செவ்வாய், 26 ஏப்ரல், 2011

நேஷனல் ஜியாகரபியின் ' ஜப்பானிய பேரழிவு : ஒரு சாட்சி !'



கடந்த மார்ச், பதினோரம்தேதி, உலகின் நான்காவது பெரிய பூகம்பத்தையும், அதன் விளைவால் ஆர்பரித்து எழுந்த சுனாமி, ஜப்பானின் கிழக்குக் கடற்க்கரை நகரங்களையும், சிற்றூர்களையும் துவம்சம் செய்ததை உலகமே வாயப்பிளந்து, அதிர்ச்சியில் உறைந்துப்போய்த் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிப்பரப்பாக கண்டது. அதன் பிறகு ஒவ்வொரு செய்தி நிறுவனமும், தன பாணியில்,அந்த இயற்கையின் கோரத்தாண்டவத்தை விவரித்தன.  அப்படி சேனல் 4 நிறுவனம் ஒளிப்பரப்பிய ' ஜப்பானிய சுனாமி: நடந்ததது என்ன?' என்றப்பதிவில் பார்த்தோம்.




இப்போது நேஷனல் ஜியாகரபிக் நிறுவனம் வழங்கிய ' ஜப்பானிய பேரழிவு : ஒரு சாட்சி.'  [Witness Disaster in Japan] என்ற நம்மையெல்லாம் உலுக்கும் ஒரு காணொளியைக் காணப்போகிறோம். அமெச்சூர் வீடியோகிராப்பர்கள், செய்தி நிறுவன வீடியோக்கள், சுற்றுலாப்பயணிகள் போன்றோர்களின் வீடியோப்பதிவுகளை ஒன்றிணைத்து, ஒருத் திரைப்படத்தைப்போல, கால நேரத்தோடு, பல இடங்களில் நிகழ்ந்தவைகளை திறம்பட தயாரித்துள்ளார்கள். இதை ஆக்கியவர்கள் முன்பு அமெரிக்காவை அதிரச்செய்த கேத்ரினா என்றப் புயலை பற்றிய காணொளியான, 'Witness Katrina'வை பதிவு செய்தவர்களேத்தான்! 

national geographic - witness disaster in japan by videopedia

கலர்ஃபுல் கடலுலகம்!






எங்கோ தூரத்தில் இருக்கும் நிலவைப்பற்றிய நம் அறிவைவிட, நம் கூடவே இருக்கும் ஆழ்க்கடலைப்பற்றிய அறிவு மிகவும் குறைவே! ஆம். நம்ம கடலுலகம் மேலே பூமியில் இருக்கும் அற்புதங்களையும், விசித்திரங்களையும் விட அதிகமானவைகளை அடக்கிக்கொண்டு சில இடங்களில் ஆர்ப்பரிப்புடனும், சில இடங்களில் ஆழ்ந்த அமைதியுடனும் காட்சியளிக்கிறது. இதை ஒரு 'ஏலியன் உலகம்'(Alien World) என்றும் அழைக்கலாம்! அப்படிப்பட்ட அற்புத உலகத்துக்கு நம்மையெல்லாம் அழைத்துச் செல்கிறார்கள், பிரபல ஆழக்கடல் கேமராமேன்கள் பியோடெர் பிட்கரின் (Feodor Pitcarin) மற்றும் பாப் க்ரேன்ஸ்டன் (Bob Cranston). அமெரிக்காவின் அறிவுக்களஞ்சியங்களில் ஒன்றாகத் திகழும் ஸ்மித்சோனியன் நிறுவனம் (Smithsonian Institution), இந்த இரு ஆழ்க்கடல் 'அஞ்சாநெஞ்சர்களை' அழைத்து அழிந்து வரும், கடல்வாழ் சுற்றுச் சூழல்களை (ஒருவேளை கடைசியாக...) படம் பிடித்து வருமாறு கேட்டுக்கொண்டது. அதனால் விளைந்ததுத்தான் இந்த 'Ocean Odyssey' என்ற வண்ணக்கோலம்! மிகவும் பிரத்தியேக HD கேமராக்களால் படம்பிடிக்கப்பட்டுள்ள இந்த காவியம், நம் எல்லோர் மனதையும் கொள்ளைக்கொள்ளும்.




 கிரேக்க மொழியில் Odyssey என்றால், நீண்ட சாகசப்பயணம் என்று அர்த்தமாகும். ஆம் இது ஒரு 'சமுத்திர சாகசப்பயணம்!' நம் வாழ்நாளில் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத, Galapagos, Raja Ampat, the Maldives, the Azores, Hawaii, the Caribbean, the Bahamas, the Channel Islands, British Columbia, the Gulf of Mexico, French Polynesia, and Belize போன்ற, உலகின் மிக முக்கிய ஆழ்க்கடல் சூழல்களுக்கு நம்மையெல்லாம் மூச்சுத்திணற அழைத்துச் செல்கின்றனர். வாங்க நாமும் குதிக்கலாம்....  



திங்கள், 18 ஏப்ரல், 2011

நிலாவுல... ஒரு ஆயா வட சுடுறாங்க...!



நான் எடுத்த நிலவின் புகைப்படம்.... Super Full Moon க்கு முந்தய நாள் 
[18/04/2011- Liverpool. UK] 

Super Full Moon அன்று... 19/04/2011 Liverpool.UK

சென்ற பதிவான ' நிலவின் நிழலில்'- அண்ணன் ஜெயதேவ் தாஸ் அவர்கள் பல ஆணித்தரமான கேள்விகளை நகைச்சுவையோடு முன்வைத்திருந்தார். அவருக்கு இந்த பதிவு சமர்ப்பணம்!

சிலக்கேள்விகளுக்கு, தாமதமாகத்தான் விடை கிடைக்கும். கடவுள் உண்டா இல்லையா? என்பதுப்போல்..... நாத்திகர்கள் கூறும் வாதம் மிகவும் அதிரடியாக இருப்பதால், ஆத்தீகர்கள் என்ன சரணடைந்து விடப்போகிறார்களா? ஆனால் என்றாவது ஒருநாள் இரண்டில் ஒன்று உண்மையென்று தெரியத்தான் போகிறது. அதுவரை உண்மை எதுவேன்றுத் தேடுவோம்!

அண்ணன் தாஸ் எள்ளி நகையாடியது.....
Jayadev Das said...

\\இந்த அப்பல்லோ 11 நிலவில் இறங்கிய நிகழ்ச்சியை சுமார் 600 மில்லியன் மக்கள் தொலைகாட்சி மூலமாக கண்டு களித்தது, சார்லஸ்-டயானா திருமணத்தை 750 மில்லியன் மக்கள் கண்டது வரை உலக சாதனையாக இருந்து வந்தது!\\

ம்ம்ம்... உலகத்துலேயே ரொம்ப செலவு பண்ணி எடுத்த சினிமாப் படம் இந்த மனுஷன் நிலாவுக்கு [போகாமலேயே] போயிட்டு வந்தது தான் என்று சிலர் குற்றம் சாட்டுகிறார்களே, அதை நீங்கள் கேள்விப் பட்டதுண்டா? புரளி கிளப்புவதற்கென்றே சிலர் இருக்கிறார்கள், ஆனாலும் இந்த விஷயத்தை பொறுத்தவரை இவர்கள் சொல்வதை நம்பாமலும் இருக்க முடியவில்லை. எத்தனையோ காரணங்களை சொன்னாலும், சில காரணங்கள் மறுக்கவே முடியாத உண்மைகளாகப் எனக்குப் பட்டன.

1. அண்டவெளியில் இருந்து வரும் ஆபத்தான கதிர் வீச்சுகளை [Gamma rays, X-rays, high energy particles etc.,] புவியின் காந்தப் புலம் சிதறடித்து Van Allen Belt என்னும் பகுதிகளில் அதிக பட்ச அளவில் சிக்க வைக்கிறது. இதில் நுழைந்தவன் வெளியே வரும் போது பிணமாகத்தான் வருவான். இதைக் கடக்காமல் நிலாவுக்குப் போகமுடியாது என்று சொல்லத் தேவையில்லை!! http://www.youtube.com/watch?v=nm-xLKIqp9Q.
இதை அப்படியே கடந்து போகணும்னா எட்டு அடி அகலமுள்ள lead சுவர் வேண்டும்.
Jayadev Das said...

2. நிலவில் பகலில் வெப்பநிலை +220 deg C இதுவே இரவில் -180 deg C விண்வெளி வீரர்கள் போட்டிருந்த உடை இதையெல்லாம் தாங்காதுங்கண்ணொவ்.
17 April 2011 17:30 


Jayadev Das
 said...


3. வின் களம் நிலவில் போய் இறங்கும் போது, ராக்கெட் திரஸ்டரில் இருந்து வெளியாகும் எறிந்த வாயுக்கள் ஒரு பெரிய பள்ளத்தையே உருவாக்கியிருக்கும், ஆனால் படங்களில் நிலவு மாடியூல் நிற்க்குமிடம் சமதளமாக உள்ளது, அதனை தாங்கி நிற்கும் நான்கு பீம்களிலும் புழுதி கொஞ்சம் கூட இல்லாமல் அவ்வளவு சுத்தம், நடுவில் உள்ள இடத்தில் , மனித ஷூக்களின் காலடித் தடங்கள் கூட. [வேறென்னா ஸ்டுடியோ வில் அதை தூக்கிக் கொண்டு வந்து வைத்தவனோடதுதான் !!]
17 April 2011 17:30 


Jayadev Das
 said...


4.நிலாவில் கார் ஒட்டினார்கள், நிலவில் காற்று இல்லாததால், கார் சக்கத்திளிருந்து வரும் மண் அறுபது அடிக்கு parabola வடிவில் பறந்து போய் விழ வேண்டும், ஆனால் அவர்கள் காட்டும் படங்களில் எல்லாம் சில அடிகளிலேயே மண் இல்லாம் தடை பட்டு விடுகிறது, அதை தடுப்பது என்ன?
17 April 2011 17:31 


Jayadev Das
 said...


1970 களில் 12 தடவை போயிட்டு வந்த பயல்களுக்கு அதுக்கப்புறம் போக வேண்டிய எண்ணமே வரவில்லையா?

இந்தியா அனுப்பிய சந்திராயன் விண்கலம் நிலவை அத்தனை படமேடுத்ததே, அமேரிக்கா காரன் நட்டு வைத்த கோடி, முதல் காலடித் தடம், ஒட்டிய கார்கள் எல்லாம் அங்கேயே தானே இருக்க வேண்டும், அவற்றை மட்டும் படமெடுக்கவே இல்லையா? # டவுட்டு ஹி ...ஹி ...ஹி ...

====================================================================


அமெரிக்காக்காரன் கதையே இந்த நாறு நாறுதுயென்றால்.... நம்ப ஆளுங்க கதையை என்னவென்றுச் சொல்லுவது?  ஒருவேளை நம்ப ஆளு நிலாவுக்கு போனானோ .... இல்லை அம்மாவாசை என்று திரும்பி வந்துவிட்டானோ...? நான் ஏதோ நம்மை நாமே தரக்குறைவாக நக்கலடிப்பதாக நினைத்துவிட்டால், தயவு செய்து என்னை மன்னிக்குமாறு வேண்டுகிறேன் நண்பர்களே. வெள்ளைக்காரன் எல்லாம் பெரியக் கொம்போ, நாம வெரும்பயலுகளோ இல்லை! நம்ம நாட்டு நிலை அப்படியுள்ளது! இங்கிலாந்து MP தனக்கு ஒதுக்கப்பட்ட பாராளுமன்ற செலவுக்கானப் பணத்தை சொந்த நலனுக்காக செலவு செய்துவிட்டார் என்பதற்கு, 16 மாத சிறைத்தண்டனை பெற்றார்! இது நம்ம நாட்டில் நடக்குமா? அந்த வயித்தெரிச்சலில்தான் அப்படிக்கூற வேண்டியக்கட்டாயம் வந்தது. தவறு என்றால் மீண்டும் மன்னிக்கவும். 



"Did we really land on the Moon?" - Part 1 - Dr Martin Hendry - 

Science Week 2010 lecture









Did we land on the moon ?


Mithbusters: Moon Landing photo hoax









NASA Moon Hoax - Analysis of the Lunar Photography



NASA Moon Hoax - Environmental Dangers & The Trouble





MoonFaker: Why Not Go Back?





MoonFaker: The Flags Are Alive.





MoonFaker: No Crater.





MoonFaker: Radioactive Anomaly.



MoonFaker: All Bets Are On






MoonFaker: The Penny Drops.



MoonFaker: Cats & Elephants




MoonFaker: One Giant Leap.






சனி, 16 ஏப்ரல், 2011

நிலவின் நிழலில்....! (வீடியோ)

1968 தொடங்கி 1972 வரை ஒன்பது அமெரிக்க விண்வெளி ஓடங்கள் நிலவிற்கு சென்று வந்துள்ளன. அதில் சென்ற 12 மனிதர்களுக்கு மட்டும், இதுவரை மனித இன வரலாற்றிலேய, வேறொரு உலகத்தில் கால்பதித்து, நடைப்பயின்றப் பெருமை உள்ளது!  

இந்த 'அப்பல்லோ விண்வெளித் திட்டம்' என்றழைக்கப்பட்ட அறிவியல் அற்புதத்தை, நினைவுக்கூறும் விதமாக, 2007 இல் டேவிட் சிங்டன் மற்றும் 'First Orbit' புகழ், கிறிஸ்டோபர் ரிலே ஆகியோரின் இயக்கத்தில் NASA வின் துணையோடு உருவாக்கப்பட்டப் படம்தான் 'In the Shadow of the Moon'. முதல் சர். ஆர்தர் கிளார்க் அவார்டை தட்டிச் சென்ற மிகச்சிறந்தப்படம்! இந்தப்படத்தின் விசேஷம் என்னவென்றால், நாசாவிடம் இருந்த இதுவரை வெளிஉலகத்துக்குத் தெரியாத பல விடியோக் கிளிப்பிங்குகளைக்கொண்டு, இதுவரை நிலவிலே கால் பதித்து உயிரோடு இருக்கும், அந்த நெஞ்சுரம் கொண்ட வரலாற்று நாயகர்களின் அனுபவங்களை, அவர்களின் வாயாலேயே சொல்லவைத்ததுத்தான்! 

அந்த நாயகர்கள் முறையே அல் பீன், மைகேல் காலின்ஸ், புஸ் ஆல்ட்ரின்,சார்லி டியுக், யூஜின் சேர்னன் மற்றும் ஹாரிசன் ஷ்மிட். இதில் புகழ்ப்பெற்ற நீல் ஆம்ஸ்ட்ராங் மட்டும் பங்குபெற மறுத்துவிட்டாராம்! 


இந்த அருமையான காணொளியைக்  காணுமுன்... சில தகவல்கள்... 


  • முதன் முதலில் நிலவில் கிருஸ்தவ மத சடங்கை நடத்திய முதல் மனிதர்  ஆல்ட்ரின்! அவரின் மத போதகர் கொடுத்தனுப்பிய அப்பத்தையும், திராட்சரசத்தையும் கொண்டு தனக்குத்தானே இராபோஜனம் கொடுத்துக்கொண்டார்!
  • நீல் ஆம்ஸ்ட்ராங் வேண்டுமென்றால் நிலவில் கால் பதித்த முதல் மனிதராக இருக்கலாம், ஆனால் நிலவில் முதலில் சிறுநீர்க் கழித்த முதல் மனிதர் ஆல்ட்ரின்! (டியுப் வழியாகத்தான்... லட்சக்கணக்கானவர்கள் நேரடி ஒளிபரப்பின் மூலம் பார்த்துக்கொண்டிருக்கும்போது!)
  • இவர்கள் பூமிக்கு வந்து தங்கள் பாதுகாப்புக் கவசத்தை கழற்றியப்போது 'ஈரமான சாம்பலின் வாசனை வந்தது' என்று ஆம்ஸ்ட்ராங்கும், 'வெடிக்கப்பட்ட துப்பாக்கி மருந்தின் வாசனை ' என்று ஆல்ட்ரினும் கூறினார்! ஆனால் அந்த வாசனை வந்தது அவர்களின் காலனிகளில் ஒட்டியிருந்த நிலவின் தூசியில் இருந்து...!
  • பூமிக்கு திரும்பும் வேளையில், விண்வெளிக்கலத்தை மேலே உந்தவைக்க இயக்கப்படவேண்டிய ஒரு விசை தற்செயலாக ஒடிந்துவிட்டது. அதை ஒரு பேனாவை கொண்டு இயக்கியுள்ளனர்! அதை ஓடித்தவர்... மீண்டும் நம்ம ஆல்ட்ரின்தான்!
  • இந்த அப்பல்லோ 11 நிலவில் இறங்கிய நிகழ்ச்சியை சுமார் 600 மில்லியன் மக்கள் தொலைகாட்சி மூலமாக கண்டு களித்தது, சார்லஸ்-டயானா திருமணத்தை 750 மில்லியன் மக்கள் கண்டது வரை உலக சாதனையாக இருந்து வந்தது!
  • நிலவில் இருந்து வந்தவர்கள் தங்களுடன் ஏதாவது கிருமிகளை கொண்டுவந்துவிட்டிருப்பார்களோ என்ற பயத்தில், அவர்கள் கட்டாய தனிமைப் படுத்துதலுக்கு உட்படுத்தப்பட்டார்கள்!
  • நிலவிலே அவர்கள் செய்த கடினமான வேலை... நிலவின் தரையில் அமெரிக்கக் கொடியைப் பதிப்பது! ஏனென்றால் நாசாவின் ஆராய்ச்சி கூறியதுப்போல்அதன் தரை மிருதுவாக இல்லை. கொஞ்ச கஷ்டப்பட்டுத்தான் கோடியை நாட்டியுள்ளார்கள்!
  • அப்பல்லோவின் பயணக்காலம் மூன்றரை நாட்கள்! அவர்கள் நிலவில் இருந்தக்காலம் 21 மணிகளுக்கு கொங்க அதிகம்!
  • பூமியில் மூன் வாக்கை (Moon Walk ) மைகேல் ஜாக்சனுக்கு,நிலவுக்கு நிஜ Moon Walk பண்ணவேண்டும்  என்ற ஆசை இருந்ததாம்!
இந்தத் திரைப்படத்தின் வலைத்தளம்...

நன்றி.


புதன், 13 ஏப்ரல், 2011

விண்வெளிப் பொன்விழா!











"Поехали! / Let's Go!" 




வோஸ்டாக் விண்வெளிக்கலம் வெடித்துக்கிளம்பியப்போது, யூரி ககாரின் 

கூறிய உற்சாக வார்த்தைகள்! 

மனித இன வரலாற்றிலே, கர்மன் கோடு (Karman Line) எனப்படும், பூமியின் வளிமண்டல எல்லைக்கு மேலேத் (கடல் மட்டத்துக்கு மேல் 100 km/62 mile உயரம்) தொடங்கும் விண்வெளியில் பறந்த முதல் மனித உயிர் யூரி ககாரின் என்ற ரஷ்ய விண்வெளிவீரர்! அவர் விண்வெளிக்கு சென்றுவந்து நேற்றோடு (12/04/1961) ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்த நாள்! மனிதனின் பிரபஞ்சத் தேடலில் ஒரு சிறிய ஆனால் முக்கியமானத் தாவல்!

அப்படிப்பட்ட சிறப்பான நாளை கொண்டாடத்தான் இந்த சிறப்புப் பதிவு! ஆகவே இப்போது யூரி காகரினைப் பற்றிய சில தகவல்கள்....

யூரி விண்வெளிக்கு சென்று திரும்பியவுடன் அவருக்கு ஏகப்பட்ட பாராட்டுக் கடிதங்கள் வந்துக் குவியத்தொடங்கின. ஆகவே அவருக்காகவே ஒரு தனி பின்கோடு வழங்கப்பட்டது! 
அது Moscow 705 !
பயிற்சி அளிக்கப்பட 20 பேரில், யூரி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு அவரின் உயரக்குறைவும் ஒருக்காரணம்! ஏனென்றால் வோஸ்டாக்கின் காக்பிட் மிகவும் சிறியது!  

அவர்தான் பயணம்மேற்கொள்ளுகிறார்  எனபது நான்கு நாட்ககுக்கு முன்புதான் முடிவு செய்யப்பட்டது!

ராக்கெட் கிளம்புவதற்கு சுமார் 90 நிமிடங்களுக்கு முன்பு அதில் ஏறி அமர்ந்தார். அங்கு அவர் ஏதோ இசையை ரசித்துக்கொண்டு இருக்கும்போது, அவர் மேஜராக பதவிஉயர்வுப் பெற்றது அறிவிக்கப்பட்டது! 

அவரின் இந்த சிறப்புமிக்க விண்வெளிப் பயண நேரம், மொத்தமாக 108 நிமிடங்கள்!   

அவர் திரும்பி வந்தவுடன் அவருக்கு சோவியத் ரஷ்யாவின் மிக உயரிய விருதான 'லெனின் விருதும்', Hero of the Soviet Union என்ற விருதும் வழங்கப்பட்டன.

வோஸ்டாக் தரையிறங்கிய இடமான சரடோவ் என்ற இடத்தில் 120 அடி உயரத்தில் அரு நினைவு ஸ்துபி நிறுவப்பட்டுள்ளது.

ரஷ்ய நாணயங்களில் அவரின் உருவம் பொறிக்கப்பட்டு  பெருமைப்படுத்தப்பட்டார்!

பிற்காலத்தில் நிலவுக்கு சென்ற விண்வெளி வீரர்கள், அவரின் பதக்கங்களில் ஒன்றை நிலவிலேயே வைத்துவிட்டு வந்தனர். மற்றும் நிலவின் மறுபுறத்தில் ஒரு கிரேட்டர் எனப்படும் பள்ளத்துக்கு அவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது!

இப்படி உலகையே முதலில் சுற்றிவந்த மனிதர், ஒரு சிறிய விமானவிபத்தில், தனது 34 வது வயதில் மரணமடைந்தார்!





"Yuri Gagarin: The man who fell to Earth" ஒரு சுவாரசியமானக் கட்டுரை.... படித்துப்பாருங்களேன்!







இந்தப் பொன்விழா ஆண்டைக் கொண்டாட 'ஐரோப்பிய விண்வெளிக் கழகமும்' 'சர்வதேச விண்வெளி நிலையமும்' கைக்கோர்த்து 'முதல் சுற்று' [ First Orbit ] என்ற, சுமார் ஒன்றரை மணி நீளமுள்ள காணொளியை உருவாக்கியுள்ளனர்! இந்தக் காணொளி நமக்கு இலவசமாக, நம்ம வாழ்நாளிலேயே காண கொடுத்துவைத்திருக்கவேண்டும்! ஏனென்றால் நம்மால் நினைத்துக்கூட பார்க்கமுடியாத, நிஜ பூமியின் கிடைத்தற்கரியக் காட்சிகள் விண்வெளி நிலையத்திலிருந்து HD தரத்தில் படமாக்கப்பட்டுள்ளன! இதில் நடுவே யூரி காகரினின் உரையாடல், அருமையான பின்னணி இசையுடன்! அதுவும் யூரி ஐம்பது வருடங்களுக்கு முன் பயணம் மேற்கொண்ட அதேப்பாதையில்.... அதே நேரத்தில்... ஒரே அட்டகாசம் போங்க!

அவர்களின் வலைத்தளம் இங்கே....





படமாக்கிய பின்னணிக் கதை....





First Orbit முழுக் காணொளி....



உலகை மாற்றிய 108 நிமிடங்கள் ....



சுற்றுப்பாதையில் ஐம்பது வருடங்கள்.....




"வாழ்ந்தாலும் ஏசும்... தாழ்ந்தாலும் ஏசும்" என்பதர்க்கேற்ப, விண்வெளிக்கு சென்றது யுரியே இல்லை, விலாடிமிர் இலியுஷின் என்ற மற்றொரு பைலட்தான்
என்று வேறொருக் கோணத்தில் செய்திகள் உலாவருகின்றன. அதைப்பற்றிய காணொளி இது....



எது உண்மையோ,பொய்யோ ... மனிதன் முதலில் விண்வெளியில் வலம் வந்தது கொண்டாடப்படவேண்டிய ஒன்றே! ஆகவே நாமும் கொண்டாடி, அந்த வரலாற்று நாயகர்களைப் போற்றுவோம். அதற்காகவே ஒரு குரூப் சேர்ந்து 'யுரியின் இரவு' [Yuri's Night ]  என்றப் பெயரில் கொண்டாடுகின்றனராம்! நம்ம வேலூர், கோயம்பத்தூர், மற்றும் பெங்களூர் பெயரை அந்த வலைத்தளத்தில் பார்த்தேன்! என்ன எதுவென்று கொஞ்ச விசாரியுங்கள் நண்பர்களே....!  

ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

பூமியின் கருவை நோக்கி ஒருப்பயணம் !


[பாகன் செராய் தமிழ்ப்பள்ளி மாணவ மாணவியர்க்கு இந்தப் பதிவு  சமர்ப்பணம்... நல்லாப் படிங்க... தாய்த்தந்தை ஆசிரியர் மற்றும் மூத்தோர்களை மதித்து வாழுங்கள்! ]

கொஞ்ச நாளுக்கு முன்னாடி நம்ம கேலக்சியில் ஒரு விண்வெளிப்பயணம் மேற்கொண்டோம் ஞாபகம் இருக்கிறதா நண்பர்களே? அவ்வளவு தூரம் பயணம் மேற்கொண்டு பல விஷயங்களைத் தெரிந்துக்கொண்ட  நாம், நாம இருக்கும் பூமியைப் பற்றி எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறோம்? இப்ப நாம் மேற்கொள்ளவிருக்கும் பயணம் பூமிக்கு வெளியே அல்ல ... பூமிக்கு உள்ளே, அதன் கருவை நோக்கி! பலக்கோடி மையில்கள் பூமிக்கு வெளியே பயணித்துள்ள மனிதன், நம்மபூமியினூடே சென்றிருப்பது மிகவும் சிறிய அளவேத்தான்! ஹிஸ்டரி சேனலுக்கு நன்றி. நம்மையெல்லாம் 4000 மையில்கள் கீழே அழைத்துச் செல்வதற்கு. Journey to the Earth's Core என்ற அருமையான வீடியோவைத்தான் நாம் இப்போதுப் பார்க்கப்போகிறோம். 


6371 கிலோமீட்டர் உள்ளே செல்லவேண்டும் பூமியின் கருவைத்தொட. தற்போதைய தொழில்நுட்ப்ப வசதியைப் பொருத்தமட்டில் கிராபிக் கற்பனை மூலமாகத்தான் செல்ல முடியும். வருங்காலத்தில் எப்படி என்றக் கேள்விக்கு விஞ்ஞானம்தான் விடைக்கூரும்.அதற்கு முதல்படி இங்கே! 

ஒருக் காரையே தலைமேல் தூக்கக்கூடிய சக்தியுள்ள மனிதனும், ஒரு எறும்பும் சமம் !
இறந்த மனிதனை ஆறு அடி ஆழமுள்ள குழியில் புதைக்கும் பழக்கம் எப்படி வந்தது?
பாகன் செராய் தமிழ்ப்பள்ளியில் படிக்கும் மாணவமணிகளே, உங்கள் மலேசியாவின் பெட்ரோனாஸ் டவர் கட்டிடம் மணல்மேல் கட்டப்பட்டது எப்படி என்று உங்களுக்குத் தெரியுமா?

'என்ன இது சம்பந்தமில்லாமல்...' என்றுக் கேட்கிறீர்களா? இப்படித்தான் இந்த வீடியோ முழுவதும் நிறைய சுவையான, அறிவுப்பூர்வமான விஷயங்களை அள்ளித்தெளித்துள்ளார்கள்!  

இது சம்பந்தமான சில லிங்குகள்....

KIDS GEO

WIKKI

NASA 

LEARNER

MSN 

எங்கு சென்றாலும் போகும்போது ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போங்க.... நன்றி!




வெள்ளி, 1 ஏப்ரல், 2011

ஜப்பானிய சுனாமி : நடந்தது எப்படி? [வீடியோ]


சமீபத்தைய ஜப்பானிய பூகம்பம் மற்றும் சுனாமி பற்றி நிறையப் படித்தாகிவிட்டது. ஆகவே இந்தப் பதிவில் கொஞ்ச புகைப்படங்களையும் சேனல் 4 தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பப்பட்ட '  Japans Tsunami: How It Happened ' என்ற காணொளியையும் பகிர்ந்துக் கொள்கிறேன்.
இந்தக் காணொளியில், பேரழிவு நடந்த அடுத்தநாள் ஜப்பானுக்கு விரைந்த புவியியல் விஞ்ஞானி  பேரா. ரோஜர் பில்ஹாம்முடன் (Prof.Roger Bilham)  நாமும்  பயணிக்கிறோம். இவர் நமக்கு 'ஹெயிட்டி பூகம்பம்: ஏன்... எதற்கு...எப்படி? ' என்றப் பதிவில் உள்ள வீடியோ மூலம்  ஏற்கெனவே அறிமுகமாகி இருக்கிறார்.  அவருடன் பாதிக்கப்பட்ட பகுதிகளில்  விமானம் மூலம் பார்த்து அவரின் விளக்கங்களை தெரிந்துக் கொள்ளப்போகிறோம். அவருடன் மட்டுமல்லாது, புகழ்ப்பெற்ற பத்திரிக்கையாளரான கல்லும் மேக்ரேவோடு (Callum Macrae)  சேர்ந்து, நாமும் அழிந்துப்போன இடங்களில் தப்பிய மக்களை சந்திக்கிறோம். வாங்க போகலாம்....

நண்பர்களே, இவ்வளவு களேபரம் நடந்தும் டோக்கியோ நகர மக்கள் தங்கள் வரியை செலுத்த வரிசையில் நின்றுக்கொண்டிருந்தனர் என்ற The Economist பத்திரிக்கையின் செய்தியைக்கண்டு என் கண்கள் பனித்தன.....! உங்களுக்கு....?
































போதும்.... வீடியோவைப் பார்க்கலாம் வாங்க.....