திங்கள், 3 அக்டோபர், 2011

ஆப்ரிக்கப் பூனைகள்! [video]



நான் இதுவரைப் பார்த்த விலங்குகள் சம்பந்தமான ஆவணப்படங்களிலேயே என்னை மிகவும் கவர்ந்த காணொளி என்று, இந்த 'African Cats' என்ற இந்தப்படத்தைக் கருதுவேன். சாதாரண விவரணப் படம் போலில்லாமல், நம்மையெல்லாம் காட்சிகளோடு ஒன்றிப்போகவைக்கும் மூன்றுக் கதைகளைக் கொண்டுள்ளது! மனதை நெகிழவைக்கும், தாய் விலங்குகளின், குட்டிகளின் மீதான அன்பைக் காணும்போது நம்மையறியாமல் நம் கண்கள் ஈரமாவதை உணர்வோம். அதற்காக வெறும் அழுகாச்சிப்  படம் என்று நினைக்க வேண்டாம்...அட்டகாசமான ஆக்க்ஷன் காட்ச்களும் உண்டு! வால்ட் டிஸ்னி உருவாக்கியுள்ள இந்தப்படம், அவர்களின் முந்தைய பாக்ஸ் ஆபீஸ் ஹிட் கார்டூன்  படமான 'Lion King' கையே, இந்த நிஜ சிங்கப்படம்  தூக்கிச் சாப்பிட்டுவிட்டது என்றேக் கூறலாம்!









ஆப்ரிக்காவில் சவனாக்கள் எனப்படும் புல்வெளிகளின் வசிக்கும் இரண்டு சிங்கக் கூட்டங்கள் மற்றும் ஒரு சிறுத்தைத் தாய், அதன் குட்டிகளை சுற்றிச் சுழலும் இந்தப் படத்தில் உள்ள அனைத்து மிருகங்களும், ஏதோ 'ஆக்க்ஷன் - கட்' சொன்னதுப்போல் படமாக்கப்பட்டிருக்கும் விதம் பிரமிக்கவைக்கிறது. அதிலும் கேமராக் கோணங்கள் ... அடடா...! கண்களில் ஒத்திக்கொள்ளவேண்டும் போல இருக்கிறது! அதிலும் சிறுத்தைதாய் அதன் சில குட்டிகளைப் பறிக்கொடுத்துவிட்டு, அந்த மாலை வேளையிலே ... அந்த மண்மேட்டின் மீது அமர்ந்திருக்கும் காட்சி... சான்சே இல்லை! இந்தப் படத்தில் யானைகள், ஓநாய்கள்,ஒட்டகச்சிவிங்கிகள், காட்டெருமைகள், போன்றவைகள் வந்தாலும் சிங்கங்களும் சிருத்தைகளும்தான் கதாநாயகர்கள்.

போதாக்குறைக்கு வர்ணனை வழங்குவது சாமுவேல் எல் ஜாக்சன்! (Samuel l. Jackson). 








நடிப்பில் தூள் கிளப்பிய இவர், வர்ணனையிலும் கலக்கியுள்ளார்!


என்னைக்  கவர்ந்த இந்தக் காணொளி, உங்களையும் கவரும் எனபது நிச்சயம்!  


படத்தின் ட்ரைலர் ...







1 கருத்து:

TamilBM சொன்னது…

நல்ல தகவல்கள்

அருமையான பதிவு,,