கீழ்வரும் முதல் எட்டுப் படங்களின் பின்னணியை மட்டும் கூர்ந்துப் பார்த்து, இடங்களைக் கண்டுப்பிடிக்கவும்... தயவு செய்து அதில் உள்ள ஆட்களை கண்டுக்கொள்ள வேண்டாம்.
மேலேயுள்ளப் படங்களும், கீழே நாம் பார்க்கப்போகும் காணொளியும் நிறைய எழுதுவதற்கு வேலையில்லாமல் செய்துவிட்டன!
சென்ற வாரம் நான் பார்த்த, நேஷனல் ஜியாகரப்பியின் "Six Degrees Could Change the World” என்ற உலக வெம்மைப் பற்றிய அருமையான காணொளியை உங்களுடன் பகிந்துக்கொள்ள விரும்புகிறேன். 'ஆறு டிகிரி போதும்...!', இந்த உலகை மாற்ற.... எப்படி...? நன்றாகவா...? அதுதான் இல்லை. நாசமாக்க! உலக வ்வேப்ப நிலையில் ஒரு டிகிரி ஏற்றம் கூட மோசமான விளைவுகளை ஏற்ப்படுத்தும். இதில் ஆறு டிகிரி எனபது, உலகின் வாழ்வியலையே தலைக்கீழாக மாறக்கூடிய விளைவை ஏற்ப்படுத்தும். இன்னும் முப்பது வருடங்களில் மோசமாகவும், நூறு வருடங்களில் 11 டிகிரிகள் உயரக்கூடிய அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் அச்சப்படுகின்றனர்!
மார்க் லைனாஸ் (Mark Lynas) எழுதிய 'Six Degrees: Our Future on a Hotter Planet ' என்ற புத்தகத்தை அடிப்படையாகக்கொண்டு, ஹாலிவூட் நடிகர் ' அலெக் பால்ட்வின்' (Alec Baldwin) அவர்களின் வர்ணனையோடு, அட்டகாசமான கிராபிக்ஸ் காட்சிகளுடன், உலக வெம்மையின் பாதிப்புகளை, நம் கண்முன்னே கொணருகிறது இந்தப் படம். இந்தப் படம் நமக்கு ஒரு எச்சரிக்கைப் பாடமாக இருக்கும் எனபது நிச்சயம்!
Mark Lynas
Alec Baldwin
வாங்கப் படம் பார்க்கலாம்......
2 கருத்துகள்:
தமிழ் பிளாகர்களில் இது போன்ற அருமையான பகிர்வுகளுக்கெல்லாம் வாசகர்கள் கிடைப்பது அபூர்வம்தான்.
ஆனால் " தமிழன் தான் அறிவியல் முன்னோடி " என்று பீற்றிகொள்வதில் மட்டும் நமக்கு இணையில்லை.
அத்திப்பழத்தை புட்டால் அத்தனையும் சொத்தையாக இங்கு தமிழ் ,தமிழர்களின் அத்தனை வலைப்பூக்களும் தாங்க வொண்ணாத பெருமையில் மிளிர ,எங்கோ அயல் நாட்டில் இருந்து கொண்டு தமிழில் அருமையான கட்டுரைகளை படைக்கும் தங்களுக்கு "தற்குறி " தமிழர்களின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.நன்றி பகிர்வுக்கு.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கக்கு. இன்னொரு விஷயம் சொல்லவேண்டும் உங்களுக்கு... இந்தப் பதிவில் உள்ள புகைப்படங்களால் காப்பி ரைட் பிரச்சனை வரும் என்று, தமிழ்மணத்தில் இந்தப்பதிவை நீக்கிவிட்டார்கள்! அதனால் இன்றுமுதல் நான் தமிழ்மணத்திலிருந்து மனவருத்தத்தோடு விலகிவிட்டேன்.
கருத்துரையிடுக