திங்கள், 3 அக்டோபர், 2011

சாப்பாடு தயார்....மனம் நெகிழ வைக்கும் அருமையான குறும்படம்.... 

"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது."

திரு மு.வரதராசனார் உரை
இல்வாழ்க்கையின் அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழக்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.

திரு மு.கருணாநிதி உரை
இல்வாழ்க்கை பண்புடையதாகவும் பயனுடையதாகவும் விளங்குவதற்கு அன்பான உள்ளமும் அதையொட்டிய நல்ல செயல்களும் தேவை.

திரு சாலமன் பாப்பையா உரை
மனைவி பிள்ளைகளிடத்தில் அன்பும், தேடிய பொருளை நட்பு சுற்றங்களுடன் பகிர்ந்து கொள்ளும் அறமும் இருந்தால் இல்வாழ்க்கையின் பண்பும் அதுவே; பயனும் அதுவே.


வாழ்த்துக்கள்!, இயக்குனர். திருமதி.நிதுனா நெவில் தினேஷ்.[Mrs.Nithuna Nevil Dinesh]

['இந்தக் காணொளியைப் பார்த்துவிட்டு ஒரு சொட்டுக் கண்ணீர் விடாதவன்


 மனுஷனேயில்லை' என்று எழுதலாம் என்று இருந்தேன்... அடடா 


எழுதிவிட்டேனே...! உண்மைதானா  நண்பர்களே....?! நீங்களே சொல்லுங்கள்.....]  
2 கருத்துகள்:

கக்கு - மாணிக்கம் சொன்னது…

பாராட்டுகளும் நன்றியும்.மிக அழகான உணர்வுகளின் வெளிப்பாடு.
நல்ல ஒரு பகிர்வு இது.

M.S.எட்வின் .R.K. சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கக்கு. இதுப்போன்ற படைப்பாளிகள் இருப்பதால்தான் மனிதம் அவ்வப்போது வெளிப்படுகிறது. நாம் அவர்களைப் பாராட்டி வரவேற்க வேண்டும்.