திங்கள், 17 டிசம்பர், 2012

21.12.2012 உலக அழிவு பற்றி நாசாவும், சில நேரலைக் கேமராக்களும்...!


வருகின்ற 21.12.2012 அன்று, நமது உலகம் அழியப்போகிறது என்கிற கூற்று நடக்கப் போகிறது இல்லையோ... அது சம்மந்தமாக கேள்விப்பட்டு, சுய நினைவோடு இருப்பவர்களுக்குள்ளே ஒரு சிறியத் தாக்கதையாவது ஏற்படுத்தி இருக்கும் எனபது மறுக்கவோ அல்லது மறைக்கவோ முடியாத உண்மை.

21 ஆம் தேதி நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில், நாசா நிறுவனம், வரும் 22.12/12 அன்று வெளியிடப்படவேண்டிய ஒரு காணொளியை, பத்து நாட்களுக்கு முன்பே வெளியிட்டு அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளார்கள்! அது உங்களின் பார்வைக்கு...அந்த 21 ஆம் தேதி Winter Solstice எனப்படும் கதிர் மண்டலத் திருப்புமுகம். நம்ம ஊர்ல ' மகர சங்கராந்தி' என்றுக் கூறுவார்களே அதேதான்.

இவைகளைப்பற்றி உலகின் அறிவியல் ' அத்தாரிட்டி'யாகத் திகழும் நாசா நிறுவனம் கூறுவது என்ன என்பதை இந்த லிங்க்குகளில் சென்றுப் பார்க்கலாம்....

 Beyond 2012: Why the World Won't Endமேலும் இதைப்பற்றிய நாசா விஞ்ஞானிகளின் ஒரு கலந்துரையாடல் ...
                                                                *****

என்னதான் சொன்னாலும் உலகம் முழுவதும் ஒரு வித பயம் கலந்த பரபரப்பு காணப்படுகிறது. ஏதாவது நடக்குமா என்ற எதிர்ப்பார்ப்பில் இருப்பவர்களுக்காக உலகிலுள்ள சில நேரலை கேமராக்களை பரிந்துரை செய்துள்ளன சில வலைத்தளங்கள். அவற்றில் சில...

அமெரிக்காவின் ஹன்ட்ஸ்வில்லியில் உள்ள மார்ஷல் விண்வெளி நிலையத்தில் வான மண்டலத்தை நோக்கிப் பொருத்தப்பட்டுள்ள கேமரா...நியூ யார்க் நகரின் வானளாவிய கட்டிடங்களை காட்டும் நேரலைக் கேமரா...ஆப்ரிக்காவின் போட்ஸ்வானா நாட்டிலுள்ள ' மஷாட்டு விலங்குகள் சரணாலயத்திலுள்ள 'பெட்ஸ் பாண்ட் ' என்ற குலத்தைக் காட்டும் நேரலைக் கேமரா... 
அமெரிக்காவின் கலிபோர்னியாவிலுள்ள சான்டா க்ருஸ் கடற்கரையில் பசிபிக் பெருங்கடலை நோக்கிப் பொருத்தப்பட்டுள்ள நேரலைக் கேமரா...
அமெரிக்காவின் கொலரெடொ மாகாணத்தின் க்ரிலே நகரில், ராக்கி மலைகளை நோக்கிப் பொருத்தப்பட்டுள்ள நேரலைக் கேமரா...

கடைசீயா (?!) ஒரு ஜோக்...


சரி நண்பர்களே... மீண்டும் 22.12.2012 அன்று சந்திப்போம். Best of Luck...!