புதன், 12 அக்டோபர், 2011

இந்தியா : புலிகளின் இராட்சியம் !
[வேலைப்பளுவின் காரணமாக நீண்ட நாட்களாக பகிர்வுகளை வெளியிட
முடியாமல் போனதற்காக 'என்ன...எதுவென்று...?! ' ஒருவரும் 
கேட்ட்கவில்லைஎன்றாலும் :-) , நண்பர் ரோம் நகர் செல்வராஜிடம் நான் 
மன்னிப்புக் கேட்டே ஆகவேண்டும்! நண்பரே... நலமா?]

இந்தமுறை பகிரப்போவது 2002 இல் வெளிவந்த, 'இந்தியா : புலிகளின் 
இராட்சியம் !' (India: The Kingdom of Tigers!) என்ற ஆவணப்படம். சும்மா 
கேட்டாலே அதிரும்படியானத் தலைப்பு இல்லே ....! நானாக வைக்கவில்லை,
தானாக அமைந்துள்ளது!

ஜிம் கார்பெட் ! இந்தியப் புலிகளுக்கு வேலியாக மாறிய வேட்டைக்காரன்! 
அவர் எழுதிய ' Man-Eaters of Kumaon' என்ற புத்தகத்தை அடிப்படையாகக் 
கொண்டு படைக்கப்பட்ட ஒரு அருமையான காணொளி. அவர் பிறந்து 
வளர்ந்த இமய மலைச்சாரலில் உள்ள குமாவுன் பளைப் பிரதேசங்களில் 1900 
முதல் 1930 வரை வாழ்ந்த மனிதர்களை கொன்று தின்ற புலிகளையும் 
சிறுத்தைகளையும் வேட்டையாடிக் கொன்ற அவரின் அனுபவங்களைப் 
பற்றிய புத்தகம். இந்தப் புத்தகத்தில் புலிகளைப் பற்றி மட்டுமல்லாமல், 

அந்தக்கால இந்தய வாழிக்கை முறையைப் பற்றியும், இந்திய 
கிராமங்களைப்பற்றியும் அழகாக எடுத்துக் கூறியுள்ளார். நாம் காணப்போகும் 
இந்த காணொளியிலும் இவைகள் எல்லாம் அருமையாகத் 
தெளிக்கப்பட்டுள்ளது.      

அவரைப்பற்றி மேலும் படிக்க சில சுவாரசியமான பக்ககங்கள்... இங்கே 

1936 ஆண்டு ஜிம் கார்பெட் முயற்ச்சியால் தொடங்கப்பட்ட இந்தியாவின் 
முதல் தேசியப்பூங்காவான ஹெய்லி தேசியப்பூங்கா, பின்பு ராம்கங்கா 
தேசியப்பூங்கா என்று பெயர்மாறி, கடைசியாக 1957 இல் ஜிம் கார்பெட் 
தேசியப்பூங்கா என்று அழைக்கப்பட்டு அவருக்கு கவுரவம் செய்யப்பட்டது.

இந்தப் படத்தை இயக்கியவர் Bruce Neibaur. இசை அமைத்தவர் Michael Brook

இந்தப் படத்திற்கான இசையைக் கேட்க அவரின் இசைத்தளத்திற்கு 
செல்லவும்.
IMAX இல் இவர்கள் அளித்துள்ள இந்தப் படைப்பு என்னைக் கவர்ந்ததுப்போல உங்களையும்  கவரும் என்பதில் ஐயமில்லை!


விடியோவை  720p HD செலக்ட் செய்துக்கொண்டு பார்க்கவும்.....
மீண்டும் சந்திப்போம்....


ஞாயிறு, 9 அக்டோபர், 2011

'ஆறு டிகிரி போதும்...!'


கீழ்வரும் முதல் எட்டுப் படங்களின் பின்னணியை மட்டும் கூர்ந்துப்  பார்த்து, இடங்களைக் கண்டுப்பிடிக்கவும்... தயவு செய்து அதில் உள்ள ஆட்களை கண்டுக்கொள்ள வேண்டாம்.

மேலேயுள்ளப் படங்களும், கீழே நாம் பார்க்கப்போகும் காணொளியும் நிறைய எழுதுவதற்கு வேலையில்லாமல் செய்துவிட்டன!
சென்ற வாரம் நான் பார்த்த, நேஷனல் ஜியாகரப்பியின் "Six Degrees Could Change the World” என்ற உலக வெம்மைப் பற்றிய அருமையான காணொளியை உங்களுடன் பகிந்துக்கொள்ள விரும்புகிறேன். 'ஆறு டிகிரி போதும்...!', இந்த உலகை மாற்ற.... எப்படி...? நன்றாகவா...? அதுதான் இல்லை. நாசமாக்க! உலக வ்வேப்ப நிலையில் ஒரு டிகிரி ஏற்றம் கூட மோசமான விளைவுகளை ஏற்ப்படுத்தும். இதில் ஆறு டிகிரி எனபது, உலகின் வாழ்வியலையே தலைக்கீழாக மாறக்கூடிய விளைவை ஏற்ப்படுத்தும். இன்னும் முப்பது வருடங்களில் மோசமாகவும், நூறு வருடங்களில் 11 டிகிரிகள் உயரக்கூடிய அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் அச்சப்படுகின்றனர்! 

மார்க் லைனாஸ் (Mark Lynas) எழுதிய 'Six Degrees: Our Future on a Hotter Planet ' என்ற புத்தகத்தை அடிப்படையாகக்கொண்டு, ஹாலிவூட் நடிகர் ' அலெக் பால்ட்வின்' (Alec Baldwin) அவர்களின் வர்ணனையோடு, அட்டகாசமான கிராபிக்ஸ் காட்சிகளுடன், உலக வெம்மையின் பாதிப்புகளை, நம் கண்முன்னே கொணருகிறது இந்தப் படம். இந்தப் படம் நமக்கு ஒரு எச்சரிக்கைப் பாடமாக இருக்கும் எனபது நிச்சயம்!

Mark Lynas

 Alec Baldwin


வாங்கப் படம் பார்க்கலாம்......

திங்கள், 3 அக்டோபர், 2011

சாப்பாடு தயார்....மனம் நெகிழ வைக்கும் அருமையான குறும்படம்.... 

"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது."

திரு மு.வரதராசனார் உரை
இல்வாழ்க்கையின் அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழக்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.

திரு மு.கருணாநிதி உரை
இல்வாழ்க்கை பண்புடையதாகவும் பயனுடையதாகவும் விளங்குவதற்கு அன்பான உள்ளமும் அதையொட்டிய நல்ல செயல்களும் தேவை.

திரு சாலமன் பாப்பையா உரை
மனைவி பிள்ளைகளிடத்தில் அன்பும், தேடிய பொருளை நட்பு சுற்றங்களுடன் பகிர்ந்து கொள்ளும் அறமும் இருந்தால் இல்வாழ்க்கையின் பண்பும் அதுவே; பயனும் அதுவே.


வாழ்த்துக்கள்!, இயக்குனர். திருமதி.நிதுனா நெவில் தினேஷ்.[Mrs.Nithuna Nevil Dinesh]

['இந்தக் காணொளியைப் பார்த்துவிட்டு ஒரு சொட்டுக் கண்ணீர் விடாதவன்


 மனுஷனேயில்லை' என்று எழுதலாம் என்று இருந்தேன்... அடடா 


எழுதிவிட்டேனே...! உண்மைதானா  நண்பர்களே....?! நீங்களே சொல்லுங்கள்.....]  
ஆப்ரிக்கப் பூனைகள்! [video]நான் இதுவரைப் பார்த்த விலங்குகள் சம்பந்தமான ஆவணப்படங்களிலேயே என்னை மிகவும் கவர்ந்த காணொளி என்று, இந்த 'African Cats' என்ற இந்தப்படத்தைக் கருதுவேன். சாதாரண விவரணப் படம் போலில்லாமல், நம்மையெல்லாம் காட்சிகளோடு ஒன்றிப்போகவைக்கும் மூன்றுக் கதைகளைக் கொண்டுள்ளது! மனதை நெகிழவைக்கும், தாய் விலங்குகளின், குட்டிகளின் மீதான அன்பைக் காணும்போது நம்மையறியாமல் நம் கண்கள் ஈரமாவதை உணர்வோம். அதற்காக வெறும் அழுகாச்சிப்  படம் என்று நினைக்க வேண்டாம்...அட்டகாசமான ஆக்க்ஷன் காட்ச்களும் உண்டு! வால்ட் டிஸ்னி உருவாக்கியுள்ள இந்தப்படம், அவர்களின் முந்தைய பாக்ஸ் ஆபீஸ் ஹிட் கார்டூன்  படமான 'Lion King' கையே, இந்த நிஜ சிங்கப்படம்  தூக்கிச் சாப்பிட்டுவிட்டது என்றேக் கூறலாம்!

ஆப்ரிக்காவில் சவனாக்கள் எனப்படும் புல்வெளிகளின் வசிக்கும் இரண்டு சிங்கக் கூட்டங்கள் மற்றும் ஒரு சிறுத்தைத் தாய், அதன் குட்டிகளை சுற்றிச் சுழலும் இந்தப் படத்தில் உள்ள அனைத்து மிருகங்களும், ஏதோ 'ஆக்க்ஷன் - கட்' சொன்னதுப்போல் படமாக்கப்பட்டிருக்கும் விதம் பிரமிக்கவைக்கிறது. அதிலும் கேமராக் கோணங்கள் ... அடடா...! கண்களில் ஒத்திக்கொள்ளவேண்டும் போல இருக்கிறது! அதிலும் சிறுத்தைதாய் அதன் சில குட்டிகளைப் பறிக்கொடுத்துவிட்டு, அந்த மாலை வேளையிலே ... அந்த மண்மேட்டின் மீது அமர்ந்திருக்கும் காட்சி... சான்சே இல்லை! இந்தப் படத்தில் யானைகள், ஓநாய்கள்,ஒட்டகச்சிவிங்கிகள், காட்டெருமைகள், போன்றவைகள் வந்தாலும் சிங்கங்களும் சிருத்தைகளும்தான் கதாநாயகர்கள்.

போதாக்குறைக்கு வர்ணனை வழங்குவது சாமுவேல் எல் ஜாக்சன்! (Samuel l. Jackson). 
நடிப்பில் தூள் கிளப்பிய இவர், வர்ணனையிலும் கலக்கியுள்ளார்!


என்னைக்  கவர்ந்த இந்தக் காணொளி, உங்களையும் கவரும் எனபது நிச்சயம்!  


படத்தின் ட்ரைலர் ...