாத, சிலசமயங்களில் சவாலான உறவை படம்பிடித்துக் காட்டுகிறது. திபெத்தில் கடுங்குளிரில் உறைந்துப்போன நதியின் மேலே, நூறு கிலோமீடர்களுக்கப்பால் உள்ள பள்ளிக்கூடத்துக்கு, ஆறு நாட்கள் பயணமாக, பல ஆபத்துக்களைக் கடந்து செல்லும் காட்சி நம்மையெல்லாம் நிச்சயமாக சிலிர்க்கவைக்கும்! [நம்ம ஊரில், வீட்டு வாசப்படியில் உள்ள பள்ளிக்குச் செல்லாமல்,'கட்டடித்து',  ஊர் சுற்றித்திரியும் ஒருசில பசங்களுக்கு காண்பிக்கவேண்டும் இந்தக் காட்சிகளை!] இதுமட்டுமல்லாமல் கம்போடியாவில் ஆர்பரித்து ஓடும் நதியின் மேல் அபாயகரமாக நடந்து, உணவுக்காக சில மீன்களை பிடிக்க, உயிரைப் பணயம் வைத்து வாழ்கை நடத்துவதும், ஆப்ரிக்கக் கண்டத்தின் உயர்ந்த விக்டோரியா நீர்வீழ்ச்சியின் விளிம்பில் நின்று மீன்பிடிக்கும் மனிதர்களைக் காணும்போதும் நமக்கே தலைச் சுற்றல் ஏற்படும்! தென் அமெரிக்காவின் அமேசான் நதிதீரத்தில், வெள்ளக் காலங்களுக்குமுன், அதை சமாளிக்க மக்கள் செய்யும் முன்னேற்ப்பாடுகள் நம்மை வியக்கவைக்கும்! கென்யாவில் மழைப் பற்றாக்குறையால் வரண்டுப்போன நதியால், தண்ணீருக்காய் மக்கள் அலையும் மக்களைக் காணும்போது, தண்ணீரை வீணாக்கும் நம்மில் சிலரை குற்ற உணர்சிக்கொள்ளச்செய்யும்! நம்ம(?!) மேகாலயாவின் மக்கள் எப்படி இயற்கையோடு சேர்ந்து,உயிருள்ள பாலத்தை,பலத் தலைமுறைகளுக்கும் உதவுமாறு நிர்மாணிக்கிறார்கள் என்பதைக் காணும்போது மனமுவந்து பாராட்டத் தோன்றும்!


இப்படி இந்த காணொளி நமக்கு ஒரு அருமையான அனுபவமாக இருக்கும் எனபது நிச்சயம். வாங்கப் பார்க்கலாம்.....   

Human Planet (07) Rivers - Friend and Foe by luisroybean

3 கருத்துகள்:

தமிழ் செல்வா சொன்னது…

நண்பர் எட்வின், நதி பகிர்வுக்கு நன்றி. எங்கேதான் தேடி எங்களுக்கு தர்றிங்க. பாராட்டுக்கள். பூம்புகார் ஆய்வு பற்றி தகவல் கிடைக்குமா. க்ரஹாம் ஹன்கொக் ஆய்வு ஒளிப்படம். அதுபோல தமிழர் தொன்மை பற்றி, சிந்து, குமரி கண்டம், பிரமிடுடன் தமிழர் தொடர்பு, கிடைத்தால் எங்களோடு பகிருங்களேன். உங்களின் மகத்தான அறிவியல் பணி தொடர வாழ்த்துக்கள். தோழமையுடன் செல்வராஜ்

முத்தரசன் சொன்னது…

thanks for sharing this.... awesome experience...

DR சொன்னது…

I have seen the full documentary in one sitting. Thanks for sharing Priyan...

Keep it up your good work...