என்ன மாதிரி பெயர் வைத்துள்ளார்கள், 'கிங் கோப்ரா/ராஜ நாகம்' என்று. உண்மையிலே ஒரு 'royal name.! பாம்பையே தின்னும் பாம்புக்கு இதைவிட வேறு என்ன பெயர் பொருத்தமாக இருக்கும்?
பாம்புகளைப் பற்றிய பயம் நம் ஜீன்களிலேயே கலந்துள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆம். அது ஏனோ அந்த கால்களற்ற, வழவழப்பாக ஊர்ந்து செல்லும் அந்தப் பிராணிகளைக் கண்டால் நம் உடல் சிலிர்துக்கொள்ளுகிறது. நான் கூறுவது பெரும்பாலான மனிதர்களுக்கு. இதற்கு விதிவிலக்குகளும் உண்டு! பாம்புகளுக்கான பயத்தை 'ஒபிடியோப்போபியா' (Ophidiophobia) என்கின்றனர். பாம்பையே பார்த்திராத சிலப்பேருக்கு அவைகளை பற்றி நினைத்தாலே சிலிர்த்துக்கொள்ளும் என்பது கண்கூடு!
சும்மாவா சொன்னான் பாப்பென்றால் படையும் நடுங்கும் என்று....இங்கே நாம் பார்க்கப்போவது பாம்புகளிலேயே பயங்கரப் படைப்பான 'கிங் கோப்ரா' எனப்படும் ராஜ நாகத்தைத்தான். நாம் ஒரு பாம்பை எதிர்நோக்க நேர்ந்து, அந்தப் பாம்பு, ஆறு அடி உயரத்திற்கு எழுந்து நின்று, நம் இரண்டுக்கைகளையும் சேர்த்த அளவிற்கு படம் விரித்து நம் கண்களை நேருக்கு நேர் பார்த்து, தன் கோரப்பற்க்களை காட்டி 'புஸ்ஸ் ' என்று ஆக்ரோஷமாக சத்தம் எழுப்பினால் ... எப்படி இருக்கும்??! ஆமாம். இவைகள் செய்யும்!
பிற பாம்புகளையே உண்டு வாழும் இவைகள் சில சமயம் மற்ற விலங்குகளையும் உணவாகக்கொள்ளும். ஆனால் ஒரு ' நான் வெஜ் ' விரும்பி!, தன் இனத்தையே தின்று ஏப்பம் விடும் 'Cannibal' லிசத்தையும் விட்டு வைக்கவில்லை.
இவைகளின் ஆயுட்காலம் இருபது வருடங்களுக்கும் மேல்.
இவை முட்டையிட்டு, அடைகாக்கும் போதும், தோல் உரிக்கும் போதும் ரொம்ப டெரர் ஆக இருக்கும். ஒரே நேரத்தில் 20-40 முட்டைகல்க்கை இடும். அப்போது கைக்கால்கள் இல்லாத இந்
விஷப்பாம்புகளிலேயே மிக நீளமாக, 18 முதல் 20 அடி வரை வளரக்கூடியவை, இவைகள்தான். சாகும்வரை இவை வளர்ந்துக்கொண்டேதான் இருக்கும்!
சாதாவகை நாகங்களை விட, இவைகளின் விஷம் கொஞ்சம் வீரியம் குறைந்தவைத்தான், ஆனாலும் ஒரேக் கடியில், ஒரு யானை அல்லது 20 மனிதர்களை மண்டையைப் போடவைக்கும் அளவிற்கு அதிகமானது!
பொதுவாக பாம்புகள் ரொம்ப வெட்கப்படும் என்று கூறுவார்கள். ஆனால் நம்ம ராஜ நாகம் அப்படியில்லை. எதையும் ஒருக்கைப் பார்க்கும் தைரியம் உள்ளவை.
மேற்க்கூரியாவை இந்த அற்ப்புத பிராணிகளைப் பற்றிய ஒரு சில தகவல்கள்.
இந்த நேரத்தில் திரு.ரெமுலஸ் விட்டேக்கர் என்னும் மாமனிதரப்பற்றி குறிப்பிட்டே ஆகவேண்டும். 67 வயதான இவர், அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து, தற்போது இந்தியாவில் வாழும், உலகில் தலைசிறந்த ஊர்வனவியல் ஆய்வாளராக திகழ்கிறார். இவர் நம்ம சென்னை பாம்பு மற்றும் முதலைப் பண்ணையின் நிறுவனர் என்பது நிறையப்பேருக்கு தெரிந்திருக்கும். தன் வாழ்நாளை ஊரும் பிராணிகளுக்காக அர்ப்பணித்து, சுற்றுச்சூழல் நலனுக்காக உழைத்து வரும் ஒரு சிறந்த மனிதர். 1997 ஆம் வருடம் அவர் தயாரித்து, நேஷனல் ஜியாகரபி சேனலில் ஒளிப்பரப்பப்பட்ட , எம்மி விருது பெற்ற 'கிங் கோப்ரா' என்ற காணொளியை கண்டு ஸ்தம்பித்து விட்டேன். அன்றிலிருந்து இந்த ராஜ நாகங்களின் மீது ஒரு இனம்புரியாத ஈர்ப்பு ஏற்பட்டுவிட்டது. தற்போது இன்னொரு புதிய காணொளியை அளித்துள்ளார் ரெமுலஸ். அதன் பெயர் 'Secrets of King Cobra'. அதை உங்களுடன் பகிர்ந்துக்கொள்ளத்தான் இந்தப்பதிவு. நீங்கள் இதைப் பார்க்கும் முன் உங்களிடம் ஒன்று சொல்லவேண்டும். இளகிய மனம் கொண்டவர்கள் இதைப் பார்க்கவேண்டாம். ஏன் என்பது இதைப் பார்த்தால்தான் தெரியும். சொல்வதை சொல்லிவிட்டேன். இனி உங்களின் இஷ்டம். பார்க்கும் போது எந்த பாதிப்பும் கொஞ்சம்கூட உங்களிடம் இல்லையென்றால், உண்மையிலேயே நீங்கள் உறுதியான உள்ளம் கொண்டவர் என்பது நிச்சயம்! என்ன ரொம்ப பில்டப் கொடுக்கிறேன் என்று நினைக்கிறீர்களா? பாருங்கள் தெரியும். கொஞ்சமாவது உங்களை துணுக்குறச் செய்யும்.

ரெமுலஸ் விட்டேக்கர்.
மற்றுமொரு பாம்பு மனிதர் திரு. ஆஸ்டின் ஸ்டீவன்ஸ்..தென் ஆப்ரிக்காவில் பிறந்து வளர்ந்து நமிபிய நாட்டில் வசிக்கும், இவர் மற்றுமோர் அதிசயம். நீங்களும் பாருங்கள். மிகச்சிறந்த போடோக்ராபர்!
மற்றும் சில காணொளிகள்........
7 கருத்துகள்:
gr8
Thank you Mr/Ms. Anonymous, for coming forward to give a comment. Yesterday, the day when this post was posted, this page got 802 hits. But you are the only one to give a feedback at least today. GR8.
Very Intereting.
Good Information.
Very good videos
- Hidha.
//Yesterday, the day when this post was posted, this page got 802 hits. But you are the only one to give a feedback...//
probably the rest would have run off ...துண்டைக் காணோம் துணியக்காணோம்னு..! அம்புட்டு பயம்!
நான் இன்னும் பார்க்கலை.....
குளிர்ரத்த பிராணிகளுக்கே உள்ள குணம் அவைகள் நீண்ட நாட்கள் உணவில்லாமல் இருக்க முடியும்!
அறிவியல் ஆயிரம் வித்தியாசம் சொன்னாலும் நான் டக்கென்று புரிந்து கொள்ள எடுத்து கொள்வது விலங்கின் உணவு முறை தான்! அதை வைத்தே அவைகள் என்ன ரத்த வகை என்பதை அறியலாம்!
(தொடர்ச்சியான தூக்கத்திலும் குளிர்ரத்த பிராணிகள் கில்லாடி)
நல்வரவு வாலு.
நான் நம்ம நாட்டில் இருந்தப்போது, எங்க வீட்டுப்பக்கம் ஏகப்பட்ட பாம்புகள். அதனால் அவைகள் மீது எனக்கு ஒருவித ஈர்ப்பு. நாம் வளர்க்கும் நாய்கள் கூட குட்டி ஈன்ற பின்பு, தான் போட்ட குட்டிகளில் ஒன்றோ இரண்டையோ ஸ்வாஹா பண்ணிவிடும். ஆனால் இந்த ராஜ நாகங்கள், முட்டைகளை இட்டு, மூன்று மாதம் கொலைப்பட்டினி இருந்து, கூடு கட்டி,அடைகாத்து, அவை வெளியே வரும் நேரம் நெருங்கியதும், ஜீன்களில் உள்ள உள்ளுணர்வு சொல்லி, தானே தன் குட்டிகளை தின்னக்கூடாது என்ற நல்லெண்ணத்தில், அந்த இடத்தை விட்டே எஸ்கேப் ஆகிவிடும் என்ற செய்தி எவ்வளவு ஆச்சரியம்! தற்போது நான் வசிக்கும் இங்கிலாந்தில் மிருகக்காட்சிசாலைகளைத்தவிர வேறு எங்கும் பாம்புகள் கிடையாது! (மிருகக்காட்சிசாலைகள் ரொம்ப நல்ல இடங்கள்!)
குளிர் ரத்த பிராணிகள்... இது புதுசா இருக்குதே...
நல்ல பதிவு மற்றும் கருத்துபகிர்வு...
கருத்துரையிடுக