புதன், 28 ஏப்ரல், 2010

காலப் பயணம் - ஸ்டீபன் ஹாகிங்கோடு பிரபஞ்சத்தில்...



சென்ற முறை 'ஏலியன்கள்! ஸ்டீபன் ஹாகிங்கோடு பிரபஞ்சத்தில்...' என்ற பதிவைப் பார்த்தோம். இப்போது அதன் தொடர்ச்சியாக ' காலப் பயணம் (Time Travel) - ஸ்டீபன் ஹாகிங்கோடு பிரபஞ்சத்தில்... ' 
என்றாவது ஒரு நாள், உங்கள் வீட்டின் கதவு தட்டப்பட்டு, யார் வந்தது என்றுப் பார்த்தால்... ஒரு சிறுமி நின்றுக்கொண்டு ' நான் உங்களின் கொள்ளுப்பேரனின், பேத்தியின்,கொள்ளுப்பேத்தி ' என்றுச் சொன்னால், டமாரென்று  கதவை மூடி விடாதீர்கள் ! அவள் கூறுவது உண்மையாக இருக்கலாம்! ஆயிரம் ஆண்டுகளுக்கு அப்பாலிருந்து கால இயந்திரம் எனப்படும் Time Machine துணையோடு உங்களை காண வந்தவளாக இருக்கலாம்!

என்ன கண்ணைக் கட்டுகிறதா? ஏதோ சயன்ஸ் ஃபிக்ஷன்  கதைப்போல தெரிகிறதா? ஆனால் இது சாத்தியம் என்று விஞ்ஞானம் கூறுகிறது! இதுப்போன்ற அறிவியல் புனைக் கதையை 1895 லேயே, 'The Time Machine' என்றப் பெயரில் H.G.Wells எழுதிவிட்டார்.  கதையைப் படிக்க இங்கே.... கதையை கேட்க இங்கே..... இதைத்தான் நாம் காணப்போகும் வீடியோவான ' Into the Universe with Stephen Hawking - Time Travel ' லில், இது எப்படி சாத்தியம் என்று விளக்குகிறார், வாழும் ஐன்ஸ்டைன், ஸ்டீபன் ஹாகிங்.



நாம் பூமியில்  பிரயாணம் பண்ணுகிறோம் என்றால், நாம் உபயோகப்படுத்துவது மூன்று பரிமாணங்களை மாத்திரமே. நீளம், அகலம்,உயரம் (அ) ஆழம். ஆனால் நாம் பிரபஞ்சப் பயணம் மேற்கொள்ள இன்னொரு பரிமாணமும் அவசியம். அது 'Time' எனப்படும் 'காலம்'. நாம் மிக வேகமாக, ஏறக்குறைய  ஒளியின் வேகத்திற்கு இணையாக பிரயாணித்தால், காலம் குறைகிறது. அதாவது ஒளிவேகத்தில் செல்லும் வாகனத்தில்  (ஒரு வினாடிக்கு 299,792,458 கிலோ மீட்டர் வேகம் !) விண்வெளியில் 5 ஆண்டுகள் சுற்றி விட்டு, அவர் திரும்ப பூமிக்கு வரும் போது, பூமியில் உள்ளவர்கள் அனைவரும் அவரை விட 10 வருடங்கள் மூத்தவர்களாக  இருப்பார்கள் (ஏறக்குறைய )! இதுத்தான் காலப்பயணத்தின் அடிப்படை. இது எப்படி என்று ஹாகிங் நேர்த்தியாக விளக்குகிறார்.

கால இயந்திரத்தின் உதவியோடு நாம் கடந்த காலத்திற்கும், எதிர் காலத்துக்கும் போய்வரலாம் என்பதும் விளக்கப்படுகிறது. எதிர் காலத்துக்கு செல்வதைவிட கடந்த காலத்துக்கு செல்வது சிக்கலாக இருக்கிறது. முட்டுக்கட்டை போடுவது 'Grandfather Paradox' எனப்படும் ' தாத்தா முரண்பாடு '(?!) [ Paradox - முரண்பாடுப் போலத் தோன்றும் மெய்யுரை] இறந்த காலத்திற்கு செல்லும் கால இயந்திரத்தில் ஏறிச்  செல்லும் ஒருவன், பல வருடங்கள் பின்னோக்கி சென்று, தன் தாத்தாவை திருமணமாகாத  இளைஞனாகக் கண்டு, ஏதோ பிரச்சனையில், அவரைக்  கொன்று விட்டால் , வருங்காலத்தில் இவன் எப்படிப் பிறப்பான்? என்ன ஒரு சிக்கல் பாருங்கள்! அதனாலேயே இந்த கோட்பாடு தொடங்கும் இடத்திலேயே நின்று விடுகிறது. இது மட்டும் சாத்தியமானால்... நம்ம டீனேஜ் காலத்து காதலியின்  கைப்பற்றி நடந்திருக்கலாம், மறுபடியும் நம் பாட்டியிடம் கதைக் கேட்கலாம், செகுவாராவை காப்பாற்றி இருக்கலாம், திருவள்ளுவருக்கு உண்மையிலே தாடி இருந்ததா என்று தடவிப் பார்த்து இருக்கலாம், தமிழீழப் பாதையை சரி செய்து இருக்கலாம்... ஹும்ம் நடக்குமா...?!   (இதுப் போன்ற விஷயத்தில் உங்களுக்கு ஈர்ப்பு ஏற்பட்டிருந்தால் ராபர்ட் A ஹெயின்லின் என்ற புகழ்ப்பெற்ற  அமெரிக்க விஞ்ஞானக் புனைக்கதை எழுத்தாளர் எழுதிய ' All You Zombies ' என்ற தலையை சுற்றவைக்கும்  சூப்பர் கதையை கட்டாயம் படிக்க வேண்டும்! முழுக்கதையும் படிக்க இங்கே , ஆடியோப் புத்தகம் இங்கே. )

ஆனால் எதிர் காலத்திற்கு செல்லுவது என்பது மிகவும் சாத்தியமாகவேப் படுகிறது. எந்த ஒரு பிரம்மாண்டப் பொருளும், அதற்கு உள்ள ஈர்ப்பு விசையால் அதன் அருகே உள்ளவைகளின் காலத்தை குறைத்து ஓடவைக்கிறது. பூமியில் உள்ள நேரம் அதன் விசையால் வேகமாகவும், பூமியை விட்டு தள்ளிப் போகப் போக கல அளவு குறைந்துக்கொண்டே போகும். இதைவிட ஒருப்படி மேலேப்போய், மிக பிரம்மாண்டமான, கற்பனை செய்யமுடியாத  கருந்துளை/கருங்குழி எனப்படும் Black Hole, அருகே காலம் இன்னும் மிக நிதானமாக ஊர்ந்துச் செல்லும். ஆகவே அந்த இடத்தை தோராயமாக ஒரு வருடம்  சுற்றிக்கொண்டுருந்தால் பூமியில் அநேகமாக ஒரு நூறு வருடங்கள் ஓடி இருக்கும். ஆனால் இந்தக் கருங்குழிகளை நெருங்கும் சூரியனோ, நட்சத்திரமோ, எதுவானாலும் அதன் கதி அதோ கதித்தான். அப்படியானால் நம்ம கதியை நினைத்துப்பார்க்கவும் இயலாது. ஆனால் இதை செய்ய முடிந்தால் எல்லாம்  சாத்தியம்.
இந்த சப்ஜெட் மிக விஸ்தாரமானது. ஆகவே இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன். இன்னும் உள்ளே சென்றால் ரொம்ப டெக்கினிக்கலாக போய்விடும்.
இதோ அந்த  சுவாரசியமான் வீடியோ உங்களின் பார்வைக்கு.



  மேலும்  Time Travel பற்றிய விளக்கங்களுக்கு How Stuff Works ......



9 கருத்துகள்:

சிவகுமார் சொன்னது…

திர் காலத்துக்கு செல்வதைவிட கடந்த காலத்துக்கு செல்வது சிக்கலாக இருக்கிறது. முட்டுக்கட்டை போடுவது 'Grandfather Paradox' எனப்படும் ' தாத்தா முரண்பாடு '(?!) [ Paradox - முரண்பாடுப் போலத் தோன்றும் மெய்யுரை] //
இதில் ஒரு சின்ன திருத்தம் , இறந்த காலத்திற்கு செல்லும் நம்மால் இறந்தகால மனிதர்களை நம்மால் பார்க்க மட்டுமே முடியுமே தவிர நம்மால் அங்கு எந்தவித மற்றதையும் செய்யமுடியாது. அதாவது read only மெமரி போன்றது.

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் சொன்னது…

இருக்கலாம் சிவா/ சபரிநாதன் ...
இன்னும் எல்லாம் தியரி ஆகத்தான் உள்ளது.வெறும் கணிதத்தை வைத்தே இவ்வளவு தூரம் வந்துள்ளார்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சீனு சொன்னது…

//இறந்த காலத்திற்கு செல்லும் கால இயந்திரத்தில் ஏறிச் செல்லும் ஒருவன், பல வருடங்கள் பின்னோக்கி சென்று, தன் தாத்தாவை திருமணமாகாத இளைஞனாகக் கண்டு, ஏதோ பிரச்சனையில், அவரைக் கொன்று விட்டால் , வருங்காலத்தில் இவன் எப்படிப் பிறப்பான்?//

இதற்கு ஒரு விளக்கம் கொடுக்கப்படுகிறது, தி டைம் மெஷின் படத்தில்...

http://jeeno.blogspot.com/2009/12/2002.html
http://jeeno.blogspot.com/2006/08/blog-post.html

Aba சொன்னது…

அவன் தாத்தாவைத்தான் கொள்ள வேண்டுமென்பதில்லை. கடந்த காலத்தில் அவன் ஒரு சருகை அசைத்தாலே பட்டர்ப்ளை எபக்ட் மூலம் அவனது மூதாதையர்கள் இறக்கவோ, அவர்களின் டீஎன்ஏக்கள் மாற்றவோ சாத்தியங்கள் இருக்கின்றன.

Aba சொன்னது…

அதுமட்டுமன்றி சார்புக் கோட்பாட்டின்படி நிறையுள்ள எந்தவொரு பொருளும் ஒளியின் வேகத்திலோ அல்லது அதைவிட வேகமாகவோ பயணித்தல் இயலாத காரியம். எனவே காலப் பயணம் என்பது இயலாது என்பதே என் கருத்து.

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா.

Jayadev Das சொன்னது…

சென்னை போன்ற இடங்களில் சீட்டுக் கம்பனி நடத்தி கோடிக் கணக்கில் பணத்தைச் சுறுட்டிக் கொண்டு ஓடிவிட்டதாக நாம் பலமுறை செய்தித் தாள்களில் படித்துள்ளோம். அவர்கள் எப்படிச் செயல்படுகிறார்கள்? அதிக வட்டி ஆசை காட்டுவார்கள், முதலில் சிலருக்கு கொடுத்தும் விடுவார்கள். அதைப் பார்த்து விட்டு மக்களுக்கு நம்பிக்கை வந்துவிடும், செம்மறி ஆட்டுக் கூட்டம் போல , கஷ்டப் பட்டு சேர்த்த பணத்தை எல்லாம் கொண்டு போய் கொட்டுவார்கள். அவ்வளவுதான். நரி தின்ன கோழி கூவாது, இவர்களிடம் போட்ட பணமும் திரும்பாது. இந்த விஞ்ஞானிகளும் கிட்டத் தட்ட அந்த மாதிரி ஆட்கள்தான். முதலில் மின்சாரம், வானொலி, விமானம், தொலைபேசி, தொலைக் காட்சி, கைபேசி, கணினி போன்ற பயனுள்ள பொருட்களைக் கொடுத்து மக்களை நம்ப வைத்தார்கள். அதுக்கப்புறம் அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு என அவிழ்த்து விடுகிறார்கள். கேட்டால், "நூறு வருசத்துக்கு முந்தி அமெரிக்காவில் இருக்கிறவன் கிட்ட இந்தியாவில இருந்து தீப்பெட்டி சைசுல இருக்குற ஒரு கருவி மூலம் பேச முடியும்னு சொன்னா நம்பி இருப்பியா? இப்போ சாத்தியம் ஆச்சுதே, அதே மாதிரி இப்போ கால இயந்திரம் மூலம் கடந்த காலத்துக்குப் போயிட்டு வருவோம்ன்னு சொன்னா, அதையும் நம்பு" என்பார்கள். அப்படியே ஒரு இயந்திரத்தைக் கண்டுபிடித்தாலும் 8-6-2010 3:37 PM மணிக்கு அப்புறம் உள்ள காலத்துக்கு வேண்டுமானால் செல்லுமோ என்னவோ, அதுக்கு முன்னாடி போக முடியாது. ஏன்னா இந்த நிமிடம் வரை அப்படி யாரும் வந்ததா செய்திகள் இல்லையே! இவனுங்க கண்டுபிடிப்பு என்று செய்த அட்டூழியத்தால, நிலம், நீர், காற்று என்று எல்லாத்தையும் நாசம் பண்ணிட்டனுங்க. நம்மைக் காக்கும் காடுகள் மாயம். நதிகள் எல்லாம் சாக்கடை, எங்கும் பிளாஸ்டிக், கடலில் விஷம், உண்ணும் உணவும், குடிக்கும் நீர், சுவாசிக்கும் காற்று எல்லாம் விஷம். எங்கு நோக்கினும் சர்க்கரை வியாதி, கேன்சர். அற்புதமான பூமியை இன்னும் சில வருடங்களிலேயே மொத்தச் சுடுகாடாக்கி விடுமோ என்று கேள்விக் குறியாக்கி விட்டுட்டானுங்க. But they talk about goin to some other planet for Living and going back in time. It is Ridiculous. Koorai meetheri kozhi pidikkath theriyaathavan vanaththin meetheri Vaikuntham povaanaa?

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் சொன்னது…

உங்களின் கோபம் நியாயமானதே. என்ன செய்வது. அந்த சமுதாயத்தில் நாமும் ஒரு பங்குத்தானே. மனசாட்சியத்தொட்டு சொல்லுங்கள். ஒரு கடைக்குப் போனால், பாலித்தின் கவரில் ஒரு பொருளை கடைக்காரன் கொடுத்தால்," வேண்டாம் என்னிடம் ரிசைக்கிளிங் செய்யப்பட்ட பை உள்ளது, உன் பிளாஸ்டிக் கவர் வேண்டாம்" என்று எத்தனை முறை கூறி இருக்கிறீர்கள். மோட்டார் வாகனம் சுற்றுச் சூழ்நிலையை மாசுப்படுத்துகிறது என்பதால் நாங்கள் எங்கு சென்றாலும் மிதி வண்டியில் பிரயாணம் செய்கிறவர் என்றால் உங்களுக்கு ஒரு சலாம்! எதற்க்கெடுத்தாலும் ஒரு மறுப்பு, ஒரு கோபம் என்றிருந்தால் எப்படி நண்பரே. எல்லாவற்றிக்கும் ஒரு பாசிடிவ் & நெகடிவ் பகுதி இருந்தே இருக்கும். வெறும் நெகட்டிவையே பார்த்தால் எப்படி. Cheer up my friend!

i am The God சொன்னது…

time travell remba intersting enaku oru doubt...

yen light speed la pogaila namma valu zero nu solringa ithu epudi nu remba vilakam venum... light speed la oru train ponal athu evlo lenth nalum athu zero nu einstein solirukar.. but yen ithu epdudinu solunga please...

Ganesh V