இதற்கு முந்தைய 'கண்ணில் தெரியாக் கதைகள் [1]' பதிவைப் பார்க்காதவர்கள் பார்த்துவிட்டு வரலாம்.
கண்ணிருந்தும் குருடர்கள் ! இந்த வாக்கியம் எவ்வளவு தூரம் உண்மை !
நமது கண்கள் இயற்கையின் ஆச்சரியமிகுந்த துல்லிய படைப்பாகும். ஆனாலும் மிகவும் வரைமுறைக்குட்பட்டது. நிறமாலைக்குட்பட்ட ( Light Spectrum ) சில நிறங்களைத்தான் நாம் பார்க்க முடியும். ஆனால் அதற்கும் மேல் உள்ள விஷயங்கள் .... எக்ஸ்ரே, உளரா வைலெட் , காமா, இன்பாரா ரெட் போன்றவை .... ? அதைத்தான் நம்ம ரிச்சர்ட் ஹமொண்ட் நமக்காக காண்பிக்கிறார். இதில் மிக நவீன 'அல்ட்ரா வயலெட்' கேமராக்களைக் கொண்டு 'ஹை டென்ஷன்' மின்சாரக் கம்பிகளை சுற்றியுள்ள மின்சாரத்தை கண்ணால் காண செய்வதும், உலகின் சக்திவாய்ந்த எக்ஸ்ரே கேமராக்களை கொண்டு மனித மற்றும் விலங்குகளின் நடமாடும் திறனையும் , 'இன்ப்ரா ரெட் ' கேமராக்களைக் கொண்டு தேன்கூட்டின் உள்ளே இருக்கும் ரகசியங்களை வெளிக்கொணருவது நம்மையெல்லாம் வியப்பின் எல்லைக்கே அழைத்துச்செல்லும். பி பிபிசி- இன் 'Invisible Worlds - Out of Sight' என்றக் காணொளி, நவீன விஞ்ஞானம், நம்மால் காணமுடியாத ரகசியங்களை காட்டி நம்மை புதிய உலகத்துக்கே அனுப்பி வைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. நீங்களும் பார்த்துவிட்டு பதில் சொல்லுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக