செவ்வாய், 15 டிசம்பர், 2009

நிலா... நிலா... ஓடிப்போ !




நிலவு எதற்காக ? வெறும் கவிஞர்கள் பாடல்களில் உபயோகப்படுத்திக் கொள்ளவா? இரவில் வழிக்காடவா? அல்லது சோசியர்கள் நம் எல்லோருடைய எதிர்காலத்தையும் கணித்து, உலகிற்கு பேருதவி செய்யவா? இல்லை ராகு கேது என்ற பாம்புகள் பசியாறவா ?
 ('வால் பையனின் - சோதிடமும், சந்திரனும் ! '   பக்கத்துக்கு ஒரு நடை  சென்று, அங்கு நடந்த வாதப், பிரதிவாதங்களைப் பார்க்காதவர்கள், முதலில் பார்த்துவிட்டு  வரவும். )


வருங்காலத்தில் மத்தநாடுக்காரன் நிலவை வைத்து  பல பிசினஸ் பிளான் போட்டுவைத்திருந்தாலும், நம்ப ஆட்கள் ரொம்பகாலத்துக்கு முன்னமே நிலாவைக் காண்பித்து காசு பண்ண ஆரம்பித்து விட்டார்கள்! ஆனா மொளகா அரைத்தது என்னமோ நம்ம ஆளுங்க தலைமேலத்தான். சரிப்போகட்டும் . உண்மையாகவே இந்த நிலவு முக்கியம் வாய்ந்ததா? நம்மூர் டுபாக்கூர் விஷயங்களை தள்ளுபடி செய்துவிட்டு, விஞ்ஞானப்பூர்வமாக நிலவை அணுகலாமா?  அதற்கு  நம்ம பழைய   'நிலவு....பூமியின் தோழி ' என்றப்பதிவு உள்ளது.
சரி இந்த நிலவே இல்லாமல் இருந்தால் என்ன? அதற்க்கு பதில், இன்னொரு பதிவான ' நிலவில்லா பூமி' உள்ளது. பார்க்காதவர்கள் பார்த்துக்கொள்ளலாம்.
தற்போது, அதேப்போல நிலவு 'அப்சென்ட்' ஆனால்என்ன கதி என்று இன்னொரு வீடியோவை பார்க்க  நேர்ந்தது. ஏகப்பட்ட விஷயங்களை உள்ளடக்கிய இந்த அருமையான வீடியோவை உங்களிடமும் பகிர்ந்துக்கொள்ளுகிறேன்.  எப்படி என்று கூறுங்கள். 


சில நிலாத்துளிகள்....
  • வயசு 4.5 பில்லியன் வருஷம், எடை 73,490,000,000,000,000 மில்லியன் கிலோ!
  • வடிவம் : லைட்டா  கோழி முட்டை வடிவம்!
  • நம்ம பூமியில் இருந்து  3 ,84,467 கி மீ. தூரத்தில் உள்ளது.
    கார்ல போனா 130 நாளு, ராக்கெட்ல போனா 13 அவரு(hr.), Light கணக்கா போனா 1.52 நொடி!
  • சுற்றளவு 3476 கி மி. கார்ல சுத்தி வந்தா 4 நாள் ஆகும்.
  • பூமியும் நிலாவும் ஒரே ரேஞ்சில் சுத்துவதால், நாம நிலாவின் ஒரே சைடத்தான் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்!
  • பூமி சின்ன வயசா இருந்தப்போது, நிலா 3 மடங்கு பெரிசா தெரிந்ததாம். ஏன்னா அப்போ கொஞ்சம் கிட்ட இருந்தது. அனா இப்போ ' நிலவுக்கு என் மேல் என்னடிக் கோபம் ? ' என்பதுப்போல் கொஞ்ச கொஞ்சமாக விலகி செல்லுகிறது!
  • நிலாவில் எந்த மண்டலமும் கிடையாது. எந்த 'gas' ஆக இருந்தாலும், அது 'பூட்ட கேஸ்தான் !' ஏன்னா அதன் ஈர்ப்பு சக்தி ரொம்ப வீக்கு!
  • அங்க காத்து, கருப்பு, தண்ணி எதுவும் இல்லாததனால், 3 பில்லியன் வருஷத்துக்கு முந்தி எப்படி இருந்ததோ, ஒரு மண்ணும் மாறாமல் அப்படியே இருக்கிறது. நம்ம ஆள் போய்த்தான் கொஞ்சம் கலைத்து விட்டு வந்துள்ளான். மறுபடியும் போய்க் கலைக்கவில்லை என்றால், 1969 இல் அவன் விட்டு சென்ற 'காலடி', குறைந்தப்பட்சம் இன்னும் 11 மிலியன் வருடங்கள் வரை அப்படியே இருக்கும்.
  • பசிபிக் பெருங்கடலின் ஏரியாவும், நிலாவின் பரப்பளவும் ஏறக்குறைய சேம்!
  • அமெரிக்கா பல இடங்களில் தன் கோடியை நாட்டி இருந்தாலும், நிலவை எந்த நாடும் சொந்தம் கொண்டாட முடியாது.
  • சூரியக் குடும்பத்தில் பல கிரகங்களுக்கு சொந்த நிலவு இருந்தாலும், நம்ம நிலவு 'Moon' , மற்றவை ' moon' !
  • நிலவு இதுவரை 12 மனிதர்களால் மிதிப்பட்டுள்ளது.
  • வழக்கமாக வருடத்துக்கு 12 முழுநிலவுகள் வரும். இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒரு முறை நாட்கள் சேர்ந்து விடுவதால் 13 முழுநிலவும் ஏற்படும். இது எப்பவாவது வருவதால் இதை ' Blue Moon' என்று அழைக்கிறார்கள். இதிலிருந்துதான் ' Once in a Blue Moon' (எனக்கு பின்னூட்டங்கள் வரும்) என்ற நக்கல் வார்த்தை தோன்றியது.
  • Dr. Eugene Shoemaker, பூகோள விஞ்ஞானி, நிலவுக்கு சென்ற விண்வெளி வீரர்களுக்கு ,நிலவில் உள்ள பள்ளங்களை (Craters) பற்றி பாடம் எடுத்தவர். அவரின் நீண்ட நாள் கனவான விண்வெளிப் பயணத்தையும், நிலவில் நடைபயணம் செய்யும் ஆர்வத்தையும், தன் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் இழந்தார். ஆனால் அவரின் கடைசி விருப்பமான அவரின் சாம்பல், அந்த நிலவின் பள்ளங்களில் தூவப்பட்டது!  
  • இதுவரை நிலவிலிருந்து 382 கிலோ நிலவுப்பாரைகள் எடுதுவரப்பட்டுளன.
  • உங்க எடை இங்கே 82 கிலோவா? அப்போ  நிலவில் வெறும் 14 கிலோத்தான்! (எடை குறைக்க விரும்புவோர் அங்கே சென்று விடலாம்!)
சரி நண்பர்களே, படம் தொடங்கப் போகிறார்கள். பாத்துட்டு வாங்க, அப்புறம் பேசலாம்.

3 கருத்துகள்:

ஷங்கி சொன்னது…

உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள். பொறுமையாக ஒவ்வொன்றாகப் படிக்கிறேன், பார்க்கிறேன். நன்றி.

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஷங்கி. உங்களின் வசந்த் ஜோசியம் படித்தேன். தலைவர் ஒருக்கணம் நிழலாடிவிட்டுச் சென்றார்! அவர் ஒண்ணும் சும்மாச் சாகவில்லை. பலரை ரெடி பண்ணிவிட்டுத்தான் போயிருக்கிறார். கலக்குங்க ஷங்கி!

Nathanjagk சொன்னது…

நல்ல கருத்துக்கள்..
முக்கியமா கருத்துக்களை அழகா பக்குவமா நகைச்சுவையா ​தெளிச்சிருக்கிற விதத்​தை லயிக்கிறேன். வாழ்த்துக்கள் நண்பா!