"வானில் நீந்தும் நிலவில் ஓர்நாள் பள்ளிக்கூடம் நடக்கும்,
காற்றில் ஏறி பயணம்செய்ய பாதை அங்கே இருக்கும்,
எங்கும் வாழும் மழலைச் செல்வம் ஒன்றாய்ச்சேர்ந்துப் படிக்கும்,
இல்லை ஜாதி மதமும் இல்லை என்றேப் பாடிச் சிரிக்கும்!"
"I never perfected an invention that I did not think about in terms of the service it might give others....Of all my inventions I liked the phonograph best.... I am proud of the fact that I never invented weapons to kill...." Thomas A Edison.
1847 ஆம் வருடம். பெப்ரவரி மாதம் பதினோராம் தேதியில், ஆல் இன் ஆல் அழகு ராஜாவான (தொழிலில்) தந்தைக்கும், ஆசிரியத் தாய்க்கும், ஏழாவது மகனாகப் பிறந்தவர்தான் நம்ம படைப்புலக பிதாமகன் தாமஸ் ஆல்வா எடிசன்! 84 வருடங்கள் வாழ்ந்த இவர், சாகும்போது இவர் பெயரில் இருந்தது 1,093 கண்டுப்பிடிப்புகளுக்கான பட்டயங்கள் ! அவனவன் ஒன்றுமே இல்லாமல் என்னப்போடு போடுகிறான்?! நமக்கு இவ்வளவு கண்டுப்பிடிப்புகள் மூலம் நன்மை செய்துவிட்டுச் சென்ற இவரைப்பற்றி நம்மில் எத்தனைப் பேருக்கு முழுமையாகத் தெரியும்?
அவரின் கண்டுப்பிடிப்புகளில் மிகமுக்கியமானவை என்று, மின்சார பல்ப்,
ஃ போனோக்ராம் எனப்படும் ரிக்கார்ட் பிளேயர், புகைப்படக் கருவி, மற்றும் நம்ம தமிழர் வாழ்வை வளமாக்கும் சினிமாவை உருவாக்கும் திரைப்படக் கேமராவும் அடங்கும். முழு லிஸ்ட் வேண்டும் என்பவர்கள் இங்கே செல்லவும்.
சமீபத்தில் அவரைப் பற்றிய சில விடியோக்களைக் காண நேர்ந்தது. அதை உங்கள் அனைவருடன் பகிர்ந்துக்கொள்ள வேண்டும் என்ற ஆவலால் இந்தப் பதிவு.
"...I am proud of the fact that I never invented weapons to kill...." Thomas A Edison.
என்றுக் கூறிய எடிசன் சிக்கலில்....
எடிசன் எடுத்த சலனப்படங்கள்....
எடிசனும் டாப்சி யானையும்.... இந்தக் கதைத் தெரியுமா?
தாராவி ! ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதி! உலகின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான, கென்யா நாட்டின், நைரோபி நகரையொட்டி உள்ள கிபேராவுக்கும், மெக்சிகோ நாட்டின் மெச்சிக்கோ நகர குடிசைப்பகுதிக்கு அடுத்தது நம்ம தாராவிதான்!
அதுசரி.... இப்பஎன்ன தாராவியைப் பற்றிய பதிவுக்கு அவசியம் வந்தது என்று சிலர் கேட்க வாய்ப்பு இருக்கிறது. அது வேறொன்றுமில்லை, சமீபத்தில், சென்ற வருடம் ஜனவரியில், சேனல் 4 தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பப்பட்ட 'Kevin McCloud: Slumming It' என்ற ஆவணப்படத்தைப் பார்க்க நேர்ந்தது. அதைப்பார்த்தப்பின் குறைந்தப்பட்ச்சம் இரண்டு நாட்கள் அதன் தாக்கம் இருந்தது என்றால் அதை உங்களிடம் பகிர்ந்துக்கொள்ளாமல் வேறு என்ன செய்வது?
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இந்த கெவின் மெக் க்லோவுட் என்ற மனிதர், சேனல் 4 தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிவரும் 'Grand designs' எனப்படும் உலகின் சிறந்த, வித்தியாசமான கட்டிடங்களைப் பற்றிய தொடரை சிறப்பாக வழங்கும் ஒரு பிரபல கட்டிடவியலாளர். இப்படிப்பட்டவரை இந்தியாவின் தாராவிப் பகுதிக்கு சென்று, அங்கேயே இரண்டுவாரம் தங்கி, அங்குள்ள உண்மை நிலையை கண்டு படம் பிடித்துவர அனுப்பியுள்ளனர்!
சாதாரணமாக நம் எல்லோருக்கும் தாராவி குடிசைப்பகுதியில் தாங்கும் வாய்ப்பு கிடைக்குமா என்பது திண்ணமில்லை. அப்படிக் கிடைத்தாலும் நம்மில் எத்தனைப்பேர் அங்கு வாழ முன்வருவார்கள் என்பது கேள்விக்குறி. "ஆஹா ! அங்கு வாழ்பவர்கள் எல்லாம் மனிதர்கள் இல்லையா ? " என்று அடிக்க வரவேண்டாம் தோழர்களே! அங்குள்ள சுகாதார சூழ்நிலை அப்படி!
இதில் இன்னொரு விசேஷம் என்னவென்றால், பேருந்திலோ, ரயிலிலோ யாராவது இருமவோ, தும்மவோ செய்தாலே முகம் சுளிக்கும் மக்கள் பலரைக் கொண்டுள்ள நாட்டில் வசிக்கும் ஒரு பணக்கார மனிதர், இதுப்போன்ற சூழ்நிலையில் வசித்து, அந்த மக்களோடுப் பழகி, நாடுத் திரும்பும்போது மனம் நெகிழ்ந்துத் திரும்புகிராரேன்றால் அவருக்கு என்ன அனுபவம் ஏற்ப்பட்டிருக்கும் என்றுப் பாருங்கள்!
ஒருக்காலத்தில் வெறும் நீர்நிலைகளாகவும், குளம் குட்டைகளாகவும் இருந்த ஓடம், பின்னோருக் காலத்தில் மராட்டிய, உத்திரப் பிரதேச மக்களால் குடியேற்றப்பட்டு , தற்போது நம்ம தமிழர்களால் நிறைந்து இருக்கும் இந்த பகுதி, வருடத்திற்கு ஒரு பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக, பலத்தொழில்கள் மூலமாக பணம் புழங்கும் இடமாக உள்ளது. ஆனால் அங்குள்ள வாழ்க்கைத்தரம், நம் கண்களை பனிக்கச் செய்வதாக உள்ளது. இந்த அவலம் போக எல்லாம் வல்ல அரசாங்கம்தான் கருணைக் காட்டவேண்டும்.
தாராவிப் பற்றிய, யெஸ். பாலபாரதி அவர்களின் பதிவைப்படிக்க இங்கே....
'Slumdog Millionaire ' திரைப்படத்தை பார்த்து ' இந்தியாவின் ஏழ்மையை காண்பித்து.. கேவலப்படுத்தி, பணத்தையும், விருதுகளையும் அள்ளிக்குவிக்கிறார்கள் என்ற எதிர்ப்பு அலை எழும்பியது. அது வியாபாரம்... எதிர்ப்பவர்கள் பக்கம் நியாயம் இருக்கக்கூடும். ஆனால் இதுப்போல உலகின் அவலங்களை (ஈழம் உள்பட..)தைரியமாக உலகிற்கு வெளிச்சம் போட்டுக்காட்டும் சேனல் 4 தொலைக்காட்ச்சியின் ஆவணப்படத்தை பார்த்து கூக்குரலிடுவது நியாயமாகப் இருக்காது. தவறாக இருக்கும் பட்ச்சத்தில் நம்மை நாமே திருத்திக்கொள்ளவேண்டும் என்பதே சரியான நிலைப்பாடாக இருக்கும். இதைப்பற்றிய டெய்லி மெயில் பத்திரிக்கையின் செய்தி இங்கே....
உண்மைகள் சுடும் என்பதால் அது பொய்யாகிவிடாது ! இது நமக்கு நாமே செய்துக்கொள்ளும் சுயப் பரிசோதனையாகக் கொள்ளவேண்டும்.
கடைசியாக, தாரவியைப் பற்றிய, இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் அவர்களின் கருத்து இங்கே.....
கடைசியாக (10/01/11) கிடைத்த செய்திப்படி இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் பங்குபெற்றுள்ள அறக்கட்டளை, இந்தியாவில் 15,000 ஏழைகளுக்கு வீடுகள் கட்டித்தர முன்வந்துள்ளார்கள்! செய்தி இங்கே.... சரி வாங்க தாராவியை ஒரு வலம் வரலாம்...
[நமது வலைப்பூவை வலைச்சரத்தில்அறிமுகப் படுத்தி, நம்மை ஊக்கப்படுத்திய நண்பர் நாஞ்சில் பிரதாப் அவர்களுக்கும் வலைச்சர பொறுப்பாளர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளும்,வாழ்த்துக்களும் ! மனதில் பட்டதை சொல்லும் நண்பர் அபுதாபி கண்ணன் அவர்களுக்கும் நன்றிகள் பல!]
ஃபிடல் காஸ்ட்ரோ ! வாழும் வரலாறு ! அவரை க்யூபா நாட்டின் முன்னாள் சர்வதிகாரி என்று வர்ணிக்கிறது விக்கிப்பீடியா. 1926 இல் பிறந்த ஃபிடல் அலேஜன்ரோ கேஸ்ட்ரோ ருஸ், தொழிலால் வழக்கறிஞரான இவர், ஒருப் புரட்சியாளராக உருவெடுத்து, தன் நண்பனான 'சே' என்று உலகமக்களால் இன்றும் அன்போடு அழைக்கப்படும், உலகின் ஹீரோக்களுக்கெல்லாம் ஹீரோவான, எனெஸ்டோ சே குவேரா மற்றும் தற்போதைய ஜனாதிபதி, சகோதரன் ரவுல் கேஸ்ட்ரோ போன்ற பல ' உண்மையான, நம்பிக்கையான, உணர்வுள்ள, மானமிகு ' தோழர்களின் துணையோடு, பேடிஸ்டா தலைமையில் இயங்கிய முதலாளித்துவ சர்வதிகார அரசிடமிருந்து, சூதாட்டம், கேளிக்கை, விபசாரம், மற்றும் மாபியாக்கள் மயங்கிகிடந்த க்யூபாவை மீட்டு, கம்யுனிச ஆட்சியை நிறுவி, இன்றும் முதலாளித்துவத்திற்கு எதிராக குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் ஒரு கிழட்டுச் சிங்கம்! என்னதான் வயதானாலும் சிங்கம் சிங்கம்தானே!
13.07.2010 அன்று எடுக்கப்பட்டப் படம்....
அவர் என்றுமே உலகிற்கு ஒரு சர்ச்சைக்குரிய மனிதராகவே தென்பட்டார். அவருடைய நாட்டு மக்களின் ஒருப்பிரிவினர் அவரை ஒரு க்யூபாவை சீரழிக்கவந்த ராட்சசன் என்றும் மற்றொரு பிரிவினர் அவரி முதலாளித்துவ அராஜகங்களிளிருந்து தங்கள் நாட்டை மீட்கவந்த தீர்கதரிசி என்றும் போடுகின்றனர். நம் ஒவ்வொருவருக்கும் அவரைப்பற்றி பல்வேறுக் கருத்துக்கள் இருக்கலாம். ஆனாலும் நம்ம கண்முன்னாடி சுற்றிக்கொண்டு இருக்கும் பல நம்மநாட்டு தலைவர்களை அவருடன் ஒப்பிட்டுப் பார்த்தால், ஒத்துக்கொண்டாலும், ஒதுக்கொள்ளவில்லைஎன்றாலும், அவர் வானாளாவி நிற்பது என்னவோ நிஜமான உண்மை!அதை வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில் இங்கே அவரைப் பற்றிய இரண்டு நீண்டக் காணொளிகளைக் காணப்போகிறோம். ஒவ்வொன்றும் காணக்கிடைக்காத காட்சிகள் நிறைந்த வரலாற்றுப் பெட்டகங்கள்! அவைகளை காணும் முன்னே அவரைப் பற்றி சில சுவாரசியமான சிலத் தகவல்கள்.....
மரடோனாவின் காலில் மாமனிதனின் உருவம்..
இங்கிலாந்து ராணிக்கும், தாய்லாந்து அரசருக்கும் அடுத்தபடியாக, ஒரு நாட்டின் நீண்டகால தலைவராக திகழ்ந்தவர் காஸ்ட்ரோ .
இரண்டு கின்னஸ் ரேக்காடுகளை தன் வசம் வைத்துள்ளார். அனல் தெறிக்கும் பேச்சாற்றல் கொண்ட இவர், 29.09.1960 அன்று, ஐநா மாமன்றத்தில் மிக நீண்ட உரையான 4 மணி 29 நிமிட சொற்பொழிவை நிகழ்த்தினார்! அதற்கும் மேலாக, 1986 ஆம் வருடம், ஹவானாவில் நடந்த கம்யுனிஸ்ட் கட்சிக் கூட்டத்தில் அவர் பேசிய நேரம், 7 மணி நேரம், 10 நிமிடங்கள்!
இதுவரையில் அவரை 634 முறை கொல்ல முயற்சி செய்யப்பட்டுள்ளது! விஷ மாத்திரைகள், விஷ சுருட்டு, உணவுப்பொருட்கள், போல பல வகையில்...! அட... அவரின் பிரசித்திப் பெற்ற தாடியின் ரோமத்தை கொட்டவைக்க ஏதோ பவுடர் கூடக் கொடுக்கப்பட்டதாம்! ஆனால் அதில் ஒன்றுக்கூட உதிரவில்லை! 'என்னா சின்னப்பிள்ளத்தனம் பாருங்க?'
அவரை க்யூபாவின் தலைமைப் பொறுப்பிலிருந்தும், ஏன் உலகத்திலிருந்தேயும் கிளப்பிவிட முயற்சி நடந்த காலத்தினுடே அவர் ஒன்பது அமெரிக்க ஜனாதிபதிகளக் கடந்து வந்துள்ளார்!
சுருட்டின் புகைப்பதில் மிகவும் பிரியமாக இருந்த காஸ்ட்ரோ, 1985 வருடம் முதல் சுத்தமாக புகைப்பதை நிறுத்திவிட்டார்! இப்போது அந்த சுருட்டுக்கு ஒரு சிறந்த உபயோகமாக அவர் எல்லோரிடமும் சொல்லுவது..... எதிரிக்கு பரிசாகக் கொடுப்பது!
காஸ்ட்ரோ வளர்த்துவந்த உப்ரே பலன்கா( அர்த்தம்: வெள்ளைப் பால்மடி!) எனும் பசு, தினமும் 110 லிட்டர் பால் கறக்குமாம்!
காஸ்ட்ரோவிற்கு எட்டுப் பிள்ளைகள். இரண்டு மனைவிகள். முதல் மைவிக்குப் பிறந்த மகளான அலினா பெர்னாண்டிஸ், 1993 ஆம் வருடம், அரு சுற்றுலாப் பயணிப் போல் மாறுவேடத்தில் க்யூபாவை விட்டுத் தப்பி அமெரிக்காவில் தஞ்சம் புகுந்து, மயாமி நகரின் வானொலியில், தன் தந்தையின் ஆட்சியை விமரிசித்து நிகழ்சிகள் நடத்தி வருகிறார்!
இரண்டாவது மனைவி டாலியாவை சந்தித்து வாழ ஆரம்பித்தது 1961 இல். சத்தமில்லாமல் திருமணம் செய்துக்கொண்டது 1980 இல்!
ஜனவரி 31, 2007 இல் அவர் மிகவும் நோய்வாய்ப்பட்டு கவலைக்கிடமாக இருந்தப் போது, அமெரிக்காவின் மயாமி நகரில், அவர் இறந்தால் அதை விமரிசையாகக் கொண்டாட திட்டம் தீட்டி இருந்தனர். அதிலும் அவர் மண்ணைப் போட்டுவிட்டார்!
காஸ்ட்ரோ சிறு வயதில் ஒரு தீவிர கத்தோலிக்கர். ஆனால் பிறகு அவர் ஒரு நாத்திகராக மாறிவிட்டார். 1962 ஜனவரியில் அப்போது போப்பாக இருந்த ஜான் XXIII அவரை கத்தோலிக்க பிரிவை விட்டு நீக்கிவிட்டார். அதற்காக அவர் கவலைப்படவில்லை. இருந்தும் போப் ஜான் பால் II, 1998 இல் க்யூபா வந்தபோது, அவரை தனியே நெடுநேரம் சந்தித்துப் பேசினார். அது மட்டுமல்லாமல், ஏப்ரல் 2005 இல் அவர் இறந்தப் போது அவரின் நினைவு பிராத்தனையிலும் கலந்துக்கொண்டார்.
சார்லஸ் டார்வின் ... ! இந்தப் பேரைக்கேட்டாலே அல்லது படித்தாலே,உலகம் இருவேறுக் கூறுகளாகப் பிரிந்துவிடும். பரிணாமக் கொள்கையை நம்புகிறவர்கள், அதை நம்மபாதவர்கள், கடவுள் உலகையும் உயிரினங்களையும் படைத்தான் என்றும், கடவுள் என்று ஒன்று இல்லை என்றும் இருவேறுப் பிரிவுகளாக பிரிந்துவிடுவதைப் பார்க்கலாம். நாம் இதில் ஏதாவது ஒருப் பிரிவைச் சார்ந்தவர்களாகவோ, அல்லது மதில் மேல் பூனையாகவோ கண்டிப்பாக இருப்போம்.அது அவரவர்களின் பின்னணியையோ, புரிதலையோப் பொறுத்தது. டார்வினின் பரிணாமக்கொள்கை, அது வெளியிடப்பட்ட நாள் முதலே ஒரு விவாதத்துக்குரிய கருத்தாகவே இருந்து வந்திருக்கிறது, இன்றும் காரசாரமாக விவாதிக்கப்படுகிறது. எல்லா விவாதங்களும் கடைசியாக கடவுள் என்று ஒன்று உண்டா இல்லையா என்ற வாதத்தில் வந்து முடிகிறது.
ஆனால், பாவம் டார்வின் தன் ஆராய்ச்சிகளை தொடங்கியது, கடவுள் என்ற கருத்தை ஒழிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் அல்ல!. அவர் பாட்டுக்கு அவர் தன் வேலையை அதன் வழியிலே செய்துக்கொண்டேப் போனார். கடைசியாக கடவுள் என்ற கருத்து தானாகவே இதில் வந்து சிக்கிக் கொள்ளுகிறது! அதனால் டார்வினையும், அவரின் கொள்கையான பரிணாமக்கொள்கையை ஆதரித்துப் பேசுபவர்களையும், பலர் ஒரு எதிரியாகவேப் பாவிக்கின்றனர். இப்போது நாம் காணப்போவது மேற்கூறிய எதைப்பற்றியும் அல்ல! டார்வின் எனும் அன்பான குடும்பத்தலைவனைப் பற்றியது! 'தகுதியானவைப் பிழைக்கும் ' எனும் தத்துவத்தை உலகுக்குக் காட்டிய ஒரு தனிமனிதனின் வாழ்வில் அனுபவித்த,சுக, துக்கப் போராட்டங்களைப் பார்ப்போமா?
இப்போது அவர் வாழ்விலிருந்து சில துளிகள்.....
சார்லஸ் டார்வினின் தாத்தா, எராமஸ் டார்வின், ஒரு பிரபல பதிவர்,சாரி ... மருத்துவர். எராமஸ்இன் மனைவியான, சார்லசின் பாட்டி மேரி, பெரிய 'சரக்குக்கை'. பெருக்குடியினால் ஈரல் பாதிக்கப்பட்ட அவருக்கு சொந்தக் கணவனால் அளவுக்கதிகமான ஒப்பியம் கொடுக்கப்பட்டு, தம் முப்பதாவது வயதிலேயே இறந்துப்போனார். சார்லசின் தாவழி மாமன் தாமஸ், அதிக அளவு போதைப் பழக்கத்தால் உயிரிழந்தார். இந்த துர்மரணங்களால் மனமொடிந்த எராமசின் தலைப்பிள்ளையான எராமஸ் II, தற்கொலை செய்துக்கொண்டு இறந்துப்போனார்! இப்படி சார்லஸ் பிரக்கும்முன்னரே அவரின் செல்வந்தக்குடும்பம், பல்வேறு துயரங்களால் அலைக்கழிக்கப்பட்டது.
சார்லசின் தந்தையான ராபர்ட் டாவினும் ஒரு மருத்துவர். அதுமட்டுமல்லாமல் அவர் ஒரு 'கருணையில்லா' பைனான்ஸ் பார்ட்டி என்றும் கூறப்படுகிறது. அவரின் உயரம் ஆறடி இரண்டங்குலம். அவரின் எடை முன்னூற்று முப்பத்தாறு பவுண்டுகள். அதாவது 152.41 கிலோ! அவர் ஏதாவது நோயாளியை பார்க்கச்சென்றால், அவரின் வண்டிக்காரர், அவருக்கு முன்னே அந்த வீட்டற்கு சென்று, அவரின் பளுவைத் தாங்குமா என்று பார்த்து உறுதி செய்தப் பிறகே செல்வாராம்!
என்னதான் ராபர்ட் ஒரு கொடூர குணம் படைத்தவராக தோன்றினாலும், தன் பிள்ளைகளை நன்றாக படிக்க ஊக்குவித்தார்.
சார்லஸ் தன் பள்ளிநாட்களில், யாரிடமும் சண்டைப்போட விரும்பாத, சோம்பேறித்தனமான, சுற்றியுள்ள இயற்கையை விரும்பும் ஒரு 'அழகு குண்டுப்பையன்!'
இங்கிலாந்தின் ஷ்ரெவ்பரி நகரின் பள்ளியில் அவர் அப்படியொன்றும் பிரமாதமான மாணவராக திகழவில்லை. ஆனால் தன் வீட்டை சுற்றி இருக்கும் பூச்சிகள், பறவைகள், விலங்குகள் போன்றவற்றில் மிகவும் விருப்பமாக கவனம் செலுத்தினார்.
அவருக்கு பள்ளியில் மொழிப் பாடமும், கணிதத்தில் அல்ஜீப்ராவும் அலர்ஜியாக இருந்தது.
அவரை மருத்துவம் படிக்க எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் சேர்த்தனர். அதுவும் அவருக்குப் பயன்தரவில்லை. ரத்தத்தைப் பார்த்தாலே மயக்கம் கொள்ளும் மனிதர் எங்கே மருத்துவம் படிப்பது?! துப்பாக்கியும் கையுமாக அலைந்து, மிருகங்களையும், பறவைகளையும் இரத்தக்களரியில்பார்க்கும், வேட்டையாடுதலில் விருப்பமுள்ள ஒரு மனிதருக்கு நேர்ந்த நிலைமையைப் பார்த்தீர்களா?
மருத்துவப்படிப்பு வேலைக்காகவில்லை என்பதால் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தனக்கு விருப்பமான கிறித்துவ சமயம் சார்ந்த படிப்பை மேற்கொண்டு பட்டமும் பெற்றுவிட்டார். அப்போது அங்கே அவருக்கு ஆசிரியராய் இருந்த ஜான் ஸ்டீவன்ஸ் எனும் தாவரவியலாளரின் நட்பினால் அவருக்கு பீகில் எனும் கப்பலில், தம் வாழ்வையே திசைத்ருப்பிய கடற்பயணத்தில், ஒரு இயற்கை அறிவியலாளராக செல்ல நேர்ந்தது.
இதில் என்ன சுவாரசியம் என்றால், அந்தக் கப்பலில் ஏறும் முன் அவருக்கும் விஞ்ஞானத்திற்கும் வெகுதூரம். அவர் ஒரு முழுக்க முழுக்க வேதம் படித்த இறை விரும்பியாகத்தான் கிளம்பினார். அவரின் அந்தப் பயணம், கடவுளுக்கே கேள்விக்குறி வைக்கும் பயணமாக அமையப்போகிறது என்று கனவிலும் கண்டிருக்கமாட்டார்! அப்படித் தெரிந்திருந்தால் நிச்சயமாக அந்தப்பயணத்தை மேற்கொண்டிருக்க மாட்டார் என்றே நான் நினைக்கிறேன். நீங்க....?
இன்னொரு சமாச்சாரம் என்னவென்றால் முதலில் அவருக்கு கடற்பயணம் ஒத்துக்கொள்ளவில்லையாம்!
அவர் தென் அமெரிக்காவின் கடைக்கோடியில் இருக்கும் அர்ஜண்டீனா நாட்டில் இறங்கியப்போது,(1833) அங்கு குடியேறிய ஸ்பானியர்கள், ஜெனரல். ஜவான் மேனுவேல் டெ ரோஸ்என்பவரின் தலைமையில், அந்த நாட்டின் பூர்வாங்க குடிமக்களான இந்தியர்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்துக்கொண்டிருந்தனர். அப்பது அந்த ஜெனரலின் விருந்தினராக டார்வின் அங்கு தங்கி இருந்து அந்தக் கொடுமைகளை நேரேடியாகக்கண்டார். அதைப்பற்றி எழுதும்போது 'எல்லாம் நன்மைக்கே' என்ற தொனியில் எழுதிருந்தது வருந்தத்தக்கது. "Less Indians => more cattle => healthier Spaniards: Survival of the fittest!"
ஊர்த்திரும்பியதும் எம்மா வெட்ஜ்வுட் என்ற பெண்ணை தன் சொந்தத்திலேய மணந்தார். இங்குதான் நாம் காணப்போகும் டாவினின் குடும்பவாழ்க்கையைப் பற்றிய கண்ணோட்டம் துவங்குகிறது. இவர்கள் இருவருக்கும் பத்துப் பிள்ளைகள் பிறந்தனர். அதில் இரண்டுப் பிள்ளைகள் சிறு வயதிலேயே இறந்துப் போயினர்.
அதில் முக்கியமானது அவரின் பத்து வயது செல்ல மகள் ஆன்னின் மரணம். அது அவரின் வாழ்கையை அசைத்துப் போட்டுவிட்டது. அதையும் அதன் பின்னணியையும் நாம் காணப்போகிறோம்
டார்வினின் குடும்பத்தில் வழிவந்த அவரின் கொள்ளுப்பேரனான ரெண்டல் கேன்ஸ் என்பவர் எழுதிய ' Annie's Box: Charles Darwin, His Daughter and Human Evolution'என்ற புத்தகத்தை தழுவி படமாக்கப்பட்ட 'Creation' என்ற காணொளியைக் காணப்போகிறோம். மிகவும் அருமையாக மனதைத்தொடும் விதமாகப் படைக்கப்பட்டுள்ளது. ஆன்ஸ் பாக்ஸ் என்பது, டார்வினின் மனைவி எம்மா தன் மகளின் நினைவாக வைத்திருந்த டைரிக்குறிப்புகள் அடங்கிய பேட்டி. அது நீண்ட காலத்திற்குப் பின்னர் ரெண்டல் கையில் சிக்கி, அதை அவர் அரு அழகான புத்தகமாக வடித்துள்ளார்.
DivX காணொளிதான் கிடைத்துள்ளது... DivX Player இல்லாதவர்கள் இங்கே சென்று டவுன்லோட் செய்துக்கொள்ளவும். பிளேயர் ஐ அப்டேட் செய்ய வேண்டாம். [The new version of the DIVX player, which you are prompted to install, will not work with most of the videos.
If you are repeatedly prompted to update to a newer version, right click on the divx player screen, go to preferences, and change the auto-update option to "once a month".]
இன்னொரு காணொளியும் உங்களின் பார்வைக்கு. பிபிசி வழங்கிய ' Darwin's Struggle: The Evolution of the origin of Species' எனும் அருமையான விவரணப்படம்!
அவள் பெயர் 'ஐடா'! 47 மில்லியன் ஆண்டுகளுக்கு முன், தற்போதைய ஜெர்மெனி நாட்டின் ஒருப் பகுதியில் இருந்த எரிமலைக் குழம்பு ஏரியில் விழுந்தபோது, தற்போது ஐடா என்று பெயரிடப்பட்ட அந்த சிறிய ஜந்து... தனது போட்டோ உலகம் முழுதும் பாட புத்தகங்களின் பக்கங்களில் அச்சடிக்கப்படும் என்றோ, பிபிசி தொலைக்காட்சி, ஒரு மணி நேரத்திற்கும் மேலான ஒரு சிறந்த ஆவணப்படத்தை, சர். டேவிட் அட்டன்பரோவின் வர்ணனையோடு ஒளிபரப்பும் என்றோ.... அதையே இந்த பிரபஞ்சப்ரியன் தன் வலைப்பூவில் தன் நண்பர்களிடம் பகிர்ந்துக் கொள்ளுவான் என்றோ, நிச்சயம் நினைத்திருக்காது!
இந்த ஐடா, 1983 ஆம் வருடம், ஜெர்மெனியின் மெசெல் கிராமத்தின் அருகே இருந்த குவாரியில் கண்டெடுக்கப்பட்டது. சார்ல்ஸ் டார்வினையும், அது கண்டெடுக்கப்பட்ட மெசெல் கிராமத்தையும் கவுரவிக்கும் பொருட்டு அதற்கு 'டார்வினியஸ் மாசில்லே' [ Darwiniusmasillae ]என்ற உயிரியல் பெயர் வைக்கப்பட்டது. செல்லப்பெயர் ஐடா! மொத்தமே 58 செமி (23 in) நீளமுள்ள ஐடா, ஒரு இளம் பெண்! (young female ஐ வேறு எப்படி எழுதுவது?!) அதன் பெரிய பாதமும், விரல்களும், நகங்களும் அது ஒரு 'ப்ரைமேட்' [primate] எனப்படும் குரங்கு இனத்தை சார்ந்த உயிரினம் என உறுதிப் படுத்துகின்றனர் அறிவியல் வல்லுனர்கள். இந்தப் படிமம், எலும்புகள் மாத்திரமல்லாமல், அதன் குடல் மற்றும் முழு உடலையும் அறிந்துக்கொள்ளும் விதமாக கிடைத்துள்ளது. அதன் படிப் பார்த்தால்... ஐடா ஒரு சைவம்! சாவதற்கு முன்னே பழங்களையும், கொட்டைகளையும், இலைகளையும் சாப்பிட்டிருக்கிறாள். அப்போது அவளின் வயது சுமார் ஒன்பது மாதங்கள். ஏறக்குறைய இப்போது மடகஸ்கார் தீவுகளில் வாழும் 'லெமூர்' [Lemur]வகைக் குரங்குகளை ஒத்த உருவம் கொண்டிருக்கும் என்று நம்பப்படுகிறது.
" இந்த சிறிய பிராணியின் படிமம், நமக்கும் ஏனைய பாலூட்டி உயிரினங்களுக்கும் உள்ள தொடர்பை தெளிவாக காண்பிக்கபபோகிறது!" என்று கூறுகிறார் இந்தக் காணொளியின் வர்ணனையாளர் அட்டன்பரோ. ஐடாவை கண்டுபிடித்து ஆராய்ச்சி செய்த ஒஸ்லோ பல்கலைக்கழகத்தின், இயற்கை அருங்காட்சியகத்தின் ஆராய்ச்சியாளரான ஜோர்ன் ஹரால்ட் ஹுரும், கூறுகிறார், " இந்தப் படிமம் நமக்கு இதுவரை மறைந்திருந்த பரிணாம சங்கிலியின் ஒருப் பகுதியை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. இதுவரை நமக்கு கிடைத்துள்ள படிமங்களிலேயே, ஐடாவைப் போல முழுமையான, விவரம் நிறைந்த சாட்சி இதுவரை கிடைத்ததில்லை ! "
ஆனால் இப்போது நாம் காணப்போவது பிபிசி நிறுவனமும், அட்லாண்டிக் ப்ரொடக்ஷன் நிறுவனமும் இணைந்துத் தயாரித்து, பல்வேறு விருதுகள் பெற்ற இயக்குனரான அந்தோணி கிப்பன் [Anthony Giffen] இயக்கத்தில் கடந்த மே மாதம் 26 ஆம் தேதி ஒளிப்பரப்பப்பட்ட 'Uncovering Our Earliest Ancestor: The Link' எனும் சிறப்பான அறிவியல் காணொளியைத்தான்.
[இது ஒரு மீள் பதிவு.... அர்ஜண்டீனாவின் தோல்விக்கு முன்பே ஒரு முறை வெளியிடப் பட்டது என்றாலும், மீண்டும் சில புதிய விடியோக்களுடன் உங்களின் முன்னே...]
உலகக்கோப்பை காபந்து திருவிழா நடந்துக் கொண்டு இருக்கிறது..... உலகமே ஒரு வித மயக்கத்தில் உள்ளது. இந்த நேரத்தில், அர்ஜண்டீன அணி தோல்வி அடைந்தாலும், அதன் பெருமை உலகறிந்த விஷயம். தான் நேரடியாக களத்தில் இறங்கி விளையாடாவிட்டாலும், வெளியே இருந்துக்கொண்டே தன் உயிரான அர்ஜண்டீனா கால்பந்து அணியை ஆட்டுவித்துக்கொண்டு இருந்த மரடோனாவை கொஞ்ச நேரம் அலசி ஆராய்ந்துப் பார்த்தேன். அப்போது கிடைத்தவைகளை உங்களிடமும் பகிர்ந்துக் கொள்ள ஆசைப் பட்டதாலேயே இந்தப் பதிவு. இதை முழுவதுமாக பார்க்க நிறைய நேரம் தேவைப்படும். ஆகவே நேரம் ஒதுக்கிக்கொண்டு பார்க்க முற்படவும். ஆரம்பிக்கட்டும் மரடோனா மேஜிக் !
##############################################################################################
Maradona - Legends of Football
**********************************************************************************************
Maradona by Kusturica
************************************************************************************************
Diego Maradona
[இது ஒரு மீள் பதிவு.... அர்ஜண்டீனாவின் தோல்விக்கு முன்பே வெளியிடப் பட்டது என்றாலும், மீண்டும் சில புதிய விடியோக்களுடன் உங்களின் முன்னே...]
உலகக்கோப்பை காபந்து திருவிழா நடந்துக் கொண்டு இருக்கிறது..... உலகமே ஒரு வித மயக்கத்தில் உள்ளது. இந்த நேரத்தில், அர்ஜண்டீன அணி தோல்வி அடைந்தாலும், அதன் பெருமை உலகறிந்த விஷயம். தான் நேரடியாக களத்தில் இறங்கி விளையாடாவிட்டாலும், வெளியே இருந்துக்கொண்டே தன் உயிரான அர்ஜண்டீனா கால்பந்து அணியை ஆட்டுவித்துக்கொண்டு இருந்த மரடோனாவை கொஞ்ச நேரம் அலசி ஆராய்ந்துப் பார்த்தேன். அப்போது கிடைத்தவைகளை உங்களிடமும் பகிர்ந்துக் கொள்ள ஆசைப் பட்டதாலேயே இந்தப் பதிவு. இதை முழுவதுமாக பார்க்க நிறைய நேரம் தேவைப்படும். ஆகவே நேரம் ஒதுக்கிக்கொண்டு பார்க்க முற்படவும். ஆரம்பிக்கட்டும் மரடோனா மேஜிக் !
பிரெஞ்சு மொழியில் ஒரு ஆவணப்படம்.... புரியவில்லை என்றாலும் பாருங்கள், பல அரிதான காட்சிகள் உள்ளது!
[Maradona, a Golden Boy "El Pibe de Oro", his life and his work.A jubilant portrait of the absolute star of Argentina, holy young king of the ball at its twelfth year, and a declaration of love for football. On November 10, 2001, Diego Armando Maradona, rejoicing and weeping, bade farewell to football tens of thousands of worshipers gathered in the delirium of the Bombonera stadium.This is where the "Golden Boy" started twenty-five years earlier, at the age of 16 years with the club mascot, the Boca Juniors, the emblem of the poor of Buenos Aires in Argentina muzzled by junta of General Videla.Here it is in black and white, pure face under the brown curls, spotted at 12 by the official television already has a unique instinct football and image, which gives her two dreams: "Play Cup the world and win. "(France, 2006, 93mn)]
##################################################################################
தற்போது சண்டையை விலக்கும் மரடோனா, அந்தக்காலத்தில் ஒரு டெரர் .... !