நேஷனல் ஜியாகரபி சேனல் வழங்கும் ' The Story of Earth' என்ற அருமையான காணொளியை உங்களுடன் பகிந்துக்கொள்ளுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
நம்ம பூமி உருவான நாள் முதல் இன்றுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளை, பல கேமராக்கள் மூலம், ஒன்றுவிடாமல் பதிவு செய்தால் எப்படி இருக்குமோ, அதைப்போல CGI துணைக்கொண்டு அட்டகாசப்படுத்தியுள்ளார்கள் !
இன்று நாம் காலுக்கு கீழே திடமாக தட்டுப்படும் பூமி, சுமார் ஐந்து பில்லியன் வருடங்களுக்கு முன்னே ஒன்றுமில்லை. புதிதாகப்பிறந்த... பின்னாட்களில் சூரியன் என்று அழைக்கப்படவும், ஏன் கடவுளாகவும் வணங்கப்படப்போகிற ஒரு சிறு நட்சத்திரமும், அதைச் சுற்றி தூசுப்படலங்களும்தான் இருந்தது! பல மில்லியன் ஆண்டுகளாக தொடர்ந்து நடைப்பெற்ற மாற்றங்களால், இப்போதுள்ள பூமியும், அதிலுள்ள ஜந்துக்களும் உருவாயின. வெறும் கொதிக்கும் பாறைக்குழ்ம்பாக இருந்த இந்த நெருப்புக்கோளம்... நாம் இன்று மாசுப்படுத்திக்கொண்டு இருக்கும், அழகிய நீலக் கோளாக (அதாங்க Blue Planet) மாறியது என்பதை தத்ரூபமாக காட்டியுள்ளார்கள். வாங்க பார்க்கலாம்.....
[ இவ்வளவு கஷ்ட்டப்பட்டு, பலகோடி ஆண்டுகள் மாற்றங்களால் உருவான, நம் தாய்ப்போன்ற பூமியை, எப்படியெல்லாம் சிதைக்கிறோம் என்பதை நினைக்கவும் வைக்கிறது இந்த காணொளி!]
6 கருத்துகள்:
எதையுமே பொக்கிஷமாக மதிக்கும் வரைதானே கவனமாக பார்த்துக் கொள்வோம். நீண்ட நாட்களுக்குப் பின் பதிவு எழுத வந்து இருக்கீங்க... அடிக்கடி எழுதுங்க.
மிகச்சரியா சொன்னீங்க சித்ரா, வருகைக்கும் ஊக்கத்துக்கும் நன்றி.
மிக நீண்ட நாட்கள் ஆகியது உங்களிடமிருந்து புதிய பகிர்வு வர.
எனினும் மிக்க மகிழ்ச்சி உங்களின் பெயர்கண்டபோது.
பகிர்வுக்கு நன்றி.
It is amazing. The narration, music, the sceneries all are breath taking. I enjoyed the film and sending the same by e mail to my friends everywhere.
Thanks for a such a worthy experiences among us.
நன்றி கக்கு, கொஞ்ச பிசி ஆகிவிட்டேன். இனி அடிக்கடி சந்திக்கலாம். அது என்ன 'இளையராஜா ஃபென்ஸ் கிளப்'? எனக்கும் ஒரு மெயில் அனுப்புங்களேன்.
//அது என்ன 'இளையராஜா ஃபென்ஸ் கிளப்'? எனக்கும் ஒரு மெயில் அனுப்புங்களேன்.//
நன்றி. அது ஒன்னும் இல்லை. என் பக்கத்தில் காணப்படும் அந்த மாஸ்ட்ரோ இளைய ராஜாவின் fபேன்ஸ் க்ளப் படத்தை படத்தை தரவிறக்கி தங்கள் தங்கள் வலைகளில் வைத்துக்கொள்ள இளையராஜாவின் விசிறிகளை அழைத்தேன் . சில பதிவர்களும் அவ்வாறு அவரவர்களின் பக்கங்களில் அதனை வைத்துள்ளனர். ஒரு ஒன்றிணைக்கும் ஆசை.
வலையில் பெரும்பான்மை ராஜாவின் விசிறிகளே !
கருத்துரையிடுக