வியாழன், 26 ஜனவரி, 2012

என்றென்றும் ராஜா.[கடைசி பாகத்துடன் Updated]


பழையப் படம்... சும்மா ஒரு ஜாலிக்கு...


சில விஷயங்கள் அபூர்வமாகத்தான் நிகழும் ... குறிஞ்சிப்பூ பூப்பதைப்போல! இசை ஞானியின் நேரடி இசை நிகழ்ச்சியும் அதுப்போலத்தான்.  நிகழ்ந்தேவிட்டது! எத்தனைக்கோடித் தமிழர்களின் கனவாக இருந்தது... நனவாக,நிஜமாக மாறியேவிட்டது! இசை ஞானியின் வாழ்வில் சமீபத்தில் நிகழ்ந்த துக்க நிகழ்வான அவரின் துணைவியார் திருமதி. ஜீவா அவர்களின் மறைவுக்குப் பிறகு அவர் பங்குபெற்ற இசை நிகழ்ச்சி என்பதால்,மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக எதிர்ப்பார்கப்பட்டது. ( 'ஒரு ஜீவன் அழைத்தது' பாடலின் இடையே அவர் தன் கண்ணீரை துடைத்துக்கொண்டபோது, நம் நெஞ்சம் கனக்கிறது.)

ஜெயா டிவி இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு, உலகத்தமிழர்களிடம் மீண்டும் ஒருமுறை கரகோஷத்தை பெற்றுள்ளது. உலக இசைஞானி ரசிகர்களின் சார்பாக, இந்த பகிர்வின் மூலமாக ஜெயா டிவி நிர்வாகத்துக்கு நமது நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுகிறோம். 

இப்போது நீங்கள் பார்க்கப்போது,ஜெயா டிவியின் 'என்றென்றும் ராஜா ' நிகழ்ச்சித் தொகுப்பை... எந்த விளம்பர தடங்கலுமில்லாமல்... யூ டியூப் வாயிலாக... இரண்டேப் பகுதிகளாக... நல்ல HD தரத்துடன்...!(அப்லோட் பண்ண நண்பருக்கு கோடி வணக்கங்கள்!) சுத்தத் தங்கத்துக்கு, சர்டிபிகேட் எதற்கு...?! வயலின்கள், செலோக்கள், கிட்டார்கள், கீ போர்டுகள், புல்லாங்குழல்கள், தபேலாக்கள், மிருதங்கங்கங்கள், மேளம், ஷேனாய்கள், டிரம்பெட்டுகள், ட்ரம்சுகள் போன்ற 'நிஜ' இசைக்கருவிகளின் மத்தியிலும், ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த மேற்க்கத்திய இசைக்கலைஞர்களுடன் நம்ம  ஐயா பாலமுரளி, எஸ்.பி.பி., கே.ஜே.ஜே., சித்ரா, ஹரிஹரன்,உமா ரமணன், தீபன்  போன்ற ஜாம்பவான்களின் இடையே, நம் இசைஞானியோடு கைக்கோர்த்து உலாவரலாம்...! வாங்க...! 


போதும்...
ஸ்டார்ட் ம்யூஸிக் !
[480p resolution இல் வைத்து பாருங்கள் நண்பர்களே...!] 

இதில் இன்னொரு கடைசி பாகமும் உள்ளது... நல்ல தரத்துடன் 


தேடிக்கொண்டிரும்தேன்... கிடைத்தது அதே நண்பர் மூலமாக....


கடந்த இரண்டு பாகங்களைவிட இந்தப் பாகத்தில்தான் சுவாரசியம் அதிகம்....! ரசித்து 

அனுபவியுங்கள் நண்பர்களே...!

4 கருத்துகள்:

கக்கு - மாணிக்கம் சொன்னது…

கரும்பு தின்ன கூலியாவேண்டும்?

கடந்த இரண்டு நாட்களாக நான் உங்கள் பதிவில் மட்டுமே இருக்கிறேன். வேறு எங்கும் செல்ல மனமில்லை.

தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை சொன்னது…

460p resolution இல் வைத்து பாருங்கள் நண்பர்களே...!

Please change to 480P

Thanks for sharing such nice Links!!!

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் சொன்னது…

சுட்டலுக்கு நன்றி....தமிழா...(ஜனா..தானே?!) மாற்றிவிட்டேன்.

Parthiban Ponnusamy சொன்னது…

மிக்க நன்றி...! வாழ்க இளையராஜா..!