இப்போது நீங்க இதைப் படித்துக்கொண்டிருக்கும்போதே, வேறொரு, இதேப்போன்ற உலகில், 'நீங்களே' இந்தப் பதிவைப் படித்துமுடித்து, காணொளிகளைக் கண்டு வியந்து, பின்னூட்டமும்(!?) போட்டு முடித்திருப்பீர்கள்!
இலங்கையில், அப்பாவித்தமிழர்கள், அடிமைகளாய் போர் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இதே கணத்தில், எங்கோ வேறொரு உலகில் திரு வேலுப்பிள்ளை பிரபாகரன், இந்தியப் பிரதமர் திரு.ராஜீவ் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருப்பார்!
இரண்டாம் உலகப்போரில், நேசப்படைகள் தோற்று, அமெரிக்காவை ஹிட்லர் ஆண்டுக்கொண்டிருக்கலாம்! ஒசாமா பின்லேடன் இரட்டை கோபுரத்தின் மேல் இருக்கும் தொலைநோக்கியில், நியூயார்க் நகர அழகை ரசித்துக்கொண்டிருக்கலாம்!
மனிதனே இல்லாத பூமியில், டைனோசர்கள் அட்டகாசம் பண்ணிக்கொண்டிருக்கலாம்!
என்ன கேட்க லூசுத்தனமாக உள்ளதா? ஆனால் க்வாண்டம் விதியின்படி இதெல்லாம் சத்தியமான சாத்தியங்கள் என்று தலையில்லடிக்கிரார்கள் விஞ்ஞானிகள்! 1954 ஆம் வருடம் ஹக் எவர்ட் (Dr.Hugh Everett III) எனும் இருபத்தி நான்கு வயது பௌதீக மாணவன் துவக்கிவைத்த (THE THEORY OF THE UNIVERSAL WAVE FUNCTION)அறிவியல் விந்தை, இன்று வேகமெடுத்து சென்றுக்கொண்டே இருக்கிறது
.
ஆம்! நம் பிரபஞ்சத்தைப் போலவே எண்ணிலடங்கா பிரபஞ்சங்கள் உண்டு என்றும், அவைகளில் நம்மைப் போலவே அச்சு அசலாக நாமும் வாழ்ந்துக்கொண்டு இருப்போம் அல்லது பிறக்காமலோ அல்லது இறந்தோ இருப்போம் என்று இந்த கோட்பாடு கூறுகிறது!
இதுப்பற்றி விளக்க விஞ்ஞானிகளேத் தடுமாறும்போது நான் எங்கே? இதோ நான் பார்த்து வியந்த காணொளிகள், படித்து புரிந்துக்கொள்ள முயன்ற தளங்களை உங்களுடன் பகிந்துக்கொள்ளுகிறேன். நீங்களும் முயன்றுப்பாருங்கள். ஆனால் மிகவும் சுவாரசியமான ஒரு விஞ்ஞானப் பிரிவு இது, நிச்சயம் உங்களை வசீகரிக்கும் என்பது சர்வ நிச்சயம்!
=============================
===========================
====================================
மேக்ஸ் டெக்மார்க் மற்றும் மிகியோ ககு தரும் விளக்கங்கள்.....
===============================
'Parallel Worlds, Parallel Lives' எனும் PBS Nova வின் அருமையான வீடியோவில் Dr.ஹக்
எவர்ட்டின் மகனான , பிரபல ராக் இசைப் பாடகர் மார்க் எவர்ட், தன் தந்தை வாழ்ந்த
இடங்களுக்கு சென்று, ஹக்கின் நண்பர்களோடு உரையாடி, கடினமான அறிவியல்
சித்தாந்தங்களுக்கு எளிமையான விளக்கங்கள் பெறுவது சிறப்பாக உள்ளது. இந்தத் தளத்தில்
வீடியோவைக் காண முடியாதவர்கள், அதிலுள்ள லிங்க்கை 'க்ளிக்கி', You Tube தளத்தில்
சென்றுப் பார்க்கவும்.
=================================
'இணைப் பிரபஞ்சங்கள்' ஒரு கலந்துரையாடல்....
- இணை பிரபஞ்சங்கள் பற்றி, Scientific American பத்திரிக்கையில் Dr.Max Tegmark அவர்களின் அசத்தல் கட்டுரை இங்கே....
6 கருத்துகள்:
மிகவும் அருமையான தொகுப்பு. இன்னுமின்னும் என்ன புதுமைகள் இந்தப் பிரபஞ்சத்திலோ?
மிகவும் அருமையான தொகுப்பு. இன்னுமின்னும் என்ன புதுமைகள் இந்தப் பிரபஞ்சத்திலோ?
இந்த பிரபஞ்சத்தில் சிந்திக்கும் திறனுடைய உயிரினமாக நாம் மட்டும் தான் இருக்கிறோம் என்று சொல்பவன் முட்டாள்.
சூரியனை போலவே பல லட்சம் சூரியன்கள் இந்த பரபஞ்சதில் உள்ளது. Extra solar planets.
பூமியை போலவே பல லட்சம் கிரகங்கள் இந்த அந்த சூரியன்களை சுற்றி வருகிறது.
அதில் பல கிரகங்களில் சிந்திக்கும் திறனுடைய உயிரினங்கள் நிச்சயமாக வாழும், (ET}
நமக்கு அருகில் இருக்கும் செவ்வாய் கிரகத்தை கூட நம்மால் முழுமையாக ஆய்வு செய்ய முடியவில்லை... எங்கிருந்து பல ஒலி ஆண்டுகள் தூரம் இருக்கும் அந்த கிரகத்தை நாம் ஆராய்வது.
http://www.tamilpadaipugal.blogspot.com/
புவியில் வெறும் கல்லிலும் மண்ணிலும் இருந்து தற்போதுள்ள உயிரனங்கள் உருவாவதற்கான probability 10^40 க்கு ஒன்று.[ஒன்றுக்கப்புரம் நாற்ப்பது பூஜ்ஜியங்கள் போட்டு, அத்தனை முறை இந்த அண்டம் உருவாக்கப் பட்டால் ஒரே ஒரு முறை தான் தற்போதைய நிலைக்கு வருவதற்கான வாய்ப்புகள் ஒரே ஒரு முறைதான்.]. ஆனால், எக்கச் சக்கமான அண்டம் இதே மாதிரி இருக்கிறது என்று இவர்கள் சொல்கிறார்கள். அதாவது, ஒரு சீட்டில் உங்கள் பெயரை எழுதி அதை 10^40 வேறு சீட்டுகளுடன் நன்றாக கலந்து விட்டதுக்கப்புரம் நூறு தடவை Random ஆக ஏதாவது ஒரு சீட்டை எடுக்க, அத்தனை தடவையும் உங்கள் பெயரே வருகிறது என்பது போல இருக்கிறது!!
super
சுவாரஸ்யமானதாக தான் உள்ளது. ஆனால் கருத்துக்கள் முழுமையாக இல்லை.
வாழ்த்துக்கள். தொடர்ந்து பல பதிவுகள் எழுதவும்.
கருத்துரையிடுக