திங்கள், 19 மார்ச், 2012

சூரியப் புயல்.


ஏற்கனவே நாம் கொஞ்ச நாளைக்கு முன் பார்த்த விஷயம் தான்...'சூரிய சுனாமி' என்றப் பெயரில்! இந்த முறை அதே ஆபத்தைப் பற்றி மறுபடியும் ஒருப் பதிவு. சென்றப் பதிவுக்கும் இந்தப் பதிவுக்கும் இடையே ஆனா நாட்களில், உலகம் இன்னும் கொஞ்சம் சீரியசாகக் கவலைப்பட ஆரம்பித்து உள்ளது.

தற்போதுள்ள வளைகுடாப் பிரச்சனைகள், உலக பொருளாதார வீழ்ச்சி, பல்லாயிரம் அப்பாவித் தமிழர்களைக் கொன்ற கொலைக்காரப்  போர்க்குற்றவாளிகளை தண்டனைக்குள்ளக்கும், உலகின் சிறிதளவேனும் மிந்த நேயம் மிஞ்சியுள்ள நாடுகளின் துரித முயற்சி, உலக வெப்பமயமாதல் போன்ற பல முக்கியமான பிரச்சனைகளுக்கு மத்தியில், மிகப் பெரும் தொழில்நுட்ட்பப்  அச்சுறுத்தலாக உருவாகி வருகிறது!



நம்மையெல்லாம் காத்துவரும், நம் அண்டை நட்சத்திரமான சூரியனே நமக்கு மிகப் பாதகமானச் செயலை செய்யலாம் என்ற அச்சம் உலக மக்களை உலுக்கிவருகிறது! இதை எவ்வளவு கடுமையான அச்சுறுத்தலாக கொள்ளவேண்டும் எனபது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றது.

வலையில் உலாவும்போது ' SOLAR STORM WARNING ' என்ற வலைத்தளத்தை காண நேர்ந்தது. அதில் உள்ள கருத்துக்கள் ஏதோ மக்களை பயமுறுத்துவதற்காக உருவாக்கப்பட்டதாகத் தோன்றினாலும், அதிலுள்ள பல விஷயங்கள் விஞ்ஞான உண்மைகளாகவேத் தென்படுகிறது. அதை நீங்களும் காண இங்கே....


நமது முந்தைய பதிவான ' சூரிய சுனாமி 'யிலும் நிறைய செய்திகள் சிதறியுள்ளன... அதைக் காண இங்கே

சமீபத்தில் நான் பார்த்த பிபிசியின் ' Solar Storms - The Threat to Planet Earth ' காணொளி, இந்த ஆபத்தைப் பற்றி மிகத் தெளிவாக அலசியுள்ளது. அதையும் உங்களுடன் பகிர்ந்துக்கொள்ளுகிறேன்...



Solar Storms: The Threat to Planet Earth by silichip

2 கருத்துகள்:

பொன் மாலை பொழுது சொன்னது…

Amazing, rare and informative.
One of the very very rare efforts in "typical" Tamil bloggers.
Congrats dear Edwin. Carry on.

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் சொன்னது…

கண்டிப்பாக கக்கு... நன்றி!