செவ்வாய், 27 ஏப்ரல், 2010

பிபிசி இன் மனித உடல் [Updated]


[இந்தப்பதிவு 2010 ஏப்பரல் மாதத்தில் பகிரப்பட்டது. மொத்தம் எழுப் பகுதிகளாக, தொடர்ப்பதிவாக பகிரலாம் என்றிருந்தேன். ஆனால் அனைத்துப் பகுதிகளும் அப்போது கிடைக்கவில்லை... ஆனால் தற்போது கிடைத்துள்ளது, அதுவும் You Tube வழியாக ! அதனால் இந்த மீள்ப்பதிவு. மிகவும் சுவாரசியமான, அறிவார்ந்தக் காணொளிகள்... அதானால்தான் இவை அனைத்தும் ,அனைவரையும் சென்றடைய மீண்டும் உங்களின் முன்னே!]


1989 ஆம் ஆண்டு மே மாதத்தில், பிபிசி தொலைக்காட்சியில் ஏழு பிரிவுகளாக ஒளிப்பரபப்பட்ட தொலைகாட்சி தொடர்தான் 'Human Body '. மனித உடல்! இந்த அற்புத உடலைப் பற்றி எத்தனைப் பேருக்குத் நன்றாகத் தெரியும்? ஒருவேளை  மருத்துவப் பிரிவில் இருப்பவர்களுக்கு கொஞ்சம் விவரம் தெரியக்கூடும். அவர்களுக்கும் எல்லாம் தெரியும் என்று சொல்ல முடியாது. அது என்றுமே ஆச்சரியத்தை அள்ளிவழங்கும் அற்புதப் படைப்பு.  இந்த நேரத்தில் தான் நாம் காணப்போகும் காணொளி, நமக்கு நம் உடலைப் பற்றி ஒரு அறிமுகத்தைக் கொடுக்கப்போகிறது. அதுவும் நாம் நினைக்காத கோணங்களில்! 


Dr Robert Winston , இங்கிலாந்தை சேர்ந்த, மருத்துவ விஞ்ஞானியான இவர், நம்மையெல்லாம், நம் உடலுக்கு உள்ளேயும், வெளியேயும் அறிவுச்சுற்றுலா அழைத்துப் போக இருக்கிறார். பிறப்பு முதல் இறப்பு வரை,நம் உடல் காணும் மாற்றங்களை, நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் நமக்கு மிகவும் தெளிவாக,நுணுக்கத்துடன் விளக்குகிறது.
திருமணமாகி பிள்ளைபெற்றவர்கள், தங்கள் குழந்தைகளுடன் காண வேண்டிய கட்டாயக் கல்விக் காணோளியாகக் கருதுகிறேன். நீங்களே இதைப் பார்த்து முடிவுச் செய்யுங்கள்.
அதற்க்கு முன்னே சில குட்டித் தகவல்கள்....


  • நம்ம உடம்பில் 70% வெறும் 'தண்ணித்தான்'!(இருக்காதப் பின்னே!)
  • நம்ம இருதயம் ஒரு நாளைக்கு ஏறக்குறைய  1,00,800 முறை துடிக்கிறது.
  • நாம் புன்னகைக்கும்போது 30 தசைகள் வேலை செய்கிறது. :- )
  • மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக ஒரு லிட்டர் உமிழ்நீர் சுரக்கிறான். (அத்தாங்க ஜொள்ளு!) இதில் ஆண் பெண் பாகுப்பாடு இல்லை!
  • நமது ரத்தம் 60, 000 மைல்கள் பிரயாணம் செய்கிறது.
  • சராசரி மனிதன்  தன் வாழ்நாள் முழுவதும் சவரம் செய்யாமல் இருந்தால், அவனுக்கு 13 அடி நீள தாடி இருக்குமாம். பெண்களைப்பற்றி தகவல் இல்லை:-)
  • ஆண்களை விட பெண்கள் இரண்டு மடங்கு கண் சிமிட்டுகிறார்களாம். (படிச்சதுதாங்க)
  • நாம் உண்மையிலேயே அன்புசெலுத்தும் ஒருவரைக் கண்டால், நம்ம கண்களின் 'பாவை' எனப்படும் 'ஐரிஸ்'(Iris) பெரிதாக விரிவடையுமாம். நாம் ரொம்ப வெறுக்கும் ஒருவரைக் கண்டாலும் இதே நிலமைத்தான்.
நம்ம போட்டோ த்தான்....! வயது ஆறு நாட்கள்....! 
பெருசானதும் என்னா ஆட்டம்...?!!
Life Story – Every second, a world of miraculous microscopic events take place within the body.
An Everyday Miracle – The drama of conception activates the most sophisticated life support machine on earth.
First Steps – In four years, the new-born child learns every survival skill.
Raging Teens – The hormone-driven roller-coaster otherwise known as adolescence!
Brain Power – The adult human brain is the most complicated – and mysterious – object in the universe.
As Time Goes By – is far more complex – and fascinating – than mere decline.
The End of Life – Even in death, the body reveals remarkable secrets.

மேற்கூறிய எழுப் பகுதிகளும் Playlist வடிவில் உங்களின் முன்னே... நேரம் கிடைக்கும் போது நிதானமாகப் பார்த்து பயனடையுங்கள் நண்பர்களே... 

7 கருத்துகள்:

buruhaniibrahim சொன்னது…

ungalin magaththana sevaikku en manamartha nanrigal nanba

சதீஷ் சொன்னது…

it shows
//this video is not available in your country. login or register to bypass//

i am in Bahrain

Ravi

VAAL PAIYYAN சொன்னது…

SUPERB
VISIT MY BLOG
www.vaalpaiyyan.blogspot.com
junior vaalpaiyyan

henry J சொன்னது…

Video Link Access blocked in india. pls check it.

this video is not available in your country. login or register to bypass//

Free Download File Recovery | Data Recovery | Image Recovery Software
Free Slide Show & Gallery Makers
Learn Typing
CINEMA TICKETS BOOKING Online
Free youtube Video Download
Free Web Design
Free Indian Language Typing Tool
Type anywhere in your language | Google Transliterate | Microsoft Indic Language
Free Download Google Talk | Windows Live Messenger | Skype Messenger | Yahoo Messenger
Learn Basic Maths, Algebra, Trigonometry, calculus
Online Free Ebooks
Free Antivirus Download
Search Rooms, Apartments
Free Health Tips

Sutharsan சொன்னது…

Its amazing post. Thanks a lot. Keep going......

M.S.E.R.K. சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சபரிநாதன்/சதீஸ்/சுதர்ஷன்/சிவக்குமார்!!!!

M.S.E.R.K. சொன்னது…

Dinesh told ""This video is not available in your Country" அப்புடீண்ணு மெசேஜ் வருது தல. மலேஷியாவில் இருந்து தினேஷ்... "


இப்ப பாருங்க தினேஷ்! உங்களின் ஈமெயில் எனக்கு தெரியவில்லை.