வெள்ளி, 17 ஜூலை, 2009

பிரபஞ்ச எல்லைவரை ஒருப் பயணம் (வீடியோ)
Space/Universe என்று அழைக்கப்படும் பிரபஞ்சம் அல்லது அண்டம்ரப எப்படி இருக்கும், எத்தனைப் பெரியது என்று முழுவதுமாக இதுவரை யாரும் கற்பனைக் கூடப் செய்துப் பார்த்திருக்க முடியாது. ஏனென்றால் அதன் பரிமாணங்கள் மனிதனின் தற்போதைய அறிவிற்கு அப்பாற்பட்டவைகள். ஆனால் விஞ்ஞானம் பிரபஞ்சத்தைப் பற்றிய ஒரு துளியளவு விளக்கம் கூற முயன்றிருக்கிறது. இந்த வீடியோவில் அதைப்பற்றிப்  பார்க்கலாம். அதற்க்கு முன் நாம் ஒளி, ஒளிவருடம் போன்றவைகளைப் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டும். (ஒளி, வேகம்,நேரம்  இவைகளைப்பற்றி வேறொரு பதிவில் தனியாகப் பார்க்கலாம்.)
மனிதனின் தற்போதைய அறிவிற்குத் தெரிந்த வரையில் ஒளிதான் (light) மிக வேகமாக பயணிக்கக் கூடியது. அதன் வேகம் ஒரு வினாடிக்கு 299,792,458 கிலோ மீட்டர்கள். அதாவது ஒரு வினாடியில் ஏழு முறை இந்த உலகத்தை சுற்றிவந்துவிடும். கற்பனை செய்துப் பார்க்க முடிகிறதா? இதைப்போல் இதே ஒளி ஒரு வருடம் இதே வேகத்தோட பயணித்தால், எவ்வளவு  payaniththaalpayaniththaal தூரம் செல்லுமோ, அந்த தூரம் தான் 'ஒரு ஒளி வருடம்'. (1 light year). அதாவது மிகச் சரியாக 9,460,730,472,580.8 கிலோமீட்டர்கள்! கண்ணைக் கட்டுகிறது அல்லவா? இந்த ஒளியின் வேகத்தில் சென்றால் 8.32 நிமிடத்தில் சூரியனைச் சென்றடையலாம். 3,76,300 km தூரமுள்ள நிலவை 1.25 வினாடிகளில் சென்றடையலாம். நம்முடைய சூரியக் குடும்பம் இருக்கும் ' பால் வெளி வீதி  மண்டலம்' (சரியா?) Milkeyway galaxy யைக் ஒரு முனையில் இருந்து அடுத்த முனைக்குச் செல்ல ' ஒரு லட்சம் ஒளி வருடங்கள்' ஆகும்! இதுப் போன்ற லட்சக்கணக்கான மண்டலங்கள் உண்டு இந்த பிரபஞ்சத்தில்! அப்படி என்றால் அதன் பிரமாண்டத்தை கற்பனையும் செய்து பார்க்க இயலாது.
சரி இப்போது நாம் நம் பூமியில் இருந்து பிரபஞ்சத்தின் எல்லை வரை ஒரு பயணம் மேற்கொள்ளப் போகிறோம். வழியில் நிறைய ஆச்சர்யங்களையும், அற்புதங்களையும் அதி பயங்கரங்களையும் காண இருக்கிறோம். நான் ரெடி. நீங்க ரெடியா?

இந்த வீடியோவை பார்த்தப் பின், இந்த சிறிய உலகில், மனிதன் பணம்,பதவி,ஜாதி,மத ,இன வெறிக் கொண்டு எப்படியெல்லாம் ஆட்டம் போடுகிறான் என்பதாய் எண்ணிப் பார்க்கும் போது சிரிப்பதா, அழுவதா? என்றுப் புரியவில்லை. இந்த அகண்ட பிரபஞ்சத்தின் முன் அவன் ஒரு தூசுக்குக் கூடச் சமமில்லை என்று எப்போது புரிந்துக் கொள்வான்? பிரபஞ்சத்தின் கால அளவோடு, மனிதனின் வாழ்நாளை ஒப்பிடும்போது கண் இமைக்கும் நேரத்தை விடச் மிகவும் சிறியது என்று என்றைக்குத் தெரிந்துக் கொண்டு அனைவரோடும் அன்போடு இருப்பான்? அந்தக் காலம் வருமா நண்பர்களே?

7 கருத்துகள்:

நிகழ்காலத்தில்... சொன்னது…

\\இந்த சிறிய உலகில், மனிதன் பணம்,பதவி,ஜாதி,மத ,இன வெறிக் கொண்டு எப்படியெல்லாம் ஆட்டம் போடுகிறான் என்பதாய் எண்ணிப் பார்க்கும் போது சிரிப்பதா, அழுவதா? என்றுப் புரியவில்லை. இந்த அகண்ட பிரபஞ்சத்தின் முன் அவன் ஒரு தூசுக்குக் கூடச் சமமில்லை என்று எப்போது புரிந்துக் கொள்வான்? பிரபஞ்சத்தின் கால அளவோடு, மனிதனின் வாழ்நாளை ஒப்பிடும்போது கண் இமைக்கும் நேரத்தை விடச் மிகவும் சிறியது என்று என்றைக்குத் தெரிந்துக் கொண்டு அனைவரோடும் அன்போடு இருப்பான்\\


என் மனதில் இருந்ததை அப்படியே
வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்..

வாழ்த்துக்கள்

வடுவூர் குமார் சொன்னது…

வான சாஸ்திர பதிவுகள்/நகர் படங்களை எவ்வளவு முறை பார்த்தாலும் அலுப்பதில்லை எனக்கு.புது புது பரிணாமங்கள் தெரிகிறது.

தமிழ்நாட்டுத்தமிழன். சொன்னது…

ஆமாம் நிகழ்காலம் அவர்களே, என்றாவது வேற்று கிரகத்தில் இருந்து வேறொரு உயிரினம் வந்து நம் கொட்டத்தை அடக்கினால் ஒழிய நாம் எல்லாம் இந்த பூமியைச் சார்ந்த மனித இனம் என்று ஒத்துக் கொள்ளவே மாட்டார்கள். (அப்போதும் நான் A க்ருப் ரத்தக்காரன், B க்ருப் ரத்தக்காரன் என்று ஆரம்பித்து விடுவார்களோ?)

தமிழ்நாட்டுத்தமிழன். சொன்னது…

சரியாகச் சொன்னீர்கள் வடுவூர் குமார். அடிக்கடி விஜயம் தாருங்கள். அடுத்தப் பதிவு 'கருந்துளைகள்' (Blackholes) பற்றி பார்க்கலாமா?

Nellai nanban சொன்னது…

Really nice one..
Pls visit :http://porunaipayyan.blogspot.com.

give your suggestion,comments,feedbacks..
Thanks,
Guru.

பெயரில்லா சொன்னது…

நல்லாருக்கு பிரபஞ்சப்பிரியன்.

//பிரபஞ்சத்தின் கால அளவோடு, மனிதனின் வாழ்நாளை ஒப்பிடும்போது கண் இமைக்கும் நேரத்தை விடச் மிகவும் சிறியது என்று என்றைக்குத் தெரிந்துக் கொண்டு அனைவரோடும் அன்போடு இருப்பான்? அந்தக் காலம் வருமா நண்பர்களே?//
அறிவியலோடு சமூக நல்லிணக்கத்தையும் பதிவில் புகுத்தியிருப்பது பாராட்டத்தக்கது! இன்னும் இது போன்ற பல ஆச்சரியங்களையும் பற்றி எழுதுங்கள். வாழ்த்துக்கள்!

M.S.E.R.K. சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா.
'மேலிருப்பான்' விளக்கத்தைக் கண்டு நிஜமாகவே மகிழ்ந்தேன். அடிக்கடி சந்திப்போம்.