புதன், 12 ஜனவரி, 2011

தாராவி :சுடும் உண்மைகள் !(வீடியோ)






 தாராவி ! ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதி!  உலகின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான, கென்யா நாட்டின், நைரோபி நகரையொட்டி உள்ள கிபேராவுக்கும், மெக்சிகோ நாட்டின் மெச்சிக்கோ நகர குடிசைப்பகுதிக்கு அடுத்தது நம்ம தாராவிதான்!

அதுசரி.... இப்பஎன்ன தாராவியைப் பற்றிய பதிவுக்கு அவசியம் வந்தது என்று சிலர் கேட்க வாய்ப்பு இருக்கிறது. அது வேறொன்றுமில்லை, சமீபத்தில், சென்ற வருடம் ஜனவரியில், சேனல் 4 தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பப்பட்ட  'Kevin McCloud: Slumming It' என்ற ஆவணப்படத்தைப் பார்க்க நேர்ந்தது. அதைப்பார்த்தப்பின் குறைந்தப்பட்ச்சம் இரண்டு நாட்கள் அதன் தாக்கம் இருந்தது என்றால் அதை உங்களிடம் பகிர்ந்துக்கொள்ளாமல் வேறு என்ன செய்வது?

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த  இந்த கெவின் மெக் க்லோவுட்  என்ற மனிதர், சேனல் 4 தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிவரும்  'Grand designs'  எனப்படும் உலகின் சிறந்த, வித்தியாசமான கட்டிடங்களைப் பற்றிய தொடரை  சிறப்பாக வழங்கும் ஒரு பிரபல கட்டிடவியலாளர். இப்படிப்பட்டவரை இந்தியாவின் தாராவிப் பகுதிக்கு சென்று, அங்கேயே இரண்டுவாரம் தங்கி, அங்குள்ள உண்மை நிலையை கண்டு படம் பிடித்துவர அனுப்பியுள்ளனர்!

சாதாரணமாக நம் எல்லோருக்கும் தாராவி குடிசைப்பகுதியில் தாங்கும் வாய்ப்பு கிடைக்குமா என்பது திண்ணமில்லை. அப்படிக் கிடைத்தாலும் நம்மில் எத்தனைப்பேர் அங்கு வாழ முன்வருவார்கள் என்பது கேள்விக்குறி. "ஆஹா ! அங்கு வாழ்பவர்கள் எல்லாம் மனிதர்கள் இல்லையா ? " என்று அடிக்க வரவேண்டாம் தோழர்களே! அங்குள்ள சுகாதார சூழ்நிலை அப்படி! 
இதில் இன்னொரு விசேஷம் என்னவென்றால், பேருந்திலோ, ரயிலிலோ யாராவது இருமவோ, தும்மவோ செய்தாலே முகம் சுளிக்கும் மக்கள் பலரைக் கொண்டுள்ள நாட்டில் வசிக்கும் ஒரு பணக்கார மனிதர், இதுப்போன்ற சூழ்நிலையில் வசித்து, அந்த மக்களோடுப் பழகி, நாடுத் திரும்பும்போது மனம் நெகிழ்ந்துத் திரும்புகிராரேன்றால் அவருக்கு என்ன அனுபவம் ஏற்ப்பட்டிருக்கும் என்றுப் பாருங்கள்!

ஒருக்காலத்தில் வெறும் நீர்நிலைகளாகவும், குளம் குட்டைகளாகவும் இருந்த ஓடம், பின்னோருக் காலத்தில் மராட்டிய, உத்திரப் பிரதேச மக்களால் குடியேற்றப்பட்டு , தற்போது நம்ம தமிழர்களால் நிறைந்து இருக்கும் இந்த பகுதி, வருடத்திற்கு ஒரு பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக, பலத்தொழில்கள் மூலமாக பணம் புழங்கும் இடமாக உள்ளது. ஆனால் அங்குள்ள வாழ்க்கைத்தரம், நம் கண்களை பனிக்கச் செய்வதாக உள்ளது. இந்த அவலம் போக எல்லாம் வல்ல அரசாங்கம்தான் கருணைக் காட்டவேண்டும்.

தாராவிப் பற்றிய, யெஸ். பாலபாரதி அவர்களின் பதிவைப்படிக்க இங்கே....   

'Slumdog Millionaire ' திரைப்படத்தை பார்த்து ' இந்தியாவின் ஏழ்மையை காண்பித்து.. கேவலப்படுத்தி, பணத்தையும், விருதுகளையும் அள்ளிக்குவிக்கிறார்கள் என்ற எதிர்ப்பு அலை எழும்பியது. அது வியாபாரம்... எதிர்ப்பவர்கள் பக்கம் நியாயம் இருக்கக்கூடும். ஆனால் இதுப்போல உலகின் அவலங்களை (ஈழம் உள்பட..)தைரியமாக உலகிற்கு வெளிச்சம் போட்டுக்காட்டும் சேனல் 4  தொலைக்காட்ச்சியின் ஆவணப்படத்தை பார்த்து கூக்குரலிடுவது நியாயமாகப் இருக்காது. தவறாக இருக்கும் பட்ச்சத்தில் நம்மை நாமே திருத்திக்கொள்ளவேண்டும் என்பதே சரியான நிலைப்பாடாக இருக்கும்.  இதைப்பற்றிய டெய்லி மெயில் பத்திரிக்கையின் செய்தி இங்கே....


உண்மைகள்  சுடும் என்பதால் அது பொய்யாகிவிடாது ! இது நமக்கு நாமே செய்துக்கொள்ளும் சுயப் பரிசோதனையாகக் கொள்ளவேண்டும். 
கடைசியாக, தாரவியைப் பற்றிய, இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் அவர்களின் கருத்து இங்கே..... 


கடைசியாக (10/01/11) கிடைத்த செய்திப்படி இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் பங்குபெற்றுள்ள அறக்கட்டளை, இந்தியாவில் 15,000 ஏழைகளுக்கு வீடுகள் கட்டித்தர முன்வந்துள்ளார்கள்! செய்தி இங்கே....

சரி வாங்க தாராவியை ஒரு வலம் வரலாம்...