திங்கள், 30 நவம்பர், 2009

பிபிசிஇன் உயிரினங்கள் : பாகம் 6 (வீடியோ)


சென்ற வீடியோக்களை பார்க்காதவர்களுக்காக ....

பாகம் 1 ' சவாலே சமாளி'- ' Challenges of Life '

பாகம் 2 ' ஊர்வன: உண்மைகள்' - ' Reptails and Amphibians '

பாகம் 3 ' பாலூட்டிகள்' - ' Mammals '

பாகம் 4 ' பறவைகள் ' - ' Birds '

பாகம் 5 ' மீன்கள் ' -  ' Fish '

இப்போது...... ' வேட்டை! '   Hunter and Hunted!

புதன், 25 நவம்பர், 2009

'பிக் பேங்' மெஷின் / LHC .[Updated]




உலகின் மிகப்பெரிய இயந்திரமான LHC எனப்படும் Large Hadron Collider சில நாட்களுக்கு முன் 'மீண்டும்' இயக்கப்பட்டது. இது முதன் முதலில் சென்ற வருடம் ( 10/09/08 ) அன்று இயக்கப்பட்டது. ஆனால் ஒன்பது நாட்களுக்கு பிறகு, அதன் காந்தங்களில் ஏற்ப்பட்ட (£ 24 மில்லியன் செலவு வைத்த: சுமார் 1,85,42,94,240 இந்திய ரூபாய்கள்!) பழுத்தால், கடந்த ஒரு வருடமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த பரிசோதனையைப் பற்றித்தெரிந்த, இரண்டுப்பிரிவாக நிற்கும் மக்கள், இந்தப் பழுதை, இரண்டு விதமாக எடுத்துக்கொண்டனர். 'Fortunate & Unfortunate!'. அதாவது 'அதிஷ்டவசமாக & துரதிஷ்டவசமாக' என்று இரண்டு விதத்தில் எடுத்துக்கொண்டனர். "துரதிஷ்டவசமாக LHC இயந்திரம் பழுதடைந்தது!" என்று கூறுபவர்கள், அங்கு வேலை செய்யும் விஞ்ஞானிகளும், 'இந்த பரிசோதனை, மனித இனத்தின் மிகப்பெரும் சாதனை' என்று நினைப்பவர்களும்தான்.

ஆனால் " நல்லதுடா சாமி,  அதிஷ்டவசமாக பழுதடைந்து, நின்றுப்போனது" என்று மகிழந்தவர்கள், ' இந்த பரிசோதனை, மனித இனத்திற்கு பட்டுமல்ல, இந்த முழுப் பிரபஞ்சத்திற்கே சாவு மணி அடிக்கக்கூடியது' என்று நடுநடுங்கி நிற்பவர்கள்.

நாமும் இந்தப் பிரபஞ்சத்தின், பூமிக்கிரகத்தின் உறுப்பினர்கள் என்பதால், ஏதாவது ஒரு பக்கம் நின்றே ஆகவேண்டும். அதற்கு முன், இதைப்பற்றி கொஞ்ச விவரம் தெரிந்துக்கொள்ளவேண்டும். இதற்க்கு முன்பே பலர் இந்த சமாச்சாரத்தைப்பற்றி எழுதிவிட்டனர். இப்போது இந்தப் பதிவு, அவைகளையெல்லாம் பார்க்காதவர்களுக்காக.


சரி. எதுக்காக இவ்வளவு செலவில், இவ்வளவு பெரிய இயந்திரம்? இது இப்ப நேத்து விஷயம் இல்லை. விஞ்ஞானிகளின் ரொம்பநாள் கனவு. இந்தப் பிரபஞ்சம் உருவான நொடி எப்படி இருந்திருக்கும்? இந்த பிரபஞ்சத்தை உருவாக்கிய துகள்கள் (particles) எவை? அதை உள்ளே இருக்கும் ரகசியங்கள் என்ன? நிறை எனப்படும் mass, அதனுள்ளே பொதிந்திருக்கும் ரகசியங்கள் என்ன? இதுவரை யார்கண்ணிலும் படாத Higgs Particals என்றழைக்கப்படும் ' கடவுள் துகள்களைப்' பார்க்க முடியுமா? நம்ம பிரபஞ்சத்தை உருவாக்கி அதைக் கட்டுக்குள்ளோ, கட்டுக்குள் அடங்காமல் வளர்துக்கொண்டேப்போகும் 'கரும்பொருள்' என்றழைக்கப்படும் 'dark matter'ஐப் பற்றி அறிந்துக்கொள்ள முடியுமா?.... இன்னும் இதுப்போன்ற மிகப்பெரிய கேள்விகளுக்கு விடைத் தெரியும்(?) என்ற நம்பிக்கையில்தான் இவ்வளவு ஆர்பாட்டங்கள், முயற்சிகள், கஷ்டங்கள் மற்றும் செலவுகள்!

சுவிஸ் மற்றும் பிரெஞ்சு நாடுகளின் எல்லையில், ஜெனிவா நகரின் அருகில், 27km சுற்றளவுள்ள சுரகப்பாதையைக் கொண்டது இந்த மகா இயந்திரம். இந்தப் பாதை, நிலத்தடியில் 100 m ஆழத்தில் அமைந்துள்ளது. இந்த பரிசோதனையில் அணுத்துகள்களான ப்ரோட்டான்களை (Protons), மோதவிட்டு வேடிக்கைப் பார்ப்பதுத்தான் முக்கிய வேலை.(நம்ம ஊர்ல சிலர்  பரோட்டாவை மோதவிடுகிறார்கள் என்று கேள்வி! ) ஆனால் அவைகள் எப்படிப்பட்ட சூழ்நிலையில் மோதவேண்டும் என்பதில்தான் இந்த பரிசோதனை இந்த அளவிற்கு பூதாகர உருவைப் பெறுகிறது. மனிதன் நிலவிற்கு போனதுக் கூட பெரிய விஷியமில்லை என்றால் பாருங்களேன். இந்தத்துகள்கள் எதிர்ரெதிர் திசையில், 27 km வட்டப்பாதையில் சுற்றி மோதிக்கொள்ள ( ஒரு செகெண்டுக்கு 600 மில்லியன் இடி!), அவைகள் போகவேண்டிய வேகம் 'ஒளியின் வேகம்'! அதாவது மணிக்கு 1079 மில்லியன் கிலோ மீட்டர்கள்.( கண் இமைக்கும் நேரத்தில் 299792.458 km தூரம் செல்லவேண்டும்!). ஆகவே ஒரு நொடியில், இந்த 27 km வட்டப்பாதையை 11,245 முறை சுற்றிவந்துவிடும்! அதனால் துகள்களை அத்தகைய வேகத்திற்கு தயார்ப்படுத்த ஒரு ' வேக ஊக்கி ' ( Accelerator ) இயந்திரத்தின் சுற்றளவு மாத்திரம் 26,659 m ! அதனுள்ளே மிகவும் சக்திவாய்ந்த 9,300 காந்தங்கள் உள்ளன ! இந்தக் காந்தங்கள் 'ரொம்பக் கூலாக' இருக்கவேண்டும். அதாவது, முதலில் 10,080 டன் திரவ நைட்ரஜன் கொண்டு, - 193.2 C வரை குளிரூட்டப்பட்டு, மீண்டும் 60 டன் திரவ ஹீலியம் உபயோகித்து இன்னும் கீழே - 271.3 C வரை மகா,மெகா சில்லாகப்படும்! ( உலகின் மிகப்பெரிய, சக்திவாய்ந்த ஃ பிரிட்ஜ்! நம்ம சாதா ஐஸ் கட்டி 0 C ! இது வின்வேளியைவிட கூல்! ) இவ்வளவு கூல் பண்ணியும், இந்தத்துகள்கள் மோதிக்கொள்ளும்போது ஏற்படும் வெப்பம் எவ்வளவு தெரியுமா? சூரியனின் நடு சென்டரில் உள்ள சூட்டைவிட ஒரு லட்சம் மடங்கு சூடு அதிகம்! கற்பனை செய்யவேண்டாம். முடியாது! நமது சூரிய குடும்பத்து ஏரியாவிலேயே பக்கா வெற்றிடம் இதுத்தான். ( 10^-13 atm !) நிலவில் உள்ள அழுத்ததை விட பத்து மடங்கு குறைவானது! ( சில மனிதர்களின் தலையை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. அவர்கள் மன்னிக்கவும்.)

இந்த மோதல்கள் நான்கு கண்களால் ( Detectors) கண்காணிக்கப்படும். அவ்வாறு ஒரு வருடம் கிடைக்கப்படும் தகவல்கள் 15 million gigabite அளவிற்கு இருக்கும் என்று கருதப்படுகிறது. இதற்காக உலகம் முழுதும் 80,000 கம்ப்யுட்டர்கள் இணைக்கப்பட்டுள்ளன. இவைகளில் உள்ள தகவல்களை சிடிக்களில் நிரப்பி, அவைகளை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி வைத்தால், சுமார் 20 km உயரம் வரைப் போகும்! (ஆனால் இதிலே ஒரு பர்சென்ட் விஷயமே உபயோகப்படும் என்பது வேறு சமாச்சாரம்!).
அட்லஸ் என்ற டிடக்ட்டாரில் உள்ள கேபிள் ஒயர் மாத்திரம் 3000 km நீளம்!  இங்கு பணிப்புரியும் விஞ்ஞானிகளின் எண்ணிக்கை சுமார் 5000 ! 15 வருட ஆயுள் கொண்ட இந்த இயந்திரம், சுமார் 8 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் உருவாகப் பட்டது. ( ரிப்பேர் செலவு தனி! ). இவையெல்லாம் சுமார் 13.7 வருடங்களுக்கு முன்னால் 'பிக் பேங்' எனப்படும் பிரபஞ்ச பிறந்ததினத்தில், பிறந்தக்கணத்தை உருவாக்கி, அதன் ரகசியங்களை கண்டுப்பிடிப்பதுத்தான். மேலும் சொல்லுவதென்றால் இன்னும் பல மகத்துவங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் இதைப்பற்றிய BBC நிறுவனம் தயாரித்த ஒரு காணொளி உள்ளது. அதைப் பார்த்தால் எல்லாம் நமக்கு தெரியவரும். பார்ப்போமா?












Brian Cox "CERN's 27km Big Bang machine" (Lift07... by liftconference




சனி, 21 நவம்பர், 2009

பிபிசிஇன் உயிரினங்கள் : பாகம் 5 (வீடியோ)


சென்ற வீடியோக்களை பார்க்காதவர்களுக்காக ....


பாகம் 1 ' சவாலே சமாளி'

பாகம் 2 ' ஊர்வன: உண்மைகள்'

பாகம் 3 ' பாலூட்டிகள்'

பாகம் 4 ' பறவைகள் '

இப்போது ' மீன்கள் ' ..........


புதன், 11 நவம்பர், 2009

பிபிசிஇன் உயிரினங்கள் : பாகம் 4 (வீடியோ)


சென்ற வீடியோக்களை பார்க்காதவர்களுக்காக ....

பாகம் 1 ' சவாலே சமாளி'

பாகம் 2 ' ஊர்வன: உண்மைகள்'

பாகம் 3 ' பாலூட்டிகள்'

தற்போது ' பறவைகளின் அட்டகாசங்கள்!'