இன்று படித்த ஸ்டீபன் ஹாகிங் கூற்றுப்படி பிரபஞ்சத்தில் பூமியில் மட்டுமல்லாது மற்ற இடங்களிலும் வேற்று உயிரினங்கள் இருக்க நிறைய சாத்தியக்கூறுகள் உள்ளதாம்! ஆகவே நம் ஞாபகங்களை கொஞ்சம் அலசியும், புதிய விஷயங்களை சேர்த்தும் இந்த மீள்ப் பதிவு!
1600 களில், இத்தாலி நாட்டின் ரோம் நகரில், கியோர்டனோ ப்ருனோ என்கிற கத்தோலிக்க பாதிரியார்," விண்வெளியில் நம்முடைய பூமியைப் போல கிரகங்கள், மற்ற சூரியன்களைச் சுற்றிக்கொண்டு இருக்கலாம். அவைகளில் மனிதர்களைப் போலவோ அல்லது நம்மைவிட அறிவிலும், நாகரீகத்திலும் மேன்மையான உயிரினங்கள் வாழ சாத்தியங்கள் உள்ளது" என்று கூறினார். அதற்காக அவர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார்.
19 ஆம் நூற்றாண்டில் ஜூல்ஸ் வெர்ன், H.G.வெல்ஸ் போன்ற பிரபல நாவலாசிரியர்கள், இதுப் போல வேற்று கிரக உயிரினங்களை மையமாகக் கொண்டு நாவல்களை படைத்தது இக்கருத்தை மேலும் பிரபலமாக்கினர்.
1900 ஆம் ஆண்டில் பிரெஞ்சு நாட்டு அமைப்பு ஒன்று, யார் முதலில் வேற்று கிரகவாசிகளோடு தொடர்புக் கொள்கிறார்களோ அவர்களுக்கு. 'குச்மேன் பரிசு' என்றப் பெயரில் 1,00,000 பிராங்குகளை பரிசாக அறிவித்தது. ஆனால் செவ்வாய் கிரகத்தை விட்டுவிட வேண்டுமாம்! ஏனென்றால் அது மிகவும் சுலபம் என்று எண்ணினார்கள்.
இதை பற்றிய ஒரு கட்டுரையை படிக்க நேர்ந்தது. அதை உங்களோடும் பகிர்ந்துக் கொள்ளுகிறேன்.
http://hornbillunleashed.wordpress.com/2009/07/13/2633/#comment-1365
இப்போது ஸ்டீபன் ஹாகிங் வேற கண்டிப்பாக பிரபஞ்சத்தில் வேறு உயிரினங்களும் இருக்கும் என்று அடித்துச் சொல்லிவிட்டதாக ' சீக்கிரம் கண்டுபிடிங்கையா' என்று தருமி சார் கூட பதிவு போட்டுவிட்டார். ஆமாம் உலக விஞ்ஞானிகளே, சீக்கிரம் கண்டுப் பிடியுங்கள்.... அதுங்க வந்து துப்பினால்தான் வெள்ளை, கருப்பு, ஜாதி, மதம் ,இனம், நாடு , பணக்காரன், ஏழை என்று அடித்துக் கொள்ளும் எங்க மனித இனத்துக்கு புத்தி வரும்! சீக்கிரம் வாங்கப்பா ஏலியன்களா !
இதோ அந்த காணொளி....
இது பழைய, BBC இன் 'Are we alone in this Universe?'
Part 1
Part 2
Part 3
Part 4
Part 5
3 கருத்துகள்:
Thanks for sharing.. எப்போ வரபோராயிங்கனு தெரியல :)
பெரிய வீடோயோக்கள் பார்க்க முடியவில்லை! டோரண்ட் சீட் கிடைக்குமா!?
Dr.Drake ன் தியரியின் படி கண்டிப்பாக நம்மை தவிர குறைந்த பட்சம் ஒரு ஏலியன் இனமாவது கட்டாயம் இருக்க வேண்டும்.. ஏலியன்கள் இல்லை என்பர்கள் தான் அறிவியலுக்கு முரணானவர்கள்.. மாபெரும் மேதை ஹாப்கின்ஸ் அவர்களே ஒத்துக்கொள்ளும் போது மற்றவர்களுக்கென்ன..??
கருத்துரையிடுக