புதன், 25 ஜனவரி, 2012

என்றென்றும் ராஜா !



சில விஷயங்கள் அபூர்வமாகத்தான் நிகழும் ... குறிஞ்சிப்பூ பூப்பதைப்போல! இசை ஞானியின் நேரடி இசை நிகழ்ச்சியும் அதுப்போலத்தான்.  நிகழ்ந்தேவிட்டது! எத்தனைக்கோடித் தமிழர்களின் கனவாக இருந்தது... நனவாக,நிஜமாக மாறியேவிட்டது! இசை ஞானியின் வாழ்வில் சமீபத்தில் நிகழ்ந்த துக்க நிகழ்வான அவரின் துணைவியார் திருமதி. ஜீவா அவர்களின் மறைவுக்குப் பிறகு அவர் பங்குபெற்ற இசை நிகழ்ச்சி என்பதால்,மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக எதிர்ப்பார்கப்பட்டது. ( 'ஒரு ஜீவன் அழைத்தது' பாடலின் இடையே அவர் தன் கண்ணீரை துடைத்துக்கொண்டபோது, நம் நெஞ்சம் கனக்கிறது.)

ஜெயா டிவி இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு, உலகத்தமிழர்களிடம் மீண்டும் ஒருமுறை கரகோஷத்தை பெற்றுள்ளது. உலக இசைஞானி ரசிகர்களின் சார்பாக, இந்த பகிர்வின் மூலமாக ஜெயா டிவி நிர்வாகத்துக்கு நமது நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுகிறோம். 

இப்போது நீங்கள் பார்க்கப்போது,ஜெயா டிவியின் 'என்றென்றும் ராஜா ' நிகழ்ச்சித் தொகுப்பை... எந்த விளம்பர தடங்கலுமில்லாமல்... யூ டியூப் வாயிலாக... இரண்டேப் பகுதிகளாக... நல்ல HD தரத்துடன்...!(அப்லோட் பண்ண நண்பருக்கு கோடி வணக்கங்கள்!) சுத்தத் தங்கத்துக்கு, சர்டிபிகேட் எதற்கு...?! வயலின்கள், செலோக்கள், கிட்டார்கள், கீ போர்டுகள், புல்லாங்குழல்கள், தபேலாக்கள், மிருதங்கங்கங்கள், மேளம், ஷேனாய்கள், டிரம்பெட்டுகள், ட்ரம்சுகள் போன்ற 'நிஜ' இசைக்கருவிகளின் மத்தியிலும், ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த மேற்க்கத்திய இசைக்கலைஞர்களுடன் நம்ம  ஐயா பாலமுரளி, எஸ்.பி.பி., கே.ஜே.ஜே., சித்ரா, ஹரிஹரன்,உமா ரமணன், தீபன்  போன்ற ஜாம்பவான்களின் இடையே, நம் இசைஞானியோடு கைக்கோர்த்து உலாவரலாம்...! வாங்க...! 










போதும்...
ஸ்டார்ட் ம்யூஸிக் !
[460p resolution இல் வைத்து பாருங்கள் நண்பர்களே...!] 





இதில் இன்னொரு கடைசி பாகமும் உள்ளது... நல்ல தரத்துடன் 


தேடிக்கொண்டிரும்தேன்... கிடைத்தது அதே நண்பர் மூலமாக.... ஆனால் கொஞ்ச 


குறைந்த தரத்தில்....ஆனால் நிகழ்ச்சியின் தரம் கடந்த இரண்டு பாகங்களைவிட இந்தப் 


பாகத்தில் அதிகம்... நீங்களேப் பாருங்க...! 

6 கருத்துகள்:

தமிழ் செல்வா சொன்னது…

அன்பு எட்வின் அவர்களே உன்னதமான நமது இசை ஞானியை, "தமிழ் ரத்னா"வை, அவரின் படைப்பை, எங்களுக்கு வழங்கிய, உங்களுக்கு நன்றி. பதிவு செய்தவரையும் முன்னிலைப்படுத்திய உங்களுக்கும் பாராட்டுக்கள்.

பொன் மாலை பொழுது சொன்னது…

பகிர்ந்தமைக்கு முதலில் நன்றிகள் எட்வின். இன்னமும் வீடியோவை பார்க்கவில்லை, ஆனாலும் எனக்குத்தெரியும் எவ்வித ஆர்வத்துடன் இவைகளை இங்கு வழங்கினீர்கள் என்று.

தொடரும்.....

Chitra சொன்னது…

Super! SUPER! Super!

shabi சொன்னது…

இது சி டி யா கிடைக்குமா இந்த லிங்க் டவுன் லோட் ஆக லேட் ஆகுது.... உங்களிடம் 2006ல் நடந்த சி டி யும் கிடைக்குமா........... ரொம்ப நன்றி ... இந்த லிங்க்க்கு

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் சொன்னது…

ஷபி,சித்ரா,கக்கு& செல்வராஜ் .... வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
ஷபி ... 2006 நிகழ்ச்சி சிடி என்னிடம் உள்ளது அதுமட்டுமல்லாமல், லஷ்மன் சுருதியுடன் அவர் சேர்ந்து செய்த நிகழ்ச்சியும் உள்ளது... கூடிய சீக்கிரம் ஏதாவது செய்யலாம். வாழ்க ராஜா!

பொன் மாலை பொழுது சொன்னது…

ராஜாவின் இசை நிகழ்சிகளை தொடர்ந்து இன்றும் கண்டு, கேட்டு மகிழ்கிறேன். எல்லாமே பிரபலமான, நம் தொகுப்பில் இருக்கும் ,எப்போதும் கேட்டு மகிழும் பாடல்கள்தான். ஆனாலும் அவைகளை மீண்டும் சுவை குறையாது முற்றிலும் அதே மாதிரியாக மேடையில் மீண்டும் படைப்பது என்பது மிக மிக கடினம். அதனை அவர் எளிதாக செய்து காட்டினார்.

ராஜாவின் சோர்வற்ற உழைப்பும் , ஈடு பாடும் தெளிவாக இந்நிகழ்சிகளில் தெரிகிறது.

சிம்பனி என்றால் என்ன கேவிக்கு ராஜா மிக எளிதாக அவைகளை இசைக்க வைத்து புரிய வைத்த விதமே சொல்லும் அவர் ஒரு இசைமேதை என்று. வழங்கியதற்கு உங்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் எட்வின் !