வெள்ளி, 16 ஏப்ரல், 2010

கண்ணில் தெரியாக் கதைகள் [3] (வீடியோ)[ எனக்கு ஏனோ இந்த அற்புதப் பாடலை கேட்க வேண்டும் போல இருந்தது. நீங்களுக் விரும்பினால் கேட்டு ரசித்துவிட்டு கீழே போங்களேன்.... ]


படத்துக்கு லேட்டாக வந்து தவற விட்டவர்களுக்காக ......

கண்ணில் தெரியாக் கதைகள் ( 1 )
கண்ணில் தெரியாக் கதைகள் ( 2 )

நம்ம ஒரு பவர்புல் படைப்புத்தான். ஓகே. ஆனால் ஒரு ஊசியை முழங்கை  தூரத்தில் வைத்துப் பார்ப்பதே நம்முடைய லிமிட். அதற்கும் மேல் வெறும் கண்களால் பார்ப்பது  கடினம். ஆனால் நம்மை சுற்றி மறைந்திருக்கும் உலகத்தை, பெரிதாக்கி, இன்னும் விவரமாக பார்க்கமுடிந்தால் எப்படி இருக்கும்?!

அதைத்தான் நம்ம ரிச்சர்ட் ஹெமோன்ட், சிறுசெல்லாம் சிறுசல்ல... அவைகள் எவ்வளவு அழகு... என்னா டேஞ்சரஸ் ... என்று காண்பிக்கப் போகிறார் ! குளிர்ப் பிரதேசங்களில், பனிக்கட்டிகளில் ஏற்ப்படும் மைராஸ்க்கோபிக் மாற்றங்கள், எவ்வளவுப் பெரிய அவலாஞ்சிகளை ஏற்படுத்தும் என்பதையும், ஒரு சிறு தும்மலின் பின்னே ஒளிந்திருக்கும் ரகசியங்களையும், அற்பமாக எண்ணும் சிலந்தியின் வலைப்பின்னலின் வீரியத்தையும், சாதாரண ஒரு தாவரத்தின் இலை, நிலவிலே நாம் நடக்க, நமக்கு கற்றுக்கொடுத்த டெக்நாலேஜியை, நாம் இப்போது காணப்போகிறோம்!  இதுவரை நாம் பார்த்த 'கண்ணில் தெரியாக் கதைகள்' வரிசைப் பதிவுகளில் கடைசி பதிவு  இதுதான்.  எல்லோருக்கும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். என் நம்பிக்கை சரி என்றால் ஒரு பின்னூட்டம் போடவும்.  நன்றி நண்பர்களே... இனி Lights off... Projector on...!


5 கருத்துகள்:

ஜெகநாதன் சொன்னது…

ரிச்சர்ட் ஹாமண்ட் பற்றியும் அவரது ஆய்வுகள் பற்றியும் அறிய முடிகிறது.
நுண்ணோக்கியால் நெருங்க நெருங்க ​பொருட்களுக்கு இடையேயான மர்மமுடிச்சுக்கள் புலனாகும் என்று அறியமுடிகிறது.
ஒருவகையில் ​கேயாஸ் தியரி போல எல்லா அணுக்களும் ஒருவித தொடர்பில்தான் இருக்கின்றன என்று ​தோன்றுகிறது.

நல்ல பதிவு! முக்கியமான ஆவணங்களை காணொளிகளாக அளித்திருக்கிறீர்கள்..! பாராட்டுகளும் வாழ்த்துக்களும் நண்ப..!!

M.S.E.R.K. சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜெகன்!
கேயாஸ் தியரி பற்றித்தான் படித்துக் கொண்டிருக்கிறேன். அதற்குள் உங்களுக்கு மூக்கில் வேர்த்து விட்டதா? இதிலேயும் கேயாஸ் தியரி உள்ளதா??!!

ஜெகநாதன் சொன்னது…

ஆஹா.. இதைப் படிக்கும் போதே ஜிவ்வுன்னு இருக்கே!!
கேயாஸ் தியரி... நம்மிடையே 'ப்ராக்டிக்கல்' ஆகிவிட்டதோ?

அருமை நண்பா.. நட்பின் வாசம் நில, தேச, தத்துவ, அறிவியல் வரையறைகள் அற்றது. அல்லவா?

கேயாஸ் பற்றி உங்கள் எழுத்தில் அறிய ஆவல்..
இப்பவே துண்டு போட்டு முதல் ஸீட் பிடித்தாச்சு :))))

selvaraj சொன்னது…

ungalin alappariya intha muyarchikku billion salutes.puthithaka thaarungal.mudinthal thamizh mozhi maatram seyungalen..namathu anbarhal niraya payan adaivaarhal.nandri.

M.S.E.R.K. சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர் செல்வராஜ் அவர்களே.