சேவும் காஸ்ட்ரோ ...
[நமது வலைப்பூவை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தி, நம்மை ஊக்கப்படுத்திய நண்பர் நாஞ்சில் பிரதாப் அவர்களுக்கும் வலைச்சர பொறுப்பாளர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளும்,வாழ்த்துக்களும் !
மனதில் பட்டதை சொல்லும் நண்பர் அபுதாபி கண்ணன் அவர்களுக்கும் நன்றிகள் பல!]
13.07.2010 அன்று எடுக்கப்பட்டப் படம்....
மரடோனாவின் காலில் மாமனிதனின் உருவம்..
- இங்கிலாந்து ராணிக்கும், தாய்லாந்து அரசருக்கும் அடுத்தபடியாக, ஒரு நாட்டின் நீண்டகால தலைவராக திகழ்ந்தவர் காஸ்ட்ரோ .
- இரண்டு கின்னஸ் ரேக்காடுகளை தன் வசம் வைத்துள்ளார். அனல் தெறிக்கும் பேச்சாற்றல் கொண்ட இவர், 29.09.1960 அன்று, ஐநா மாமன்றத்தில் மிக நீண்ட உரையான 4 மணி 29 நிமிட சொற்பொழிவை நிகழ்த்தினார்! அதற்கும் மேலாக, 1986 ஆம் வருடம், ஹவானாவில் நடந்த கம்யுனிஸ்ட் கட்சிக் கூட்டத்தில் அவர் பேசிய நேரம், 7 மணி நேரம், 10 நிமிடங்கள்!
- இதுவரையில் அவரை 634 முறை கொல்ல முயற்சி செய்யப்பட்டுள்ளது! விஷ மாத்திரைகள், விஷ சுருட்டு, உணவுப்பொருட்கள், போல பல வகையில்...! அட... அவரின் பிரசித்திப் பெற்ற தாடியின் ரோமத்தை கொட்டவைக்க ஏதோ பவுடர் கூடக் கொடுக்கப்பட்டதாம்! ஆனால் அதில் ஒன்றுக்கூட உதிரவில்லை! 'என்னா சின்னப்பிள்ளத்தனம் பாருங்க?'
- அவரை க்யூபாவின் தலைமைப் பொறுப்பிலிருந்தும், ஏன் உலகத்திலிருந்தேயும் கிளப்பிவிட முயற்சி நடந்த காலத்தினுடே அவர் ஒன்பது அமெரிக்க ஜனாதிபதிகளக் கடந்து வந்துள்ளார்!
- சுருட்டின் புகைப்பதில் மிகவும் பிரியமாக இருந்த காஸ்ட்ரோ, 1985 வருடம் முதல் சுத்தமாக புகைப்பதை நிறுத்திவிட்டார்! இப்போது அந்த சுருட்டுக்கு ஒரு சிறந்த உபயோகமாக அவர் எல்லோரிடமும் சொல்லுவது..... எதிரிக்கு பரிசாகக் கொடுப்பது!
- காஸ்ட்ரோ வளர்த்துவந்த உப்ரே பலன்கா( அர்த்தம்: வெள்ளைப் பால்மடி!) எனும் பசு, தினமும் 110 லிட்டர் பால் கறக்குமாம்!
- காஸ்ட்ரோவிற்கு எட்டுப் பிள்ளைகள். இரண்டு மனைவிகள். முதல் மைவிக்குப் பிறந்த மகளான அலினா பெர்னாண்டிஸ், 1993 ஆம் வருடம், அரு சுற்றுலாப் பயணிப் போல் மாறுவேடத்தில் க்யூபாவை விட்டுத் தப்பி அமெரிக்காவில் தஞ்சம் புகுந்து, மயாமி நகரின் வானொலியில், தன் தந்தையின் ஆட்சியை விமரிசித்து நிகழ்சிகள் நடத்தி வருகிறார்!
- இரண்டாவது மனைவி டாலியாவை சந்தித்து வாழ ஆரம்பித்தது 1961 இல். சத்தமில்லாமல் திருமணம் செய்துக்கொண்டது 1980 இல்!
- ஜனவரி 31, 2007 இல் அவர் மிகவும் நோய்வாய்ப்பட்டு கவலைக்கிடமாக இருந்தப் போது, அமெரிக்காவின் மயாமி நகரில், அவர் இறந்தால் அதை விமரிசையாகக் கொண்டாட திட்டம் தீட்டி இருந்தனர். அதிலும் அவர் மண்ணைப் போட்டுவிட்டார்!
- காஸ்ட்ரோ சிறு வயதில் ஒரு தீவிர கத்தோலிக்கர். ஆனால் பிறகு அவர் ஒரு நாத்திகராக மாறிவிட்டார். 1962 ஜனவரியில் அப்போது போப்பாக இருந்த ஜான் XXIII அவரை கத்தோலிக்க பிரிவை விட்டு நீக்கிவிட்டார். அதற்காக அவர் கவலைப்படவில்லை. இருந்தும் போப் ஜான் பால் II, 1998 இல் க்யூபா வந்தபோது, அவரை தனியே நெடுநேரம் சந்தித்துப் பேசினார். அது மட்டுமல்லாமல், ஏப்ரல் 2005 இல் அவர் இறந்தப் போது அவரின் நினைவு பிராத்தனையிலும் கலந்துக்கொண்டார்.
மேலும் தெரிந்துக்கொள்ள வேண்டுமா.... இங்கே....
6 கருத்துகள்:
பதிவு அருமை........வாழ்த்துகள்
மிக மிக அருமையான பதிவு நண்பா
உங்கள்
பாலா
மதுரை
arumaiyana pathivu. valam pera vazhtukkal. spaecial thanks of inroducing my blog. http://samykannan.blogspot.com/
kannan
Abu dhabi
enakku piditha castrovai pattri pathuvu ittathukku nantri mattrum vaalthukkal. speacial thanks to inroducing my blog http://samykannan.blogspot.com/
best regards
kannan
abu dhabi
Nice! wishes!! :)
good post on castero
http://www.healthdurbar.com
கருத்துரையிடுக