வெள்ளி, 19 மார்ச், 2010

டார்வின் எனும் ஜீனியஸ்.(வீடியோ)

PART I



மீண்டும் அறிவியல் ஆர்வலர்களுக்கு விருந்து!
[ சென்றப் பதிவான 'கிங் கோப்ரா' பற்றிய பதிவிற்கு, ஒரே நாளில் 800 ஹிட்டுகளை தந்த நண்பர்களுக்கு நன்றி.
பிரபல பதிவர்களுக்கு வேண்டுமென்றால் இது சாதாரணமாக இருந்திருக்கலாம். ஆனால் எனக்கு இது ஆச்சரியம்! அதிலும் ஒருவர்தான் 'நல்லா இருந்ததா? இல்லையா ?'
என்று ஒரே வார்த்தையில்(!) கூற முன்வந்தார். அது இன்னும் ஆச்சரியம் !! ]  

1859 ஆம் வருடம், சார்லஸ் டார்வினின் 'உயிரினங்களின் தோற்றம்' என்று தமிழில் அழைக்கப்படும் 'Origin of Species' என்ற 'மாஸ்டர் பீஸ்'  புரட்சி நூல் வெளியிடப்பட்டு, நூற்று   ஐம்பது ஆண்டுகள் கடந்து விட்டது. ஆமா. அதுக்கு இப்ப  என்ன என்று கேட்கிறீர்களா?
சமீபத்தில் வால் பையன் பதித்த ஒரு பதிவை படிக்க நேர்ந்தது. எனக்கும்  பிடித்த சப்ஜக்ட் என்பதால் நாமும் ஏதாவது செய்யலாம் என்று நினைதப்போது, சென்ற வருடம், இங்கிலாந்தின்  'சேனல் 4 ' அளித்த 'The Genius of  Charles Darwin.'  தொலைக்காட்சித் தொடர் நினைவுக்கு வந்தது.
இதை அளித்தவர், தற்காலத்தின் தலைசிறந்த இயற்கையியல் அறிஞரும், இறை மறுப்புக் கொள்கையாளருமான பேராசிரியர்.ரிச்சர்ட் டாகின்ஸ் ஆவார். (நம்ம  ஊரில் உள்ள பேராசிரியர் போல இல்லை இவர்.. ரொம்ப தெளிவானவர்!)  இவரைப்பற்றி ஏற்கனவே ஒரு பதிவு  போட்டாகிவிட்டது. பார்க்காதவர்கள் நம்ம வேற அட்ரஸில்  போய்ப்பார்த்துக்கொள்ளலாம்.

மூன்று பகுதிகளைக் கொண்ட  இந்தக் காணொளியில் டார்வினின் யார் என்பதைப்   பற்றியும், பரிணாமக் கொளகையின் உருவாக்கப் பற்றியும், அது ஏன் அவ்வளவு முக்கியம், மற்றும் இந்த புரட்சிக்  கொள்கை மனித இனத்தைப் பற்றிய  கற்பனைகளையும் , மத மற்றும் அறிவியல் நம்பிக்கைகளையும்  எப்படி புரட்டிப் போட்டது என்று டாக்கின்ஸ் அருமையாக விளக்குகிறார்.

இந்த முதலாம் பகுதியில், டார்வினின் அறிவியல் நோக்கிப் பயணம் விளக்கப்படுகிறது. கலபாகஸ் தீவுகளில் டார்வினின்   இயற்க்கை பரிசோதனைகளையும் ,அமெரிக்காவில் அவர் கண்ட காலச் சுவடுகளையும், டாகின்ஸ் தன் பிறந்த நாடான கென்யா நாட்டின் உயிரினகளின் 'தக்கன பிழைக்கும்' (Fittest of the Survival) என்ற தர்க்கத்தை விளக்க, அங்குள்ள உயிரினங்களின் வாழ்கைப் போராட்டத்தையும் திறம்பட விளக்குகிறார்.

இது ஒரு மத சார்பற்ற, அறிவியல் சார்ந்த பதிவாகும். எல்லோரும் அறிந்துக்கொள்ளவேண்டிய விஷயமாகும். மறுப்பதும் ஆதரிப்பதும் வேறு விஷயம். இதுத்தவிர மேலும் இரண்டுப் பகுதி  காணொளிகள் காத்திருக்கின்றன.

 ஆகவே நண்பர்களே ..... வருகைக்கு நன்றி.  

11 கருத்துகள்:

Unknown சொன்னது…

Couldn't see the video

kavinsandron சொன்னது…

Hi,
thanks for great subject

you mentioned 3 parts, but you show only on link

Kavinsandron

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் சொன்னது…

Dear Prakash,
I think you should have a Flash player to watch the video. You can down load it from this link ....
http://get.adobe.com/flashplayer/

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் சொன்னது…

Dear kavinsandron,
The other videos will follow in future one by one.

வால்பையன் சொன்னது…

நல்ல பகிர்வு பாஸ்!

உங்களிடமிருந்தும் பரிணாம் பற்றிய விளக்க பதிவை எதிர்பார்க்கிறேன்!

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் சொன்னது…

அன்புள்ள வால்,
மேலும் வரக்கூடிய இரண்டு தொடர் பதிவுகளில் நீங்கள் கேட்டது மட்டுமல்லாமல், பரிணாமக் கொள்கையும் அறிவியலும், எவ்வாறு தாக்கப் படுகிறது என்பதைப் பற்றியும் பார்க்கலாம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Nathanjagk சொன்னது…

உண்மையில் பாராட்டத்தக்க முயற்சி!!
தொடர்க நண்பரே!

வால்பையனின் "பரிணாமம் - முன்னுரை" இடுகைக்கு வந்துள்ள சில பின்னூட்டங்கள் (Dr.Noவினுடையது) பற்றி உங்கள் விளக்கங்கள் அவசியம்.

அவைகளைப் படித்துவிட்டு கருத்துத் ​தெரிவிக்கவும்.

Nathanjagk சொன்னது…

பேரா.ரிச்சர்ட்டின் வீடியோவை பத்து நிமிடங்கள்தான் பார்த்திருப்பேன்.
அப்போது நீங்கள் இன்று 72 நிமிட வீடியோவைப் பார்த்தாயிற்று. இன்னும் 54 நிமிடங்கள் கழித்துத்தான் மீதியைப் பார்க்கமுடியும்.. அதுவரைக்கும் வேற வேலையப் பாருடான்னு வருது :)

வீடியோ நல்ல​தெளிவு. விறுவிறுப்பாகவும் உள்ளது. நன்றி!

ஒரு​கேள்வி.. வீடியோவில் புரபஸரும் மாணவர்களும் fossil ஆராய்ச்சி ​செய்யும் இடம் Galapagos Islands (டார்வின் தீவு) தானே?

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் சொன்னது…

ஆமாம் ஜெகன். அதேத் தீவுகள் தான் அவை. பசிபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகையின் மேல், தென் அமெரிக்க நாடான எக்வேடார் நாட்டை சேர்ந்த தீவுகளாகும். இன்றும் பாதுகாக்கப்பட்ட இடமாக, உயிரியலாளர்களின் வரப்பிரசாதமாக கருதப்படுகிறதாம்!
Mega video : .72 நிமிடங்களுக்குப் பிறகு வீடியோ நின்றுவிடும். அப்போது உங்கள் ரூட்டர் / மோடெம்- மின் இணைப்பைத் துண்டித்துவிட்டு, ஒரு நிமிடம் கழித்து இணைத்து, மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடருங்கள். நன்றி ஜெகன்.

Unknown சொன்னது…

ஓட்டு போட சொன்னீங்க ஓட்டு பட்டயவே காணோம். யாராவது ராவிட்டு போய்ட்டங்களா?

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் சொன்னது…

வருகைக்கு நன்றி நண்பர் இனியவன். ஓட்டு பற்றிய வேண்டுகோளை நீக்கிவிட்டேன். இப்போதெல்லாம் அப்படிக் கேட்பதை நிறுத்திவிட்டேன்.
என்னத்தான் கேட்டாலும் விழும் ஓட்டுத்தான் விழும் என்பது நிதர்சனம்! இல்லையா நண்பரே?