சமீபத்தில் பிபிசியில் நான் பார்த்து மிகவும் ரசித்து வியந்தத் தொடர்க் காணொளி... 'Earthflight' என்ற அருமையான ஆவணப்படம். ஜான் டவ்னர் [John Downer] தயாரிப்பில், நடிகர் டேவிட் டெனன்ட் [David Tennant] வர்ணனையில், பிபிசி நிறுவனம் வழங்கிய உள்ளத்தைக் கொள்ளைக்கொள்ளும் விருந்தை நாம் அனைவரும் பகிந்துக்கொள்ளலாம்!
பொதுவாக நம் அனைவருக்கும் சிறுவயது முதல் ஒருப் பறவையைப்போல் பறக்கவேண்டும் என்ற ஆசை கண்டிப்பாக இருந்திருக்கவே வேண்டும். வழக்கம்போல,பிபிசி இந்தப் படத்தின் மூலம் நம்மை ஒரு பறவையின் பார்வையோடு, பல நாடுகளையும், கண்டங்களையும், பறவைகளோடு பறவையாக நாம் பறந்துக் கடக்கப்பன்னியுள்ளது என்றால் அது மிகையல்ல !
ஆறு பகுதிகளாக உள்ள இந்தத் தொடர்க்காணொளி வட அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஐரோப்பா, தென் அமெரிக்கா மற்றும் ஆசியா & ஆஸ்திரேலியா போன்ற தலைப்புகளில், அந்தந்தக் கண்டங்களைச் சேர்ந்தப் பறவைகள் எப்படி கண்டம் விட்டு கண்டம் புலம்பெயர்கின்றன என்பதை, நவீன தொழில்நுட்ப கேமரா மற்றும் கருவிகளைக்கொண்டு, ஏதோ நாமும் அவைகளோடு பறந்துச் செல்வதைப் போன்ற பிரம்மையை ஏற்படுத்தியுள்ளார்கள். இந்தப்படங்களைப் பார்த்தால் பறவைகளைப்பற்றிய நம்முடைய எண்ணமும் மரியாதையும் நிச்சயம் அதிகரிக்கும் என்பது உறுதி... அவைகள் நம் தோட்டத்தில் இருந்தாலும் சரி... நம் டைனிங் டேபிள் மீது இருந்தாலும் சரி!
ஒன்றுவிடாமல் பாருங்க... கடைசியில் வரும் காணொளியில், இந்தத் தொடரை எடுக்க எவ்வளவு மெனக்கெட்டிருக்கிறார்கள் என்றும் இந்த காணொளிகளின் பின்னே எவ்வளவு உழைப்பு உள்ளது என்பதையும் நாம் அறிய முடியும். Hats off to you guys! Thank you BBC...!
முதலில் ட்ரைலர்...
வட அமெரிக்கா...
ஆப்ரிக்கா...
ஐரோப்பா...
தென் அமெரிக்கா...
ஆசியா & ஆஸ்திரேலியா...
காட்சிகளின் பின்னே...
இவர்கள் இதற்குமுன் தயாரித்த 'Polar Bear - Spy on the Ice' படப்பிடிப்பில் நடந்த தமாஷ்!
6 கருத்துகள்:
ஆறு பகுதிகளையும் பார்க்கவேண்டும். ஒரு வாரம் ஆகிவிடும் சாமியோவ். .....
வர வர நீங்கள் வாசகர்களு கட்டிப்போடும் வித்தையை பலமாக பயன்படுத்த ஆரம்பித்து விட்டீர்கள்.
தொடரட்டும் எட்வின்.
நாங்க எல்லாம் எப்போ தொழில் கத்துகிட்டு... என்னமோ போங்க...
என்ன தினேஷ்..????
இவ்வளவு இன்ஃபர்மேஷன் கொடுக்குறீங்க... உக்காந்து பாத்து அதை தெரிஞ்சிக்கிட்டு...
அதுக்கு தான் இந்த ஃபீலிங்க்...
தேடுதலும் அதைப் பகிர்தலும்தான் தினேஷ். முன்பெல்லாம் நிறையப் புத்தகம் படிப்பேன், படித்த புத்தகத்தை ஊர் நண்பர்களுடன் பகிந்துக்கொள்ளுவேன். இப்போது புத்தகங்கள் குறைந்துப்போய், நிறைய 'இணையமாக' மாறி, பார்த்தவைகளை உலக நண்பர்களோடுப் பகிர்ந்துக் கொள்ளுகின்றேன்! மற்றபடி பிழைக்க தொழிலும் உண்டு! :-) [உங்களுக்கு செந்தில் ரொம்பப் பிடிக்குமா...?]
நானும் பேருக்கு ரெண்டு மூணு புத்தகங்களை வாங்கி வைத்திருக்கிறேன். ஆனா படிக்க தான் நேரம் இல்லை. மற்றபடி செந்திலுடைய இந்த படம் எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால தான் வச்சிருக்குறேன்....
கருத்துரையிடுக