செவ்வாய், 1 செப்டம்பர், 2009

400 வருட தொலைநோக்கியின் கதை (வீடியோ)


தொலைநோக்கி உருவாக்கப்பட்டு 400 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், உலகம் அதைக் கொண்டாடிக்கொண்டுள்ளது. நாமும் அதைக் கொண்டாட வேண்டாமா? ஆகவே நான் சமிபத்தில் பார்த்து ரசித்த ' 400 Years of Telescope' என்ற காணொளியை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுகிறேன். நீங்களும் கண்டு, மற்றவர்களும் காண மறக்காமல் ஓட்டுப் போடுங்கள்.. மற்றும் கருத்தும் கூறுங்கள். நன்றி.

3 கருத்துகள்:

ஜெகநாதன் சொன்னது…

அன்பு பிரபஞ்சப்ரியன்.. நல்ல ​பொருளை ஞாபகப்படுத்திவிட்டீர்கள். ​டெலஸ்கோப் ஒரு ஏணி! வானவியல், உயிரியில், இயற்பியல், மருத்துவம், ​பொறியியல் (சினிமா??) என எல்லாத் துறைகளிலும் முக்கிய பங்கு (சொல்லப் போனால் ஆய்வாளனின் கண்கள் இது) வகித்தாலும் - ​நுண்ணோக்கிகள் பற்றி அதிகம் ​தெரியவருவதில்லை. கலீலியோ சூரியனில் உள்ள கரும்புள்ளிகளை ஆராயும்​போது (இந்தபுள்ளிகளை ​வைத்தே சூரியனை பூமி சுற்றுகிறது என்று நிறுவினார் - அதற்கு முன்பு பூமியை சூரியன் சுற்றுவதாக கருத்து இருந்தது) ​டெலஸ்​கோப்தான் அவர் கண்கள் மற்றும் ஆய்வுச்சாலை. ​டெலஸ்​கோப்பின் வழி​ சூரியனின் ​பெரிதாக்கப்பட்ட பிம்பம் ஒரு காகிதத்தில் விழும் வண்ணம் அமைத்து அதன் மூலம் சூரிய கரும்புள்ளிகளை ஆராய்ந்தாராம்.
உங்கள் காணொளிகள் டெலஸ்கோப்கள் பற்றிய நல்ல ஆவணம்! சிறுவயதில் பல்பு, கண்ணாடி வைத்து பயாஸ்கோப் விளையாண்டது, கலைடாஸ்கோப் பார்த்து கண்கள் விரிந்தது, ​பைனாகுலரில் பார்த்த ​பெண்கள் என எல்லாம் ஒரு ப்ளோவாக வந்து ​போகின்றன. கனவுக்கு அறிவியலுக்கும் ​வெகு தூரமில்லை (தூரமேயில்லை) இல்லையா?

M.S.E.R.K. சொன்னது…

கருத்துக்கு நன்றி ஜெகன். கலிலியோ அவ்வாறு சூரியனை தொலைநோக்கிமூலம் பார்த்துப் பார்த்தே, அவரின் இறுதிக்காலத்தில் முழு கண்பார்வையை இழந்தார் என்பது சரித்திரம். இங்கு கடையில் ஒரு பைனாக்குலர் பார்த்தேன். விலை £ 1,100 ! (£ 1 = Rs.80). அதன் மூலம் பார்த்தால் இன்னும் நன்றாக இருக்கும் அல்லவா?

ஜெகநாதன் சொன்னது…

ஆம்.. கலீலியோ தன் ஆய்வாலேயே கண்பார்வை இழந்துவிட்டார். ஆனால் உலகின் கண்களை திறந்து விட்டார். It's an eye-opening experiment! ​ரொம்ம்ப வருடங்களுக்கு முன்பு நண்பர்களுடன் ஊட்டிக்கு போகும் போது வழியில் கோவையில் (லட்சுமி காம்ப்ளக்ஸ் - க்ராஸ் கட் ரோடு என்று நினைக்கிறேன்) ஒரு அங்காடியில் ​பைனாகுலர் வாங்க விசாரித்தோம். 5000லிருந்து ஆரம்பித்தது.. நாம போற பிக்னிக்கே அவ்வளவுதாண்டா என்று எகிறி குதித்து எஸ்கேப் ஆகிவிட்டோம். ஆனாலும் பைனாகுலருக்கு அவ்வளவு முதலீடு ​செய்வது உகந்தது என்றே தோன்றுகிறது. ஆய்வாளன் கண்கள் எனக் கொள்ளும் போது ​பைனாகுலரின் பரிமாண(மு)ம் பெரிதாக தெரிகிறது. Bird watching, expeditions, painting ​போன்ற ரசனைப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு ​தொலைநோக்கி அவசியம். அடுத்த வீட்டு ஜன்னல் ஃபிகர் டிரஸ் மாற்றுவதை பார்ப்பதையும் ஒரு ரசனைப்பூர்வமானதாக (!?) ஏற்றுக்​​கொண்டால் - இதையும் கூட லிஸ்டில் சேத்திவிடலாம்? (ஹிட்ச்காக் படம் ஞாபகத்திற்கு வருகிறது) இது இல்லாமல் லாங்-ரேஞ்ச் கன்ஸ், ஸாட்டிலைட் டெலஸ்கோப் (நாஸா சக்திவாய்ந்த எக்ஸ்-ரே astronomy அப்ஸர்வேட்டரிக்கு சந்திரா என்று நம் விஞ்ஞானியின் பெயரை சூட்டியிருக்கிறார்கள்) என்று ​தொலைநோக்கியின் பயணம் பெருசு!
ம்ம்ம்ம்.. நம்ம சாட்டிலைட்டிலும் இந்த மாதிரி பவர்புல் எக்ஸ்-ரே டெலஸ்கோப் இருந்திருந்தா ​ஹெலிகாப்டரில் காட்டில் விழுந்து இறந்த YSR ரெட்டியை கொஞ்சம் சீக்கிரமா கண்பிடிச்சிருக்கலாம். பாவம் இப்ப அவரே எக்ஸ் ஆந்திரா CM ஆயிட்டாரு!