நம்ம கண்கள் ஒரு ஆச்சரியப் படத்தக்க ஒரு விஷயம் என்றாலும். நாம் நினைப்பதுப்போல் ரொம்ப மெச்சிக்கொள்ளும் அளவுக்கு இல்லை என்பதை இந்த வீடியோவைப் பார்த்தப் பின்பு எண்ணத்தோன்றுகிறது. நாம் பார்க்கக் கூடிய விஷயங்கள் என்னவென்றால், 400 முதல் 750 நேனோ மீட்டர்கள் அலைவரிசை ஒளியை உமிழும் அல்லது பிரதிபலிக்கச் செய்யும் விஷயங்களை மட்டுமே. மீதி 99.99999999999 % நிறமாலை எனப்படும் ஸ்பேக்ரம் ஒளிப்பகுதிகள் நம் கண்களுக்குத் தெரியாது. ஆகவே சொல்லப்போனால் ... கண் பார்வை இல்லாதவர்களை குருடர் என்று கூற நம்மில் யாருக்கும் தகுதி இல்லை.
சென்ற வாரம் பி பி சி தொலைக்காட்சியில் காண நேர்ந்த ஒரு ஆவணப்படத்தை உங்களுடன் பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன்..இந்த காணொளியின் தலைப்பு ' Richard Hammond's Invisible World:Speed Limits. நம் கண் இமைக்க 50 மில்லி செக்கன்ட் ஆகிட்டது. அந்த காட்சி நம் மூளைக்கு சென்று ஆராய்ந்து தெளிவாக 100 மில்லி செகண்ட் ஆகிறது. இந்த காலக்கட்டத்தில் என்னனவோ நடந்தது விட்கிறது. மிக வேகமாக நடக்கும் செயல்களை நம்மால் காணமுடிவதில்லை. ஆனால் இந்த ஆவணப்படத்தில், மிக நவீன அல்ட்ரா ஹை ஸ்பீட் கேமராக்களைக் கொண்டு, நாம் இதுவரைக் கற்பனையிலும் காணமுடியாத காட்சிகளை நம் கண்முன்னே திறம்பட நிறுத்தியுள்ளனர். அதாவது, நாம் இமைக்கும் நேரத்தில், நாம் காணாமல் விடுபட்ட அற்புதங்களை அழகாக காட்டியுள்ளனர்.
வாங்க. நீங்களும் பார்த்தால், இந்த ஆவணப்படம் உங்களையும் கவரும் என்பதில் சந்தேகமில்லை. கருத்துக்கள் இருந்தால் கூறவும்.
5 கருத்துகள்:
பயனுள்ள தகவல் . நன்றி!!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. உங்களின் நித்தியானந்தா ( http://sollacholla.blogspot.com/ ) பற்றிய பதிவைப் பார்த்தேன். வித்தியாசமான அணுகுமுறை.
நான் தேடிக்கொண்டிருந்த ஒளிக்குறிப்புகள்..!! மிக்க நன்றி நண்பா..! கண்ணால் காண்பது பொய் என்பதின் புள்ளியியல் இங்கு காணக் (!?)) கிடைக்கிறது..!!!
:))
வருகைக்கு நன்றி ஜெகன்! ரொம்ப பிசியா?
அருமை சகோ.
கருத்துரையிடுக