எண்டேவரின் கடைசீப் பயணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள். எல்லாப் படங்களிலும் கீழே நம்ம பூமித்தாய்!
ஆம். வெள்ளை யானைகள்தான்! அத்தனை பளுவையும் சுமந்து, விண்வெளியில் பத்திரமாக இறக்கிவிட்டு, மீண்டும் கம்பீரமாகத் திரும்பி வந்த இந்த அறிவியல் அற்புதத்தை, நம்மவூர் யானைகளோடு ஒப்பிடுவது நன்றாகத்தானிருக்கிறது! முப்பது வருடங்களுக்கு முன் தொடங்கிய இந்த விண்வெளி சகாப்த்தம் ஒரு முடிவுக்கு வந்து இருக்கிறது!
அமெரிக்கா, கொலம்பியா விண்கலத்தை, 12/04/81 அன்று ( யூரி காகரின் விண்வெளியில் உலகை சுற்றி வந்த நாளின், இருபதாம் ஆண்டு நிறைவு நாள்) விண்வெளியில் ஏவியதைக்கண்டு உலகமே வியந்து நின்றது. அதுவரை உபயோகத்திலிருந்த விண்வெளித் தொழில்நுட்பத்தில் சாதனையாக, மறுபடியும் மறுபடியும் உபயோகப்படுத்தக்கூடிய, செலவில் முன்பைவிடச் சிக்கனமான, நம்ம சாதாரண விமானப்போக்குவரத்தைப்போல இருந்தது இந்த விண்வெளிக்கலன். ஐந்து முதல் ஏழு விண்வெளி வீரர்களையும், சுமார் 22,700 கிலோ எடையுள்ள பொருட்களையும் சுமந்து, பூமியின் வளிமண்டலத்தைக் கடந்து, விண்வெளியில் இறக்கிவிட்டு வரக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டது.
மேலே பூமியைச் சுற்றிவரும், மற்றும் சூரிய மண்டலத்தில் பவனிவரும் பல மனிதன் அனுப்பிய செயற்கைக் கோள்கள், இந்த விவெளி ஓடங்கள் இலையென்றால் சாத்தியமாகி இருக்காது. மனிதனில் மகத்தான சாதனையான சர்வதேச விண்வெளி நிலையம் இந்த அளவுக்கு முன்னேறி இருப்பதற்கு இந்த விண்ணில் பறந்த வெள்ளை யானைகளும் ஒரு முக்கியக்காரணம். மற்றும் மெகலன், கலிலியோ, யுலிசிஸ் போன்ற விண்கலங்கள் விண்ணில் விட்டு வந்தது இந்த ஓடங்கள்தான்! ஹப்புள் மட்டும் சந்திரா ஏவப்பட்டது இவைகள் மூலமாகத்தான்.
'ஆனைக்கும் அடிசறுக்கும்' என்பதுப்போல் இந்த வெள்ளையானைகளுக்கு நேர்ந்த மிகத்துயரமான விபத்துக்கள் இதன் முடிவுக்கு வழிவகுத்துவிட்டது. ஆம். 28/01/86 அன்று சேலஞ்சர் விண்கலம், கென்னடி ஏவுத்தளத்திலிருந்து விண்ணில் கிளம்பிய 73 வினாடிகளில் வெடித்துச் சிதறியது! அதிலே இருந்த ஏழு விண்வெளி வீர்களும் மரணத்தைத் தழுவினார்கள்.
மீண்டும் 01/02/03 அன்று, ஏற்கனவே இருபத்தி ஏழுமுறை விண்வெளிக்குச் சென்றுவந்த கொலம்பியா விண்கலம், தனது பதினாருநாள் விண்வெளிப்பயணத்தை முடித்துக்கொண்டு, பூமியின் காற்றுமண்டலத்தில் நுழைந்தவுடன் வெடித்ததில் அதிலிருந்த ஏழுபேரும் உயிரிழந்தனர். அதிலே ஒருவர் நம்ம நாட்டில் பிறந்து, அமெரிக்காவில் செட்டில்லான கல்பனா சாவ்லாவும் ஒருவர் என்பது நினைவிருக்கும்.
ஆக, மேற்கூறிய விபத்துக்களாலும், மேலும் அதிநவீன அரெஸ்(Ares) மற்றும் ஒரியன் (Orion) போன்ற எதிர்க்கால விண்வெளிப்போக்குவரத்து வாகனத் திட்டங்களாலும், இந்த முப்பதுவருட சகாப்த்தம் இந்த வருடம் முடிவுக்கு வருகிறது. ஏற்கனவே 'என்டெவர் ' விண்கலம் தன இறுதி யாத்திரையை முடித்துவிட்டது! அடுத்தது 'அட்லாண்டிஸ் ' தனது இறுதிப்பயணத்தை, ஜூலை 8 அன்றுத் துவங்கி, அதேமாதம் இருபதாம்தேதி முடிக்கப்போகிறது!
ஸ்ஸ்ஸ்... அப்பாடா ...ஒருவழியாய் வந்து சேர்ந்தாயிற்று...!
விண்வெளிக்கலம் 'என்டேவர்' இன் இறுதிப் பயணம்... படங்கள்.
அட்லாண்டிஸ் விண்வெளிக்கலத்தின் கடைசி ஏவுதலை நேரில் பார்க்க விரும்பும் நண்பர்களுக்கு, இதோ ஒரு
Guide...
[ சகோதரி சித்ரா ... பக்கமாக இருந்தால், ஒரு எட்டு போய்விட்டு வரவும்! ]
Flight statistics
Shuttle | Flights | Flight days | Orbits | Longest flight | First flight | Most recent flight | Mir/ISS
docking |
STS | Launched | STS | Launched |
Columbia† | 28 | 300d 17h 46m 42s | 4,808 | 17d 15h 53m 18s | STS-1 | Apr 12, 1981 | STS-107† | Jan 16, 2003 | 0 / 0 |
Challenger† | 10 | 62d 07h 56m 15s | 995 | 08d 05h 23m 33s | STS-6 | Apr 04, 1983 | STS-51-L† | Jan 28, 1986 | 0 / 0 |
Discoveryx | 39 | 365d 12h 53m 34s | 5,830 | 15d 02h 48m 08s | STS-41-D | Aug 30, 1984 | STS-133 | Feb 24, 2011 | 1 / 13 |
Atlantis | 32 | 293d 18h 29m 37s | 4,648 | 13d 20h 12m 44s | STS-51-J | Oct 03, 1985 | STS-132 | May 14, 2010 | 7 / 11 |
Endeavourx | 25 | 296d 02h 18m 35s | 4,677 | 16d 15h 08m 48s | STS-49 | May 07, 1992 | STS-134 | May 16, 2011 | 1 / 12 |
Total | 134 | 1316d 19h 24m 43s | 20,958 | | 9 / 36 |
x No longer in service (retired) † No longer in service (destroyed)
Function | Manned orbital launch and reentry |
Manufacturer | United Space Alliance:
Thiokol/Alliant Techsystems (SRBs)
Lockheed Martin/Martin Marietta (ET)
Boeing/Rockwell (orbiter) |
Country of origin | United States |
Size |
Height | 56.1 m (184.2 ft) |
Diameter | 8.7 m (28.5 ft) |
Mass | 2,030 t (4,470,000 lbm) |
Capacity |
Payload toLEO | 24,400 kg (53,600 lb) |
Payload to
GTO | 3,810 kg (8,390 lbm) |
Payload to
Polar orbit | 12,700 kg (28,000 lb) |
Launch history |
Status | Active |
Launch sites | LC-39, Kennedy Space Center
SLC-6, Vandenberg AFB (unused) |
Total launches | 134 |
Successes | 133 successful launches
131 successful re-entries |
Failures | 2:
(launch failure, Challenger); and
(re-entry failure, Columbia) |
Maiden flight | April 12, 1981 |
Notable payloads | Tracking and Data Relay Satellites
Spacelab
Great Observatories (including Hubble)
Galileo, Magellan, Ulysses
Mir Docking Module
ISS components |
Boosters (Stage 0) - Solid Rocket Boosters |
№ boosters | 2 |
Engines | 1 solid |
Thrust | 12.5 MN each, sea level liftoff (2,800,000 lbf) |
Specific impulse | 269 s |
Burn time | 124 s |
Fuel | solid |
First stage - External Tank |
Engines | 3 SSMEs located on Orbiter |
Thrust | 5.45220 MN total, sea level liftoff (1,225,704 lbf) |
Specific impulse | 455 s |
Burn time | 480 s |
Fuel | LOX/LH2 |
Second stage - Orbiter |
Engines | 2 OME |
Thrust | 53.4 kN combined total vacuum thrust (12,000 lbf) |
Specific impulse | 316 s |
Burn time | 1250 s |
Fuel | MMH/N2O4 |
மனித இன வரலாற்றில் முக்கிய இடம் பிடித்த இந்த அறிவியல் அற்புதத்துக்கு, பிபிசி நிறுவனம், ஒரு அருமையான மரியாதை செலுத்தியுள்ளது. ' The Space Shuttle - A Horizon Guide ' என்ற ஆவணப்படம் மூலமாக. கடந்த முப்பது வருடங்களாக நடந்த சாதனைகளையும், வேதனைகளையும் மிகவும் அழகாக சொல்லப்பட்டுள்ளது. இந்தக் காணொளியைக் கண்டப்பின்பு, இவைகளைப் பற்றி அறியாதவர் மனதிலும் இடம்பிடிக்கும் என்பது நிச்சயம்! வாங்க பார்க்கலாம்.......
BBC the space shuttle a horizon guide-2011 by videopedia