பெரிய படிப்பு படித்த டாக்டரெல்லாம் இங்கு வராதிங்க. இது சாதாரண மனிதருக்கு. ஆமாங்க. நம்ப உடம்புக்குள்ள ஒவ்வொரு வினாடியும் என்னென்ன நடக்கிறது என்றுப் பார்ப்போமா? பிறந்து, நாம அழும் முதல் அழுகையிலிருந்து, வளர்ந்து வயசாகி, கடைசி மூச்சு விடும் வரை நம்ம உடலில் அப்படி என்னத்தான் நடக்குது?
நம் வாழ்நாளில் சுமார் 700 மில்லியன் முறை சுவாசிக்கிறோம்!
நாம தினமும் சாப்பிடும் சாப்பாடு சுமார் 30 மீட்டர் நம் உடலில் பயணப்படுகிறது தெரியுமா?
ஒவ்வொரு நிமிடமும் நம் உடலில் இருந்து சுமார் 30,000 இறந்த சரும செல்கள் உதிர்கிறது! ஒரு வருஷத்துக்கு இரண்டு கிலோ!
நம் உடலில் உள்ள ரத்த நாளங்களின் நீளம் சுமார் 37,000 மைல்கள்!
சாதாரணமாக ஒரு பெண்ணின் உடலில் 17 சதுர அடி தோல் இருக்கும். ஒன்பது மாத கர்ப்பிணிக்கு 18.5 வரை அதிகரிக்கும்.
மெதுவாக வளரும் விரல் நகம், பெருவிரல். வேகமாக வளருவது நடுவிரல் நகம்.
நம் வாழ்நாளில் நாம் சுமார் 10,000 கேலன்கள் உமிழ்நீர் (ஜோ..) சுரக்கிறோம்!
நாம் புன்னகைக்க 5 முதல் 53 முகத்தசைகள் வேலை செய்ய வேண்டும். ஆனால் கோபப்பட்டு சிடுமூஞ்சியாக இன்னும் அதிகமாக தேவைப்படுமாம்! ஆகவே எது சுலபமோ அதைமட்டும் செய்வோம்.
சரி . போதும் வாங்க படம் பார்க்கலாம்.
