வழக்கம் போல இல்லாமல், இது ஒரு மெகா வீடியோத் தொகுப்பு! என்னைப்போல பிரபஞ்சப்பிரியர்கள் அனைவரும் பார்த்து அறிந்துக்கொள்ள வேண்டிய அறிவுப் பெட்டகம்!
எப்பவாவது நாம் 'Black Hole' எனப்படும் கருங்குழிக்குள் இழுக்கப்பட்டால் என்னவாகும் என்று நினைத்துப் பார்த்ததுண்டா? அல்லது ' Warmhole ' என்ற சித்தாந்தம் காலப்பயணத்தை நிஜமாக்கும் என்று நம்பியதுண்டா? டைனோசர்களை அழித்த விண்பாறைகள் மீண்டும் நம்ம பூமியில் மோதினால் நாம் தப்பிக்க முடியுமா என்பதை எண்ணிப்பார்த்ததுண்டா? இப்போது நாம் பார்க்கப்போகும் வரிசையான வீடியோக்கள் இந்தக் கேள்விகளுக்கு மட்டுமல்லாது, இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றிய நம் பலதரப்பட்ட கேள்விகளுக்கு, சமகால விஞ்ஞான புரிதலை, லேட்டஸ்ட் கிராபிக்ஸ் துணையோடு நமக்கு விளக்கியுள்ளது, நேஷனல் ஜியாகரப்பிக் நிறுவனம். இந்தப் படங்களைப் பார்க்க உங்களின் பொன்னான நேரத்தை ஒதுக்குவதில் கண்டிப்பாக எந்தொரு நஷ்டமுமில்லை என்று உறுதியிட்டுச் சொல்லுவேன்! நிறையப் படங்கள் .... நேரம் கிடைக்கும்போது நிதானமாகப் பாருங்கள்.
சீசன் 1.
பிரபஞ்சத்தில் வேகம். [ Speeding through the Universe ]
இந்த அகண்ட பிரபஞ்சத்தில் நேரத்தைப்போல எதுவும் முக்கியத்துவம் பெற்றது இல்லை! ஓரிடத்திலிருந்து வேறொரிடத்துக்கு பயணமாவதாகட்டும், பிரபஞ்ச மகா புதிர்களான காலப்பயணம், கருங்குழிகள் போன்றவைகளின் புரிதலாகட்டும்... நேரமே பிரதானம்! எப்படியென்று பார்க்கலாமா?
பிரபஞ்சத்தில் அளவு. [ Sizing up the Universe ]
நாம் இருக்கும், கற்பனையும் செய்யவும் முடியாத அளவுடைய இந்தப் பிரபஞ்சத்தில் நாம் காணும் ஒவ்வொன்றும் மிக நுண்ணிய அணுக்களால் கட்டமைக்கப்பட்டு பிரம்மாண்டமாகக் காட்சியளிக்கிறது! So... SIZE really MATTERS!
பிரபஞ்ச வெடிப்பு. [ Blowing up the Universe ]
இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் ' Big Bang ' எனப்படும் மகா .. மெகா வெடிப்பினால் உருவானது! அந்த வெடிப்ப்பே இதுநாள்வரை தொடரும் மற்ற வெடிப்புகளுக்கு தாயாக உள்ளது!
*******************************************************************************************
சீசன் 2.
நட்சத்திரப் புயல்கள். [ Stellar Storms ]
நமது பூமியின் பருவநிலை மற்ற கிரகங்களின் பருவநிலையை ஒத்துள்ளது. விண்வெளியில் ஏற்ப்படும் காலநிலை மாற்றம்பூமியின் அடிப்படை கட்டமைப்பையே மாற்றி, அனைத்து உயிர்களின் எதிர்க்காலத்தையே கேவிக்குறியாக்கிவிடும் அபாயம் உள்ளது! வாங்க பார்க்கலாம்....
ஏலியன் தொடர்பு . [ Alien Contact ]
இறுதி எல்லைகள்: [ Final Frontiers ]
இந்தக் காணொளியில், நம் சொந்தக் கிரகத்தின் எல்லைகளை ஆராய முனையும் முயற்சிகள், எவ்வாறு நம் பிரபஞ்சத்தின் கற்பனைக்கெட்டாத எல்லைகளைக் காணவிழையும் முயற்சிகளோடு நெருங்கியத் தொடர்புக் கொண்டுள்ளது என்பதைக் காணப்போகிறோம்.
நம்ம பூமி 70% நீரில் மூழ்கியுள்ளது. அதிலே ஏதோ ஒரு ஐந்து சதவிகிதம் தான் மனிதனால் அறியமுடிந்திருக்கிறது. அதுப்போல நம் சூரியக் குடும்பத்தை எடுத்துக்கொண்டால், மனிதன் அறிந்துக்கொண்டது மிக மிகக் குறைவு. இந்த நிலையில் மொத்தப் பிரபஞ்சம்....?! இருந்தாலும் தற்போதுள்ள லேட்டஸ்ட் தொழில்நுட்ட்பத் துணைக்கொண்டு, பிரபஞ்ச இறுதி எல்லைகளைக் காணவிழைகிரார்கள் நம்ம விஞ்ஞானிகள் என்பதைப் பார்க்கலாம் வாங்க...
பிரபஞ்சப் புதிர்கள்: [ Decoding The Skies ]
நம் முன்னோர்களுக்கும் வான மண்டலங்களுக்கும் இருந்த உறவு, மனித இனத்தின் மிகப்பெரிய மட்டும் முக்கியமான கண்டுப்பிடிப்புக்களுக்கும் அழைத்துச் சென்றது. தற்போது நாம் காணப்போகும் காணொளி, மனித இனத்தின் வான்வெளி பற்றிய ஆவல், எப்படி நவீன கண்டுப்பிடிப்புகளுக்கு வழிக்கோலியது என்று விளக்குகிறது.
*******************************************************************************************
சீசன் 3.
விண்வெளியில் உயிர்வாழல்: [ Surviving Outer Space ]
நமது மனித உடல், பூமியின் நட்பான தட்பவெப்ப நிலைகளால், நலமாக, எந்தவித பிரச்சனைகளும் இல்லாமல் வாழ முடிகிறது. ஆனால் விண்வெளியில் வாழ்வது எனபது, மிகவும் சிக்கலான உயிருக்கு உத்திரவாதமில்லாத அபாயமாக உள்ளது. நுண் ஈர்ப்புவிசையில் [ Micro-gravity ] அன்றாட செயல்களான உணவருந்துதல்,தூக்கம் மற்றும் செக்ஸ் எல்லாமே சிக்கலாகி விடுகிறது! ஆனால் இது பிரச்சனைகளின் துவக்கமே. விண்வெளியின் வெற்றிடம் மற்றும் அதன் பூஜ்ஜிய அழுத்தம், நம்மை சில நொடிகளில் இல்லையென்றாலும், சில வினாடிகளில் கொன்றுவிடும்! இதிலே கதிர்வீச்சு வேறு! அப்ப எப்படித்தான் சமாளிப்பது? வாங்கப் பார்க்கலாம்.....
புதையல் வேட்டை. [ Treasure Hunt ]
வாங்க நெப்ட்யுனில் இருக்கும் வைர சுரங்கத்தை தேடுவோம்! இந்தக் காணொளி , மனிதன் எவ்வாறு விண்வெளியில் கொட்டிக்கிடக்கும் அரிய, பூமியில் சுலபத்தில் கிடைக்காத தாதுப்பொருட்களை அடைய, புதுமையான யோசனைகளைக் கூறுகிறது!
உச்சகட்ட விண்வெளித் தொழில்நுட்பம்: [ Extreme Space Tech ]
பூமியில் வாழும் நமக்கு, நாம் வாழும் இந்த சூழ்நிலை நம் கைகளில் இருப்பதாக நம்புகிறோம். அடிக்கடி அதுவும் நம் கைகளை விட்டு நழுவிவிடுகிறது. ஆனாலும் நாம் நம்பும் நவீனத் தொழில்நுட்பங்களை மேலும் மேலும் வளர்த்து குறையற்றதாக மாற்ற முயற்சிக்கிறோம். இந்தக் காணொளியில், எவ்வாறு விஞ்ஞானம் நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் அடைப்படை வீட்டு உபயோகப் பொருட்களிலிருந்து மற்றும் நம்முடைய வாகனங்களிலிருந்தும் ஐடியாக்களை எடுத்து விண்வெளியில், மிகவும் சிக்கலான சூழ்நிலையில் பயன்படுத்தப்படும் அனைத்து கருவிகளிலும் வித்திடப்படுகிறது என்பதைக் காணலாம்.
வருகைக்கு நன்றி!