நேஷனல் ஜியாகரபி சேனல் வழங்கும் ' The Story of Earth' என்ற அருமையான காணொளியை உங்களுடன் பகிந்துக்கொள்ளுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
நம்ம பூமி உருவான நாள் முதல் இன்றுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளை, பல கேமராக்கள் மூலம், ஒன்றுவிடாமல் பதிவு செய்தால் எப்படி இருக்குமோ, அதைப்போல CGI துணைக்கொண்டு அட்டகாசப்படுத்தியுள்ளார்கள் !
இன்று நாம் காலுக்கு கீழே திடமாக தட்டுப்படும் பூமி, சுமார் ஐந்து பில்லியன் வருடங்களுக்கு முன்னே ஒன்றுமில்லை. புதிதாகப்பிறந்த... பின்னாட்களில் சூரியன் என்று அழைக்கப்படவும், ஏன் கடவுளாகவும் வணங்கப்படப்போகிற ஒரு சிறு நட்சத்திரமும், அதைச் சுற்றி தூசுப்படலங்களும்தான் இருந்தது! பல மில்லியன் ஆண்டுகளாக தொடர்ந்து நடைப்பெற்ற மாற்றங்களால், இப்போதுள்ள பூமியும், அதிலுள்ள ஜந்துக்களும் உருவாயின. வெறும் கொதிக்கும் பாறைக்குழ்ம்பாக இருந்த இந்த நெருப்புக்கோளம்... நாம் இன்று மாசுப்படுத்திக்கொண்டு இருக்கும், அழகிய நீலக் கோளாக (அதாங்க Blue Planet) மாறியது என்பதை தத்ரூபமாக காட்டியுள்ளார்கள். வாங்க பார்க்கலாம்.....
[ இவ்வளவு கஷ்ட்டப்பட்டு, பலகோடி ஆண்டுகள் மாற்றங்களால் உருவான, நம் தாய்ப்போன்ற பூமியை, எப்படியெல்லாம் சிதைக்கிறோம் என்பதை நினைக்கவும் வைக்கிறது இந்த காணொளி!]


